Type Here to Get Search Results !

24th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

அட்டர்னி ஜெனரல் பதவிக்காலம் நீட்டிப்பு
  • மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • வரும் 2020ம் ஆண்டு வரை அவர் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் பிரதமர் மோடி
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடி கொடுத்தார். மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 303 இடங்களில் தனிப் பெரும்பான்மையும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. 
  • இதன்மூலம் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
  • தற்போதைய அமைச்சரவை மற்றும் 16-வது மக்களவை முடிவுக்கு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடித்ததை அளித்தனர்.
பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை வெற்றி
  • ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு வெள்ளியன்று பொக்ரானில் நவீன வெடிகுண்டு சோதனை நடத்தியது. 
  • இந்த சோதனை வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு 30 கி.மீ இலக்கை துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
உச்சநீதிமன்றத்தில் அனைத்து நீதிபதி பதவிகளும் நிரப்பப்பட்டன
  • டில்லி உச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றதை அடுத்து அனைத்து 31 இடங்களும் நிரப்பப் பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தில் கொலிஜியம் பரிந்துரையின் பேரில் நீதிபதிகள் நியமிக்கப் படுகின்றனர். 
  • உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 31 நீதிபதி பதவி பணி இடங்களில் 27 பேர் மட்டுமே பதவியில் இருந்து வந்தனர். காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு கொலிஜியம் கூடி 4 நீதிபதிகள் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலில் இருந்ததால் நீதிபதிகள் நியமனம் சற்று தள்ளிப் போனது. 
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று நீதிபதிகள் அநிருத்தா போஸ், ஏ எஸ் போபண்ணா, பூஷன் ராமகிருஷ்ண கவாய்,மற்றும் சூரியகாந்த் ஆகியோருக்கு ஒப்புதல் அளித்தார்.
இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டி: மேரி கோம்,அமித் பாங்கல், ஷிவ தாபா ஆகியோர் தங்கம் பதக்கம்
  • டெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் மேரி கோம் தங்கம் வென்றார். 
  • ஆண்கள் பிரிவில் 49 கிலோ எடை பிரிவில் அமித் பாங்கல், 60 கிலோ எடை பிரிவில் ஷிவ தாபா ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஈரான் எண்ணெய் இறக்குமதியை முழுவதுமாக இந்தியா நிறுத்தியது
  • ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுவதுமாக நிறுத்தி விட்டதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்த பிரச்னை காரணமாக அமெரிக்கா பல நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்தது. 
  • அதற்காக இந்த மாதம் 2 ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தது. அந்த கெடுவை மீறி ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கபடும் என அச்சுறுத்தல் விடப்பட்டது. இதை ஒட்டி இந்தியா கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளது.



பிரெக்சிட் விவகாரம்: பிரிட்டன் பிரதமர் ராஜினாமா
  • ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெறமுடியாததால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
  • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. ஆனால், அதற்கு பிரெக்சிட் என்னும் மசோதா கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டும். ஏற்கனவே ஒருமுறை பிரெக்சிட் மசோதா ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவியிருந்தது.
  • இந்த முறையும் பிரெக்சிட் மசோதாவிற்கு ஒப்புதலைப் பெறமுடியாமல், சமீபத்தில் பிரிட்டன் மக்களவை தலைவர் ஆண்ட்ரே லேடன் பதவி விலகியிருந்தார். இந்தநிலையில், இதே பிரச்னை காரணமாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே, வரும் ஜூன் 7 அன்று ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை - பாகிஸ்தான் சோதனை
  • பாகிஸ்தான் ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் சாகின் 2 ஏவுகனையை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை செய்தது. குறிப்பாக அணு ஆயுந்தங்களை ஏந்தி செல்லும் இந்த ஏவுகணை 1500கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை குறிவைத்து தாக்க கூடிய வல்லமை படைத்தது. 
  • அடிக்கடி வடகொரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது, இந்நிலையில் அந்நாட்டுக்கு போட்டியாக பாகிஸ்தானும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சாகின் 2 ஏவுகணையை சோதனை செய்துள்ளது. 
  • மேலும் பாகிஸ்தானின் Ispr அமைப்பின் படி சாகின் 2 ஏவுகணை பாகிஸ்தானின் மூலோபாய அமைப்பை பாதுகாப்பதற்க்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 60 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த 'பால்கன்-9' ராக்கெட்
  • உலகம் முழுவதும் சீரான மற்றும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக தலா 227 கிலோ எடையுடைய 60 செயற்கைக்கோள்களை பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த வாரம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. 
  • ஆனால் பரிசோதனைகள் காரணமாக ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணி ஒத்திவைக்கப்பட்டது. 
  • இந்த நிலையில், புளோரிடா மாகாணத்தின் கேப் கெனவெரலில் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 10.30 மணிக்கு 60 செயற்கைக்கோள்களுடன் பால்கன்-9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.



600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்த ரயில்: சீனா அறிமுகம்
  • மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்தவிசை ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • காந்த விசையில் இயங்கும் புதிய அதிவேக ரயிலை பொதுத் துறை நிறுவனமான சிஆர்ஆர்சி கிங்டாவ் சிஃபாங் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. ஷாங்டாங் மாகாணத்திலுள்ள துறைமுக நகரமான கிங்டோவில் இந்த ரயில் இயக்கிக் காட்டப்பட்டது. 
  • இந்த ரயில் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது ஆகும். வர்த்தக ரீதியில் இது இயக்கப்படும்போது, விமான நிறுவனங்களுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும்.
இந்தியா-சிங்கப்பூர் கடற்படை பயிற்சி நிறைவு
  • தென்சீனக் கடல் பகுதியில் இந்தியா-சிங்கப்பூர் கடற்படைகள் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சி புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. தென்சீனக் கடலில் கடந்த 16ஆம் தேதி முதல் இந்த பயிற்சி நடைபெற்று வந்தது. இந்த பயிற்சிக்கு, சிம்பக்ஸ்-2019 என்று பெயரிடப்பட்டிருந்தது. 
  • இப்பயிற்சியில் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சக்தி, இந்திய கடலோர பாதுகாப்புப் படை பி-81 விமானம் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. சிங்கப்பூர் கடற்படை தரப்பில் ஸ்டெட்பாஸ்ட், வேலியன்ட் ஆகிய போர் கப்பல்கள், எப்-16, எப்-50 ரக போர் விமானங்கள் பங்கெடுத்தன. 
அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக: மீண்டும் முதல்வராகிறார் பெமா காண்டு
  • அருணாச்சல பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. பாஜக மூத்த தலைவரும், முதல்வருமான பெமா காண்டு முதல்வராக மீண்டும் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. 
  • மக்களவைத் தேர்தலுடன் அருணாச் சல பிரதேச சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டப் பேரவை யில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் பதிவான வாக்கு களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தலில் பாஜக 37 தொகுதி களில் வெற்றி பெற்று தனிப்பெரும் பான்மையுடன் அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel