Type Here to Get Search Results !

TNPSC 22nd APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

திருப்பத்தூர் அருகே பல்லவர் காலத்து நடுகற்கள் கண்டெடுப்பு

  • திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் சொல்லாட்சி கொண்ட சில நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கற்கள் அனைத்தும் கி.பி.7-ம் நூற்றாண்டு அதாவது 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் காலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த நடுகற் களாகும். 
  • ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புங்கம்பட்டு நாடு, சின்ன வட்டானூர் கிராமத்தில் வடகிழக்கு திசையில் 2 கி.மீ., தொலைவில் இலவமரத்து ஆற்று ஓடையின் மேல் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த 2 எழுத்துடைய நடுகற்கள் கண்டெடுத்தோம். 
  • அதன் அருகே, உடைந்த நிலையில் ஒரு கல்லும், மண்ணில் புதைந்த நிலையில் ஒரு கல் என மொத்தம் 4 வரலாற்று சிறப்புடைய கற்களை கண்டெடுத்துள்ளோம்.
  • முதல் நடுகல்லானது 137 செ.மீ.,நீளமும், 70 செ.மீ., அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் உள்ள உருவம் வாரிமுடிக்கப் பட்ட கொண்டையும், கழுத்தில் ஆபரணமும், காதுகளில் குண்ட லங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • அதன் வலது கையில் குறுவாள் ஒன்றும், இடது கையில் வில் ஒன்றும் உள்ளது. இடைக்கச்சும், அதில் குறுவாள் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உருவத்தின் இடது கால் ஓரத்தில் 2 மாடுகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கல்லில் சில வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
  • இக்கல்லில் உள்ள எழுத்து வடிவம் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். பல்லவர் காலத்தில் ஜவ்வாதுமலை பகுதி பங்கள நாட்டில் அமைந்திருந்தது என்பதை இக்கல்வெட்டு சான்றுகளுடன் விளக்குகிறது.
  • அதேபோல, 2-வது நடுகல் 151 செ.மீ., நீளமும், 100 செ.மீ., அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் உள்ள வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும் உள்ளன. வயிற்றுப்பகுதியில் அம்பு ஒன்று புதைந்தது போல் காணப்படுகிறது. இதை பார்க்கும்போது பகைவர்கள் விட்ட அம்பால் இந்த வீரன் உயிரிழந்த செய்தியை அறிய முடிகிறது.
  • இக்கல்லில் உள்ள எழுத்து களும் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவையாகும். பல்லவர் ஆண்ட பகுதி தொண்டை மண்டலம் என்பது பெரிய நிலப்பரப்பாகும். அதற்கு உட்பட்ட பகுதியே பங்கள நாடாகும். அந்த பங்களநாட்டில் தான் ஜவ்வாதுமலைப்பகுதியும் இருந்துள்ளது என்பதை இக்கல் மூலம் அறிய முடிகிறது.

பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் பருவநிலை குறித்த உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய இந்த மாநாடு நாளையும் நடைபெறுகிறது.
  • 2030 ஆம் ஆண்டுக்கு நமது ஒட்டுமொத்த வேகம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலக தலைவர்களின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
  • இந்த முன்முயற்சிக்காக அமெரிக்க அதிபர் பிடனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிராக மனிதகுலம் தற்போது போராடிக் கொண்டிருக்கிறது.
  • பருவநிலை மாற்றத்தின் பெரும் அச்சுறுத்தல் இன்னும் மறையவில்லை என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டும் விதத்தில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
  • உண்மையில், பருவநிலை மாற்றம் என்பது உலகில் உள்ள பல லட்சக்கணக்கானோர் எதிர்கொண்டு வரும் உண்மையாகும். அவர்களது வாழ்க்கையும், வாழ்வாதாரமும் எதிர்மறை விளைவுகளை ஏற்கனவே சந்தித்து வருகின்றன.
  • பருவநிலை மாற்றத்தை மனிதகுலம் எதிர்கொள்வதற்கு வலுவான நடவடிக்கை தேவைப்படுகிறது. மிகவும் வேகமாக, பெரிய மற்றும் சர்வதேச அளவில் அத்தகைய நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் நாங்கள் எங்களது பங்களிப்பை செய்து வருகிறோம்.
  • 2030-க்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனும் எங்களது இலக்கு எங்களின் உறுதியை காட்டுகிறது. வளர்ச்சி சவால்களுக்கு இடையில், தூய்மை எரிசக்தி, எரிசக்தி சிக்கனம், காடு வளர்ப்பு மற்றும் பல்லுயிர்களின் பாதுகாப்புக்கு பல்வேறு வலுவான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். 
  • இவற்றின் காரணமாக தேசிய முடிவெடுக்கப்பட்ட பங்களிப்பு 2-டிகிரி-செல்சியசுக்கு இணக்கமாக உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
  • சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, லீட் ஐடி மற்றும் பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்பு ஆகிய சர்வதேச முன்முயற்சிகளுக்கும் நாங்கள் ஆதரவளித்துள்ளோம்.
  • பருவநிலையில் அக்கறையுள்ள வளரும் நாடான இந்தியா, எங்கள் நாட்டில் நீடித்த வளர்ச்சிக்கான மாதிரிகளை உருவாக்குவதற்காக பங்குதாரர்களை வரவேற்கிறது. பசுமை நிதி மற்றும் தூய்மை தொழில்நுட்பங்கள் குறைந்த விலையில் தேவைப்படும் இதர வளரும் நாடுகளுக்கும் இது உதவும்.
  • இதன் காரணமாகத் தான், 'இந்திய-அமெரிக்க பருவநிலை மற்றும் தூய்மை எரிசக்தி லட்சியம் 2030 கூட்டணி"-ஐ அதிபர் பிடனும் நானும் தொடங்குகிறோம். முதலீடுகளை ஈர்க்கவும், தூய்மை தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தவும், பசுமை கூட்டணிகளை உருவாக்கவும் நாங்கள் இணைந்து உதவுவோம்.
  • இன்றைக்கு, சர்வதேச பருவநிலை நடவடிக்கையை நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், உங்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன். இந்தியாவில் தனி மனித கரியமில தடம் சர்வதேச சராசரியை விட 60 சதவீதம் குறைவாகும். நீடித்த பாரம்பரிய செயல்பாடுகளில் எங்களது வாழ்க்கைமுறையின் வேர்கள் இன்னும் உள்ளதால் இது சாத்தியமாகியுள்ளது.
  • எனவே, பருவநிலை மாற்ற நடவடிக்கையில் வாழ்க்கைமுறை மாற்றத்தின் முக்கியத்துவதை வலியுறுத்த இன்றைக்கு நான் விரும்புகிறேன். நீடித்த வாழ்க்கைமுறை மற்றும் 'மறுபடியும் அடிப்படைகளை நோக்கி' எனும் வழிகாட்டும் தத்துவம் கொவிட்டுக்கு பிந்தைய நமது பொருளாதார யுக்தியின் முக்கிய தூணாக இருத்தல் வேண்டும்.
  • மிகப்பெரிய இந்திய துறவியான சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை நான் நினைவுபடுத்துகிறேன். "எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்!" என்று பருவநிலை மாற்றத்திற்கு எதிராக அவர் நமக்கு அழைப்பு விடுத்தார்.

தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது பெற்ற நடிகர் தாமு

  • தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறியப்படும் தாமு மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் சினிமா கற்றவர். திரைப்படத் துறையைத் தாண்டி கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றிய சேவைகளுக்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ( CEGR National Council) 'ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021' தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது. 

கங்கைகொண்ட சோழபுரத்தில் பானை ஓடுகள், ஆணிகள் மற்றும் செப்புக் காசுகள் கண்டெடுப்பு

  • தமிழகத்தில் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
  • அதன்படி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம், கடந்த ஜனவரி மாதம் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, கல்குளம், ஆயுதக்களம், மண்மலை, மாளிகைமேடு உள்ளிட்ட 6 இடங்களில் ஆய்வு செய்வதற்காக சுற்றியுள்ள 18 கிலோ மீட்டர் சுற்றளவில் சென்று தொழில்நுட்ப கருவிகள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • இதில், பத்துக்கு பத்து என்ற அளவில் குழிகள் தோண்டப்பட்டு, அந்த இடத்தில் பணி நடைபெறுகிறது. இப்பணியை மேலும் தீவிரப்படுத்தி அலுவலர்கள் செய்து வருகின்றனர். 
  • மேலும், அந்த இடத்தில் கிடைக்கப்பட்ட பானை ஓடு வில்லைகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள் மேலும் செப்புக்காசு போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இந்தியாவுக்கு பிரிட்டன் அழைப்பு
  • ஜி7 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு (G7 Foreign and Development Ministers' meeting), லண்டனில் வரும் மே மாதம் 03-ஆம் தேதி முதல் 05-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • அமைச்சர்கள் நேரில் பங்கேற்கும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கும், ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகள்) அமைப்பின் பொதுச் செயலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா சொந்த விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்க திட்டம்
  • அமெரிக்கா, ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் கடந்த 1998-ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுகிறது.
  • இதுதொடர்பாக பிற நாடுகளுடன் ரஷ்யா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் ஆண்டுடன் காலாவதியாகிறது. அதற்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல், தனி ஆய்வு நிலையம் அமைக்க ரஷ்யா 2024-ஆம் திட்டமிட்டு வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel