Thursday, 23 May 2019

22nd & 23rd MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

மூன்றாவது பெரியக் கட்சியாக மாறிய திமுக - 38 தொகுதிகளில் பிரம்மாண்ட வெற்றி
 • மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசிய அளவில் மூன்றாவது பெரியக் கட்சியாக திமுக உருவாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. 
 • பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் தமிழகத்தில் அதற்குத் தலைகீழாக பாஜகவால் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. 
 • பாஜக கூட்டணியில் அதிமுக மட்டுமே ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 39 தொகுதிகளில் 38 தொகுதிகளைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.
ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார் ஜெகன்மோகன் ரெட்டி
 • ஆந்திர மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சியை பிடித்துள்ளார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது கட்சி வேட்பாளர்கள், சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 150-ல் முன்னணி பெற்றுள்ளனர். 
 • ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 24 தொகுதிகளிலும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரே ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளது. இதனால், தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறார் ஜெகன். 
 • இவர் வரும் 30-ம் தேதி, விஜயவாடாவில் உள்ள இந்திரா மைதானத்தில் பதவி பிரமாணம் செய்ய உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, கடந்த மாதம் 11-ம் தேதி நடந்தது.அமோக வெற்றியடைந்தது பாரதிய ஜனதா கூட்டணி
 • மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 350 தொகுதிகள் வரை அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 
 • மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. அதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. 
 • இதுவரை 50‌3 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பாஜக 302 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
ஒடிஸாவில் 5ஆவது முறையாக முதல்வராகிறார் நவீன் பட்நாயக்
 • ஒடிஸா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். 
 • ஒடிஸா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இத்தேர்தலில் ஆரம்பம் முதலே பிஜு ஜனதா தளம் பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
ஓமன் பெண் எழுத்தாளருக்கு 'மான்புக்கர்' விருது
 • இலக்கியத்துக்காக வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான மான்புக்கர் பரிசு ஓமன் பெண் எழுத்தாளர் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நுால்கள் மற்றும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பிரிட்டனில் வெளியாகும். இந்நாவல்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து மான்புக்கர் பரிசு வழங்கப்படும். இது கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
 • இந்த ஆண்டுக்கான தேர்வு ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவினர் தலைமையில் நடந்தது. பல்வேறு சுற்றுக்கு பின் தேர்வான நாவல்கள் அனைத்தும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளாக இருந்தன. அதனால் பல மணிநேர பரிசீலனைக்கு பின் ஓமன் நாட்டை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ஜோக்ஹா அல்ஹார்த்ஹி எழுதிய செலஸ்ட்டியல் பாடீஸ் (புனிதமான உடல்கள்) என்ற நாவல் தேர்வானது.
 • லண்டனில் நடைபெற்ற விழாவில் ஜோக்ஹாவிற்கு மான்புக்கர் விருது 50 ஆயிரம் பவுண்டுகளை (இந்தியா மதிப்பில் 44 கோடி) ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.ஓமன் நாட்டில் முன்னர் இருந்த பெண்ணடிமை முறையையும் அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த 3 சகோதரிகளின் வாழ்க்கை அவர்களின் திருமண பந்தம் போன்றவற்றை உணர்வுப்பூர்வமாக இக்கதை சித்தரித்துள்ளது.ஜோக்ஹா அல்ஹார்த்ஹி அரபு மொழியில் எழுதியதை மரிலின் பூத் என்ற பெண்மணி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்."வீடுகள், சிறு வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் காப்பீடு வசதி: காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை
 • பேரிடர் பாதிப்புக்கு ஆளாகும் பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் காப்பீடு வசதி கொண்டு வர காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 
 • புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சொந்த வீடு வைத்திருப்பவர்கள், வர்த்தகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. வீடு வைத்துள்ள பெரும்பாலானோர் தாங்கள் வாங்கிய விலைக்கு காப்பீடு செய்கின்றனர். 
 • ஆனால், இதற்கான பிரீமியம் தொகை மிக அதிகமாக உள்ளது. காப்பீடு செய்யாதவர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அனைவருக்கும் காப்பீடு வசதி கிடைக்கும் வகையில் குறைந்த பிரீமியத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டங்களை கொண்டுவர வேண்டும் என இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு
 • தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டின் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், அந்நாட்டின் அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் தேர்வு செய்தனர். 
 • அதிபர் பதவிக்கு சிரில் ரமபோசாவை தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரில் ரமபோசா வெற்றிபெற்றதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மோகோயேங் தெரிவித்துள்ளார். 
அதிவேக பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
 • இந்திய விமானப்படை நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை உருவாக்கும் முயற்சியை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். 
 • இந்த ஏவுகணை ஒவ்வொரு கட்டமாக வேகம் அதிகரிக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது. இந்த ஏவுகணையை ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்து வருகிறது. இன்று இந்த பிரமோஸ் ஏவுகணையின் விமானப்படைக்கான ஏவுகணையை இந்திய விமானப்படை சோதனை செய்தது. 
 • இந்த ஏவுகணை சு 30 எம்கேஐ ரக படை விமானத்தில் இருந்து ஏவப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக விமானப்படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.திருப்பதியில் ரூ.100 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம்
 • திருப்பதியில் 6 இடங்களில் பேருந்து நிலையம் உள்ளது. அனைத்து பேருந்து நிலையங்களிலும் பக்தர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 
 • இந்த நிலையில் திருப்பதியில் மேலும் ஒரு பேருந்து நிலையத்தை அமைக்க ஆந்திர மாநில அரசு முடிவெடுத்து திருப்பதியை அடுத்த பாலாஜி பால் பண்ணை அருகே 20 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு ரூ.100 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. 
 • அந்த புதிய பேருந்து நிலையம், சென்னை மாதாவரத்தில் உள்ள பேருந்து நிலையத்தைப்போல் ஒரு முன்மாதிரி பேருந்து நிலையமாக அமைக்கப்பட உள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
 • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து புதன்கிழமை காலை 5.30 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 
 • ரீசாட்-2பிஆர்1 என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை இந்த ராக்கெட் சுமந்துகொண்டு சென்றது.இதற்கான இறுதிகட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று அதிகாலை 4.27 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 
 • விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதுடன், விண்வெளி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக ராக்கெட் ஏவுவதை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
அகில இந்திய கூடைப்பந்து போட்டி: கோப்பை வென்றது சென்னை இந்தியன் வங்கி அணி
 • தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து இறுதிப் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி முதலிடம் பிடித்து சுழற்கோப்பையை கைப்பற்றியது. பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மே 15 முதல் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வந்தன. 
 • இதில் 24 அணிகள் பங்கேற்றன. மே 18 வரை நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றன. 19 ஆம் தேதி முதல் லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் செகந்திராபாத் ஏஓசி, சென்னை இந்தியன் வங்கி, பெங்களூரு பேங்க் ஆப் பரோடா, இந்திய தரைப்படை (ரெட் ) அணிகள் மோதின. சென்னை இந்தியன் வங்கி அணியும் பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன."

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment