Type Here to Get Search Results !

27th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சௌரப் சௌத்ரி தங்கப் பதக்கம்
  • உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார்.
  • ஜெர்மனியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட சவுத்ரி (17 வயது), 246.3 புள்ளிகள் பெற்று உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். 
  • 245 புள்ளிகளுடன் படைத்த தனது முந்தைய சாதனையை அவரே நேற்று முறியடித்தார். முன்னதாக இதே தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனை அபூர்வி சாண்டிலா தங்கப் பதக்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ்-1எஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  • ஆகாஷ்-1எஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. 
  • உள்நாட்டிலேயே தயாராகும் புதிய பரிணாமம் ஆகாஷ்-1 எஸ் ஏவுகணை தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் இது 2வது வெற்றிகரமான சோதனையாகும்.



விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை குறித்து விசாரிக்க நீதிபதி சங்கீத சிங்ரா செகல் தலைமையில் குழு
  • விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கடந்த 16ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை சரியா என்பதை உறுதி செய்ய நீதிபதி சங்கீத சிங்ரா செகல் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
  • பெண் நீதிபதி சங்கீத சிங்ரா, டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறார்.
பெல் நிறுவனத்தின் லாபம் ரூ.682 கோடி
  • பொதுத் துறையைச் சேர்ந்த பெல் (பி.ஹெச்.இ.எல்.) நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.682.70 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 
  • சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பெல் நிறுவனம் ரூ.10,418.03 கோடி வருவாய் ஈட்டியது. முந்தைய 2017-18 நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.10,351.07 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். 
  • நிகர லாபம் ரூ.457.17 கோடியிலிருந்து 49 சதவீதம் அதிகரித்து ரூ.682.70 கோடியானது. கடந்த 2018-19 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.29,507.28 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.31,026.59 கோடியாக இருந்தது. தனிப்பட்ட நிகர லாபம் ரூ.806.60 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.1,215.39 கோடியானது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel