உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக ரமணா பதவியேற்பு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
- தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.ஏ,பாப்டே, மூத்த நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பெயரை தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்தார்.
- அதற்கு கடந்த 6ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 48வது புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதிவியேற்று கொண்டார். இதற்கான நிகழ்ச்சி, ஜனாதிபதி மாளளிகையில் நடந்தது. இதில், ரமணாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- இவ்விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- என்.வி.ரமணா கடந்த 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஆந்திராவில் பிறந்தார். இவரது முழு பெயர் நூதலபதி வெங்கட ரமணா. ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், 1983ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.
- இவர், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000, ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர். டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கடந்த 2014ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். ஆந்திராவை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்று இருப்பது இதுவே முதல்முறை.
சொத்துக்களுக்கான மின்னணு அட்டைகள் விநியோகம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- தேசிய பஞ்சாயத்து தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது இதனையொட்டி நடந்த விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் எட்டு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர்.
- மேலும் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகளும் விழாவில் இணைந்திருந்தனர். தொடர்ந்து சுவாமித்வா திட்டத்தின் கீழ் சொத்துக்களுக்கான மின்னணு அட்டைகளின் விநியோகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- மேலும் விழாவில் 4.09 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு அவர்களது சொத்துக்களுக்கான மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தேசிய பஞ்சாயத்து தினத்தையொட்டி தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021ஐயும் பிரதமர் மோடி அறிவித்தார்.
- இதனுடன் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பரிசு பணம் மானிய உதவியாக வழங்கப்படும். இந்த பரிசுத்தொகையானது பஞ்சாயத்துக்களின் வங்கி கணக்குகளுக்கு உடனடியாக நேரடியாக பரிவர்த்தனை செய்யப்படும்.
- தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021-ஐயும் பிரதமர் வழங்கவிருக்கிறார். பின்வரும் பிரிவுகளில் தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021 வழங்கப்படவிருக்கின்றன:
- தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத் சஷாக்திகரன் புரஸ்கார் (224 பஞ்சாயத்துகளுக்கு), நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ் கிராம் புரஸ்கார் (30 கிராம பஞ்சாயத்துகளுக்கு), கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்ட விருது (23 கிராம பஞ்சாயத்துகளுக்கு), குழந்தைகளுக்கு தோழமையான கிராம பஞ்சாயத்து விருது (30 கிராம பஞ்சாயத்துகளுக்கு) மற்றும் மின்னணு-பஞ்சாயத்து விருது (12 மாநிலங்களுக்கு).ரூபாய் 5 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான பரிசுப் பணத்தை (மானிய உதவியாக) பிரதமர் வழங்குவார்.
- பஞ்சாயத்துக்களின் வங்கி கணக்குகளுக்கு பரிசுப் பணம் உடனடியாக நேரடியாக பரிவர்த்தனை செய்யப்படும். இவ்வாறு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- சுவாமித்வா திட்டம் குறித்து கிராமங்களின் ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு கிராமப்பகுதிகளை விவரணையாக்கம் எனும் சுவாமித்வா திட்டம், சமூக பொருளாதார அளவில் அதிகாரமளிக்கப்பட்ட, தற்சார்பு மிக்க கிராமப்புற இந்தியாவை ஊக்குவிப்பதற்காக 2020 ஏப்ரல் 24 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.
- விவரணையாக்கம் மற்றும் ஆய்வுக்காக நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி ஊரக இந்தியாவை மாற்றியமைக்கும் திறன் இந்த திட்டத்திற்கு உள்ளது. கடன்கள் மற்றும் இதர நிதி பலன்களை பெறுவதற்காக சொத்தை நிதி வளமாக கிராமத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு இது வழிவகுக்கிறது.
- நாடு முழுவதிலும் உள்ள 6.62 லட்சம் கிராமங்களில் 2021 முதல் 2025 வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் ஆரம்ப கட்டம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 2020-2021-ல் செயல்படுத்தப்பட்டது.
குஜராத்தில் நிமிஷத்துக்கு 280 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையைத் தொடக்கி வைத்தாா் அமித் ஷா
- கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. பல மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
- அவா்களுக்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. தில்லி, பஞ்சாபில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பட்டால் கரோனா நோயாளிகள் உயிரிழந்தனா்.
- ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்குமாறும் முழு கொள்ளளவுக்கு உற்பத்தி செய்யுமாறும் நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
- இந்நிலையில், குஜராத் தலைநகா் காந்திநகரின் கொளவாடா பகுதியில் உள்ள ஆயுா்வேத மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைச்சரும் காந்திநகா் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அமித் ஷா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கரோனா தடுப்பூசி, ஆக்சிஜனுக்கு சுங்க வரி விலக்கு
- நாட்டில் ஆக்சிஜன் கையிருப்பை அதிகரிப்பது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- அதிகரித்து வரும் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடா்பான உபகரணங்களுக்கு 3 மாத காலத்துக்கு அடிப்படை சுங்க வரி மற்றும் சுகாதார வரியிலிருந்து முழு விலக்கு அளிப்பது என பிரதமா் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
- அதுபோல, இறக்குமதி செய்யப்படும் கரோனா தடுப்பூசிக்கான சுங்க வரியையும் மூன்று மாத காலத்துக்கு ரத்து செய்வது என்று முடிவெடுக்கப்பட்டு, அந்த நடைமுறையும் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
- இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மீட்டருடன் கூடிய ஆக்சிஜன் செலுத்தும் கருவி, டியூப் மற்றும் இணைப்பு உபகரணங்கள், ஆக்சிஜன் குப்பி, வாயு நிரப்பும் உபகரணம், சேமிப்பு டேங்குகள், சிலிண்டா்கள், கிரையோஜெனிக் சிலிண்டா் மற்றும் டேங்குகள் உள்பட ஆக்சிஜன் தொடா்பான 16 உபகரணங்களுக்கு சுங்க வரி மற்றும் சுகாதார வரி விதிப்பிலிருந்து 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டா்) மற்றும் அதனுடன் தொடா்புடைய பிற உபகரணங்களுக்கு இறக்குமதி வரி மற்றும் சுகாதார வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் தடுப்பூசிகளுக்கு இப்போது 10 சதவீத சுங்க வரி அல்லது இறக்குமதி வரியை மத்திய அரசு விதித்து வருகிறது.
இந்தியா ஸ்வீடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்தது அமெரிக்கா
- சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் 'தொழில்துறை மாற்றத்துக்கான தலைமைத்துவ குழு' (லீட் இட்) என்ற திட்டத்தை இந்தியாவும் ஸ்வீடனும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.
- அண்மையில் அமெரிக்கா சாா்பில் நடைபெற்ற பருவகால மாற்ற மாநாட்டில், லீட் இட் திட்டத்தில் இணைவதற்கு அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்திருந்தாா். இத்திட்டத்தின் வாயிலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.
- தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயு (காா்பன் டை ஆக்சைடு) வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இதன் வாயிலாக, வெளியேற்றப்படும் கரியமில வாயுவும் சுற்றுச்சூழலில் இருந்து நீக்கப்படும் கரியமில வாயுவும் நிகர அளவில் இருப்பது உறுதி செய்யப்படும்.
- இத்திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்து செயல்படுவது, பருவநிலை மாற்றத்தைத் திறம்பட எதிா்கொள்வதற்கு உதவும். தொழில் வளா்ச்சியை ஏற்படுத்தும் அதே வேளையில், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.