Type Here to Get Search Results !

TNPSC APRIL 2020 CURRENT AFFAIRS TOP 100 TOPICS NOTES IN TAMIL-UNIT 3 -GROUP 1 GROUP 2

 




NEW  AUGUST 2020 PDF-TNPSC SHOUTERS  :

NEW RELEASED JULY 2020 PDF-TNPSC SHOUTERS  PDF

NEW RELEASED JUNE 2020 PDF-TNPSC SHOUTERS PDF


TNPSC APRIL 2020 CURRENT AFFAIRS TOP 100 TOPICS NOTES IN TAMIL
  1. சுரங்கம் போன்ற பாதையில் செல்லும் மக்கள் மீது சென்சார் உதவியுடன் தானியங்கி முறையில் கொரோனாவை தடுக்கும் பொருட்டு கிருமிநாசினியை தெளிக்கும் இந்தியாவின் முதல் கிருமிநாசினி சுரங்கம் திருப்பூரின் பிரபலமான தென்னம்பாளையம் சந்தையில் அமைக்கப்பட்டுள்ளது. ‘திருப்பூர் யங் இண்டியன்ஸ்’ அமைப்பினர் மூலம் அமைக்கப்பட்டுள்ள இதனை தன்னார்வலர் வெங்கடேஷ் என்பவர் ரூ.1 லட்சம் மதிப்பில் உருவாக்கியுள்ளார்.
  2. தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோய் தொற்று கொண்டவர்களை கண்காணிக்கும் பொருட்டு IIT மும்பையை சேர்ந்த அறிவியலாளர்கள் CORONTINE என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளனர்.
  3. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க Team-11 என்ற கமிட்டியை துவங்கியுள்ள மாநிலம்?-உத்தரப்பிரதேசம்'
  4. ”கொரோனா கவச்” (“Corona Kavach”) என்ற பெயரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கினால், எச்சரிக்கை செய்யும் மொபைல் அப்ளிகேஷனை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த  செயலியை பயன்படுத்தும் நபரின் ஸ்மார்ட்போனில் உள்ள தகவலை பயன்படுத்தி அவர்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை நெருங்கும்போது எச்சரிக்கவும் செய்கிறது.
  5. டக்வொர்த் லூயிஸ் மழை விதிமுறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான இங்கிலாந்தைச் சேர்ந்த டோனி லூயிஸ் சமீபத்தில் காலமானார். 1999-ல் பிராங்க் டக்வொர்த் மற்றும் டோனி லூயிஸ் இருவரும் கண்டுபிடித்த மழை விதிமுறையை டிஎல் என்கிற பெயரில் சர்வதேச கிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது கிரிக்கெட் ஆட்டங்கள் மழையால் தடைபடும்போது மீதமுள்ள ஓவர்களைக் கொண்டு ஆட்டத்தை முடிக்க டக்வொர்த் லூயிஸ் விதிமுறை பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  6. 2021ஆம் ஆண்டு ஒரேகானில் (Oregon – U.S) நடைபெற இருந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2022ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டில் நடைபெற உள்ளதால் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2022ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  7. Sridevi: The Eternal Screen Goddess என்ற புத்தகத்தின் ஆசிரியர்?-சத்யார்த் நாயக்
  8. தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 76ன் படி தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்ளை நோய் சட்டம் 1897-ன் படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
  9. கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவா் நிலை குறித்து அறியவும், அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் அளிக்கவும் ஆரோக்கியசேது என்ற புதிய மொபைல் செயலியை (அப்ளிகேஷன்) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
  10. 1936 ஏப்ரல் – 1 ஒடிசா மாநிலம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது அதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் – 1 ஒடிசா தினமாக (Utkal Divas) கொண்டாடப்படுகிறது.
  11. சென்னை உயா்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக , ‘ஸூம்’ எனப்படும் ஆன்ட்ராய்ட் செயலியின் உதவியுடன் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் வழக்குகளை விசாரித்துள்ளனா்.
  12. கொரோனா தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டுக்கான சிறுசேமிப்பு வட்டி விகிதங்களை, மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, பெண் குழந்தைகளுக்கான, ‘செல்வமகள்’ சேமிப்பு திட்டத்துக்கான வட்டி, 8.4 சதவீதத்தில் இருந்து, 7.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
  13. ஆசிய இளையோா் விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் அடுத்த ஆண்டு நவம்பா் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவது ஆசிய இளையோா் விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், 2-ஆவது சீசன் சீனாவில் 2013-இல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
  14. 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் (International Children’s Book Day – ICBD) பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளாக அனுசரிக்கப்படுகிறது.
  15. Backstage: The Story Behind India’s High Growth Years என்ற புத்தகத்தின் ஆசிரியர்-மாண்டெக் சிங் அலுவாலியா
  16. பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே பணம் எடுத்துகொள்ளும் வகையில் AEPS (Aadhar Enabled Payment system) என்ற புதிய முறையை கேரள அரசு அஞ்சல் துறையுடன் இணைந்து செயல்படுத்தியுள்ளது. தற்போது இந்தமுறை இந்தியாவின் பிற மாநிலங்களிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  17. கொரோனா நோய்த்தொற்றை உறுதி செய்ய இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் பரிந்துரை செய்துள்ள பரிசோதனை முறை?-Reverse transcription polymerase chain reaction (RT-PCR)
  18. கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிப்பதற்காக 25 நாடுகளுக்கு 1.9 பில்லியன் டாலர்கள் அவசரகால நிதியாக வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இதில்  இந்தியாவுக்கு ரூ.7 ஆயிரத்து 600 கோடி (1 பில்லியன் டாலர்கள்), பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் டாலர்கள், ஆப்கானுக்கு 100 மில்லியன் டாலர்கள், மாலத்தீவுகளுக்கு 7.3 மில்லியன் டாலர்கள், இலங்கைக்கு 128.6 மில்லியன் டாலர்கள் வழங்கியுள்ளது.
  19. ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நவம்பர் 2019-இல் நடைபெறுவதாக இருந்த ‘ஐ.நா. பருவநிலை மாநாடு 2020” அடுத்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
  20. . Corona Watch என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?-கர்நாடகா
  21. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின்(NCLT) தலைவராக BSV பிரகாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். NCLT – National Company Law Tribunal
  22. நடப்பு நிதியாண்டில் (2020 – 21) இந்தியப் பொருளாதாரம் 4% அளவுக்கே வளா்ச்சி காணும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் ஏற்பட்ட சா்வதேச இழப்பு 2 டிரில்லியன் டாலா் முதல் 4.1 டிரில்லியன் டாலா் வரையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3-4.8 சதவீதத்துக்கு சமமானதாகும் என ஆசிய வளா்ச்சி வங்கி 2020-க்கான ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
  23. 1964ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி இந்தியாவில் தேசிய கடல்சார் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கருப்பொருள்: Sustainable shipping for a sustainable planet 
  24. கொரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக சா்வதேச நாடுகளுக்கு 140 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.10,647 கோடி) நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதில், இந்தியாவுக்கு 2.90 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.220.55 கோடி) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  25. இந்தியாவில் முதல் முறையாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.
  26. கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த 5T என்ற திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 5T என்பது., Testing– Only through testing, the infected person can be detected & aggressive testing is crucial to prevent the spread of the virus. Tracing– Persons associated with a positive patient are identified and asked for self-quarantine. Treatment– If someone is infected with COVID-19, they will be provided treatment. Teamwork– The virus can be combated & defeated through teamwork. Tracking & Monitoring– Active tracking & monitoring the developments will help to take action to deal with the spread of the virus.
  27. கோவிட் -19 கண்காணிப்பு அமைப்பு (Covid-19 Monitoring System) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?-தெலுங்கானா
  28. லைஃப் லைன் உதான் (Lifeline UDAN) என்ற பெயரில் கோவிட்-19 தொடர்பான மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் வான்வெளி சரக்குப் போக்குவரத்திற்கான திட்டத்தை மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் துவங்கியுள்ளது.
  29. கொவைட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா கேட்டுக்கொண்டதை தொடர்ந்து இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மேலும் அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் பிரேசில் நாடுகளுக்கும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
  30. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக பிரவீன் ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் துணைத் தலைவராக ரேகா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். NASSCOM – National Association of Software and Services Companies
  31. கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராட மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்?-அமிதாப் காந்த்
  32. சர்வதேச விளையாட்டு அபிவிருத்தி மற்றும் அமைதிக்கான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?-ஏப்ரல்-6
  33. 1948ஆம் ஆண்டு, உலக சுகாதார மையம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் உலக சுகாதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கருப்பொருள்: Support Nurses and Midwives
  34. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள கடற்கரை மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
  35. 5T திட்டத்தை தொடர்ந்து டெல்லி அரசு 21 கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆப்ரேஷன் ஷீல்டு (Operation Shield) என்ற பெயரில் கோவிட்-19 தடுப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. SHIELD – Sealing, Home quarantine, Isolation and tracing, Essential supply, Local sanitation and Door-to-door checks
  36. 2019-2020 ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாயீ யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY)) திட்டத்தின் கீழ் நுண் பாசனத்தில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேலும் இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்கள் பெற்றுள்ளன.
  37. ஆந்திரா மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்பில் சீர்திருத்தம் செய்ய அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி மாநில தலைமை தேர்தல் ஆணையரின் பதவி காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து அவசர சட்டத்தின் கீழ் தற்போதைய மாநில தலைமை தேர்தல் ஆணையர் என். ரமேஷ் குமார் பதவி விலகியதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சென்னை உயர் நீ்திமன்ற முன்னாள் நீதிபதி வி. கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளது.
  38. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையான கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் நாட்டிலேயே முதலாவது கொரோ வைரஸ் மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது.
  39. ”ஜீவன்” (Jeevan) என்ற பெயரில் , குறைந்த விலையில் சுவாச கருவி (வென்டிலேட்டா்) கபுா்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘பைப்ஸ்’ என்ற பெயரில் நூறு ரூபாய்க்கு குறைவாக கரோனா பாதுகாப்புக் கவச உடை தயாரிக்கும் முறையை கான்பூர் ஐஐடி கண்டுபிடித்துள்ளது.
  40. வாடிக்கையாளா்களின் இல்லங்களுக்கு அருகே சென்று சேவையளிக்கும் வகையில் ICICI வங்கி நடமாடும் ATM சேவையை முதற்கட்டமாக சென்னையில் தொடங்கியுள்ளது.
  41. ஃபிபா (FIFA) கால்பந்து அணிகள் தரவரிசை 2020-இல் இந்தியா 108 வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை பெல்ஜியம் அணி பிடித்துள்ளது.
  42. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது. ஹோமியோபதி என்பது மருத்துவர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாற்று மருத்துவ முறையாகும். சாமுவேல் ஹானிமன் அவர்கள் 1755 ஆம் ஆண்டு ஏப்ரல்10 ஆம் தேதி பிறந்தார். அவரது நினைவாக ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
  43. தேசிய தாய்மை பாதுகாப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?-ஏப்ரல் 11
  44. 1961 ஏப்ரல் 12 அன்று ரஷியாவின் யூரி காகரின் ‘வோஷ்டாக் 1’ (Vostok 1) விண்கலத்தின் மூலம் முதல் முறையாக பூமியின் சுற்றுப்பாதையை நிறைவு செய்தார் அதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 மனிதன் விண்வெளிக்கு சென்றதற்கான சர்வதேச நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  45. Deadliest Enemy: Our War Against Killer Germs என்ற புத்தகத்தின் ஆசிரியர்?-மார்க் ஆல்ஷாகர்
  46. TNPSC-யின் 26வது தலைவராக வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளா் கே.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைவா் பொறுப்புக்கு நியமிக்கப்படுவா் 62 வயது வரை அல்லது ஆறு ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் இருப்பாா் என்பது குறிப்பிடத்தக்கது.
  47. தமிழகத்தில், மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித் துறை, நீதித்துறை செயலாளர்கள், திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.ஜோதி முருகன், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் ஜி.பழனிசாமி ஆகியோர் உறுப்பினராகவும், மருத்துவக்கல்வி இயக்குனர் உறுப்பினர் செயலாளராகவும் உள்ளனர்.
  48. கிராம பஞ்சாயத்துக்களின் திட்டங்களை விரைந்து முடித்திட “ஈ-கிராம் சுவ்ராஜ்” (e-Gram Swaraj Portal) வலைத்தளத்தையும், கிராம பஞ்சாயத்துக்களில் நிலங்களை படமிட (Mapping) ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் “சௌமித்திவா யோஜனா” (Swamitva Yojana) திட்டத்தையும் சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
  49. சமீபத்தில் வெளியிடப்பட்ட 2020ம் ஆண்டிற்கான உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் (Global Press Freedom Index) இந்தியா 142வது இடத்தை பிடித்துள்ளது. நார்வே நாடு இக்குறியீட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு இந்தியா 140வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  50. மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (Central Vigilance Commission) தலைவராக இருந்த கே. வி. சவுத்ரியின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைவராக சஞ்ஜய் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  51. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோருக்கு ஈ-பாஸ் வழங்க “பிரகயாம்” (Pragyaam) என்ற மொபைல் செயலியை ஜார்கண்ட் மாநில அரசு தொடங்கியுள்ளது. நாட்டிலியே முதல் முறையாக கோவிட்-19 பரவலை கண்காணிக்க சுகாதார அவசரநிலை செயல்பாட்டு மையத்தை (Health Emergency Operating Centre) பீகார் மாநில அரசு ISRO உடன் இணைந்து தொடங்கியுள்ளது.
  52. அலுவலகங்களில் கோப்புகள் மற்றும் ஆவணங்கள் எந்தவித மனித தொடர்புமின்றி செல்கின்றதா என்பதை ஆராய “e-Karyalay” என்ற செயலியை “மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை” (CISF) உருவாக்கியுள்ளது.
  53. நகர்ப்புற பெண்கள் தயாரித்து கொடுக்கும் முக கவசங்களை 11 ரூபாய்க்கு அரசே வாங்கி கொள்ளும் “ஜீவன் சக்தி யோஜனா” (Jeevan Sakthi Yojana) திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது
  54. சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை 2020-இல் சென்னையை சேர்ந்த அச்சாந்தா சரத் கமல் 31 வது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் இவர் இந்திய வீரர்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  55. How the Onion Got Its Layers என்ற புத்தகத்தின் ஆசிரியர்?-சுதா மூர்த்தி (Sudha Murty)-இவர் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி அவர்களின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
  56. உலக கலை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?-ஏப்ரல் 15
  57. உலக ஹீமோபிலியா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?-ஏப்ரல் 17. World Federation of Haemophilia இந்த ஆண்டு 30வது உலக ஹீமோபிலியா தினத்தை “Get + Involved” என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கிறது.
  58. உலக பாரம்பரிய தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?-ஏப்ரல் 18.கருப்பொருள்: “Shared Culture’, ‘Shared heritage’ and ‘Shared responsibility”
  59. உலக கல்லீரல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?-ஏப்ரல் 19
  60. கோவிட்-19 அதிதீவிர தொற்றை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு, HCL நிறுவனத்துடன் இணைந்து “பேரிடர் மேலாண்மை- தரவு பகுப்பாய்வு மையத்தை” (Disaster Management- Data Analytics Centre) சென்னையில் தொடங்கியுள்ளது.
  61. எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக ‘கர்மி-பாட்’ (KARMI-Bot) என்ற ரோபோவை கேரளா அறிமுகம் செய்துள்ளது. மருத்துவ கல்லூரியின் கோவிட் -19 தனிமை வார்டில் உள்ள நோயாளிகளுக்கு உதவுவதற்காக இந்த ரோபோ பயன்படுத்தப்படுகிறது
  62. இந்தியாவின் முதல் கோவிட்-19 இல்லா மாநிலமாக கோவா மாநிலம் 21-4-2020 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூர் மாநிலம் இரண்டாவது கோவிட் -19 இல்லா மாநிலமாகியுள்ளது.
  63. தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், உலக வனவிலங்குகள் நிதியத்தின் (World Wildlife Fund (WWF)) இந்தியாவிற்கான சுற்றுசூழல் கல்வி திட்டத்தின் ( Environment Education Programme) நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  64. தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில் ஓய்வு பெற உள்ளதை அடுத்து திருமூர்த்தி புதிய பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  65. மருந்தகங்களில் இருமல், சளி மற்றும் காய்ச்சலுக்காக மருந்துகள் வாங்கும் நபர்களை கண்காணிக்க “Covid Pharma” மொபைல் செயலியை ஆந்திர மாநில அரசு தொடங்கியுள்ளது
  66. கோவிட்-19 அதிதீவிர தொற்றை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் “ஆப்தாமித்ரா” (Apthamitra) மொபைல் செயலியை கர்நாடகா அரசு தொடங்கியுள்ளது.
  67. சமீபத்தில் கஞ்சா சாகுபடிக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த முதல் அரபு நாடு?-லெபனான்
  68. ஈரான் “நூர்” (NOOR) என பெயரிட்ட தனது முதல் ராணுவ செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளது.
  69. முதன் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பும் சீனாவின் திட்டத்திற்கு “டினாவென்-1” (Tianwen-1) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதியில் இத்திட்ட்ம் செயல்படுத்தப்பட உள்ளது. செவ்வாய் கோளை பற்றி ஆராய மங்கள்யான் செயற்கைக்கோளை அனுப்பிய முதல் ஆசிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
  70. அமெரிக்காவின் நாசாவால் உருவாக்கப்பட்ட ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி (Hubble Space Telescope) ஏப்ரல் 25-உடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  71. சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை 2020-இல் சென்னையை சேர்ந்த அச்சாந்தா சரத் கமல் 31 வது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் இவர் இந்திய வீரர்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  72. Shuttling to the Top: The Story of P V Sindhu என்ற புத்தகத்தின் ஆசிரியர்?-V.கிருஷ்ணசுவாமி
  73. 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள மெட்கால்பே இல்லத்தில் (Metcalfe House), இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் முதல் இந்திய குடிமைப்பணி அதிகாரிகளின் முதல் பிரிவோடு (first batch of IAS officers) ஆற்றிய உரையை நினைவு கூர்வதற்காக, ஆண்டுதோறும் ஏப்ரல் 21-ஆம் தேதி குடிமைப் பணிகள் தினம் (Civil Services Day) கொண்டாடப்படுகிறது.
  74. உலக மலேரியா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?-ஏப்ரல் 25-இந்த ஆண்டுக்கான கருப்பொருள் (Theme): Zero Malaria Starts with Me
  75. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரத்தில் (ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரை) உலக நோய்த்தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள்: Vaccines Work for All
அரசு திட்டங்கள் :2020

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel