Type Here to Get Search Results !

25th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை: அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்
  • ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக் கட்டணம் தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியாகுறிச்சியில் இயங்கும் பாரதியார் பெண்கள் தனியார் பொறியியல் கல்லூரி மாணவிகள் ஜோதிகா, அன்புச்செல்லவி, அபர்ணா உள்ளிட்ட 114 பேர் தாக்கல் செய்த மனுவில், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த எங்களுக்கு தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும், அரசு கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணமே உதவித்தொகையாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஐநா.சபை தூதுக்குழு தலைவராக இந்திய ராணுவ அதிகாரி சைலேஷ் தினைகர் நியமனம்
  • தெற்கு சூடானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக் குழுவின் தலைவராக லெப்டினென்ட் ஜெனரல் சைலேஷ் தினைகரை, ஐநா சபை பொதுச் செயலர் அன்டோனியே கட்டரஸ் நியமித்துள்ளார். 
  • ஏற்கெனவே இந்த தலைமை பொறுப்பிலிருந்த லெப்டினென்ட் ஜெனரல் ஃப்ராங்க் கமான்ஜியின் பதவிக் காலம் மே 26-ம் தேதியுடன் முடிகிறது. இதனையடுத்து, இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் சைலேஷ் தினைகர் ஐநாவின் தூதுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவையின் மிக இளைய உறுப்பினரான பிஜு ஜனதா தள சந்திராணி முர்மு
  • கியோஞ்சர், ஒரிசா பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த 25 வயதான பி டெக் பட்டதாரியான சந்திராணி முர்மு மக்களவையின் மிக இளைய உறுப்பினர் ஆவார். 
  • ஒரிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சர் தொகுதியில் இந்தியாவில் மொத்தமுள்ள இரும்பு தாதுக்களில் 20% உள்ளது. ஆனாலும் இங்குள்ள மக்கள் மிகவும் வறுமையில் உள்ளனர். இந்த பகுதியை இங்குள்ள மக்கள் 'வறுமையில் வாடும் மக்கள் உள்ள வளமான பூமி' என அழைப்பது வழக்கமாகும். 
  • இந்த தொகுதி தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும். இந்த தொகுதியில் பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திராணி முர்மு வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் பி டெக் பட்டம் பெற்றவர் ஆவார்.
மணிக்கு 360 கிமீ வேகம்: ஜப்பானில் புதிய ரக புல்லட் ரயில் சோதனை வெற்றி!
  • ஜப்பானில் தயாரான புதிய மாடல் புல்லட் ரயில் சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மணிக்கு 360 கிமீ வேகத்தில் இந்த புல்லட் ரயில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. 
  • ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாகவே இந்த புல்லட் ரயில் சேவையை அறிமுகப்படுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளது. 
  • இந்த புல்லட் ரயில், தற்போது உள்ள ரயில்களை விட இலகுவாகவும், பூகம்பம் மற்றும் பல்வேறு இடற்பாடுகளில் இருந்து காத்துக்கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் எரிபொருள் சிக்கமும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.



தென்னாப்பிரிக்கா அதிபராக ரமபோசா பதவியேற்பு
  • ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா மீது எழுந்த ஊழல் புகார்களைத் தொடர்ந்து கடந்தாண்டு அவர் பதவி விலகினார். இதையடுத்து சிரில் ரமபோசா அதிபரானார். 
  • இந்நிலையில், கடந்த 8ம் தேதி பொது தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றது. இதனால் மீண்டும் ரமபோசாவின் பெயர் அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் புதிய அதிபராக மீண்டும் பதவியேற்றார்.
இந்தியா "ஹிந்து தேசம்': சர்ச்சைக்குரிய தீர்ப்பை ரத்து செய்தது மேகாலய உயர்நீதிமன்றம்
  • இந்தியா, ஹிந்து தேசம் என்று தனி நீதிபதி அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை மேகாலய உயர்நீதிமன்றம் சனிக்கிழமை ரத்து செய்தது. மேகாலயத்தில் ஒருவருக்கு மாநில அரசு இருப்பிடச் சான்று வழங்க மறுத்த விவகாரத்தை அந்த மாநில உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பரில் விசாரித்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.சென் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்தார். 
  • இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக அறிவிக்கப்பட்டது. மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்ததால், அப்போதே இந்தியாவை ஹிந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும். 
  • மேலும், இந்தியாவின் சட்டங்கள், அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றை எதிர்ப்போர் யாராக இருந்தாலும், அவர்களை இந்திய குடிமக்களாகக் கருதக் கூடாது.
வில்வித்தை: இந்தியாவுக்கு வெண்கலம்
  • உலக கோப்பை வில்வித்தை ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.துருக்கியில், உலக கோப்பை வில்வித்தை தொடரின் 3வது சுற்று நடக்கிறது. 
  • இதன் ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு, 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, ரஷ்யா அணிகள் மோதின. இந்தியா சார்பில் ரஜத் சவுகான், அபிஷேக் வர்மா, அமான் சைனி பங்கேற்றனர். அபாரமாக ஆடிய இந்திய அணி 235-230 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
  • பெண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜோதி சுரேகா, முஸ்கான் கிரார், சுவாதி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 226-228 என, பிரிட்டனிடம் வீழ்ந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel