NEW AUGUST 2020 PDF-TNPSC SHOUTERS :
NEW RELEASED JULY 2020 PDF-TNPSC SHOUTERS PDF
NEW RELEASED JUNE 2020 PDF-TNPSC SHOUTERS PDF
- GROUP 1- GK TOPIC JUNE 2020 PDF
அரசு திட்டங்கள் :2020
- TNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்] -நடப்பு நிகழ்வுகள் 2020 PART -3
- TNPSC அரசு திட்டங்கள் [இந்தியா மற்றும் மாநிலங்கள்] -நடப்பு நிகழ்வுகள் 2020 PART -4
ONLINE TEST CURRENT AFFAIRS JULY 2020
- TEST-1 JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS
- TEST-2 JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS
- TEST-3 JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS
- TEST-4 JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS
- TEST-5 JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS
- TEST-6 JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS
- TEST-7 JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS
TNPSC MAY-2020 CURRENT AFFAIRS TOP 100 TOPICS NOTES
- தமிழர்களின் பாரம்பரிய உணவு பொருட்களின் அரசி என்றழைக்கப்படும் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- இந்தியா வானிலை மையம் வெளியிட்டுள்ள புயல் பெயர் பட்டியலில் முதன்முறையாக தமிழ்ப்பெயர் இடம்பெற்றுள்ளன.அதில் முரசு என்ற பெயர் பட்டியலில் 28 வது இடத்திலும் நீர் என்ற பெயர் 93 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.மேலும் இந்தப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜப்பான் அரசாங்கத்தால் வழங்கப்படும் ‘ஆர்டர் ஆஃப் ரைசிங் சன்’(Order of Rising Sun) என்ற விருது, மணிப்பூரை சேர்ந்த மருத்துவர், தங்ஜம் தபாலி சிங் (Thangjam Dhabali Singh) அவர்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.
- பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக (Economic Affairs Secretary) பதவிவகித்து வந்த அதானு சக்ரவர்த்தி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பதவி வகித்து வந்த தருண் பஜாஜ் (Tarun Bajaj), இன்று (மே-1) புதிய செயலாளராக பொறுப்பேற்று கொண்டார்.
- சுகாதார ஊழியர்களுக்காக #WeWillWin பிரச்சாரத்தை அறிமுகப்படுத்துகிறது ஃபிஃபா- (FIFA launches #WeWillWin campaign for health workers)
- சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
- தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநராக பதவி வகித்து வந்த குழந்தைசாமி ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய இயக்குநராக செல்வ விநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- காற்றில் கோவிட்-19 வைரஸ் எங்குள்ளது என்று கண்டறிவதற்காக Vilokana என்ற ஆய்வு இயந்திரத்தை, திருவனந்தபுரத்தை சேர்ந்த IIITM-K என்ற கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.Vilokana என்பதற்கு சமஸ்கிருதத்தில் வெளியில் தேடு என்பதாகும்.IIITM-K :- Indian Institute of Information Technology and Management-Kerala.மேலும், சமீபத்தில் கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களை X – Ray மூலம் கண்டறியும் தொழில்நுட்பத்தை IIT-ரூர்கி கண்டிப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) சாா்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு இந்திய வம்சாவளி மாணவி வனீஸா ரூபானி பரிந்துரைத்த இன்ஜெனியூயிட்டி (Ingenuity) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.மேலும் இதனுடன் செல்ல உள்ள ரோவருக்கு அலெக்சாண்டா் மேத்தா் பரிந்துரைத்த ‘பொ்சிவியரன்ஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான மனிஷா சிங் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் (Organization for Economic Cooperation & Development) தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பெட் கோப்பை ஹார்ட் விருதுக்கு (Fed Cup Heart Award) முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை சானியா மிர்சாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.சானியா மிர்சாவின் பெயர், இந்தோனேஷியாவின் பிரிஸ்கா நுக்ரோகோவுடன் இணைந்து பெட் கோப்பை இதய விருதுக்கு ஆசியா-ஓசியானியா மண்டலத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- இந்திய கடற்படை கப்பல்கள் சயாத்திரி மற்றும் கட்மத் ஆகியவை சென்னை மெரினா கடற்கரை பகுதியிலிருந்து வெளிச்சம் பாய்ச்சும் துப்பாக்கி (very pistol) மூலம் 9 சுற்றுகள் சுட்டு கொரோனோ பணியிலிருக்கும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
- யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரக அரபு நாடு, சுமார் 7 மெட்ரிக் டன் மருந்து பொருட்களை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.இந்தியாவிற்கான யு.ஏ.இ. தூதர் – அஹமது அப்துல் ரஹ்மான்
- ஜெகன் மோகன் ரெட்டி, ஜெகனண்ணா வித்யா தீவெனா என்னும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணங்களை 100% திருப்பி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
- மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் இலவச சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தை மஹாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது.மாநில மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் தற்போது மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளனர் மீதமுள்ள 15 சதவீதம் பேருக்கும் இந்த இலவச சுகாதார காப்பீடு திட்டத்தில் இணைத்து 100% மக்களுக்கும் இலவச சுகாதார இன்சூரன்ஸ் வழங்கப்பட உள்ளது.மே-1 மஹாராஷ்டிரா மாநில தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- Stockholm International Peace Research Institute என்கிற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உலகளவில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
- அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை வடிவமைத்துள்ள ரஷ்யா. ஸ்கிஃப் ஏவுகணை 6,000 மைல் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும். இது 60-மைல் வேகத்தில் பயணிக்க கூடியது. கோபால்ட்-60 என்ற செயற்கை கதிரியக்கத்தால் கடல் மற்றும் கரையின் பெரிய பகுதிகளை மாசுபடுத்தும் வல்லமை கொண்டது.
- பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது; பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்ற நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் 1993 முதல், மே 3ம் தேதி, சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Journalism without Fear or Favour
- ஆட்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காய்ச்சல் இருப்பவர்களை கண்டுபிடிக்க, செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் தெர்மல் அன்ட் ஆப்டிக்கல் இமேஜிங் பேஸ் டிடெக்சன் கேமராக்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக கேரளாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
- அசாம் மாநிலத்தில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமான 306 கிராமங்களில் 2500 பன்றிகள் இறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலின் முதல் நிகழ்வு இது என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கொரோனா வைரஸ் பட்டவுடன் செயலிழக்க செய்யும் ரசாயனம் பூசிய பாதுகாப்பு உடையை சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடிதுள்ளனர்.
- விவசாயகளின் விளைபொருட்களை சங்கிலித்தொடராக இணைக்கவும் மற்றும் விளைபொருட்களின் போக்குவரத்தை மேலாண்மை செய்யவும் CSIR அமைப்பானது கிஷான் சபா(Kisan Sabha) அப்ளிகேசனை அறிமுகம் செய்துள்ளது.CSIR-CRRI = Council of Scientific and Industrial Research-Central Road Research Institute
- கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆரோக்கியம் பற்றி அடிப்படை விவரங்களை அறிந்துகொள்ளவும் NCSTC ‘அறிவியல் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஆண்டு’ (YASH) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.YASH – Year of Awareness on Science & Health. NCSTC – National Council for Science & Technology Communication
- கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கி லோக்பால் உறுப்பினரான நீதிபதி ஏ.கே. திரிபாதி காலமானார்.‘லோக்பால் அமைப்பு’ என்பது அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட அமைப்பு ஆகும்.இதன் தலைவர் பினாகி சந்திரகோஷ் ஆவார்.
- ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே மே 4 ஆம் நாள் தீயணைப்புப் படையினர் தினம் கொண்டாடி வந்தனர்.1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4 ஆம் நாள் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- 19வது அணி சேரா நாடுகளின் மாநாடு (NAM Summit) அஜர்பைசான் அதிபர் இல்ஹாம் அலிவேவ் தலைமையில் மே 4 அன்று நடைபெற்றது. இதில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றார்.இம்மாநாட்டின் கருப்பொருள் “United against COVID-19”.இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவிகேற்றப்பின், 2016-ம் வெனின்சுலாவில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டிலும், தொடர்ந்து, 2019-ம் ஆண்டு நடைபெற்ற 18-வது அணி சேரா நாடுகளின் மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அணி சேரா இயக்கம் எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும்.
- அமெரிக்கா வாழ் இந்திய பெண்ணான சரிதா கோமதிரெட்டி, நியூயார்க்கில் உள்ள கிழக்கு மாவட்ட கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளா்ர். மேலும்., சமீபகாலங்களில்… சுயெல்லா பிராவர்மேன் (Suella Braverman), இங்கிலாந்தின் புதிய அட்டர்னி ஜெனரலாகவும் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அவர்களும், சிகாகோவின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சமியா நசீமும் (Samiya Naseem) நியூயார்க் சிவில் நீதிமன்ற நீதிபதியாக அர்ச்சனா ராவும், இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக தீபா அம்பேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- Mukhya Mantri Shahari Rojgar Guarantee Yojna கொரோனா தொற்றுநோய் பாதிப்பினால் நகர்ப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 120 நாள் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஹிமாச்சல பிரதேச மாநில அரசு “முக்கிய மந்திரி ஷஹாரி ரோஜ்கர் கேரண்டி யோஜனா” எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- 2020ம் ஆண்டிற்கான சிறந்த புகைப்பட நிருபருக்கான புலிட்சர் விருது காஷ்மீர் அசோசியேட் பிரஸ் புகைப்படக்காரர்களான சன்னி ஆனந்த், முக்தார் கான் மற்றும் தார் யாசின் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியபோது இந்தியா விதித்த ஊரடங்கு உத்தரவின் காலங்களை புகைப்படமாக பதிவு செய்ததற்காக இந்த விருதை பெற்றுள்ளனர். சிறந்த நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை கௌரவிக்கும் உலகளாவிய விருதாக புலிட்சர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
- ஆர்டிக் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலைக் கண்காணிக்க ரஷ்யா தனது முதல் ரிமோட் சென்சிங் மற்றும் அவசர தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ‘ஆர்க்டிகா-எம்’-ஐ டிசம்பர் 9, 2020 அன்று ஏவுவுள்ளது.
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் கோட்பாட்டு பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் ஷோபனா நரசிம்மன், கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க கல்வி நிறுவனத்தின் சர்வதேச கவுரவ உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
- Prof. B. B. Lal- India Rediscovered :உத்திரப்பிரதேஷை சேர்ந்த மாபெரும் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பி.பி.லால் அவர்களின் நூற்றாண்டையொட்டி, “பேராசிரியர் பி.பி.லால்- இந்தியா மறுகண்டுபிடிப்பு”என்ற மின்னணு புத்தகத்தை புதுடெல்லியில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் வெளியிட்டார். பி.பி.லால் பிறந்த தேதி: 2-5-1921
- பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியாக வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் செயலர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
- மணிப்பூர் மாநிலத்தில் விளையும் ‘சாக் ஹாவ்’ என்ற கருப்பு அரிசிற்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் காஷ்மீரின் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- ஊரடங்கின் காரணமாக மேற்கு வங்கத்திலுள்ள வெளிமாநிலத்தவர்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வகையில் மேற்கு வங்க மாநில அரசு “Exit App”-ஐ அறிமுகம் செய்துள்ளது.
- இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியைத் தோற்கடித்த 75-வது ஆண்டு வெற்றியைக் கொண்டாடும் வகையில் வடகொரியாவில் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்ட நினைவிடத்தைப் பாதுகாத்து வருவதற்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் விருது வழங்கினார்.
- ‘அல்ட்ரா வைலட்’ எனப்படும் புற ஊதா கதிர்கள் மூலம் கிருமி நீக்கம் செய்யும் கோபுரத்தை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதற்கு ‘யு.வி., பிளாஸ்டர்‘ என பெயரிட்டுள்ளனர்.
- பாகிஸ்தான் விமானப்படையின் பைலட்டாக இந்துமதத்தை சேர்ந்த ராகுல் தேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் விமானப்படையின் பைலட்டாக நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் இந்து இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- International Midwives Day – மே 5 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருத்துரு= Midwives with women: celebrate, demonstrate, mobilize, unite – our time is NOW!
- தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி மே-7 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது மேலும் கடந்த ஆண்டு தெலுங்கானா அரசு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 அல்லது 61 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
- சமீபத்தில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இயங்கிவந்த எல்.ஜி பாலிமர் நிறுவனத்தில் இருந்து ஸ்டைரீன் என்ற வாயு கசிந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டைரீன்(Styrene) என்பது மிக எளிதில் ஆவியாகக் கூடிய திரவ நிலையில் சேமிக்கப்படும் வேதிப்பொருள் ஆகும். இது வினைல்பென்சீன் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்டைரீன் நிறமற்றதாகவும் சில நேரங்களில் லேசான மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இதன் மூலக்கூறு வாய்பாடு: C8H8. உணவு வைக்கும் பாத்திரங்கள், பார்சல்கள், மேஜை விரிப்புகள் போன்றவற்றுக்கான பிளாஸ்டிக் தயாரிப்பில் ஸ்டைரீன் பயன்படுத்தப்படுகிறது.
- கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சர்வதேச லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை திரும்ப அழைத்து வருவதற்காக “வந்தே பாரத் மிஷன்” என்ற மிகப்பெரிய ஆபரேஷனை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதற்காக, அரசாங்கம் மே 13 வரை 64 விமானங்களை இயக்க உள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்திய கடற்படை கப்பல் மூலம் மீட்டு வரும் நடவடிக்கை சமுத்திர சேது ( கடற்பாலம் ) என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தூய்மையான கங்கைக்கான தேசியத் திட்டமானது “IDEAthon” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது. இது கோவிட் – 19 நோய்த் தொற்று எவ்வாறு நதி மேலாண்மை உத்திகளை மாற்றியமைக்கும் என்பதை ஆராயும் “நதி மேலாண்மையின் எதிர்காலம்” என்பதின் மீது கவனம் செலுத்தும் திட்டமாகும்..
- மருந்துகளை வீடுகளுக்கேச் சென்று வழங்கும் “தன்வந்தரி” என்ற ஒரு புதிய திட்டத்தைத் அசாம் தொடங்கியுள்ளது. மேலும் 200 ரூபாய்க்குக் கீழே உள்ள மருந்துகள் அங்குள்ள நோயாளிகளுக்கு இலவசமாக இத்திட்டத்தின்படி வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஈராக்கின் பிரதமராக பதவிவகித்து வந்த முகமது தவுபிக் அலாவிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து புதிய பிரதமராக முஸ்தபா அல் காதிமி சமீபத்தில் பதவியேற்றார்.
- கரோனா வைரஸ் கிருமியின் பெயரை முதன் முதலாக ‘தீநுண்மி’ என்ற கலைச் சொல்லாக்கத்தைப் பயன்படுத்திய தினமணி நாளிதழுக்கு தமிழ் வளா்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலா்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
- பிற மாநிலங்களில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு திட்டங்களின்கீழ் சலுகைகளை பெறும் வகையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து மாநில வருவாய் துறையால் உருவாக்கப்பட்ட ‘பிரவாசி ரஹத் மித்ரா’ மொபைல் அப்ளிகேசனை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
- கரோனா வைரஸ் பரவலால் அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு மத்திய அரசு ரூ.34,800 கோடி நிதி உதவி அளித்துள்ளது. இந்தத் தொகையானது மார்ச் 26-ம் தேதி முதல் பிரதம மந்திரி கரிப் கல்யான் யோஜனா திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.
- ஆபரேஷன் சமுத்திர சேது திட்டத்தின் ஒரு பகுதியாக மாலத்தீவுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஐஎன்எஸ் ஜலஷ்வா மற்றும் ஐஎன்எஸ் மகர் ஆகிய கப்பல்கள் மாலத்தீவுகளுக்கும், ஐஎன்எஸ் ஷர்துல் என்ற கப்பல் வளைகுடாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- பொது கணக்குக் குழுவின் (PAC) தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் இரஞ்சன் சவுத்ரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.பொது கணக்குக் குழு என்பது இந்திய நாடாளுமன்றத்தால், இந்திய அரசின் செலவுகளை தணிக்கை செய்ய அமைக்கப்படும் குழுவாகும். ஆண்டுதோறும் பொது கணக்குக் குழுவிற்கு மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒரு ஆண்டு ஆகும். குழுவின் தலைவர் மக்களவை சபாநாயகரால் நியமிக்கப்படுகிறார். 1967 ல் இருந்து குழுவின் தலைவராக எதிர்க் கட்சியிலிருந்து ஒருவர் நியமிக்கப்படுகிறார். அமைச்சர் ஒருவர் இந்த குழுவில் உறுப்பினராக இருக்கமுடியாது. பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றால், அவருக்கு பதில் இக்குழுவிற்கு புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
- கரோனா வைரஸ் தொற்றை விரைவாக கண்டறிய உதவும் சோதனை முறையை இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (CSIR) கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனை முறைக்கு பிரபல துப்பறியும் கதாபாத்திரமான பெலுடாவின் பெயரை வைத்துள்ளது பெலுடா, இயக்குநர் சத்யஜித் ரே கதைகளில் வரும் துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்காவை சேர்ந்த மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், கலிபோர்னியா பல் கலைக்கழகம் மற்றும் பெர்க்லி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி யாளர்கள் இதுபோன்ற ஒரு பரி சோதனைக்கு, ‘டிடெக்டர் ஷெர் லாக்‘ என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- செஞ்சிலுவை சங்கத்தை தோற்றுவித்த ஜீன் ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்த தினமான மே 8-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக செஞ்சிலுவை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- ஊரடங்கிற்கு பின் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழு மூன்று மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 5 ரூபாய் நாணயத்தை செலுத்தி முகக் கவசம் பெற்றுக்கொள்ளும் வகையில் தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் சமீபத்தில் தமிழகத்தில் முதல் முறையாக தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது.
- கைலாஷ்-மானசரோவர் செல்வதற்கான லிப்புலேக் கணவாயை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள இணைப்பு சாலையை காணொளி மூலம் பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இந்த சாலையானது தர்ச்சூலாவில் (உத்தரகண்ட்) இருந்து லிப்புலேக் (சீனா எல்லை) வரை அமைக்கப்பட்டுள்ளது.
- கில்ஜித், பல்டிஸ்தான் பகுதிகளில் பொதுத் தேர்தலை நடத்தலாம் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து. அந்தப் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா அறிவித்தது. அதன் ஒருபகுதியாக, முதல்முறையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வானிலை முன்னறிவிப்பை இந்தியா வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக், கில்ஜித், பல்டிஸ்தான், முசபராபாத் ஆகிய பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்பையும் நேற்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
- சமீபத்தில் சீனாவின் வென்சாங் செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட லாங் மார்ச் -5 பி என்ற ராக்கெட் ஏவப்பட்டது.
- லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் உலக சுகாதார பேராசிரியராக பணியாற்றும் டாக்டர் டேவிட் நபரோ, உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் சிறப்பு தூதராகவும் செயலாற்றி வருகிறார்.
- ஒவ்வொரு ஆண்டும் மே 08 ஆம் தேதி உலகம் முழுவதும் உலக தாலசீமியா நோய் (இரத்த அழிவுச் சோகை) தினம் அனுசரிக்கப்படுகின்றது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா ஆகும். கருப்பொருள்: The dawning of a new era for thalassemia: Time for a global effort to make novel therapies accessible and affordable to patients.
- ”மதிய உணவு ரேஷன் திட்டத்தை” (Mid-Day Meal ration) அமல் படுத்தியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எனும் பெருமையை மத்திய பிரதேசம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம், தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களின் பெற்றோரின் வங்கி கணக்கில் அவர்களுக்கான மதிய உணவிற்கான செலவுத் தொகை மாநில அரசினால் அனுப்பி வைக்கப்பட்டது.
- NSafe என்ற பெயரில் திரும்ப திரும்ப பயன்படுத்தக் கூடிய நுண்ணுயிர்க் கொல்லி முககவசத்தை (antimicrobial mask) IIT டெல்லி – யை சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
- கோவிட்-19 தொற்று குறித்த ஆன்டிபாடிகளை கண்டறிவதற்காக “கோவிட் கவாச் எலிசா” (COVID KAVACH ELISA) என்ற ஐஜிஜி எலிசா (Ig G -ELISA) பரிசோதனை கருவியை உள்நாட்டிலேயே புனே-வில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute of Virology) உருவாக்கியுள்ளது.
- ஆண்களுக்கு டேவிஸ் கோப்பை போல மகளிர் டென்னிஸில் ஃபெட் கோப்பை போட்டி (Fed Cup) நடைபெறும். 1963 முதல் இப்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தன்னுடைய நாட்டுக்காகச் சிறப்பாக விளையாடும் வீராங்கனைகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் (ஐடிஎஃப்) சார்பாக 2009 முதல் ஹார்ட் விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு ஆசிய-ஓசியானா மண்டலத்திலிருந்து இந்திய வீராங்கனை சானியா மிர்சாக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்காக வழங்கப்பட்ட இரண்டாயிரம் டாலர் பரிசுத்தொகையை தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு சானியா வழங்கியுள்ளார். மற்ற மண்டலங்களில் வென்றவர்கள்: 1.ஐரோப்பா / ஆப்பிரிக்கா மண்டலம் – அனெட் கொன்டாவிட் ,2.அமெரிக்க மண்டலம் – பெர்னாண்டா கான்ட்ரெராஸ் கோம்ஸ்
- அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் The Room Where It Happened: A White House Memoir என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
- ஐக்கியநாடுகள் சபையினால் 2006-முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் அக்டோபர் மாதங்களின் 2வது சனிக்கிழமை உலக இடம்பெயர்ந்த பறவை தினமாக / உலக வலசை போதல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே-9 மற்றும் அக்டோபர்-10 ஆகிய தேதிகளில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. கருப்பொருள்: Birds Connect Our World
- 1998-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் அப்போதைய பிரதமா் வாஜ்பாய் தலைமையில் இந்தியா முதல் முறையாக ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் அணு ஆயுத சோதனை (Shakti-1) நடத்தியது. அதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 11-ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கருப்பொருள்: Focusing on Rebooting the economy through Science and Technology.
- சென்னை மாநகர பொதுமக்களுக்கு டெலி மெடிசன் (Video Call) மூலம் சிகிச்சை அளிக்க GCC VIDMED புதிய செயலியை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இதனை கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மே-12 அன்று அறிமுகப்படுத்தினார். இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிகிச்சையை அதற்குரிய மருத்துவர்களிடம் காணொலி மூலம் (வீடியோ கால்) 24 மணிநேரமும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். GCC-கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்
- esanjeevani OPD :மத்திய அரசு இ-சஞ்சீவனிஓபிடி என்ற கட்டணமில்லா காணொளி மருத்துவ ஆலோசனை திட்டத்தை கடந்த மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தில் தமிழக அரசு சமீபத்தில் இணைந்துள்ளது. அதாவது esanjeevaniopd.in என்ற இணைய முகவரியில் சென்று, மக்கள் வீட்டில் இருந்தே காணொளி மூலம் மருத்துவ ஆலோசனையை இலவசமாக பெறமுடியும்.
- சமீபத்தில் மத்தியப் பிரதேச காவல்துறை FIR Aapke Dwar Yojana (FIR at your doorstep) என்ற வீட்டிற்கே வந்த புகார்களை பதிவு செய்யும் (FIR) முறையை துவங்கியுள்ளது. அதாவது அவசர எண் 100-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், போலீசார் வீட்டிற்கே வந்து FIR பதிவு செய்வர்.
- Skytrax Award பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையத்திற்கான இந்த ஆண்டின் ஸ்கைட்ராக்ஸ் (SKYTRAX) விருதை வென்றுள்ளது. சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக உலகின் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை லண்டனை சேர்ந்த Skytrax நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் மூன்று இடங்களை பிடித்தவை.,
- CBSE-இன் தலைவராக இருந்த அனிதா கர்வால், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் (Department of Education and Literacy) செயலாளராக நியமிக்கப்பட்டத்தை தொடர்ந்து, புதிய தலைவராக மனோஜ் அஹுஜா (Manoj Ahuja) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்., அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் (AICTE )- அனில் சஹஸ்ரபுதே பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் (UGC) – டி. பி. சிங்
- 2016 ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தீபா மாலிக் தனது ஓய்வை சமீபத்தில் அறிவித்துள்ளார். ஹரியானவை சேர்ந்த இவர் இந்திய பாரா ஒலிம்பிக் சங்க தலைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்., இவர் 2019 ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (மாற்றுத் திறனாளி) பெற்றவர், மேலும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கும் 2019 ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுவழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் – நரிந்தர் துருவ் பாத்ரா
- நவீன செவிலியர் முறையை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே-12 ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கருப்பொருள் – Nurses: A voice to lead- Nursing the World to Health. காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டை செவிலியர்கள் ஆண்டாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திள்ளது குறிப்பிடத்தக்கது.
- உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சிலநாட்களுக்கு முன்னர் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையைச் சேர்ந்தது. தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள குளம், ஏரி போன்றவற்றில் விளைகிறது. இதனுடைய நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும். இந்த நெட்டியைப் பறித்து வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி அதில் கைவினைப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் செய்யப்படுகின்றன.
- கரோனா பாதிப்பினால் ஏற்படும் நெஞ்சக நோய்களைக் கண்டறிவதற்காக நடமாடும் எக்ஸ்-ரே வாகனங்களை தமிழக அரசு துவங்கியுள்ளது. நோயாளிகளின் வசிப்பிடங்களுக்கே சென்று எக்ஸ்-ரே பரிசோதனைகள் மேற்கொண்டு முடிவுகள் உடனடியாக தெரியப்படுத்தப்படும். முதல் கட்டமாக 14 வாகனங்கள் தொடங்கப்பட்டுள்ளன
- நாடு சுயசார்பை எட்ட ரூ.20 லட்சம் கோடியில் பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்படும். இது நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரம், உள்கட் டமைப்பு, செயல்திட்டம், மக்கள் தொகை, தேவை ஆகிய 5 தூண்களை அடிப்படை யாகக் கொண்டு சுயசார்பு திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
- புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே “ஷ்ராமிக் சிறப்பு” (shramik special) சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்திருந்தது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 800 “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்கள் மே 14 ம் தேதி நிலவரப்படி, இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தங்கள் சொந்த மாநிலத்தை அடைந்துள்ளனர்.
- ஈரான் தனது நாணயத்தை தற்போதுள்ள ‘ரியால்’ லிருந்து ‘டோமன்’(Rial to Toman) என்று மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. மதகுரு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பின் இந்த புதிய மசோதா நடைமுறைக்கு வரும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது.
- பிலிப்பைன்சின் வடக்கு பகுதியின் சமர் தீவை அம்போ (Ambo) என்ற சூறாவளி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 2008 ஆம் ஆண்டுமுதல் 2-ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் பிபா யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் 7-வது பதிப்பு பிப்ரவரி 17, 2021 -இல் இந்தியாவில் நடைபெறஉள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த போட்டி. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சர்வதேச குடும்ப தினம் மே 15 அன்று அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது. குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. கருப்பொருள்: Families in Development: Copenhagen & Beijing+25
- ‘‘சமூக பாதுகாப்பு திட்டத்துக்காக இந்தியாவுக்கு 100 கோடி டாலர் (சுமார் ரூ.7,566 கோடி) கடன் உதவி அளிக்கப்படும்’’ என்று உலக வங்கி 15-5-2020 அன்று அறிவித்துள்ளது. இந்த 100 கோடி டாலரில் 55 கோடி டாலர் சர்வதேச மேம்பாட்டு சங்கம் (ஐடிஏ) மூலமாகவும், 20 கோடி டாலர் சர்வதேச மறுசீரமைப்பு வங்கி மூலமாகவும் அளிக்கப்படுகிறது. உலக வங்கியின் இயக்குநர்: ஜூனைத் அஹ்மத்
- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயலானது உருவாங்கியுள்ளது. இந்த புயலுக்கு “அம்பான்” (Amphan) என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கு 670 கிமீ தொலைவில் இந்த உம்பன் புயல் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புயலுக்கு “அம்பான்” என பெயர் வைத்தது தாய்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயலானது உருவாங்கியுள்ளது. இந்த புயலுக்கு “அம்பான்” (Amphan) என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கு 670 கிமீ தொலைவில் இந்த உம்பன் புயல் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புயலுக்கு “அம்பான்” என பெயர் வைத்தது தாய்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.
- Energy Transition index(ETI) – 2020 உலக பொருளாதார மன்றம்(WEF) வெளியிட்டுள்ள உலகளாவிய ஆற்றல் மாற்ற குறியீடு 2020-இல் இந்தியா 51.5% மதிப்பெண்களை பெற்று 74-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே ஸ்வீடன்(74.2%), சுவிட்சர்லாந்து(73.4%) மற்றும் பின்லாந்து(72.4%) நாடுகள் பிடித்துள்ளன.
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் அளிக்கவும் உத்தரகண்ட் மாநில அரசு HOPE (Helping Out People Everywhere) எனும் வலைதளத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டமானது Mukhya Mantri Swarojgar Yojana என்ற திட்டத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
- பொது முடக்கம் காரணமாக வேலையிழந்து தவிக்கும் தொழிலாளா்களுக்காக உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் பொது சமையலறை திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ள ‘ரொட்டி வங்கி’ மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற ரொட்டி வங்கிகள் ஏற்கனவே குஜராத், பீகார் மற்றும் பஞ்சாபில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- கோவா கப்பல் கட்டும் தளதில்(GSL) உருவாக்கப்பட்ட ‘சச்சேத் (ICGS Sachet)’ ரோந்து கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் 15-05-2020 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணித்தாா். மேலும், சி-450, சி-451 ஆகிய அதிவிரைவு கப்பல்களின் செயல்பாட்டையும் அவா் தொடக்கிவைத்தாா். சி-450, சி-451 அதிவிரைவு கப்பல்கள் குஜராத்தின் ஹஜீரா பகுதியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டன. ரோந்து கப்பலானது காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐரோப்பாவின் ஸ்லோவெனியா நாடு, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டதாக அறிவித்துள்ளது.
- Smart Data Center : தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில், National Payments Corporation of India நிறுவனத்தின் மூலம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நவீன தரவு மையத்திற்கு (SmartData Centre) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். National Payments Corporation of India நிறுவனம், மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி இந்த நவீன தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
- Arsenicam Album 30 : மத்திய ஆயுஷ் அமைச்சகதின் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு, கொரோனா தொற்றுக்கு ஆர்சனிகம் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சர் – ஸ்ரீபாத் நாயக்
- சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘ சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் ஒருபகுதியாக, ஆயுத உற்பத்தி துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 49 சதவீதமாக இருந்த அன்னிய நேரடி முதலீடு 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மேற்கு வங்க அரசு சில மாவட்டங்களில் உள்ள 50000 ஏக்கர் அளவிலான தரிசு நிலங்களை வேளாண்மைக்கு பயன்படுத்தும் வகையில் மாற்ற மதிர் ஸ்மிருஸ்தி(Matir Smristi) என்ற திட்டத்தை துவங்கியுள்ளது.
- மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத்திறன் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த WAG-12 என்ற இன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த என்ஜினுக்கு WAG12 என பெயரிடப்பட்டு 60027 என்ற எண் அளிக்கப் பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா ரயில் நிலையத்தில் இது செயல்பாட்டுக்குக் வந்துள்ளது. இந்த ரயில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையத்தில் இருந்து தேஹ்ரி-ஆன்-சோனே, கர்வா சாலை வழியாக பர்வாடிஹ் ரயில் நிலையத்துக்குச் செல்கிறது. WAG-12 – ‘W‘ide/broad Gauge ‘A‘C Electric ‘G‘oods/freight, Class ‘12‘ பிகாரில் உள்ள மாதேபுரா மின்சார ரயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலையில் (Electric Locomotive Factory, Madhepura) இந்த எஞ்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டம் ஜெனிவாவில் மே 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகளில் பிரதிநிதிகள் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டனர்.
- WHO பற்றி சில தகவல்., நிறுவப்பட்ட நாள் – 7 ஏப்ரல் 1948 தலைமையகம் – ஜெனீவா, சுவிட்சர்லாந்து பொது இயக்குநர் – டெட்ரோஸ் அதானோம் துணை பொது இயக்குநர் – சௌமியா சுவாமிநாதன்
- WHO Executive Board : உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த வாரியத்தின் புதிய தலைவராக இந்தியாவை சேர்ந்த ஹர்சவர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹர்சவர்தன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக வர்த்தக அமைப்பின் தலைவராக கடந்த 2013ம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் பிரேசிலை சேர்ந்த ராபர்டோ அஸிவீடோ தனது பதவி காலம் முடிவதற்கு முன், ராஜினாமா செய்யப் போவதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். ‘சீனாவுக்கு ஆதரவாக உலக வர்த்தக அமைப்பு செயல்படுகிறது’ என, அமெரிக்க அரசு தெரிவித்து வரும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் இந்த முடிவு எடுத்துள்ளார்.
- 11600ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை நிற வால் நட்சத்திரமான ஸ்வான் தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது. இதன் வால் சுமார் ஒரு கோடியே 77 லட்சம் கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது. பனி மற்றும் தூசுக்களால் ஆன இந்த வால் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் தெற்கிலிருந்து வடக்காகச் செல்வதாக வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
- உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த 2005ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மே-17 உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது. கருப்பொருள்: உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடவும், அதைக் கட்டுப்படுத்தவும், நீண்ட காலம் வாழவும்.
- சமையல் எண்ணெய்களில் கலப்படத்தை தடுக்கும் பொருட்டு வரும் ஜூன் 1ம் தேதியிலிருந்து சமையல் எண்ணெயை பாக்கெட்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எண்ணெய் சில்லறை விற்பனைக்கு 2006 முதலே தடை உள்ளது. உணவு பாதுகாப்புச் சட்டம் 2011-லும் உதிரி சமையல் எண்ணெய் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தை, ஆயில் கமிட்டி முடிவின் கீழ் ஜூன் 1ல் மீண்டும் செயல்படுத்தும் விதமாகவே அரசு உத்தரவிட்டுள்ளது.
- கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 500 சுகாதார ஆய்வாளர்கள் வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 165 சுகாதார ஆய்வாளர்கள் ராயபுரம் மண்டலத்தில் பணிகளை தொடங்கியுள்ளனர்.
- விவசாயிகள் குறைந்த பட்ச வருமானம் ஈட்டுவதை உறுதிப்படுத்தும் ராஜீவ்காந்தி கிசான் நியாய் யோஜனா எனப்படும் விவசாயிகள் நலத் திட்டத்தை சட்டீஸ்கர் மாநில அரசு துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 19 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் உதவித் தொகை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இதன்படி மாநிலத்தின் முக்கிய பயிரான நெல்லை பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 10000 நிதி உதவி வழங்கப்பட உள்ளது. அத்துடன் கரும்புக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.93 என நிர்ணயிக்கப்பட்டு ஏக்கருக்கு ரூ.13000 நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
- தங்கள் மாநிலம் வழியாக செல்லும் புலம் பெயர் தொழிலார்களுக்கு காலணிகள் வழங்க சரண் படுகா என்ற திட்டத்தை மத்தியப்பிரதேச போலீசார் தொடங்கியுள்ளனர். சரண்-படுகா திட்டமானது, காடுகளில் கடுமையான இடங்களில் கால்கடுக்க நின்று இலைகள் பறிக்கும் தொழிலாளகளுக்கு காலணிகள் வழங்க சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
- நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் S-400 ரக ஏவுகணைகளை இந்தியா ரஷியாவிடம் இருந்து வாங்க கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ரஷ்யாவிடமிருந்து ராணுவத் தளவாடங்கள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடைவிதிக்கப்படும் என்று அமெரிக்கா அப்போது எச்சரித்திருந்தது. இந்நிலையில், இந்தியா மீதான பொருளாதாரத் தடை குறித்த தீர்மானம் இன்னும் நிலுவையில்தான் உள்ளது என்றும், இந்திய அரசு ராணுவத் தளவாடங்கள் வாங்குவது குறித்து ராஜதந்திர ரீதியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரபு மொழியில் அல் அமல் (நம்பிக்கை) என்ற பொருள்படும் ‘ஹோப்’ என்ற விண்கலத்தை முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம்-துபாய் உருவாகியுள்ளது. இந்த விண்கலம் மனிதர்கள் இல்லாமல் செவ்வாய் கிரகத்திற்கு வருகிற ஜூலை 15 அன்று அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு ஜப்பானின் டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் (Tanegashima Space Center) இருந்து `ஹெச் 11 ஏ’ என்ற ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அமீரக விண்வெளி திட்டத்தில் செவ்வாய்கிரக பயணத்திட்டம் முக்கியமான ஒன்றாகும். அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் இந்த செவ்வாய் கிரக பயண திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
- டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் முதலிடத்தை கால்பந்து வீரரான லெவிஸ் ஹாமில்டன் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை கோல்ப் வீரர் ரோரி மெக்கல் ராயும் மூன்றாம் இடத்தை கால் பந்து வீரர் கெராத் பெல்லும் பிடித்துள்ளனர்.
- International Day for Biodiversity -மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம் May-22 இல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Our solutions are in nature.
- World Metrology Day 2020 - 1875 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதியில் 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச எடை மற்றும் அளவுகள் அமைப்பை ஏற்படுத்தினர். அதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் மே-20 உலக அளவியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது கருப்பொருள்: உலகளாவிய வர்த்தகத்திற்கான அளவீடுகள்
- கண்ணகி, கடச்சனேந்தலில்(கடை சிலம்பு ஏந்தல்) இருந்து மதுரைக்கு நடந்து சென்றதாக சிலப்பதிகாரம் குறிப்பிடும் இடமான தற்போது உள்ள மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சிலப்பதிகாரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சமூகத்தின் நலனுக்காக இத்திட்டம் Integrated Risk Insurance என்ற காப்பீடு இடைத்தரகர் நிறுவனத்தினால் துவங்கப்பட்டுள்ளது.
- Banking Correspondent Sakhi Yojana கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், வங்கிகளில் நிலவும் நெரிசலை குறைக்கவும் உத்தரபிரதேச அரசு ரூ.480 கோடி மதிப்பில் வங்கி தோழி என்ற திட்டத்தை துவங்கியுள்ளது. வங்கித்தோழி என்ற இந்த புதிய பணியில் 58 ஆயிரம் பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர், மேலும் இவர்களுக்கு மாதம் 4000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- பிகாரை சோ்ந்த ஆபாஸ் ஜா, உலக வங்கியின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் தெற்காசியப் பிரிவு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தெற்காசியப் பிரிவு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆபாஸ் ஜா, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா்களை எதிா்கொள்வதற்கான புதுமையான வழிமுறைகளைக் கண்டறிந்து வழங்குவாா்.
- ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை பட்டியிலில் முதலிடத்தை 22வயதான ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா பெற்றுள்ளார். 1990ம் ஆண்டு முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது. அதன்படி எந்த ஒரு விளையாட்டு வீராங்கனையும் ஒரே ஆண்டில் ரூ 284 கோடி சம்பாதித்ததில்லை. இதன் மூலம் இவர் புதிய சாதனை படைத்துள்ளார்
- Wuhan Diary: Dispatches from a Quarantined City-சீன பெண் எழுத்தாளரான ஃபங்க் ஃபங்க் (Fang Fang) இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
- World Turtle Day ஆமைகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே-23 அமெரிக்க ஆமை மீட்பு (ATR) அமைப்பினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Adopt, Don’t Shop
- சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் 1100 கோடி செலவில் ReStart என்னும் திட்டத்தை ஆந்திரப்ரதேஷ் அரசு அறிவித்துள்ளது.
- இந்தியாவில் முதன்முறையாக மிசோரம் மாநில அரசு, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், விளையாட்டு துறைகளில் அதிக முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும், “விளையாட்டு”க்கு “தொழில்” அந்தஸ்தை வழங்கியுள்ளது.
- NYIPLA Inventor of the year Award 2020 நியூயார்க் அறிவுசார் சொத்துச் சட்ட சங்கத்தால், ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருதானது, ஐபிஎம் தாம்சன் வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வரும் இந்திய-அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராஜீவ் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. NYIPLA = New York Intellectual Property Law Association
- Military War Game Center உகாண்டா நாட்டு ராணுவத்திற்கு(UPDF), இந்திய ராணுவம் சுமார் 2 கோடி மதிப்பில் INDIA என்ற பெயரில் இராணுவ போர் விளையாட்டு மையத்தை அமைத்து கொடுத்துள்ளது. இதனை மே-24 அன்று உகாண்டா ஜனாதிபதி யோவரி முசவேனி திறந்துவைத்தார்.
- அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமைக்கப்பட்டுள்ள ‘Blue-Ribbon Commission’ – இல் புலிட்சர் பரிசு வென்ற இந்தியரான சித்தார்த்தா முகர்ஜி, சதிஷ் திரிபாதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் தலைவர், முன்னாள் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ எரிக் ஸ்மிட் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய ஹாக்கி அணி 1948, 1952, 1956 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற போது அந்த அணியில் இடம்பெற்றிருந்த இந்திய ஹாக்கி வீரருமான பல்பீர் சிங் டோசன்ஜ் (Balbir Singh Dosanjh) சமீபத்தில் காலமானார். விளையாட்டு துறையில் பத்ம ஸ்ரீ விருது வாங்கிய முதல் நபர், இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான சென்னையை சேர்ந்த சண்முகம் சமீபத்தில் காலமானார்.
- அப்துல் கலாம் தங்கள் நாட்டிற்கு வருகை தந்த மே 26-ம் தேதியை தேசிய அறிவியல் நாளாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மே 26-ம் தேதி, அப்துல் காலம் அவர்கள் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தேசிய அறிவியல் தினம்: சா். சி. வி. ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாடு உலகுக்கு அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- தைராய்டு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 25 ஆம் தேதி அன்று உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதே நாளில் சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினமும் அனுசரிக்கப்படுகிறது.
- கத்தார் நாட்டிற்கான இந்திய தூதராக பதவி வகித்து வந்த பெரியசாமி குமரன் ( Periasamy Kumaran ) சிங்கப்பூர் நாட்டிற்கான இந்தியாவின் புதிய ஹை கமிஷனராக ( High Commissioner of India to The Republic Of Singapore) சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். ,மேலும்., கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் – தீபக் மிட்டல்
- தேர்வெழுதும் பள்ளி மாணவர்களின் பதற்றத்தைக் குறைக்க டேக் இட் ஈசி என்னும் திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது 92666 17888 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால், சில நிமிடங்களில் செல்பேசிக்குத் தானியங்கி அழைப்பு ஒன்று வருகிறது. அதில் டேக் இட் ஈசி என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை ஒன்று சொல்லப்படுகிறது. சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் இந்தக் கதை நீடிக்கிறது.
- ‘ரோஸ்கர் சேது’ ( Rozgar Setu ) என்ற பெயரில் ஊரடங்கினால் பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வந்த தனது மாநிலத்தை சேர்ந்த திறன் தொழிலாளர்களுக்கு (Skilled Workers) வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மத்தியப் பிரதேச அரசு செயல்படுத்த உள்ளது. மேலும் சமீபத்தில் மத்தியஅரசு அறிவித்திருந்த ஸ்வாமித்வா (SVAMITVA – Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டத்தையும் சேர்த்து செயல்படுத்த உள்ளது.
- ஜூலை 12, 1982 அன்று தொடங்கப்பட்ட தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
- பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் பான் மசாலா, குட்கா, இ-சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை தடை செய்ய சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டு சங்கம் (Socio-Economic and Educational Development Society (SEEDS)) மேற்கொண்ட முயற்சிகளுக்காக, உலக சுகாதார அமைப்பு (WHO) புகையிலை இல்லா தின விருது-2020 -ஐ வழங்கியுள்ளது. உலக புகையிலையில்லா தினம் (World No-Tobacco Day) மே 31 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மையக்கருத்து – TobaccoExposed
- சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழக(SKMU) துணைவேந்தராக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த “சோனாஹரியா மின்ஸ்” (Sonajharia Minz) நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். முதல் பழங்குடியின பெண் பைலட் – அனுபிரியா மதுமிதா லக்ரா சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் பழங்குடியினப் பெண் – ஸ்ரீதன்யா சுரேஷ்
- தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் (யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ்) பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரியும், பெண் அமைதி காக்கும் மேஜர் சுமன் கவானி, ஐக்கிய நாடுகளின் மதிப்புமிக்க இராணுவ பாலின வழக்கறிஞர் விருதுக்கு (2019) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- அக்னிபிரஸ்தா’ ஏவுகணைப் பூங்காவை (Missile Park ‘Agneeprastha’) , ஐஎன்எஸ் கலிங்காவில் (INS Kalinga) அமைப்பதற்காக 29-5-2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 1981 முதல் இன்று வரையிலான ஐஎன்எஸ் கலிங்காவின் ஏவுகணை வரலாற்றிணை காட்சிப்படுத்துவதை ‘’ அக்னிபிரஸ்தா’’ நோக்கமாகக் கொண்டுள்ளது.
- புதிய வளர்ச்சி வங்கி( New Development Bank )-கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் தலைவராக இருந்து வந்த கே.வி காமத் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து ,பிரேசில் நாட்டைச் சேர்ந்த மார்கோஸ் ட்ரோஜோ (Marcos Troyjo) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜூலை 7 அன்று பதவியேற்கவுள்ளார். மேலும்., துணைத்தலைவராக இந்தியாவை சேர்ந்த அனில் கிஷோராவும் (Anil Kishora) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
- ஹாரி பாட்டர் நாவல் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் ( J.K. Rowling ) ‘தி இக்கா பாக்’ ( The Ickabog) என்ற தனது புது புத்தகத்தை குழந்தைகளுக்காக இலவசமாக ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்.
- உலக பசி தினம் (World Hunger Day)-இந்த ஆண்டுக்கான கருப்பொருள்– பசி ஒரு உலகளாவிய பிரச்சனை, உலகளவிலான பொறுப்புணர்வு தேவை (Hunger: A Global Issue Needs a Global Response) மேலும் மே-28 இல் அனுசரிக்கப்படும் சில முக்கிய தினங்கள்:- மாதவிடாய் கால சுகாதார தினம் – கருப்பொருள்: Periods in Pandemic பெண்கள் ஆரோக்கியத்திற்கான சர்வதேச செயல்பாட்டு தினம்- கருப்பொருள்: Women’s Health Matters
- சர்வதேச ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம்-மே-29