Type Here to Get Search Results !

28th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழகத்துக்கு 9.91 டிஎம்சி நீர்: கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
  • தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி நீரை காவிரியில் இருந்து கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. 
  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடக அரசு மொத்தம் 177.25 டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும். அதன்படி, ஜூன் மாதத் தவணையாக 9.19 டிஎம்சி நீர் வழங்கப்பட வேண்டும். 
  • இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்ற காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் ஜூன் மாதத்திற்கான நீரை கர்நாடக அரசு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் வலியுறுத்தினர். 
அன்னை தெரசா மகளிர் பல்கலை.க்கு புதிய துணைவேந்தர்: ஆளுநர் நியமனம்
  • கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக பேராசிரியர் வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார். 
  • ஆசிரியர் பணியில் நீண்ட அனுபவம் கொண்ட வைதேகி விஜயகுமார், அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். 
  • சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் ரியர்சன் பல்கலைக்கழகம் போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்." />



தரையில் இருந்து விண்ணில் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
  • ஒடிசாவின் பாலசோர் பகுதியில், தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கும் ஆகாஷ்- 1எஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 
  • தரையில் இருந்து விண்ணில் இருக்கும் இலக்கை தாக்கும், ஆகாஷ் 1எஸ் என்ற ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. 
  • இந்தியாவின் மாறுபட்ட தொழில்நுட்ப முறைகளும் நாட்டை காக்கவும் வகையில் இந்தியா செயல்பாட்டு வருகின்றது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இணைந்து ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வரும் இந்த ஏவுகணைகள், தரைமட்டத்தில் இருந்து 18 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும் விமானத்தை கூட தாக்கும் வல்லமை கொண்டவை.
இந்தியா- வங்கதேச எல்லையில் முதல் பேருந்து சேவை
  • சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்தியா- வங்கதேச எல்லையில் முதன்முறையாக பேருந்து சேவை இயக்கப்பட்டுள்ளது. கடந்த 26-ம் தேதி வங்கதேசம் தலைநகர் டாக்காவிலிருந்து 13 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்று, நேற்று காலை இந்தியாவின் எல்லை பகுதியான ஜல்பைகுரி((jalpaiguri)) மாவட்டத்தை வந்தடைந்தது. 
  • இந்தியா- வங்கதேச எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள், உறவினர்களை சந்திக்கவும், தொழில் சார்ந்த பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் வழியாக சென்று வருகின்றனர். தற்போது பயண தூரம் சுமார் 50 கிலோ மீட்டர் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.



உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : தங்கம் வென்று அசத்திய ரஹி சர்னோபத்
  • சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பாக ஐஎஸ்எஸ்எஃப் சார்பில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்றுவருகிறது. 
  • இதில், மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் 37 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். இந்த வெற்றியின் மூலம், டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுவிட்டார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : சவுரப் சவுத்ரி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்
  • ஜெர்மனியின் முனிச் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்ற இளம் வீரர் சவுரப் சவுத்ரி அபாரமாக விளையாடினார். 
  • இறுதிப் போட்டியில் 246.3 புள்ளிகளைப் பெற்ற அவர் தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதே போல, பெண்களுக்கான 25 மீட்டர் ரைபிள் பிரிவின் இறுதிப் போட்டியில் அசத்திய ராகி சர்னோபட் 50 க்கு 37 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். உலக கோப்பையில் இதுவரை 3 தங்கம் வென்றுள்ள இந்திய அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel