29th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி
 • கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், மா சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதம், அகில இந்திய அளவில் மாங்கனி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். 
 • வரும் ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடக்கிறது. துவக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 
திருச்சி என்ஐடியில் விண்வெளி தொழில்நுட்ப சார்பு மையம்: இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
 • இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில், தென்னிந்தியாவின் முதல் அடைவு மையமாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) விண்வெளி தொழில்நுட்ப சார்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது. 
 • திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில், என்ஐடி இயக்குநர் மினிஷாஜி தாமஸ், இஸ்ரோ நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு திட்ட இயக்குநர் பி.வி. வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். 
 • திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சார்பு மையமானது, விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழில்துறையினர், ஆராய்ச்சி மாணவர்கள், விஞ்ஞானிகள் என முத்தரப்பையும் இணைக்கும் பாலமாக செயல்படும்.
பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் இடம்பெற்றார் நெல் ஜெயராமன்
 • பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நெல் ஜெயராமனின் குறிப்புகள் பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ளன. 
 • தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 • இதில், பிளஸ் 2 தாவரவியல் பாடநூலில் நெல் ஜெயராமனின் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடரான இவர், 174 அரிய நெல் வகைகளை மீட்டெடுத்ததுடன், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து பாதுகாத்து வந்தார்கார்பரேட் கடன்களுக்கு சிறப்பு குழு : ரிசர்வ் வங்கி
 • இந்திய ரிசர்வ் வங்கி கார்ப்பரேட் கடன்களுக்கான இரண்டாம் நிலை சந்தை அபிவிருத்திக்கு, பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. 
 • இதன் தலைவராக, கனரா வங்கி சேர்மன் மனோகரன், இந்தியன் வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி கண்ணன், ஏஇசட்பி அண்டு பார்ட்னர்ஸ் அமைப்பின் நிர்வாகி பஹ்ரம் வக்கில், சிஏஎப்ஆர்ஏஎல் கூடுதல் இயங்குநர் ஆனந்த் சீனிவாசன், ஜேபி மார்கன் இந்திய பொருளியல் துறை தலைவர் சஜித் இசட் செனாய் மற்றும் இஒய் இந்தியா தலைமை நிர்வாகி அபிஷர் திவாஞ்சி ஆகியோர் அதன் உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விமானப்படை- இஸ்ரோ ஒப்பந்தம்
 • காகன்யா என்று அழைக்கப்படும் திட்டத்திற்காக இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 • நேற்று இஸ்ரோ தலைவர் சிவன் உடன், இந்திய ஏர் வைஸ் சீப் மார்ஷல் கபூர், காகன்யா திட்ட இயக்குநர் ஹட்டன் உடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டார். இஸ்ரோவின் இந்த திட்டத்தில் ஆட்கள் தேர்வு, பயிற்சி உள்ளிட்ட அம்சங்களை இஸ்ரோ நிறுவனம் மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
ஆபாச வீடியோவை தடுக்க இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்
 • ஆன்லைன் வாயிலாக பரப்பப்படும் குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் குறித்து, புகார் அளிக்க, www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை, மத்திய அரசு கடந்த ஆண்டு துவங்கியது. 
 • இதன் மூலம் அளிக்கப்படும் புகார்கள் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 
 • மேலும், புகார் மீதான நடவடிக்கைகள் குறித்து, அந்த இணையத்திலேயே, தகவல் தரவும் வசதி செய்யப்பட்டது.
 • இந்நிலையில், ஆன்லைனில் பரப்பப்படும் குழந்தைகளின் ஆபாச வீடியோ, புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, தகவல் பரிமாறிக் கொள்ள, இந்தியா - அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
 • அமெரிக்காவின், என்.சி.எம்.இ.சி., எனப்படும், காணாமல் போகும் மற்றும் சுரண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான தேசிய மையம் மற்றும் இந்தியாவின், என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்றப் பதிவேடு பிரிவு ஆகிய அமைப்புகளுக்கு இடையே, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
 • இதன் மூலம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர்பாக, அமெரிக்க நிறுவனத்தில் பதிவாகி உள்ள, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தகவல்களை, இந்திய விசாரணை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.ஒருமைப்பாட்டு சிலைக்காக விருது பெற்றது எல் அண்டு டி
 • உலகின் உயரமான சிலையாக, சர்தார் வல்லபபாய் படேலின், ஒருமைப்பாட்டு சிலையை வடிவமைத்து நிறுவியதன் வாயிலாக, வேர்ல்டு ஆர்க்கிடெக்சர் நியூஸ் விருது, எல் அண்டு டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கரன்சி கண்காணிப்பு பட்டியல்; இந்தியாவை நீக்கியது அமெரிக்கா
 • டாலர் கண்காணிப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து, இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தை, அமெரிக்கா நீக்கியுள்ளது. 
 • இரு நாடுகளின் அன்னியச் செலாவணி செயல்பாடுகள், சந்தேகத்திற்கிடமின்றி உள்ளதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அமெரிக்கா, பரஸ்பர வர்த்தகம் புரியும் நாடுகளின் அன்னியச் செலாவணி பரிவர்த்தனைகளை கண்காணிக்கிறது. 
 • அளவிற்கு அதிகமாக, அமெரிக்க டாலரை குவித்து, அன்னியச் செலாவணி மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் நாடுகள், கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்படுகின்றன. இதில், அமெரிக்கா முதன் முறையாக, 2018, மே மாதம், இந்தியாவைச் சேர்த்தது. 
 • இத்துடன், சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும், இப்பட்டியலில் உள்ளன.இந்நிலையில், அமெரிக்க கருவூலத் துறை, பரஸ்பர வர்த்தக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அன்னியச் செலாவணி கொள்கைகள் தொடர்பான அறிக்கையை, பார்லி.,யில் அளித்தது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய ரிசர்வ் வங்கி, 2017ல், அதிக அளவில் டாலரை வாங்கிக் குவித்தது.
ஆஸ்திரேலிய பிரதமராக மோரிஸன் பதவியேற்பு
 • ஆஸ்திரேலியாவின் 46-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பிரதமர் ஸ்காட் மோரிஸன் தலைமையிலான லிபரல் கூட்டணி வெற்றி பெற்றது. 
 • இந்த நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி தலைநகர் கான்பெராவிலுள்ள அரசு இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 46-ஆவது நாடாளுமன்றத்தின் பிரதமராக ஸ்காட் மோரிஸன் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்; துணைப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மக் பொறுப்பேற்றுக் கொண்டார்.

0 Comments