Friday, 31 May 2019

தமிழ்நாடு பொறியியல் அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது பணியாளர் தேர்வாணையம் / TNPSC RELEASE NOTIFICATION FOR COMBINED ENGINEERING SERVICE 2019

TNPSCSHOUTERS
தமிழ்நாடு பொறியியல் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பதவிக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள் - 481
 1. Assistant Electrical Inspector - 12
 2. Assistant Engineer (Agricultural Engineering) - 94
 3. Assistant Engineer (Civil) (Water Resources Department - PWD) - 120
 4. Assistant Engineer (Civil Buildings - PWD) - 73
 5. Assistant Engineer (Electrical - PWD) - 13
 6. Assistant Director of Industrial Safety and Health - 26
 7. Assistant Engineer (Civil - Highways Department) - 123
 8. Assistant Engineer (Fisheries) - 3
 9. Assistant Engineer (Civil - Maritime Board) - 2
 10. Junior Architect - 15
வயதுவரம்பு 
 • பொதுப்பிரிவினருக்கு 35 வயது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.
சம்பளம்
 • மாதம் ஒன்றிற்கு ரூ.55,500 முதல் ரூ.1,77,700
விண்ணப்பிக்கும் முறை
 • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பதிவு செய்ய கட்டணம் ரூ.150. 
 • ஒருமுறை பதிவு செய்து நிரந்தர பதிவு எண்ணை பெற்று 3 ஆண்டுகளுக்கு எத்தனை தேர்வுகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
தேர்வுக்கட்டணம்
 • பொதுப்பிரிவினருக்கு ரூ.150. (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 முறை தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு.)
தேர்வு நாள் 
 • 10/08/2019
விண்ணப்பிக்க கடைசி நாள் 
 • 30/06/2019
OFFICIAL NOTIFICATION

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு தமிழக அரசு / TN ANNOUNCED CUTOFF MARK FOR TET 2019

TNPSCSHOUTERS

 • ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 • இதனால் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் சேர முடியாது என்றும், குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 • இதே போல் பொதுப்பிரிவுக்கு 50 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

30th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
வாணியம்பாடி அருகே சோழர் காலத்து நடுகல் கண்டெடுப்பு
 • வாணியம்பாடியில் இருந்து நாட்டறம்பள்ளிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நெக்குந்தி கிராமம் உள்ளது.
 • நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் கி.பி. 10-11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் உள்ளது. இதன் காலத்தை வைத்து கணக்கிடுகையில் இது, சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருத முடிகிறது.
 • 1.5 அடி உயரம் மண்ணில் புதைந்த நிலையில், 2 அடி உயரம் மேலே தெரிந்த நிலையில் உள்ளது. 3 அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் இந்த நடுகல் செதுக்கப்பட்டுள்ளது. 
 • உருவம் தேயாமல் நேர்த்தியான வடிவில் உள்ளது. இக்கல்லில் உள்ள வீரன் வலது புறம் கொண்டையிட்டு, கையில் வில், அம்புடன் உள்ளார். 
 • காதுகளில் காதணிகள், முதுகுப்புறம் அம்புக் கூடு காணப்படுகின்றன. கைகளில் வீரக் கடகங்களும் உள்ளன.
இந்திய விமானப் படையின் முதல் 'பெண்கள் ஒன்லி' வான் குழு
 • இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருவது, பல இளம் பெண்களுக்கும் உத்வேகம் தரும் வகையில் உள்ளது. 
 • அதன் மற்றொரு பாய்ச்சலாக, இந்திய விமானப் படையின் Mi-17 V5 ஹெலிகாப்டரை இயக்கி வான்போர் பயிற்சி பெற்றிருக்கிறது பெண்கள் மட்டுமே கொண்ட குழு. 
 • கேப்டனாக ஃபிளைட் லெப்டினன்ட் பருல் பரத்வாஜ், கோ-பைலட்டாக ஃபிளையிங் ஆபீஸர் அமன் நிதி மற்றும் ஃபிளைட் இன்ஜீனியராக ஃபிளைட் லெப்டினன்ட் ஹினா ஜெய்ஸ்வால். இந்த மூன்று பெண்கள் இணைந்த குழுதான் அந்த வரலாற்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளது. 
 • பைலட் பருல், பஞ்சாபைச்சேர்ந்தவர். Mi-17 V5 ஹெலிகாப்டரை இயக்கிய முதல் பெண். கோ-பைலட் அமன், ராஞ்சியைச் சேர்ந்தவர்.டில்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழாஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம்
 • ஜனாதிபதி மாளிகையில் நடந்த கோலாகலமான விழாவில், நரேந்திர தாமோதர தாஸ் மோடி, 68, பிரதமராக பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 
 • ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் அமித் ஷா உட்பட, மொத்தம், 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன், இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். 
 • நாட்டின், 17வது லோக்சபாவுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்காளருக்கு பணம் தர முயன்றதால், தமிழகத்தின் வேலுார் தொகுதிக்கு, தேர்தல் நடக்கவில்லை.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு வாடிக்கையாளர் ஒப்புதலுடன் ஆதார் விவரத்தை பெறலாம்
 • வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை சரிபார்ப்பதற்கு அவர்களின் ஒப்புதலுடன்தான் ஆதார் விவரத்தை கேட்டுப் பெற வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவது உள்பட பல்வேறு வங்கி சேவைகளின்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களை வங்கிகள் கேட்கின்றன. 
 • வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கும்போதும், புதிய கைபேசி இணைப்பு பெறும்போதும் வாடிக்கையாளர் தாமாக முன்வந்து 12 இலக்க ஆதார் எண் விவரத்தை கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம் என்ற புதிய சட்டத் திருத்த்திற்கு கடந்த பிப்ரவரியில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான சட்ட வரைவு மசோதா கடந்த ஜனவரி 4ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.10 % இடஒதுக்கீடு ; மகாராஷ்டிரா உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் தடை
 • மகாராஷ்டிர மாநில அரசு முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
 • சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில், "அரசு சட்டத்தின் கீழ் உரிய விதிகளை உருவாக்கி செயல்பட முடியும். ஆனால், ஆனால் மருத்துவ மருத்துவ கவுன்சில் (MCI) கூடுதல் இடங்களை உருவாக்காத சூழ்நிலையில், தற்போது இருக்கும் இடங்களை EWS இட ஒதுக்கீடு திருத்தத்திற்கு உட்படுத்த முடியாது." என்று கூறி தற்காலிகமாக, மகாராஷ்டிர மாநில அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. 
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்
 • ஜெர்மனியின் முனிச் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. கடைசி நாளான நேற்று 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் அஞ்சும் மோட்ஜில்-திவ்யனாஷ் சிங் பன்வார் ஜோடி 16-2 என்ற கணக்கில் சக நாட்டு ஜோடியான அபுர்வி சண்டிலா- தீபக்குமார் இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
 • இதே போல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர ஜோடியான சவுரப் சவுத்ரி - மானுபாகெர் ஆகியோர் அனுபவம் வாய்ந்த உக்ரைனின் கோஸ்டெவிச்-ஒமெல்சக் ஜோடியை 17-9 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா சாதனை
 • இந்திய அணி உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் சாதனை படைத்துள்ளது. மொத்தம் 5 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்துடன், பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 
 • 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்துடன் ரஷியா மூன்றாம் இடத்தைப் பிடித்தது.ஐரோப்பா லீக் கால்பந்து: செல்ஸி சாம்பியன்
 • அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஐரோப்பா லீக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் செல்ஸி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
 • ப்ரீமியர் லீக் அணிகளான செல்ஸி-ஆர்செனல் இடையே ஐரோப்பா லீக் போட்டி இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி செல்ஸி 4-1 என்ற கோல் கணக்கில் ஆர்செனலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்ட் அற்புதமாக 2 கோல்களை அடித்தார்.
 • பெல்ஜிய வீரரான ஹசார்ட் விரைவில் ரியல் மாட்ரிட் அணிக்கு இடம் பெயர உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் செல்ஸி அணிக்கு ஐரோப்பா லீக் பட்டத்தை பெற்றுத் தந்துள்ளார்.
பப்புவா நியூ கினியா: முன்னாள் நிதியமைச்சர் பிரதமராகத் தேர்வு
 • பப்புவா நியூ கினியாவின் புதிய பிரதமராக, முன்னாள் நிதியமைச்சர் ஜேம்ஸ் மராபேவை அந்த நாட்டு எம்.பி.க்கள் தேர்வு செய்துள்ளனர்.
 • அமெரிக்க நிறுவனமொன்றுக்கு 1,300 கோடி டாலர் (சுமார் ரூ.90,000 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் பீட்டரோ நீல் பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வந்த ஜேம்ஸ் மராபே தற்போது புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் ஆட்சியமைக்கத் தவறினார் நெதன்யாகு: இஸ்ரேலில் மறுதேர்தல் நடத்த முடிவு
 • இஸ்ரேல் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் கூட்டணி அரசை அமைக்க முடியாத நிலையில், வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் தேர்தலை நடத்த அந்த நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது.
 • இஸ்ரேல் வரலாற்றிலேயே, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 • இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
 • இதன் மூலம், அவர் 5-ஆவது முறையாக அந்த நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 • 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் லிக்குட் கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்றது. பழமைவாதக் கட்சியான ஐக்கிய டோரா யூதக் கட்சிக்கு 7 இடங்களும், ஆளும் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி பெஞ்சமின் காண்ட்ஸின் புளூ அண்டு ஒயிட் கட்சி 35 இடங்களையும் கைப்பற்றின.
 • இந்தச் சூழலில், வலதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் ஆட்சியமைக்க நெதன்யாகு முயற்சி செய்து வந்தார்.
 • எனினும், இஸ்ரேல் ராணுவத்தில் கட்டாய சேவையாற்றுவதிலிருந்து பழைமைவாத யூத மதப் பள்ளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுடன் கருத்து வேறுபாடு நிலவியதால் நெதன்யாகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது.
 • புதன்கிழமை நள்ளிரவுக்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையில், கெடு முடிவடைந்த பிறகும் நெதன்யாகுவால் கூட்டணி அரசை அமைக்க முடியவில்லை.
 • அதனைத் தொடர்ந்து, 21-ஆவது நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.
 • அதில், மறு தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக 75 எம்.பி.க்களும், எதிராக 45 பேரும் வாக்களித்தனர். அதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, 30 May 2019

29th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி
 • கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், மா சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதம், அகில இந்திய அளவில் மாங்கனி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். 
 • வரும் ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடக்கிறது. துவக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 
திருச்சி என்ஐடியில் விண்வெளி தொழில்நுட்ப சார்பு மையம்: இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
 • இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில், தென்னிந்தியாவின் முதல் அடைவு மையமாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) விண்வெளி தொழில்நுட்ப சார்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது. 
 • திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில், என்ஐடி இயக்குநர் மினிஷாஜி தாமஸ், இஸ்ரோ நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு திட்ட இயக்குநர் பி.வி. வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். 
 • திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சார்பு மையமானது, விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழில்துறையினர், ஆராய்ச்சி மாணவர்கள், விஞ்ஞானிகள் என முத்தரப்பையும் இணைக்கும் பாலமாக செயல்படும்.
பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் இடம்பெற்றார் நெல் ஜெயராமன்
 • பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நெல் ஜெயராமனின் குறிப்புகள் பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ளன. 
 • தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 • இதில், பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் நெல் ஜெயராமனின் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடரான இவர், 174 அரிய நெல் வகைகளை மீட்டெடுத்ததுடன், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து பாதுகாத்து வந்தார்கார்பரேட் கடன்களுக்கு சிறப்பு குழு : ரிசர்வ் வங்கி
 • இந்திய ரிசர்வ் வங்கி கார்ப்பரேட் கடன்களுக்கான இரண்டாம் நிலை சந்தை அபிவிருத்திக்கு, பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. 
 • இதன் தலைவராக, கனரா வங்கி சேர்மன் மனோகரன், இந்தியன் வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி கண்ணன், ஏஇசட்பி அண்டு பார்ட்னர்ஸ் அமைப்பின் நிர்வாகி பஹ்ரம் வக்கில், சிஏஎப்ஆர்ஏஎல் கூடுதல் இயங்குநர் ஆனந்த் சீனிவாசன், ஜேபி மார்கன் இந்திய பொருளியல் துறை தலைவர் சஜித் இசட் செனாய் மற்றும் இஒய் இந்தியா தலைமை நிர்வாகி அபிஷர் திவாஞ்சி ஆகியோர் அதன் உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விமானப்படை- இஸ்ரோ ஒப்பந்தம்
 • காகன்யா என்று அழைக்கப்படும் திட்டத்திற்காக இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 • நேற்று இஸ்ரோ தலைவர் சிவன் உடன், இந்திய ஏர் வைஸ் சீப் மார்ஷல் கபூர், காகன்யா திட்ட இயக்குநர் ஹட்டன் உடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டார். இஸ்ரோவின் இந்த திட்டத்தில் ஆட்கள் தேர்வு, பயிற்சி உள்ளிட்ட அம்சங்களை இஸ்ரோ நிறுவனம் மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
ஆபாச வீடியோவை தடுக்க இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்
 • ஆன்லைன் வாயிலாக பரப்பப்படும் குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் குறித்து, புகார் அளிக்க, www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை, மத்திய அரசு கடந்த ஆண்டு துவங்கியது. 
 • இதன் மூலம் அளிக்கப்படும் புகார்கள் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 
 • மேலும், புகார் மீதான நடவடிக்கைகள் குறித்து, அந்த இணையத்திலேயே, தகவல் தரவும் வசதி செய்யப்பட்டது.
 • இந்நிலையில், ஆன்லைனில் பரப்பப்படும் குழந்தைகளின் ஆபாச வீடியோ, புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, தகவல் பரிமாறிக் கொள்ள, இந்தியா - அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
 • அமெரிக்காவின், என்.சி.எம்.இ.சி., எனப்படும், காணாமல் போகும் மற்றும் சுரண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான தேசிய மையம் மற்றும் இந்தியாவின், என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்றப் பதிவேடு பிரிவு ஆகிய அமைப்புகளுக்கு இடையே, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
 • இதன் மூலம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர்பாக, அமெரிக்க நிறுவனத்தில் பதிவாகி உள்ள, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தகவல்களை, இந்திய விசாரணை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.ஒருமைப்பாட்டு சிலைக்காக விருது பெற்றது எல் அண்டு டி
 • உலகின் உயரமான சிலையாக, சர்தார் வல்லபபாய் படேலின், ஒருமைப்பாட்டு சிலையை வடிவமைத்து நிறுவியதன் வாயிலாக, வேர்ல்டு ஆர்க்கிடெக்சர் நியூஸ் விருது, எல் அண்டு டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கரன்சி கண்காணிப்பு பட்டியல்; இந்தியாவை நீக்கியது அமெரிக்கா
 • டாலர் கண்காணிப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து, இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தை, அமெரிக்கா நீக்கியுள்ளது. 
 • இரு நாடுகளின் அன்னியச் செலாவணி செயல்பாடுகள், சந்தேகத்திற்கிடமின்றி உள்ளதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அமெரிக்கா, பரஸ்பர வர்த்தகம் புரியும் நாடுகளின் அன்னியச் செலாவணி பரிவர்த்தனைகளை கண்காணிக்கிறது. 
 • அளவிற்கு அதிகமாக, அமெரிக்க டாலரை குவித்து, அன்னியச் செலாவணி மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் நாடுகள், கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்படுகின்றன. இதில், அமெரிக்கா முதன் முறையாக, 2018, மே மாதம், இந்தியாவைச் சேர்த்தது. 
 • இத்துடன், சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும், இப்பட்டியலில் உள்ளன.இந்நிலையில், அமெரிக்க கருவூலத் துறை, பரஸ்பர வர்த்தக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அன்னியச் செலாவணி கொள்கைகள் தொடர்பான அறிக்கையை, பார்லி.,யில் அளித்தது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய ரிசர்வ் வங்கி, 2017ல், அதிக அளவில் டாலரை வாங்கிக் குவித்தது.
ஆஸ்திரேலிய பிரதமராக மோரிஸன் பதவியேற்பு
 • ஆஸ்திரேலியாவின் 46-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பிரதமர் ஸ்காட் மோரிஸன் தலைமையிலான லிபரல் கூட்டணி வெற்றி பெற்றது. 
 • இந்த நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி தலைநகர் கான்பெராவிலுள்ள அரசு இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 46-ஆவது நாடாளுமன்றத்தின் பிரதமராக ஸ்காட் மோரிஸன் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்; துணைப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மக் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Wednesday, 29 May 2019

26th May 2019 AYAKUDI QUESTION PAPER TAMIL PDF

TNPSCSHOUTERS
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என படிப்போருக்கு உதவியாக TNPSCSHOUTERS இணையதளத்தில் வினா விடை பகுதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள். வாழ்த்துகள்.28th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
தமிழகத்துக்கு 9.91 டிஎம்சி நீர்: கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
 • தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி நீரை காவிரியில் இருந்து கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. 
 • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடக அரசு மொத்தம் 177.25 டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும். அதன்படி, ஜூன் மாதத் தவணையாக 9.19 டிஎம்சி நீர் வழங்கப்பட வேண்டும். 
 • இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்ற காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் ஜூன் மாதத்திற்கான நீரை கர்நாடக அரசு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் வலியுறுத்தினர். 
அன்னை தெரசா மகளிர் பல்கலை.க்கு புதிய துணைவேந்தர்: ஆளுநர் நியமனம்
 • கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக பேராசிரியர் வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார். 
 • ஆசிரியர் பணியில் நீண்ட அனுபவம் கொண்ட வைதேகி விஜயகுமார், அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். 
 • சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் ரியர்சன் பல்கலைக்கழகம் போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்." />தரையில் இருந்து விண்ணில் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
 • ஒடிசாவின் பாலசோர் பகுதியில், தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கும் ஆகாஷ்- 1எஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 
 • தரையில் இருந்து விண்ணில் இருக்கும் இலக்கை தாக்கும், ஆகாஷ் 1எஸ் என்ற ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. 
 • இந்தியாவின் மாறுபட்ட தொழில்நுட்ப முறைகளும் நாட்டை காக்கவும் வகையில் இந்தியா செயல்பாட்டு வருகின்றது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இணைந்து ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வரும் இந்த ஏவுகணைகள், தரைமட்டத்தில் இருந்து 18 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும் விமானத்தை கூட தாக்கும் வல்லமை கொண்டவை.
இந்தியா- வங்கதேச எல்லையில் முதல் பேருந்து சேவை
 • சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்தியா- வங்கதேச எல்லையில் முதன்முறையாக பேருந்து சேவை இயக்கப்பட்டுள்ளது. கடந்த 26-ம் தேதி வங்கதேசம் தலைநகர் டாக்காவிலிருந்து 13 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்று, நேற்று காலை இந்தியாவின் எல்லை பகுதியான ஜல்பைகுரி((jalpaiguri)) மாவட்டத்தை வந்தடைந்தது. 
 • இந்தியா- வங்கதேச எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள், உறவினர்களை சந்திக்கவும், தொழில் சார்ந்த பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் வழியாக சென்று வருகின்றனர். தற்போது பயண தூரம் சுமார் 50 கிலோ மீட்டர் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : தங்கம் வென்று அசத்திய ரஹி சர்னோபத்
 • சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பாக ஐஎஸ்எஸ்எஃப் சார்பில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்றுவருகிறது. 
 • இதில், மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் 37 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். இந்த வெற்றியின் மூலம், டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுவிட்டார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : சவுரப் சவுத்ரி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்
 • ஜெர்மனியின் முனிச் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்ற இளம் வீரர் சவுரப் சவுத்ரி அபாரமாக விளையாடினார். 
 • இறுதிப் போட்டியில் 246.3 புள்ளிகளைப் பெற்ற அவர் தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதே போல, பெண்களுக்கான 25 மீட்டர் ரைபிள் பிரிவின் இறுதிப் போட்டியில் அசத்திய ராகி சர்னோபட் 50 க்கு 37 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். உலக கோப்பையில் இதுவரை 3 தங்கம் வென்றுள்ள இந்திய அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

Tuesday, 28 May 2019

27th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சௌரப் சௌத்ரி தங்கப் பதக்கம்
 • உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார்.
 • ஜெர்மனியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட சவுத்ரி (17 வயது), 246.3 புள்ளிகள் பெற்று உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். 
 • 245 புள்ளிகளுடன் படைத்த தனது முந்தைய சாதனையை அவரே நேற்று முறியடித்தார். முன்னதாக இதே தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனை அபூர்வி சாண்டிலா தங்கப் பதக்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ்-1எஸ் ஏவுகணை சோதனை வெற்றி
 • ஆகாஷ்-1எஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. 
 • உள்நாட்டிலேயே தயாராகும் புதிய பரிணாமம் ஆகாஷ்-1 எஸ் ஏவுகணை தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் இது 2வது வெற்றிகரமான சோதனையாகும்.விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை குறித்து விசாரிக்க நீதிபதி சங்கீத சிங்ரா செகல் தலைமையில் குழு
 • விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கடந்த 16ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை சரியா என்பதை உறுதி செய்ய நீதிபதி சங்கீத சிங்ரா செகல் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 • பெண் நீதிபதி சங்கீத சிங்ரா, டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறார்.
பெல் நிறுவனத்தின் லாபம் ரூ.682 கோடி
 • பொதுத் துறையைச் சேர்ந்த பெல் (பி.ஹெச்.இ.எல்.) நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.682.70 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 
 • சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பெல் நிறுவனம் ரூ.10,418.03 கோடி வருவாய் ஈட்டியது. முந்தைய 2017-18 நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.10,351.07 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். 
 • நிகர லாபம் ரூ.457.17 கோடியிலிருந்து 49 சதவீதம் அதிகரித்து ரூ.682.70 கோடியானது. கடந்த 2018-19 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.29,507.28 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.31,026.59 கோடியாக இருந்தது. தனிப்பட்ட நிகர லாபம் ரூ.806.60 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.1,215.39 கோடியானது. 

Monday, 27 May 2019

ஆசிரியர் தகுதி தேர்விற்கான ஹால் டிக்கெட்டுக்கள் இணையத்தில் வெளியீடு / TRB RELEASES TNTET EXAM HALL TICKET 2019

TNPSCSHOUTERS
 • வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்விற்கான ஹால் டிக்கட்டுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுளது. 
 • ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் ஒன்றிற்கான தேர்வு வரும் ஜூன் 8ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். இரண்டாம் தாள் தேர்வு ஜூன் 9ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரையும் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

26th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
சிக்கிம் முதல்வராக பதவியேற்கும் பிரேம்சிங் தமாங்
 • சிக்கிம் மாநில முதல்வராக சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா தலைவர் பிரேம்சிங் தமாங் இன்று பதவியேற்கின்றார். 17-வது மக்களவைக்கான தேர்தலுடன், 32 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிக்கிம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைப்பெற்றது. 
 • இத்தேர்தலில் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சிக்கு சிக்கிம் கிராந்திகர் மோர்ச்சா கட்சி முடிவு கட்டியுள்ளது. 
 • சிக்கிம் தேர்தலை பொறுத்தவரையில் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சிக்கும், சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அந்த மாநிலத்தில் 1994-ஆம் ஆண்டில் இருந்து 5 முறை முதல்வராக இருந்த பவன்குமார் சம்லிங்க் மீண்டும் களம் கண்டார்.பாஜ பாராளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு
 • பாராளுமன்ற தேர்தலில் பாஜ தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். 
 • பாராளுமன்ற தேர்தலில் பாஜ தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். 
 • இந்நிலையில் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற பாஜ தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்ற கட்சி தலைவராக மோடியின் பெயரை அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் முன்மொழிந்தனர்.
வாலன்சியா சாம்பியன்
 • கோபா டெல் ரே கால்பந்து தொடரில் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது பார்சிலோனா. பைனலில் அசத்திய வாலன்சியா 2-1 என வென்றது.ஸ்பெயினில் கிளப் அணிகளுக்கு இடையே கோபா டெல் ரே கால்பந்து தொடர் நடந்தது. 
அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் மைஸ்னம் மீரபா சாம்பியன்
 • அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. கடைசி நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் மணிப்பூர் வீரர் மைஸ்னம் மீரபா, டெல்லி வீரர் ஆகாஷ் யாதவை சந்தித்தார். 
 • இதில் மைஸ்னம் 21-9, 12-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த போது காயம் காரணமாக ஆகாஷ் விலகினார். இதனால் மைஸ்னம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் சமியா இமாத் சாம்பியன்
 • அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. 
 • கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் சமியா இமாத் பரூகி (தெலுங்கானா) 21-17, 21-12 என்ற நேர் செட் கணக்கில் டெல்லி வீராங்கனை ஆஷி ரவாத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆசிய பாட்மிண்டன் கவுன்சில் துணைத் தலைவராக ஹிமந்த விஸ்வ சர்மா தேர்வு
 • ஆசிய பாட்மிண்டன் கவுன்சில் துணைத் தலைவராக இந்திய பாட்மிண்டன் சங்கத் தலைவர் ஹிமந்த விஸ்வ சர்மா (50) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 • மொத்தமுள்ள 40 வாக்குகளில் 35 வாக்குகளை பெற்று அவர் துணைத் தலைவரானார். 
 • அஸ்ஸாம் மாநில சுகாதாரத் துறை அமைச்சரான ஹிமந்த விஸ்வ சர்மா, கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்திய பாட்மிண்டன் சங்கத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை: மீண்டும் தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா
 • ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா. 
 • கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் உலக சாதனையுடன் தங்கம் வென்று சாதனை படைத்தார் அபூர்வி. தற்போது மீண்டும் தங்கம் வென்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த அபூர்வி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 251 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். 
 • சீன வீராங்கனை வாங் லுயாவ் 250.8 புள்ளிகள் பெற்றி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு சீன வீராங்கனை ஜூ ஹாங் 229.4 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். 
 • இதே பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன், 0.1 புள்ளி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்து 4ஆவது இடத்தையும், அஞ்சும் முட்கில் 11ஆவது இடத்தையும் பிடித்தனர். சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் அபூர்வி வென்ற நான்காவது பதக்கம் இதுவாகும்.
அகில இந்திய ஹாக்கி: பெங்களூரு அணி சாம்பியன்
 • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில் பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 
ஸ்குவாஷ்: மன்யோன்கர் சாம்பியன்
 • சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீரர் மகேஷ் மன்யோன்கர் கோப்பை வென்றார்.சுவிட்சர்லாந்தின் கிரின்ஸ் பகுதியில் ஆண்களுக்கான சர்வதேச ஓபன் ஸ்குவாஷ் நடந்தது. 
 • இதன் பைனலில் இந்தியாவின் மகேஷ் மன்கோயன்கர், ஸ்பெயினின் பெர்னாட்டை எதிர் கொண்டார். முதல் செட்டை 11-9 என கைப்பற்றிய மகேஷ், அடுத்த செட்டை 3-11 என பறிகொடுத்தார். 
 • மீண்டும் எழுச்சி பெற்ற இவர் அடுத்த இரண்டு செட்டையும் 11-5, 11-5 என வசப்படுத்தினார். முடிவில், மகேஷ் 3-1 (11-9, 3-11, 11-5, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இதன் மூலம், இத்தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். ஏற்கனவே, 2016ல் கோப்பை கைப்பற்றி இருந்தார்.

Sunday, 26 May 2019

25th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை: அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்
 • ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக் கட்டணம் தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 • சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியாகுறிச்சியில் இயங்கும் பாரதியார் பெண்கள் தனியார் பொறியியல் கல்லூரி மாணவிகள் ஜோதிகா, அன்புச்செல்லவி, அபர்ணா உள்ளிட்ட 114 பேர் தாக்கல் செய்த மனுவில், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த எங்களுக்கு தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளது. 
 • மேலும், தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும், அரசு கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணமே உதவித்தொகையாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஐநா.சபை தூதுக்குழு தலைவராக இந்திய ராணுவ அதிகாரி சைலேஷ் தினைகர் நியமனம்
 • தெற்கு சூடானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக் குழுவின் தலைவராக லெப்டினென்ட் ஜெனரல் சைலேஷ் தினைகரை, ஐநா சபை பொதுச் செயலர் அன்டோனியே கட்டரஸ் நியமித்துள்ளார். 
 • ஏற்கெனவே இந்த தலைமை பொறுப்பிலிருந்த லெப்டினென்ட் ஜெனரல் ஃப்ராங்க் கமான்ஜியின் பதவிக் காலம் மே 26-ம் தேதியுடன் முடிகிறது. இதனையடுத்து, இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் சைலேஷ் தினைகர் ஐநாவின் தூதுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவையின் மிக இளைய உறுப்பினரான பிஜு ஜனதா தள சந்திராணி முர்மு
 • கியோஞ்சர், ஒரிசா பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த 25 வயதான பி டெக் பட்டதாரியான சந்திராணி முர்மு மக்களவையின் மிக இளைய உறுப்பினர் ஆவார். 
 • ஒரிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சர் தொகுதியில் இந்தியாவில் மொத்தமுள்ள இரும்பு தாதுக்களில் 20% உள்ளது. ஆனாலும் இங்குள்ள மக்கள் மிகவும் வறுமையில் உள்ளனர். இந்த பகுதியை இங்குள்ள மக்கள் 'வறுமையில் வாடும் மக்கள் உள்ள வளமான பூமி' என அழைப்பது வழக்கமாகும். 
 • இந்த தொகுதி தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும். இந்த தொகுதியில் பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திராணி முர்மு வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் பி டெக் பட்டம் பெற்றவர் ஆவார்.
மணிக்கு 360 கிமீ வேகம்: ஜப்பானில் புதிய ரக புல்லட் ரயில் சோதனை வெற்றி!
 • ஜப்பானில் தயாரான புதிய மாடல் புல்லட் ரயில் சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மணிக்கு 360 கிமீ வேகத்தில் இந்த புல்லட் ரயில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. 
 • ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாகவே இந்த புல்லட் ரயில் சேவையை அறிமுகப்படுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளது. 
 • இந்த புல்லட் ரயில், தற்போது உள்ள ரயில்களை விட இலகுவாகவும், பூகம்பம் மற்றும் பல்வேறு இடற்பாடுகளில் இருந்து காத்துக்கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் எரிபொருள் சிக்கமும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்கா அதிபராக ரமபோசா பதவியேற்பு
 • ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா மீது எழுந்த ஊழல் புகார்களைத் தொடர்ந்து கடந்தாண்டு அவர் பதவி விலகினார். இதையடுத்து சிரில் ரமபோசா அதிபரானார். 
 • இந்நிலையில், கடந்த 8ம் தேதி பொது தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றது. இதனால் மீண்டும் ரமபோசாவின் பெயர் அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் புதிய அதிபராக மீண்டும் பதவியேற்றார்.
இந்தியா "ஹிந்து தேசம்': சர்ச்சைக்குரிய தீர்ப்பை ரத்து செய்தது மேகாலய உயர்நீதிமன்றம்
 • இந்தியா, ஹிந்து தேசம் என்று தனி நீதிபதி அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை மேகாலய உயர்நீதிமன்றம் சனிக்கிழமை ரத்து செய்தது. மேகாலயத்தில் ஒருவருக்கு மாநில அரசு இருப்பிடச் சான்று வழங்க மறுத்த விவகாரத்தை அந்த மாநில உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பரில் விசாரித்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.சென் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்தார். 
 • இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக அறிவிக்கப்பட்டது. மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்ததால், அப்போதே இந்தியாவை ஹிந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும். 
 • மேலும், இந்தியாவின் சட்டங்கள், அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றை எதிர்ப்போர் யாராக இருந்தாலும், அவர்களை இந்திய குடிமக்களாகக் கருதக் கூடாது.
வில்வித்தை: இந்தியாவுக்கு வெண்கலம்
 • உலக கோப்பை வில்வித்தை ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.துருக்கியில், உலக கோப்பை வில்வித்தை தொடரின் 3வது சுற்று நடக்கிறது. 
 • இதன் ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு, 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, ரஷ்யா அணிகள் மோதின. இந்தியா சார்பில் ரஜத் சவுகான், அபிஷேக் வர்மா, அமான் சைனி பங்கேற்றனர். அபாரமாக ஆடிய இந்திய அணி 235-230 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
 • பெண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜோதி சுரேகா, முஸ்கான் கிரார், சுவாதி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 226-228 என, பிரிட்டனிடம் வீழ்ந்தது.

Saturday, 25 May 2019

24th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
அட்டர்னி ஜெனரல் பதவிக்காலம் நீட்டிப்பு
 • மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 • வரும் 2020ம் ஆண்டு வரை அவர் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் பிரதமர் மோடி
 • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடி கொடுத்தார். மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 303 இடங்களில் தனிப் பெரும்பான்மையும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. 
 • இதன்மூலம் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
 • தற்போதைய அமைச்சரவை மற்றும் 16-வது மக்களவை முடிவுக்கு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடித்ததை அளித்தனர்.
பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை வெற்றி
 • ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு வெள்ளியன்று பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை நடத்தியது. 
 • இந்த சோதனை வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு 30 கி.மீ இலக்கை துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
உச்சநீதிமன்றத்தில் அனைத்து நீதிபதி பதவிகளும் நிரப்பப்பட்டன
 • டில்லி உச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றதை அடுத்து அனைத்து 31 இடங்களும் நிரப்பப் பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தில் கொலிஜியம் பரிந்துரையின் பேரில் நீதிபதிகள் நியமிக்கப் படுகின்றனர். 
 • உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 31 நீதிபதி பதவி பணி இடங்களில் 27 பேர் மட்டுமே பதவியில் இருந்து வந்தனர். காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு கொலிஜியம் கூடி 4 நீதிபதிகள் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலில் இருந்ததால் நீதிபதிகள் நியமனம் சற்று தள்ளிப் போனது. 
 • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று நீதிபதிகள் அநிருத்தா போஸ், ஏ எஸ் போபண்ணா, பூஷன் ராமகிருஷ்ண கவாய்,மற்றும் சூரியகாந்த் ஆகியோருக்கு ஒப்புதல் அளித்தார்.
இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டி: மேரி கோம்,அமித் பாங்கல், ஷிவ தாபா ஆகியோர் தங்கம் பதக்கம்
 • டெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் மேரி கோம் தங்கம் வென்றார். 
 • ஆண்கள் பிரிவில் 49 கிலோ எடை பிரிவில் அமித் பாங்கல், 60 கிலோ எடை பிரிவில் ஷிவ தாபா ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஈரான் எண்ணெய் இறக்குமதியை முழுவதுமாக இந்தியா நிறுத்தியது
 • ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுவதுமாக நிறுத்தி விட்டதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்த பிரச்னை காரணமாக அமெரிக்கா பல நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்தது. 
 • அதற்காக இந்த மாதம் 2 ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தது. அந்த கெடுவை மீறி ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கபடும் என அச்சுறுத்தல் விடப்பட்டது. இதை ஒட்டி இந்தியா கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளது.பிரெக்சிட் விவகாரம்: பிரிட்டன் பிரதமர் ராஜினாமா
 • ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெறமுடியாததால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
 • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. ஆனால், அதற்கு பிரெக்சிட் என்னும் மசோதா கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டும். ஏற்கனவே ஒருமுறை பிரெக்சிட் மசோதா ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவியிருந்தது.
 • இந்த முறையும் பிரெக்சிட் மசோதாவிற்கு ஒப்புதலைப் பெறமுடியாமல், சமீபத்தில் பிரிட்டன் மக்களவை தலைவர் ஆண்ட்ரே லேடன் பதவி விலகியிருந்தார். இந்தநிலையில், இதே பிரச்னை காரணமாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே, வரும் ஜூன் 7 அன்று ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை - பாகிஸ்தான் சோதனை
 • பாகிஸ்தான் ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் சாகின் 2 ஏவுகனையை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை செய்தது. குறிப்பாக அணு ஆயுந்தங்களை ஏந்தி செல்லும் இந்த ஏவுகணை 1500கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை குறிவைத்து தாக்க கூடிய வல்லமை படைத்தது. 
 • அடிக்கடி வடகொரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது, இந்நிலையில் அந்நாட்டுக்கு போட்டியாக பாகிஸ்தானும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சாகின் 2 ஏவுகணையை சோதனை செய்துள்ளது. 
 • மேலும் பாகிஸ்தானின் Ispr அமைப்பின் படி சாகின் 2 ஏவுகணை பாகிஸ்தானின் மூலோபாய அமைப்பை பாதுகாப்பதற்க்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 60 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த 'பால்கன்-9' ராக்கெட்
 • உலகம் முழுவதும் சீரான மற்றும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக தலா 227 கிலோ எடையுடைய 60 செயற்கைக்கோள்களை பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த வாரம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. 
 • ஆனால் பரிசோதனைகள் காரணமாக ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணி ஒத்திவைக்கப்பட்டது. 
 • இந்த நிலையில், புளோரிடா மாகாணத்தின் கேப் கெனவெரலில் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 10.30 மணிக்கு 60 செயற்கைக்கோள்களுடன் பால்கன்-9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்த ரயில்: சீனா அறிமுகம்
 • மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்தவிசை ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. 
 • காந்த விசையில் இயங்கும் புதிய அதிவேக ரயிலை பொதுத் துறை நிறுவனமான சிஆர்ஆர்சி கிங்டாவ் சிஃபாங் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. ஷாங்டாங் மாகாணத்திலுள்ள துறைமுக நகரமான கிங்டோவில் இந்த ரயில் இயக்கிக் காட்டப்பட்டது. 
 • இந்த ரயில் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது ஆகும். வர்த்தக ரீதியில் இது இயக்கப்படும்போது, விமான நிறுவனங்களுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும்.
இந்தியா-சிங்கப்பூர் கடற்படை பயிற்சி நிறைவு
 • தென்சீனக் கடல் பகுதியில் இந்தியா-சிங்கப்பூர் கடற்படைகள் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சி புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. தென்சீனக் கடலில் கடந்த 16ஆம் தேதி முதல் இந்த பயிற்சி நடைபெற்று வந்தது. இந்த பயிற்சிக்கு, சிம்பக்ஸ்-2019 என்று பெயரிடப்பட்டிருந்தது. 
 • இப்பயிற்சியில் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சக்தி, இந்திய கடலோர பாதுகாப்புப் படை பி-81 விமானம் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. சிங்கப்பூர் கடற்படை தரப்பில் ஸ்டெட்பாஸ்ட், வேலியன்ட் ஆகிய போர் கப்பல்கள், எப்-16, எப்-50 ரக போர் விமானங்கள் பங்கெடுத்தன. 
அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக: மீண்டும் முதல்வராகிறார் பெமா காண்டு
 • அருணாச்சல பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. பாஜக மூத்த தலைவரும், முதல்வருமான பெமா காண்டு முதல்வராக மீண்டும் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. 
 • மக்களவைத் தேர்தலுடன் அருணாச் சல பிரதேச சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டப் பேரவை யில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் பதிவான வாக்கு களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தலில் பாஜக 37 தொகுதி களில் வெற்றி பெற்று தனிப்பெரும் பான்மையுடன் அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.

Friday, 24 May 2019

2019-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு: ஜூலை 17-ல் நடக்கிறது / TNUSRB ANNOUNCES CONSTABLE EXAM DATE

TNPSCSHOUTERS
 • தமிழகம் முழுவதும் 2019-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு 14.7.2019 அன்று நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப்பாணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது. 
 • மொத்தம் 8826 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு கடந்த 06-03-2019 அன்று அறிவிப்பானை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.22nd & 23rd MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
மூன்றாவது பெரியக் கட்சியாக மாறிய திமுக - 38 தொகுதிகளில் பிரம்மாண்ட வெற்றி
 • மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசிய அளவில் மூன்றாவது பெரியக் கட்சியாக திமுக உருவாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. 
 • பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் தமிழகத்தில் அதற்குத் தலைகீழாக பாஜகவால் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. 
 • பாஜக கூட்டணியில் அதிமுக மட்டுமே ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 39 தொகுதிகளில் 38 தொகுதிகளைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.
ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார் ஜெகன்மோகன் ரெட்டி
 • ஆந்திர மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சியை பிடித்துள்ளார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது கட்சி வேட்பாளர்கள், சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 150-ல் முன்னணி பெற்றுள்ளனர். 
 • ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 24 தொகுதிகளிலும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரே ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளது. இதனால், தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறார் ஜெகன். 
 • இவர் வரும் 30-ம் தேதி, விஜயவாடாவில் உள்ள இந்திரா மைதானத்தில் பதவி பிரமாணம் செய்ய உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, கடந்த மாதம் 11-ம் தேதி நடந்தது.அமோக வெற்றியடைந்தது பாரதிய ஜனதா கூட்டணி
 • மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 350 தொகுதிகள் வரை அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 
 • மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. அதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. 
 • இதுவரை 50‌3 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பாஜக 302 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
ஒடிஸாவில் 5ஆவது முறையாக முதல்வராகிறார் நவீன் பட்நாயக்
 • ஒடிஸா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். 
 • ஒடிஸா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இத்தேர்தலில் ஆரம்பம் முதலே பிஜு ஜனதா தளம் பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
ஓமன் பெண் எழுத்தாளருக்கு 'மான்புக்கர்' விருது
 • இலக்கியத்துக்காக வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான மான்புக்கர் பரிசு ஓமன் பெண் எழுத்தாளர் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நுால்கள் மற்றும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பிரிட்டனில் வெளியாகும். இந்நாவல்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து மான்புக்கர் பரிசு வழங்கப்படும். இது கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
 • இந்த ஆண்டுக்கான தேர்வு ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவினர் தலைமையில் நடந்தது. பல்வேறு சுற்றுக்கு பின் தேர்வான நாவல்கள் அனைத்தும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளாக இருந்தன. அதனால் பல மணிநேர பரிசீலனைக்கு பின் ஓமன் நாட்டை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ஜோக்ஹா அல்ஹார்த்ஹி எழுதிய செலஸ்ட்டியல் பாடீஸ் (புனிதமான உடல்கள்) என்ற நாவல் தேர்வானது.
 • லண்டனில் நடைபெற்ற விழாவில் ஜோக்ஹாவிற்கு மான்புக்கர் விருது 50 ஆயிரம் பவுண்டுகளை (இந்தியா மதிப்பில் 44 கோடி) ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.ஓமன் நாட்டில் முன்னர் இருந்த பெண்ணடிமை முறையையும் அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த 3 சகோதரிகளின் வாழ்க்கை அவர்களின் திருமண பந்தம் போன்றவற்றை உணர்வுப்பூர்வமாக இக்கதை சித்தரித்துள்ளது.ஜோக்ஹா அல்ஹார்த்ஹி அரபு மொழியில் எழுதியதை மரிலின் பூத் என்ற பெண்மணி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்."வீடுகள், சிறு வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் காப்பீடு வசதி: காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை
 • பேரிடர் பாதிப்புக்கு ஆளாகும் பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் காப்பீடு வசதி கொண்டு வர காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 
 • புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சொந்த வீடு வைத்திருப்பவர்கள், வர்த்தகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. வீடு வைத்துள்ள பெரும்பாலானோர் தாங்கள் வாங்கிய விலைக்கு காப்பீடு செய்கின்றனர். 
 • ஆனால், இதற்கான பிரீமியம் தொகை மிக அதிகமாக உள்ளது. காப்பீடு செய்யாதவர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அனைவருக்கும் காப்பீடு வசதி கிடைக்கும் வகையில் குறைந்த பிரீமியத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டங்களை கொண்டுவர வேண்டும் என இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு
 • தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டின் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், அந்நாட்டின் அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் தேர்வு செய்தனர். 
 • அதிபர் பதவிக்கு சிரில் ரமபோசாவை தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரில் ரமபோசா வெற்றிபெற்றதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மோகோயேங் தெரிவித்துள்ளார். 
அதிவேக பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
 • இந்திய விமானப்படை நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை உருவாக்கும் முயற்சியை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். 
 • இந்த ஏவுகணை ஒவ்வொரு கட்டமாக வேகம் அதிகரிக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது. இந்த ஏவுகணையை ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்து வருகிறது. இன்று இந்த பிரமோஸ் ஏவுகணையின் விமானப்படைக்கான ஏவுகணையை இந்திய விமானப்படை சோதனை செய்தது. 
 • இந்த ஏவுகணை சு 30 எம்கேஐ ரக படை விமானத்தில் இருந்து ஏவப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக விமானப்படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.திருப்பதியில் ரூ.100 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம்
 • திருப்பதியில் 6 இடங்களில் பேருந்து நிலையம் உள்ளது. அனைத்து பேருந்து நிலையங்களிலும் பக்தர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 
 • இந்த நிலையில் திருப்பதியில் மேலும் ஒரு பேருந்து நிலையத்தை அமைக்க ஆந்திர மாநில அரசு முடிவெடுத்து திருப்பதியை அடுத்த பாலாஜி பால் பண்ணை அருகே 20 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு ரூ.100 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. 
 • அந்த புதிய பேருந்து நிலையம், சென்னை மாதாவரத்தில் உள்ள பேருந்து நிலையத்தைப்போல் ஒரு முன்மாதிரி பேருந்து நிலையமாக அமைக்கப்பட உள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
 • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து புதன்கிழமை காலை 5.30 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 
 • ரீசாட்-2பிஆர்1 என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை இந்த ராக்கெட் சுமந்துகொண்டு சென்றது.இதற்கான இறுதிகட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று அதிகாலை 4.27 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 
 • விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதுடன், விண்வெளி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக ராக்கெட் ஏவுவதை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
அகில இந்திய கூடைப்பந்து போட்டி: கோப்பை வென்றது சென்னை இந்தியன் வங்கி அணி
 • தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து இறுதிப் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி முதலிடம் பிடித்து சுழற்கோப்பையை கைப்பற்றியது. பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மே 15 முதல் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வந்தன. 
 • இதில் 24 அணிகள் பங்கேற்றன. மே 18 வரை நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றன. 19 ஆம் தேதி முதல் லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் செகந்திராபாத் ஏஓசி, சென்னை இந்தியன் வங்கி, பெங்களூரு பேங்க் ஆப் பரோடா, இந்திய தரைப்படை (ரெட் ) அணிகள் மோதின. சென்னை இந்தியன் வங்கி அணியும் பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன."

Wednesday, 22 May 2019

நிதி ஆணையம் / FINANCE COMMISSION

TNPSCSHOUTERS
 • முதல் நிதி ஆணையம் (IAST Vitta Āyoga) இந்திய அரசியலமைப்பின் 280 வது பிரிவின் கீழ் இந்திய ஜனாதிபதியால் 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவின் மத்திய அரசுக்கும் தனி மாநில அரசாங்கங்களுக்கும் இடையேயான நிதி உறவுகளை வரையறுக்க இது உருவாக்கப்பட்டது. 
 • நிதி கமிஷன் (இதர ஏற்பாடுகள்) சட்டம், 1951 கூடுதலாக தகுதி, நியமனம் மற்றும் தகுதி, பதவி, நிதி ஆணையத்தின் தகுதி மற்றும் அதிகாரங்களின் விதிமுறைகளை வரையறுக்கிறது. 
 • அரசியலமைப்பின் படி ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஆணையம் நியமிக்கப்படுவதுடன், ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.
 • முதல் நிதி கமிஷனின் நிறுவனம் என்பதால், இந்திய பொருளாதாரத்தின் மிகப்பெரிய பொருளாதார சூழ்நிலையில் கடும் மாற்றங்கள் ஆண்டுகளில் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளில் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுத்தன. இன்று பதினைந்து கமிஷன்கள் உள்ளன. 
 • மிக சமீபத்திய அண்மையில் 2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் திட்டமிடப்பட்ட ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரான N. K.Singh தலைமையில்.
வரலாறு
 • ஒரு கூட்டாட்சி நாடாக, இந்தியா செங்குத்து மற்றும் கிடைமட்ட நிதி ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையில் உள்ள செங்குத்து ஏற்றத்தாழ்வுகள், தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றும் பணத்தில், வருவாய் ஆதாரங்களைக் குறைக்கும் செலவினங்களைக் குறைக்கும் மாநிலங்களிலிருந்து விளைகின்றன. 
 • இருப்பினும், மாநிலங்கள் அவற்றின் குடிமக்களின் தேவைகளையும் கவலையும் அறிந்து கொள்ள முடிகிறது, எனவே அவற்றைத் திறம்பட திறம்பட செயல்படுத்துகிறது. மாநில அரசாங்கங்களிடையே கிடைமட்ட ஏற்றத்தாழ்வுகள் வேறுபட்ட வரலாற்று பின்னணியிலிருந்து அல்லது வள ஆதாயங்களிலிருந்து விளைகின்றன, மேலும் காலப்போக்கில் விரிவாக்கப்படலாம். 
 • நிதி கமிஷன் 1951 ஆம் ஆண்டு டாக்டர் B.R. அம்பேத்கர், அப்போதைய சட்ட அமைச்சர், இந்த ஏற்றத்தாழ்வுகள் பற்றி பேசுவதற்கு. மையம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நிதி இடைவெளியை பலவகையான விதிமுறைகளை இந்திய அரசியலமைப்பில் ஏற்க வேண்டும், 268 பிரிவு உட்பட, மத்திய அரசின் கடமைகளைச் செலுத்துவதற்கு உதவுகிறது, ஆனால் மாநிலங்கள் அவற்றை சேகரித்து வைத்திருக்க உதவுகிறது. 
 • இதேபோல், கட்டுரைகள் 269, 270, 275, 282 மற்றும் 293 ஆகியவற்றில், யூனியன் மற்றும் மாநிலங்களுக்கிடையில் வளங்களை பகிர்ந்து கொள்வதற்கான வழிகளையும் வழிகளையும் குறிப்பிடுகின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கு மேலதிகமாக, நிதி கமிஷன் மத்திய-மாநில இடமாற்றங்களை மேம்படுத்துவதற்கான ஒரு நிறுவன கட்டமைப்பு ஆகும். 
 • இந்திய அரசியலமைப்பின் 280 வது பிரிவு கமிஷனின் நோக்கத்தை வரையறுக்கிறது: ஜனாதிபதியால் அரசியலமைப்பின் ஆரம்பத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு நிதியக் கமிஷனை அமைப்போம். அதன்பிறகு ஒவ்வொரு ஐந்தாம் ஆண்டு அல்லது அதற்கு முன்னால், அவருக்கு அவசியமாகக் கருதப்படும், ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களை உள்ளடக்கியது அவசியம்.
 • பாராளுமன்றம் சட்டத்தின் உறுப்பினர்கள் மற்றும் தேர்வு நடைமுறை ஆகியவற்றை நியமிப்பதற்கான தேவையான தகுதிகளை நியாயப்படுத்துகிறது. 
 • யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வரிகளின் நிகர வருமானத்தை விநியோகிப்பதற்கும் மற்றும் மாநிலங்களுக்கு இடையில் ஒதுக்கீடு செய்வதற்கும் ஜனாதிபதிக்கு சிபாரிசுகளை வழங்குவதற்கு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 
 • யூனியன் மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நிதிய உறவுகளை வரையறுக்க நிதி கமிஷனின் கீழ் உள்ளது. அவர்கள் திட்டமிடப்படாத வருவாய் ஆதாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகவும் கூறுகின்றனர். 
பணிகள்
 • மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான வரிகளின் நிகர வருவாயை விநியோகித்தல், வரிகளுக்கு அவர்கள் அளித்த நன்கொடைகளின் அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு மானிய உதவிகளை நிர்ணயிக்கும் காரணிகளைத் தீர்மானித்தல் மற்றும் அதனுடைய அளவும். 
 • அரசின் நிதி கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சி வளங்களின் ஆதாரங்களை இணைப்பதற்கு ஒரு மாநிலத்தின் நிதியத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 
 • ஒலி நிதியின் வட்டிக்கு ஜனாதிபதியிடம் தொடர்பான வேறு எந்த விஷயமும். ஒரு நிதி கமிஷன் என்பது இந்தியாவின் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும்.
நிதி கமிஷன் (இதர ஏற்பாடுகள்) சட்டம், 1951
 • நிதி கமிஷனுக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பை 1951 ஆம் ஆண்டிற்கான நிதி கமிஷன் (இதர ஏற்பாடுகள்) சட்டம் நிறைவேற்றியதுடன், அது உலக நியமங்களுக்கு இணையாகவும், கமிஷனின் உறுப்பினர்கள் தகுதி மற்றும் தகுதியிழப்புக்கான விதிகளை விதித்ததன் மூலம், , கால, தகுதி மற்றும் அதிகாரங்கள். 
உறுப்பினர்களின் தகுதிகள்
 • நிதிக் கமிஷனின் தலைவர் பொது விவகாரங்களில் அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 • மற்ற நான்கு உறுப்பினர்கள் மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
 • உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் என, அல்லது, அல்லது தகுதியுடையவர்கள், 
 • அரசாங்க நிதி அல்லது கணக்குகளை அறிந்திருத்தல் அல்லது நிர்வாகம் மற்றும் நிதி நிபுணத்துவம் அனுபவம்; 
 • பொருளாதாரம் பற்றிய சிறப்பு அறிவு உள்ளது கமிஷனின் செயல்முறை மற்றும் அதிகாரங்கள்
 • சிவில் நடைமுறைக் கோட், 1908 இன் படி ஒரு சிவில் நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரங்களும் உள்ளன. 
 • எந்தவொரு சாட்சியின் வருகையையும் வரவழைக்கலாம் அல்லது அமல்படுத்தலாம் அல்லது தகவலை வழங்கவோ அல்லது ஆவணத்தை தயாரிக்கவோ எந்தவொரு நபருடனும் கேட்கலாம். 
 • எந்த நீதிமன்ற அல்லது அலுவலகத்திலிருந்து எந்தவொரு பொது பதிவையும் ஆவணம் தயாரிக்கக் கேட்கலாம். குற்றவியல் நடைமுறை கோட் 480, 482 மற்றும் 482 ன் நோக்கங்களுக்காக ஒரு சிவில் நீதிமன்றமாக கருதப்பட வேண்டும். 
கமிஷனின் உறுப்பினராக இருந்து தகுதியற்றவர் ஒரு உறுப்பினர் தகுதியற்றவராக இருந்தால்
 • அவர் மனநலம் பாதிக்கப்படுகிறார்; 
 • அவர் ஒரு மறுக்கமுடியாத திவாலானவர்
 • அவர் ஒரு ஒழுக்கக்கேடான குற்றம் சாட்டப்பட்டார்
 • அவரது நிதியியல் மற்றும் பிற நலன்களை இது கமிஷனின் மென்மையான செயல்பாட்டை தடுக்கிறது. 
உறுப்பினர்களின் அலுவலகங்கள் மற்றும் மறுபதிப்புக்கான தகுதி
 • ஒவ்வொரு உறுப்பினரும் ஜனாதிபதியின் வரிசையில் குறிப்பிட்டுள்ள காலப்பகுதியில் பதவி வகிப்பார், ஆனால் ஜனாதிபதியிடம் உரையாற்றும் கடிதத்தின் மூலம் அவர் தனது அலுவலகத்தில் இருந்து ராஜினாமா செய்ய தகுதியுடையவர். 
உறுப்பினர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்
 •  கமிஷனின் உறுப்பினர்கள் கமிஷனுக்கு முழுநேர அல்லது பகுதி நேர சேவையை வழங்க வேண்டும், ஏனெனில் ஜனாதிபதி தனது வரிசையில் குறிப்பிடுகிறார். 
 • மத்திய அரசால் வழங்கப்பட்ட விதிகள் படி உறுப்பினர்கள் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு செலுத்தப்பட வேண்டும். 
14 வது நிதி கமிஷன்
 • பேராசிரியர் Y. ரெட்டி தலைமையிலான 14 ஆவது ஆணையத்தின் முக்கிய பரிந்துரைகள் பகிர்ந்த மத்திய வரிகளின் நிகர வருவாயில் மாநிலங்களின் பங்கு 42% ஆக இருக்க வேண்டும். 
 • இது 13 வது நிதி கமிஷனின் பரிந்துரையை விட 10 சதவிகிதம் அதிகம். வருவாய் பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்பட்டு அகற்றப்படும். 
 • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2017-18 க்குள் நிதி பற்றாக்குறை 3% ஆக குறைக்கப்படும்.
 • மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 62% இலக்கு. 
 • மத்திய கால தவணைத் திட்டம் (எம்.டி.எப்.பி) சீர்திருத்தப்பட வேண்டும், மேலும் ஒரு வேண்டுகோளின் கூற்றுக்கு பதிலாக உறுதிப்பாட்டு அறிக்கை செய்யப்பட வேண்டும். 
 • FRBM சட்டம் இலக்குகளை தேவைப்படும் எந்த அதிர்ச்சி தன்மையை குறிப்பிட திருத்த வேண்டும். மாடல் பொருட்கள் மற்றும் சேவைகள் சட்டம் (ஜிஎஸ்டி) செயல்படுத்த மையம் மற்றும் மாநிலங்கள் 'கிராண்ட் பேர்கெயின்' முடிவுக்கு வர வேண்டும். 
 • மத்திய நிதியளித்த திட்டங்களின் எண்ணிக்கை (CSS) குறைக்க மற்றும் சூத்திரம் அடிப்படையிலான திட்ட மானியங்களின் மேலாதிக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள். 
 • மின்வாரியத்தில் நேரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான இழப்பீடுகளை மாநிலங்களுக்குத் தீர்வுகாண வேண்டும்.15 வது நிதி கமிஷன்
 • 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் வர்த்தமானியில் ஒரு அறிவிப்பு மூலம், இந்திய ஜனாதிபதியின் அனுமதியுடன், இந்திய அரசால் பதினைந்தாம் நிதி கமிஷன் அமைக்கப்பட்டது.
 • நந்த கிஷோர் சிங் கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டார், அதன் முழு நேர உறுப்பினர்களான ஷக்திகந்தா தாஸ் மற்றும் அனூப் சிங் மற்றும் அதன் பகுதி நேர உறுப்பினர்கள் ரமேஷ் சந்த் மற்றும் அசோக் லகிரி ஆகியோர்.
 • ஏப்ரல் 1, 2020 இல் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக கமிஷன் அமைக்கப்பட்டது. 
 • கமிஷனின் முக்கிய பணிகளானது, "கூட்டுறவு கூட்டமைப்பை வலுப்படுத்தி, பொதுச் செலவினத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கும் உதவுவதாகும்". 
 • சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜி.டி.டி) ஆகியவற்றின் காரணமாக, கமிஷனின் வேலை கடினமாக இருந்தது, ஏனெனில் மாநிலங்கள் மற்றும் யூனியனிடமிருந்து வரிவிதிப்பு தொடர்பான சில அதிகாரங்களை எடுத்துக் கொண்டதுடன் அது கொடுக்கப்பட்டிருந்தது GST கவுன்சில்
நிதிக் கமிஷன்களின் பட்டியல்
Finance CommissionYear of establishmentChairmanOperational duration
First1951K. C. Neogy1952–57
Second1956K. Santhanam1957–62
Third1960A. K. Chanda1962–66
Fourth1964P. V. Rajamannar1966–69
Fifth1968Mahaveer Tyagi1969–74
Sixth1972K. Brahmananda Reddy1974–79
Seventh1977J. M. Shelat1979–84
Eighth1983Y. B. Chavan1984–89
Ninth1987N. K. P. Salve1989–95
Tenth1992K. C. Pant1995–00
Eleventh1998A. M. Khusro2000–05
Twelfth2002C. Rangarajan2005–10
Thirteenth2007Dr. Vijay L. Kelkar2010–15
Fourteenth2013Dr. Y. V Reddy2015–20
Fifteenth2017N. K. Singh2020–25

21st MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
சிதிலமடைந்த சிவன் கோயிலில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
 • வந்தவாசி அருகே சிதிலமடைந்த சிவன் கோயிலில் 12-ஆம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
 • திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கீழ்வில்லிவலம் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் சிதிலமடைந்த நிலையில் சிவன் கோயில் உள்ளது. இந்தக் கிராம மக்கள் கோயிலை அண்மையில் சுத்தம் செய்தபோது அங்கு கல்வெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. 
 • இந்தக் கோயிலின் வடக்கு அடித்தளப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குலோத்துங்க சோழர் காலத்து கல்வெட்டு சிதிலமடைந்து இருந்தாலும், அதில் கிடைக்கப் பெற்ற 13 வரிகளில் கோயிலுக்கு நிலதானம் அளிக்கப்பட்ட செய்தி தெரிய வருகிறது. 
 • மேலும், இந்தக் கோயிலின் சிதிலமடைந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 18 வரிகள் கொண்ட மற்றொரு கல்வெட்டில் தாமல் வெங்கடப்பர் நாயக்கர் என்பவர் ஏரி மீன்கள் மூலம் வரும் வருவாயில் ஏரிக்கரையில் பனைமரம் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 
 • இதன் காலம் கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். மேலும், மற்றொரு கல்வெட்டின் காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். 
3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் திட்டைகள் கண்டெடுப்பு
 • புதுக்கோட்டை அருகே மலைடிப்பட்டி கிராமத்தில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏழு கல் திட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 • மலையடிப்பட்டி நெடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேலச்சுங்காடு மொக்காண்டி கொம்படி ஆலயம் பெருங்கற்கால நினைவுச் சின்னமான கல்வட்டத்தின் மையத்தில் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. 
 • கோயிலின் முக்கிய வழிபாட்டுப் பகுதியில் இருந்த கல்வட்டம் மற்றும் கல்திட்டை முழுமையாக அகற்றப்பட்டு, அதில் இருந்த கற்பலகைகள் கோயிலுக்கு நேர் எதிர்புறத்தில் கிடத்தப்பட்டு பலி பீடமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதன் அருகில் இருக்கும் 2 கல் வட்டங்கள் முழுமையாக சிதைக்கப்படாமல் கல்லறை போன்ற அமைப்புகளுடன் உள்ளது. 
 • இதன் மையப்பகுதியில் மரங்கள் மற்றும் கொடிகள் மிகுந்து அடர்த்தியாகக் காணப்படுகிறது. இத்தகைய வழிபாட்டு முறை கோயில் கட்டுமான அமைப்புகளுக்கும் உருவ வழிபாட்டுக்கும் முந்தையது என மூத்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெரும்பாலும் வட மாவட்டங்களைப் போல தென்மாவட்டங்களில் பெருங்கற்கால சின்னங்கள் வழிபாட்டில் காணப்படுவதில்லை. 
 • ஆனால் கொம்படி வேல் வழிபாடும், சுடுமண் சிற்ப வழிபாடும் மிகுதியாக உள்ளன. நெடுங்கல் வழிபாடு, கல் திட்டை வழிபாடு உள்ளிட்ட வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் அற்றுப்போய் கோயில் கட்டுமானங்களாக மாறி விட்ட நிலையில் இக்கோயிலில் மட்டும் கல் வட்டம், கல் திட்டை வழிபாட்டில் உள்ள நிகழ்காலச் சான்றாக உள்ளது.
 • ஏழு கல்வட்டங்கள் முழுமையாகவும், பகுதியளவு சிதைந்த நிலையில் கல்வட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கல்வட்டங்களில் இரும்புத் தாது கற்களான லேட்டரைட் எனப்படும் செம்புராங்கற்கள் கொண்டு வட்ட வடிவில் அடுக்கப்பட்டு உள்ளன. கல்வட்டத்தின் மையத்தை விட்டு சற்று விலகலாக கிழக்குப்புற விளிம்புப் பகுதியில் கருங்கல்லினாலான நான்கு பலகைக் கற்களை இணைத்து சதுர வடிவிலான கல்லறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எவரெஸ்டில் 24 முறை ஏறி நேபாள வீரர் உலக சாதனை
 • காத்மாண்டு இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 24 முறை ஏறி நேபாள வீரர் காமி ரிடா ஷெர்பா உலக சாதனை படைத்துள்ளார்.இமயமலையில் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. 
 • கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது.நேபாளத்தை சேர்ந்த மலையேறும் வீரர் காமி ரிடா ஷெர்பா 50. இவர் ஏற்கனவே 22 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். 23வது முறையாக கடந்த 15ல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
 • இந்நிலையில் இந்திய காவல்துறையை சேர்ந்த மலையேறும் குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்துக்கு ஷெர்பா மீண்டும் புறப்பட்டார். நேற்று காலை 6:38 மணிக்கு இந்திய குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்தார்.இதையடுத்து 24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ஷெர்பா உலக சாதனை படைத்துள்ளார்.
அதிக லாபம், டர்ன் ஓவர்: இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமானது ரிலையன்ஸ்
 • மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2018-19-ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தைக் காட்டிலும் அதிக லாபம் ஈட்டி, இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.
 • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டர்ன் ஓவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation - IOC) நிறுவனத்துடன் ஒப்பிடுகையில், அதில் பாதியளவே இருந்தது. ஆனால், அதற்குப் பின்னர் அந்த நிறுவனம் தொலைத் தொடர்பு, சில்லறை விற்பனை, டிஜிட்டல் சேவை எனப் பல தளங்களில் தனது தொழிலை விரிவுபடுத்தி, பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.
 • இந்த நிலையில், கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2018-19-ம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 6.23 லட்சம் கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்துள்ளது. அதே சமயம் ஐஓசி நிறுவனம் 6.17 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே டர்ன் ஓவர் செய்துள்ளது.
டெஸ்லாவுடன் கைகோக்கும் அசோக் லேலாண்ட்! - சென்னையில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டம்
 • அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய அசோக் லேலாண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தேசிய இளையோர் கூடைப்பந்து: ஆடவர் பிரிவில் ஹரியாணா, மகளிர் பிரிவில் கேரளம் சாம்பியன்
 • கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான 16 வயதுக்கு உட்பட்டோருக்கான 36-ஆவது தேசிய இளையோர் கூடைப்பந்து இறுதி ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் ஹரியாணா அணியும், மகளிர் பிரிவில் கேரள அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. 
 • மகளிர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கேரள அணி 80-69 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழக அணியைத் தோற்கடித்தது. முன்னதாக 3 மற்றும் 4 ஆம் இடங்களுக்கான மகளிர் பிரிவு ஆட்டத்தில் 48 புள்ளிகள் பெற்று ராஜஸ்தான் அணி 3 ஆவது இடத்தையும், 47 புள்ளிகள் பெற்று பஞ்சாப் அணி 4 ஆவது இடத்தையும் பிடித்தன.
 • ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஹரியாணா அணி 81- 74 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் அணி 3 ஆவது இடத்தையும், கர்நாடகம் அணி 4 ஆவது இடத்தையும் பிடித்தன. 
 • இதில் ஆடவர் பிரிவில் வெற்றி பெற்ற ஹரியாணா அணிக்கு ரூ.1.5 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்த கேரள அணிக்கு ரூ.1 லட்சமும், மூன்றாம் இடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ரூ.50 ஆயிரமும், பரிசுக் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 • மகளிர் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த கேரளா, தமிழகம், ராஜஸ்தான் அணிகளுக்கும் பரிசுத் தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன. மகளிர் பிரிவில் தமிழக அணியைச் சேர்ந்த வீராங்கனை சத்யாவுக்கு பிராமிசிங் பிளேயர் விருது வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள், வீராங்கனைகள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.ரயில் பெட்டி தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.2,500 கோடி ஒதுக்க திட்டம்
 • ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.2,500 கோடி ஒதுக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. 
 • இந்திய ரயில்வேயின் தலைசிறந்த ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எஃப் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை) விளங்குகிறது. இங்கு தானியங்கி ரயில் பெட்டிகள், சொகுசு ரயில் பெட்டிகள், அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான ரயில் பெட்டிகள் போன்ற பல்வேறு ரகங்களில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
 • இந்நிலையில், ஐ.சி.எஃப் சார்பில், 60,000-ஆவது ரயில்பெட்டி (தானியங்கி ஆய்வு ரயில்பெட்டி) தயாரிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.எஃப் கடந்த ஆண்டில் (2018-19) 3,262 ரயில்பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது.
 • உலகின் மிகப்பெரிய ரயில் பெட்டித் தொழிற்சாலையாக ஐ.சி.எஃப். திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிதியாண்டில் (2019-20) 4,000 ரயில்பெட்டிகளைத் தயாரித்து, பழைய சாதனையை ஐ.சி.எஃப். முறியடிக்கும்.
 • ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத ரயில் தில்லி- வாரணாசி இடையே பயணிகள் ஆதரவுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் ரயில்-18 வடிவமைப்பில், குளிர்சாதனவசதி மற்றும் படுக்கை வசதி கொண்ட ரயில்-19 ரயிலை தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில்-18 போன்ற 40 ரயில் தொடர்களை ஐ.சி.எஃப். உற்பத்தி செய்ய உள்ளது. ரயில்-18 இன் இயக்கத்தின் போது கால்நடைகள் வந்து மோதி ரயிலின் முன்புறம் சேதம் ஆவதை தவிர்க்க அலுமினியம் கொண்ட வடிவமைப்பு பயன்படுத்தப்படவுள்ளது. 
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை திட்டம்
 • ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியின் காரணமாக தற்காலிகமாக தங்கியுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த குறிப்பிடத்தகுந்த நபர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டத்தை அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் அறிவித்தார்.
 • முதல் கட்டமாக 6,800 முதலீட்டாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மொத்தம் 100 பில்லியன் திராம் (₹1.90 லட்சம் கோடி) முதலீடு செய்துள்ளார்கள்.
மிக நீண்ட இஃப்தார் விருந்து: கின்னஸ் புத்தகத்தில் இந்திய தொண்டு நிறுவனம்
 • ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொண்டு நிறுவனம் 1 கி.மீ. தொலைவுக்கு மிக நீண்ட இஃப்தார் விருந்தை நடத்தி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
 • ஜோகிந்தர் சிங் சலேரியா என்ற இந்தியர் அபுதாபியில் பிசிடி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். துபை தொழிற்பூங்காவில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் வளாகத்தில் தினந்தோறும் சைவ இஃப்தார் விருந்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
 • இதில், ஏழு வகையான சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. இதனை உலகிலேயே மிக நீண்ட இஃப்தார் விருந்தாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது.