Type Here to Get Search Results !

GK TOPIC JUNE 2020-TNPSC GROUP 1 GROUP 2



உலக சுற்றுச்சூழல் தினம் / WORLD ENVIRONMENT DAY:
  • 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலக சுற்றுச் சூழல் தினம் - 2020 ஆண்டுக்கான கருப்பொருள்
  • 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'பல்லுயிர்ப் பெருக்கத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
  • பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, "பல்லுயிர்ப் பெருக்கம் என்பது அவசரமானது மட்டுமின்றி நமது இருத்தலியலுக்கான நெருக்கடியும் கூட. 
பருவநிலை மாற்றம் என்றால் என்ன?
  • மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன.
தேசிய டிஜிட்டல் நூலகம் / NATIONAL DIGITAL LIBRARY
  • கொரோனா (Coronavirus) வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பள்ளி-கல்லூரி திறப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்து வருகிறது. 
  • இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், மாணவர்களுக்கு உதவ அரசு ஒரு நூலகத்தை தயார் செய்துள்ளது. 
  • அதன் சிறப்பு என்னவென்றால், அதில் ஆரம்ப பாடம் முதல், சட்டம், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பாடங்களின் புத்தகங்கள் வரை அனைத்து பாடங்களுக்கான புத்தகங்களும் ஒரே இணைய மேடையில் கிடைக்கும்.
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்த தேசிய டிஜிட்டல் நூலகத்தில் (National digital library) 4.5 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகம் https://ndl.iitkgp.ac.in இணைப்பில் காணப்படும்.
  • இந்த நூலகம் நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கானது என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். 
  • இந்த போர்டல் ஆரம்ப கல்வி முதல் முதுகலை வரை அனைத்து பாடங்களையும் உள்ளடக்கியது. உதாரணமாக, இது சமூக அறிவியல், இலக்கியம், சட்டம், மருத்துவம் போன்ற அனைத்து பாடங்களையும் உள்ளடக்கியது.
  • தேசிய டிஜிட்டல் நூலகத்தில் பிராந்திய மொழிகளிலும் புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தில் இதுவரை 4 கோடி 60 லட்சம் புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநில மாணவர்களும் தங்கள் மொழியில் புத்தகத்தை இங்கே படிக்கலாம்.
  • Ph.D மற்றும் Mphil மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் பூட்டுதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், இப்போது அத்தகைய மாணவர்கள் ஆன்லைனில் ஆயிரக்கணக்கான பத்திரிகைகளையும் மில்லியன் கணக்கான புத்தகங்களையும் கண்டுபிடிக்க முடியும்.
  • மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு நூலகம் அவசியம். ஆனால் இது பூட்டுதலில் நடக்காது. 
  • எனவே, உயர்கல்வி மாணவர்களுக்கு இப்போது மற்றொரு டிஜிட்டல் தளமான 'ஷோத் சிந்து' இலிருந்து ஆன்லைனில் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் நல்ல ஆய்வுக் கட்டுரையைப் பெற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 10,000 இதழ்கள் மற்றும் 31 லட்சம் 35 ஆயிரம் புத்தகங்களை இந்த மின் தளம் மூலம் மாணவர்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக பெருங்கடல் தினம் / WORLD OCEAN DAY
  • பூமியில் உள்ள மொத்த நீரில் 97 சதவீதம் கடல் நீர் தான். பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ம் தேதி, உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
  • 'நிலையான பெருங்கடலுக்கான புதிய முயற்சி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.உலகில் கடலில் தான் அதிக சரக்கு போக்குவரத்து நடக்கிறது. உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை நம்பியே உள்ளனர். 
  • கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. கடல் மாசுநாம் துாக்கி எறியும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் கடலில் கலக்கின்றன. 
  • இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் அழிவு ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஊரடங்கால் கடல் மாசுபடுவது குறைந்தது.
  • கடல்வாழ் உயிரினங்கள் எவ்வித அச்சமின்றி வந்து சென்றதை பார்க்க முடிந்தது. மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் எடுத்துக்கொண்டு, பூமி வெப்பமடைவதை குறைக்கிறது.
  • கடல் மூலமாக 70 சதவீத ஆக்சிஜன் கிடைக்கிறது. உலகில் ஆண்டுதோறும் 80 லட்சம் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன. உலகில் 300 கோடி பேருக்கு கடல் உணவு மூலம் புரோட்டின் கிடைக்கிறது.
தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல்  2020 / NATIONAL RANK LIST FOR EDUCATIONAL INSTITUTE & UNIVERSITY 2020
  • இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. 
  • இதற்காக தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எப்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மாணவர் தேர்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு தரவரிசை உருவாக்கப்படும்.
  • அதன்படி, 2020-ம் ஆண்டுக்காக உயர்கல்வி தரவரிசை போட்டிக்காக தமிழகத்தில் இருந்து 260 உட்பட நாடு முழுவதும் 1,667கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.
  • அதில் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகமும், டெல்லி ஐஐடி மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. 
  • 2019ம் ஆண்டுக்கான தரவரிசையிலும் சென்னை ஐஐடிதான் முதலிடத்தில் இருந்தது. 2018-ல் 10-வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலை. 2019-ல் 14வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 
  • இந்நிலையில், மீண்டும் பின்தங்கி தற்போது 20-வது இடத்தில் உள்ளது. பல்கலைக்கழக தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கும், பொறியியல் கல்லூரிக்கான தரவரிசையில் 9ல் இருந்து 14ம் இடத்துக்கும் அண்ணா பல்கலை. தள்ளப்பட்டுள்ளது.
  • ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்களில் பாரதியார் பல்கலைக்கழகம் 21-வது இடத்திலேயே உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் 33-வது இடத்தில் இருந்து 41-வது இடத்துக்கும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 47-ல் இருந்து 64-க்கும், மதுரை காமராஜர் பல்கலை. 
  • 69ல் இருந்து 84-க்கும் சரிந்துள்ளன. திருச்சி பாரதிதாசன் 86-ல் இருந்து 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர முதல் 100 இடங்களில், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (13), திருச்சி என்ஐடி (24) வேலூர் விஐடி (28) உள்ளிட்ட 18 நிறுவனங்கள் உள்ளன.
  • கல்லூரிகளுக்கான தரவரிசையில் மாநிலக் கல்லூரி 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு இறங்கியுள்ளது. அடுத்தபடியாக லயோலா கல்லூரி (6), கோவை அரசு கலைக் கல்லூரி(34) உள்ளிட்ட 32 கல்லூரிகள் 100 இடத்துக்குள் உள்ளன.
  • மருத்துவ கல்லூரிக்கான தரவரிசையில் மெட்ராஸ் மருத்துவ கல்லூரி 12வது இடம் என முதல் 40 இடங்களில் 7 தனியார் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
  • தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையிலேயே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் பண்டைய ஆப்கானிஸ்தானுடன் வணிகம் செய்ததற்கான ஆதாரம் கண்டெடுப்பு
  • தமிழக தொல்லியல் துறையின் தலைமை அதிகாரி ரஞ்சித் தலைமையிலான அலுவலர்கள் 5 குழுக்களாகப் பிரிந்து கடந்த 10 நட்களாக கொடுமணலில் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் பழங்கால ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பேசிய மொழியின் எழுத்து பொறிக்கப்பட்ட மண் பொருட்கள் கிடைத்துள்ளன.
  • இதன் மூலம் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுடனும் தமிழகத்துக்கு வணிக தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
  • இதேபோல் நகைகளுக்கு பொருத்தப்படும் வண்ண கற்களை விற்கவும், கொடுமணலில் பட்டை தீட்டப்பட்ட ஆபரணக் கற்களை வாங்கவும் ஆப்கானிஸ்தான் நாட்டு வியாபாரிகள் வந்து சென்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
  • மேலும், கல்மணி சங்குகள், பளிங்கு கற்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவைகள் ஆய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மிகப் பழமையான முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 
  • கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து கொடுமணலிலும் பண்டைய வரலாறு தேண்டி எடுக்கப்பட்டு வருகிறது.
உலக ரத்த தான தினம் / WORLD BLOOD DONATION DAY
  • ரத்த தானத்தின் அவசியம் பற்றி வழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் 14-ல் உக ரத்த தானம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாதுகாப்பான ரத்தம் : பாதுகாப்பான வாழக்கை என்பது இந்தாண்டு மையக்கருத்து.
  • விபத்து, ஆப்பரேஷன் போன்ற ஆபத்தான தருணங்களில் பாதிக்கப்பட்டோருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நீங்கள் வழங்கும் ரத்தம், பிறர் உயிர்காக்கப்பயன்படுகிறது என்பதை நினைவில் நிறுத்தி, அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேடும் என வலியுறுத்தப்படுகிறது.
  • உடல் நலமாக உள்ள 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்த தானம் செய்யலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்ததானம் கொடுக்கும் முன் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவை சேதனை செய்யப்படும்.
  • மூன்று மாதங்களுக்கு ஒரு ரத்ததானம் வழங்கலாம். இது பல வழிகளிலும் உடலுக்கு நன்மை அளிக்கும். தானாக ரத்ததானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
  • தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் வழங்கும் ரத்த பிளாஸ்மா மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. 12 உலகளவில் 12 கோடி பேர் ரத்த தானம் செய்துள்ளனர். இதில் 40 சதவீதம் அதிக வருமானமுடைய நாடுகளை சேர்ந்தவர்கள்.
ஜூன் 13 அன்று சர்வதேச அல்பினிச விழிப்புணர்வு நாள்
  • உலகளவில் அல்பினிசம் கொண்ட நபர்களின் சாதனைகள் மற்றும் வெற்றிகளைக் கொண்டாட தீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கொடுமைப்படுத்துதல், கொல்லுதல், தாக்குதல்கள், மனிதநேயமற்ற களங்கம் மற்றும் பாகுபாடு ஆகியவை அல்பினிசம் உள்ளவர்களுக்கு எதிராக தொடர்கின்றன.
  • 13 ஜூன் 2020 நடப்பு விவகாரங்கள்: சர்வதேச அல்பினிச விழிப்புணர்வு நாள் (ஐஏஏடி) ஜூன் 13 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் அல்பினிசம் கொண்ட நபர்களின் மனித உரிமைகளை கொண்டாடும் நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • தீம்: "Made To Shine":
  • 2020 சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினத்திற்கான தீம் "பிரகாசிக்கும்படி செய்யப்படுகிறது." உலகளவில் அல்பினிசம் கொண்ட நபர்களின் சாதனைகள் மற்றும் வெற்றிகளைக் கொண்டாட தீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கொடுமைப்படுத்துதல், கொல்லுதல், தாக்குதல்கள், மனிதநேயமற்ற களங்கம் மற்றும் பாகுபாடு ஆகியவை அல்பினிசம் உள்ளவர்களுக்கு எதிராக தொடர்கின்றன.
ஆரோக்யபாதை / AROGYAPATH
  • உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை சரியான நேரத்தில் பெறுவதில் நாடு தழுவிய அளவில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன. 
  • குறிப்பாக, ஒரு சில மருத்துவ உபகரணங்கள் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படாமல் இருத்தல், குறிப்பிட்ட உற்பத்தி நிறுவனங்களை மட்டுமே நம்பியிருத்தல், தரமான உபகரணங்களை தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் கால விரயம் உள்ளிட்ட பிரச்சினைகள் இதில் நிலவுகின்றன.
  • அதிலும், தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் கூடுதல் சிரமங்கள் ஏற்படுகின்றன. 
  • இதைக் கருத்தில் கொண்டு, மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வோர், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் வகையில் 'ஆரோக்யபாதை' (www.arogyapath.in) இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 
  • இதில், எந்தெந்த உற்பத்தியாளரிடம் என்னென்ன மருத்துவ உபகரணங்கள் தற்போது இருக்கின்றன, அவற்றுக்கு எவ்வளவு தேவை உள்ளது, வாடிக்கையாளர்களுக்கு அருகில் இருக்கும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக பிரிவு அறிக்கை 2020
  • கடந்த ஆண்டில், உலகளவில், அன்னிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈர்த்த நாடுகளில் இந்தியா, ஒன்பதாம் இடத்தைப் பெற்றுள்ளது என, 'ஐக்கிய நாடுகள் சபை'யின் வர்த்தக பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில், 3.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, இந்தியாவில் அன்னிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • இதையடுத்து, அதிக அளவில் அன்னிய முதலீடுகள் பெறப்பட்ட நாடுகளில், இந்தியா, ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தியா, கடந்த ஆண்டில், 3.86 லட்சம் கோடி ரூபாயை, அன்னிய முதலீடாக ஈர்த்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், 3.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த, 2018ல், அன்னிய முதலீட்டை அதிகம் பெற்ற, 'டாப் 20' நாடுகளில், இந்தியா, 12 இடத்தை பெற்றிருந்தது; தற்போது, ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
  • வளர்ந்து வரும் ஆசிய நாடுகளில் உள்ள, முக்கியமான ஐந்து நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக உள்ளது.கொரோனா தாக்கத்துக்குப் பின், வளர்ச்சி குறைந்தாலும், அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் மிகப் பெரிய சந்தையாக, இந்தியா தொடர்ந்து விளங்கும்.
  • நடப்பு ஆண்டில், அன்னிய முதலீடுகள், உலக அளவில், 40 சதவீதம் அளவுக்கு குறையும் என கருதப்படுகிறது.கடந்த, 2005ம் ஆண்டுக்குப் பிறகு, உலகளவில், 1 லட்சம் டாலர் என்ற நிலைக்கு கீழே, அன்னிய முதலீடு முதல் முறையாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 45 சதவீதம் ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, நடப்பு ஆண்டில், அன்னியமுதலீடுகள், 45 சதவீதம் அளவுக்கு குறையும் என கருதப்படுகிறது. தெற்கு ஆசியாவிலும் கணிசமாக இந்த ஆண்டு குறையும்.
உலக போட்டித்திறன் குறியீட்டில் இந்தியாவுக்கு 43-ஆவது இடம்
  • நிா்ணயிக்கப்பட்ட வளா்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்குதல், மக்களின் நலனை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை அடைவதற்கு தொழில் நிறுவனங்களுக்குக் காணப்படும் சூழலை ஆராய்ந்து, போட்டித்திறன் குறியீட்டை சா்வதேச மேலாண்மை வளா்ச்சி நிறுவனம் (ஐஎம்டி) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
  • 2020-ஆம் ஆண்டுக்கான பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில் இந்தியா 43-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் இந்தியா இதே இடத்தைப் பிடித்திருந்தது. 
  • எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல், ஏற்றுமதி, அந்நிய செலாவணி கையிருப்பு, கல்வித் துறைக்கான அரசின் செலவினம், அரசியல் நிலைத்தன்மை, ஒட்டுமொத்த செயல்திறன் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியாவின் செயல்பாடு அதிகரித்துள்ளது.
  • அதே வேளையில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறைபாடு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் நிலையில்லாத்தன்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சியில் வீழ்ச்சி உள்ளிட்டவற்றால் இந்தியாவின் போட்டியிடும் திறன் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மொத்தம் கணக்கிடப்பட்ட 63 நாடுகளில் சிங்கப்பூா் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 10-ஆவது இடத்திலும், சீனா 20-ஆவது இடத்திலும், ரஷியா 50-ஆவது இடத்திலும், பிரேஸில் 56-ஆவது இடத்திலும் உள்ளன.
இயற்கைக் குறியீடு 2020
  • இயற்கைக் குறியீடு என்பது ஆசிரியருடனான தொடர்புகள் மற்றும் நிறுவன உறவுகளைக் கொண்ட ஒரு தரவு தளமாகும்.
  • இந்தத் தரவு தளமானது ஜெர்மனியில் உள்ள அமெரிக்க ஜெர்மனியக் கல்விப் பிரசுரிப்பு நிறுவனமான “ஸ்பிரின்ஞர் நேச்சர்” என்ற ஒரு சர்வதேச அறிவியல்சார் பிரசுரிப்பு நிறுவனத்தின் ஒரு பிரிவான “நேச்சர் ரிசர்ச்” என்ற பிரிவினால் தொகுக்கப் பட்டுள்ளது.
  • இதில் முதல் 5 இடங்கள் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஐக்கிய இராஜ்ஜியம், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளன.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா ஒட்டுமொத்தமாக 12வது இடத்தில் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த முன்னிலையில் உள்ள 3 நிறுவனங்கள் பின்வருமாறு:
    • அறிவியல்சார் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் 
    • இந்திய அறிவியல் தொழில்நுட்பம்
    • டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம்
  • இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் 3 தனிச்சுதந்திர நிறுவனங்கள் முதல் 30 இந்திய நிறுவனங்களிடையே இடம் பிடித்துள்ளன.
  • அவையாவன:
    • கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம் - 7வது இடம்
    • பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் – 14வது இடம்
    • கொல்கத்தாவில் உள்ள எஸ்என் போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம் - - 30வது இடம்.
உலக உணவு விருது 2020
  • இந்திய-அமெரிக்க மண்வள ஆராய்ச்சியாளரான டாக்டர் ரத்தன் லால் என்பவர் உலக உணவு விருது அமைப்பினால் வழங்கப்படும் 2020 உலக உணவு விருதினை வென்றுள்ளார்.
  • இது இயற்கை வளங்களைப் பாதுகாத்து, காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் உணவு உற்பத்தி முறையை அதிகரிப்பதற்காக வேண்டிய மண்வள மைய அணுகுமுறையை மேம்படுத்துதல் மற்றும் அந்த முறையை மையப்படுத்துதல் ஆகியவற்றிற்காக வழங்கப்பட்டுள்ளது. 
  • உலக உணவு விருதானது பொது உணவுக் கழகத்தின் ஆதரவுடன் 1986 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
  • இந்த விருதானது வேளாண் துறைக்கு வழங்கப்படும் நோபல் பரிசிற்குச் சமமானதாகக் கருதப்படுகின்றது.
  • இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் அனுசரிக்கப்படும் ஐக்கிய நாடுகள் உலக உணவு தினத்தன்று (அக்டோபர் 16) வழங்கப்படுகின்றது
  • உலக உணவு விருது அமைப்பானது தற்பொழுது பார்பரா ஸ்டின்சன் என்பவரால் நிர்வகிக்கப் படுகின்றது.
  • இது பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் நோபல் அமைதிப் பரிசு பெற்றவரான நார்மன் போர்லாங் என்பவரால் கருத்துரு கொண்டு ஆரம்பிக்கப் பட்டது.
  • இந்த விருதின் முதலாவது வெற்றியாளர் 1987 ஆம் ஆண்டில் இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆவார்.
NIRF தரவரிசையில் தமிழ்நாடு
  • முதல் 50 இடங்களில் ஏறத்தாழ அனைத்துப் பிரிவுகளிலும் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களுடன் தமிழ்நாடு மாநிலமானது இந்திய உயர் கல்வியில் அதிகப் பங்களிக்கும் ஒரு முன்னிலை மாநிலமாக உருவெடுத்துள்ளது.
  • தமிழ்நாடு மாநிலமானது இந்தியாவின் முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் ஐந்தில் ஒரு பங்கு கல்லூரிகளுடன் பொறியியல் கல்லூரிப் பட்டியலில் ஒரு தலைமை மாநிலமாகத் திகழ்கின்றது.
  • 2020 ஆம் ஆண்டின் தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்புத் தரவரிசையின்படி, (NIRF – National Institutional Ranking Framework) நாட்டின் முன்னிலையில் உள்ள 100 பொறியியல் கல்லூரிகளில் 18 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும்.
  • தொடர்ந்து 5வது முறையாக நாட்டின் சிறந்த பொறியியல் கல்லூரி என்ற அங்கீகாரத்துடன் நாட்டின் முன்னிலையில் உள்ள ஒரு கல்வி நிறுவனமாக ஐஐடி-மதராஸ் திகழ்கின்றது.
  • திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 இதர பொறியியல் கல்லூரிகளிடையே 9வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
  • கல்லூரிகளின் தரவரிசையில் இந்தியாவில் உள்ள முதல் 100 மானுடவியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றில் ஒரு பங்கு கல்லூரிகளைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு தரவரிசையில், தமிழ்நாட்டில் இருந்து 35 கல்லூரிகள் இடம் பெற்றன. இந்த ஆண்டில் மொத்தமுள்ள 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும்.
  • முதன்முறையாக இந்த ஆண்டின் முன்னிலை பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் மதராஸ் மருத்துவக் கல்லூரியானது 12வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டு உள்ளது.
சர்வதேச யோகா தினம் / INTERNATIONAL YOGA DAY
  • யோகாவிற்கு மதம், மொழி, நாடு என எந்த பேதமும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். யோகா தினத்தை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். 
  • அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • கரோனா பெருந்தொற்று சூழலில், பொது இடங்களில் பலர் ஒன்று சேர முடியாத நிலையில், 'வீட்டில் யோகா- குடும்பத்தாருடன் யோகா' என்பதே இந்த 2020ஆம் ஆண்டின் கொண்டாட்ட முறையாகி உள்ளது.
  • உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக யோகாவை பழகுங்கள். யோகாவிற்கு மதம், மொழி, நாடு என எந்த பேதமும் இல்லை. கொரோனாவை ஒழிக்க யோகா ஒரு சிறந்த வழிமுறையாக திகழ்கிறது. யோகா செய்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 
  • மன உறுதி மற்றும் நேர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கிறது. உடல் வலிமை மட்டுமின்றி மனதை சமநிலைப்படுத்தவும் யோகா உதவும். வைரசுடன் போராட யோகா உதவும். யோகாவின் பலனை உலகம் தற்போது உணர்ந்துள்ளது. 
  • யோகா ஒரு ஆரோக்கியமான கிரகத்திற்கான நமது தேடலை மேம்படுத்துகிறது. இது ஒற்றுமைக்கான சக்தியாக உருவெடுத்து மனிதகுலத்தின் பிணைப்பை ஆழப்படுத்துகிறது. இது பாகுபாடு காட்டாது, அது இனம், நிறம், பாலினம், நம்பிக்கை மற்றும் வம்சாவளியைத் தாண்டியது.
  • இதற்கிடையே, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ராணுவ வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது இடத்தில் யோகா செய்து பயிற்சி பெற்றனர்.
உலக இசை தினம் / WORLD MUSIC DAY
  • சைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை கவலைக்கு மருந்தாகவும், பொழுதுபோக்கும் அம்சமாகவும் திகழ்கிறது. வரும் தலைமுறையினருக்கு இசை ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
  • எப்படி தோன்றியது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது மனிதன் மற்றும் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. 
  • பறவைகளின் சத்தம் ஒருவிதமாகவும், விலங்குகளின் சத்தம் ஒரு விதமாகவும் இருக்கும். கைதட்டுதல் உள்ளிட்ட நமது அசைவுகளின் மூலமே இசையின் பயணம் துவங்கியுள்ளது. 
  • இன்றைய இசையின் நிலை, தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் பயணிக்கிறது.இசைகள் பலவிதம் பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என இசையின் பரிமாணம் உருவாகியது. 
  • ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன.இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் தான் பின்பற்றப்படுகிறது. 
  • ஒன்று வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடாக இசை. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். 
  • கலாசாரத்தை சீரழிக்கும் இசை தடுக்கப்பட வேண்டும். பொழுதுபோக்கு அம்சமாகவும் அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் ஏற்ற வகையிலும் இசை இருக்க வேண்டும்.
இலவச இணையதள மருத்துவம் `e-sanjeevani'
  • பேரிடர் காலமென்பதால் தமிழகம் ,மத்தியரசுடன் இணைந்து ஆரோக்கியசேது போன்ற பல்வேறு செயலி மற்றும் இணையதளங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. 
  • கொடிய தீநுண்மி கொரானாவால் மக்கள் வெளியே இயல்பாக நடமாட இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு சென்றால் கொரொனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் , வீட்டிலிருந்தபடியே, தங்கள் உடல் நலம் குறித்த சந்தேகங்களை ,உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களிடமிருந்து ஆலோசனைகளாக பெறும் வகையில், இணையத்தில் இ சஞ்ஜீவினியை நம் மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து அறிமுகம் செய்துள்ளனர். 
  • கொரோனா அறிகுறி நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் பிற நோயாளிகளுக்கும் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த இ சஞ்ஜீவினி. 
  • இந்திய அளவில் முதற்கட்டமாக 15 மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ள இச்சேவை தமிழகத்தை பொறுத்தவரை விடுமுறையின்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை செயல்படுகிறது. 
சிறப்பம்சங்கள்
  • அங்கு இதுவரை இ சஞ்சீவினியால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை , இதுவரை ஆலோசனைகள் வழங்கப்பட்ட மொத்த நேரம்,மருத்துவர்கள் நோயாளிகளுடன் கலந்துரையாடிய சராசரி நிமிடம் ,சேவையை வழங்குவதற்கு தற்போது தயார் நிலையில் உள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் இணையதளத்தின் முகப்பக்கத்திலேயே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 
  • அதே பக்கத்திலேயே மாநில வாரியாக, தற்போது ஆலோசனைகள் வழங்க தயார் நிலையில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது . அதற்கு அடுத்த பக்கமான esanjeevaniopd யில் பதிவு செய்து பயன்பெறுவதற்காக வழிமுறை விளக்கப்படமானது தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
  • அடுத்ததாக உள்ள dashboard பக்கத்தில் இ சஞ்சீவினி சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை செயல்படுத்தப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை மாநில, மாவட்ட வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளன. 
  • Timing பக்கத்தில் இச்சேவை செயல்படும் நேரம் மற்றும் விடுமுறை நாட்களின் விவரங்கள் மாநில வாரியாக கொடுக்கப்பட்டு வருகின்றன. அலைபேசி மற்றும் கணினிகளை பயன்படுத்தி இ சஞ்ஜீவினியில் ஆலோசனை பெறுவது எப்படி என்பதை தற்போது தெரிந்துகொள்ளலாம். 
  • நோயாளியாக பதிவு செய்து ஆலோசனை பெற patient registration பிரிவில் நுழைந்து உங்கள் அலைபேசி எண்ணை உள்ளீடு செய்யுங்கள்.
  • பின்னர் உங்கள் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யுங்கள். அதை தொடர்ந்து நோயாளியாக பதிவு செய்து ,டோக்கன் பெறுவதற்க்கான பக்கம். 
  • திறந்தவுடன் உங்கள் பெயர், பாலினம், மின்னஞ்சல் முகவரி, வயது, மாநிலம், மாவட்டம், பெருநகரம், வீட்டு விலாசம் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். 
  • நீங்கள் தினசரி மருந்து எடுத்துக்கொள்பவர் அல்லது நாள்பட்ட நோயாளி என்றால் உங்களது முந்தைய பரிசோதனை தரவுச்சீட்டுகளை, புகைப்படங்களாகவோ அல்லது கோப்புகலாகவோ மாற்றி குறிப்பிடப்பட்டுள்ள அளவிற்க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
  • டோக்கன் பெருவதற்க்கான பக்கத்தை முழுமையகாக பூர்த்தி செய்து முடித்தபின், குறுஞ்செய்தியாக வந்த கடவுச்சொல்லை மீண்டும் உள்ளீடு செய்யுங்கள். 
  • விவரங்கள் தரவு செய்யப்பட்டு உங்களுக்கான நோயாளி எண் மற்றும் டோக்கன் எண்ணானது நீங்கள் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணிற்க்கு மற்றொரு குறுஞ்செய்தி யாக அனுப்பப்படும். அந்த இரு எண்களையும் பதிவு செய்தால் நீங்கள் காத்திருப்போர் பக்கத்திற்க்குள் நுழைந்து விடுவீர்கள்.
  • மருத்துவருக்கு அழைப்பு விடுப்பதற்கான நேரம் தொடங்கியவுடன், அழைப்பை உறுதி செய்யுங்கள். பின்னர் சிறிது நேரத்தில் காணொலி வாயிலாக மருத்துவர் உங்களுடன் இணைவார். மருத்துவ ஆலோசனைகள் பெற்றவுடன் e-priscription பக்கத்திற்கு சென்று மருந்துச்சீட்டினை பதிவிறக்கம் செய்து மருத்துகளை உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மருந்துக்கடைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
  • அடிக்கடி கைகளை கழுவுதல்,கட்டாய முகக்கவசம்,தனிமைபடுத்திக் கொள்ளுதல், சமூக விலகல் போன்ற போன்ற வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து வரும் நாம், அரசு ஏற்படுத்தி தரும் இது போன்ற சிறப்புத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்வது ,கொரொனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள பெரும் உதவியாக இருக்கும். அண்மை செய்திகளையும்,உறுதி படுத்தப்பட்ட உண்மை செய்திகளையும் உள்ளது உள்ள படி உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும்.
ஜீரோ கார்பன் திட்ட விருது / ZERO CARBON AWARD
  • பிரிட்டனில், 'ஜீரோ கார்பன்' திட்ட விருதுக்கு தேர்வான, 50 பெண் இன்ஜினியர்கள் பட்டி யலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.
  • ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 2020ம் ஆண்டில், சிறப்பு செயல்பாட்டிற்கான விருது பெறும், 50 பெண் இன்ஜினியர்களின் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
  • 'ஜீரோ கார்பன்' திட்டத்தில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியோர், இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.இந்த பட்டியலில், பிரிட்டன் அணுசக்தி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, குல்ஹாம் அறிவியல் மையத்தின் இன்ஜினியர், சித்ரா சீனிவாசன் இடம் பிடித்து உள்ளார். 
  • இவருடன், போக்குவரத்து பிரிவில் ரிது கார்க், நில அதிர்வு துறையில் பர்னாலி கோஷ், காலநிலை மாற்ற நிபுணர் அனுஷா ஷா மற்றும் மூத்த இன்ஜினியர் குசும் திரிகா என, ஐந்து இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர்.
உலகின் மிக நீளமான மின்னல் / WORLD LARGEST LIGHTNING
  • பிரேஸிலில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 700 கி.மீ. மின்னல்தான், உலகின் மிக நீளமான மின்னல் என்று ஐ.நா.வின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது. 
  • மேலும், ஆா்ஜெண்டீனாவில் 16 விநாடிகளுக்கு மேல் ஏற்பட்ட மின்னல்தான் உலகின் மிக அதிக நேரம் மின்னிய சாதனையைப் படைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
  • இது, இதற்கு முன்னா் சாதனை படைத்திருந்த மின்னலைவிட இரு மடங்கு அதிக நீளமாகும். இதற்கு முன்னா் அமெரிக்காவில் கடந்த 2007-ஆம் ஆண்டு இந்த சாதனையைப் படைத்திருந்த மின்னல், 321 கி.மீ. நீளமே இருந்தது.
ஸ்கோச் கோல்டு - SKOCH GOLD AWARD - 2020
  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை மற்றும் மேம்பாட்டிற்காக விருது கொடுக்கப்படுவது வழக்கம். 
  • 2003ம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டுவரும் இந்த விருதானது சிறந்த முன்மாதிரிக்கான தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது என வகைப்படுத்தப்படுகிறது. 
  • இதில் 2020-ம் வருடத்திற்கான நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செய்ததற்காக சிறந்த முன்மாதிரிக்கான தங்க விருதை (ஸ்கோச் கோல்டு - SKOCH GOLD AWARD - 2020) தேனி மாவட்ட நிர்வாகம் தட்டிச் சென்றுள்ளது.
சன்சத் ரத்னா விருது / SANSAD RATNA AWARD 2020
  • கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் உள்ள ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமும், இந்த நிறுவனம் வெளியிடும் 'ப்ரீசென்ஸ்' இணைய மாத இதழும் சன்சத் ரத்னா விருது திட்டத்தை ஏற்படுத்தின.
  • நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் எம்.பி.க்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் நோக்கம் என்ற திட்டத்தை உருவாக்கி சன்சத் ரத்னா விருது விழா நடத்திடத் தூண்டுகோலாக இருந்தது.
  • 2010-ம் ஆண்டில் முதல் விருது விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். விருதுகள் பெறுபவர்கள் சிறந்த நாடாளுமன்ற வாதிகளால் வெளிப்படைத் தன்மையுடன் மக்களவைச் செயலகமும் பி.ஆர்.எஸ். இந்தியா எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனமும் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
  • பிரைம் பாயின்ட் பவுண்டேஷன் மற்றும் சன்சத் ரத்னா விருதுகள் குழுவின் தலைவர் கே.சீனிவாசன் கருத்துப்படி, தேர்வு குழு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை சன்சத் மகா ரத்னா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது.
  • 16வது மக்களவையின் செயல்திறன் தரத்தின் அடிப்படையில் இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்படுள்ளது. இந்த விருது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. 
  • 17ம் மக்களவையின் உறுப்பினர்களின் செயல் திறன் அடிப்படையில், சன்சத் ரத்னா விருது 2020 பெற 8 மக்களவை உறுப்பினர்களும், 2 மாநிலங்களவை உறுப்பினர்களும், ஒரு நாடாளுமன்ற நிலைகுழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • 2020-ம் ஆண்டுக்கான சன்சத் ரத்னா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்களின் பட்டியலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெளியிட்டார்.
  • இந்த தேர்வு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.கே. பிரேம சந்திரன் (கேரளா) மற்றும் ஸ்ரீ ரங் அப்பா பார்னே (மகாராஷ்ட்ரா) ஆகியோரும் உள்ளனர். மூவரும் ஏற்கெனவே நாடாளுமன்றப் பணிப் பங்களிப்பைப் போற்றத்தக்க வகையில் வழங்கி கடந்த மக்களவையில் சன்சத் ரத்னா விருதுகள் பெற்று உயர்ந்தவர்கள் என்பது நினைவு கூறத்தக்கது.
சன்சத் மகா ரத்னா விருதுகள்
  1. பார்த்ருஹரி மஹ்தாப் (பி.ஜே.டி, கட்டாக், ஒடிசா)
  2. சுப்ரியா சூலே (என்.சி.பி, பாரமதி, மகாராஷ்டிரா)
  3. ஷ்ரீ ரங் அப்பா பார்னே (சிவசேனா, மாவல், மஹராஷ்டிரா)
  • ஆகிய மூவருக்கும் 16- வது மக்களவையில் தொடர்ச்சியான தரமான செயல்திறனுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுரை வழங்கப்படும் 'சன்சத் மகா ரத்னா' விருது வழங்கப்படுகிறது. .
நிலைக்குழு
  • வேளாண்மை துறை தொடர்பான நிலைக்குழுவுக்கு சன்சத் ரத்னா விருது 2020 வழங்கப்படுகிறது. இந்த நிலைக்குழு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையிலும் மற்றும் இந்த குழு நடத்திய அமர்வுகளின் அடிப்படையிலும் இந்த குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பி சி காடிகவுடர் (பாஜக, பாகல்கோட் கர்நாடகா) இந்த குழுவின் தலைவராக உள்ளார்.
மக்களவை
  • 17 ஆம் ஆண்டு மக்களவையின் முதல் ஆண்டின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு எட்டு மக்களவை உறுப்பினர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் சன்சத் ரத்னா விருதுகள் 2020 ஐப் பெறுவார்கள்.
  • சுப்ரியா சுலே (என்.சி.பி, பாரமதி, மகாராஷ்டிரா) 17 வது மக்களவையின் முதல் ஆண்டில் விவாதங்கள், கேள்விகள் மற்றும் தனியார் மசோதாக்களில் தனது ஒட்டுமொத்த செயல்திறனுக்காக சன்சத் ரத்னா 2020 விருதைப் பெறுகிறார்.
  • டாக்டர் ஹீனா கேவிட் (பி.ஜே.பி, நந்தூர்பார் , மகாராஷ்டிரா ) பெண் உறுப்பினர்களில் சிறந்த பணியாற்றியதற்கான சன்சத் ரத்னா விருதினை பெறுகிறார்.
  • டாக்டர் அமோல் ராம்சிங் கோலி (தேசியவாத காங்கிரஸ், ஷிர்பூர், மகாராஷ்டிரா) மற்றும் டாக்டர் சுபாஷ் ராமராவ் பாம்லே (பாஜக, தூலே,மகாராஷ்டிர ) ஆகியோர் முதல்முறை உறுப்பினர்கள் மற்றும் அதிக கேள்விகள் பிரிவில் சன்சத் ரத்னா விருதுகள் பெறுகிறார்கள்.
  • இவர்களை தவிர சசி தரூர் (காங்கிரஸ், திருவனந்தபுரம், கேரளா), நிஷிகாந்த் துபே (பாஜக, கோடா, ஜார்கண்ட்), அஜய் மிஸ்ரா (பாஜக, கேரி, உத்தரப்பிரதேசம்) மற்றும் ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம், ஸ்ரீகாகுளம், ஆந்திரா) ஆகியோர் ஒட்டுமொத்த தரமான செயல்திறன் மற்றும் தனிப்பட்ட முயற்சிகளுக்காக சன்சத் ரத்னா சிறப்பு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை
  • விஷம்பர் பிரசாத் நிஷாந்த் (உ.பி. சமாஜ்வாதி கட்சி), மற்றும் சாயா வர்மா (சத்தீஸ்கர், காங்கிரஸ்) ஆகியோர் மாநிலங்களவையில் கடந்த ஓராண்டில் ஆற்றிய பல்முனைத் திறன்களுகாக சன்சத் ரத்னா விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில் மருத்துவக் கல்லூரி
  • சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோட்டில் அமைக்கப்படும் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில், கட்டப்பட்டு வரும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டுமானப் பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். 
  • தலைவாசலில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 
  • கால்நடைப் பூங்கா அமைக்க, ஒட்டுமொத்தமாக ரூ.1,022 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பூங்காவுக்காக, தற்போது வரை 1,102 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடம் கட்டும் பணியில், நிர்வாக அலுவலகக் கட்டிடம், கல்வி சார் வளாகங்கள்-8, நூலகம், மாணவ, மாணவியர் விடுதி, இறைச்சி அறிவியல், பால் அறிவியல், கால்நடைப் பண்ணை வளாகம், முதல்வர் குடியிருப்பு என 20 வகையான கட்டிடங்கள் மொத்தம் 3,72,473 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டு வருகின்றன.
  • இப்பணிகள் வரும் ஆண்டு பிப்ரவரியில் முழுமையாக முடிக்கப்பட்டு. பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், கால்நடைப் பூங்காவுக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.270 கோடியில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்படும்.
தேசிய புள்ளியியல் தினம் / WORLD STATISTICS DAY 
  • தேசியப் புள்ளியியல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29 அன்று சமூகப் பொருளாதார திட்டமிடுதல் மற்றும் திட்டம் இயற்றுதலில் புள்ளியியலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 
  • 2018-ன் கருத்துரு - “பணித்துறையின் புள்ளியல் தரத்திற்கான உத்திரவாதம்“ (Quality Assurance in official Statistics). 
  • புள்ளியியல் துறை, புள்ளியியல் அமைப்பு மற்றும் பொருளாதாரத் திட்டமிடுதல் ஆகியத் துறைகளில் மறைந்த பேராசிரியர் பிரசாந்த சந்த்ரா மகல்நோபிஸ் அவர்களின் பங்களிப்பினை பறைசாற்றுவதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
  • 1933-ல் இவர் இந்தியாவின் முதல் புள்ளியியல் பத்திரிக்கையான சங்க்யாவைத் தொடங்கினார். அதுமட்டுமின்றி மகல்நோபிஸ் தொலைவு (Mahalnobis Distance) என்ற புள்ளியியல் அளவையினைக் கண்டறிந்ததற்காகவும் இவர் நினைவு கூறப்படுகிறார். 
  • இவர் இந்தியப் புள்ளியில் நிறுவனத்தைத் தொடங்கினார். பெரிய அளவிலான மாதிரி ஆய்வுகளை வடிவமைக்க இவர் பெரும் பங்காற்றினார். 
  • மத்திய அரசாங்கமானது புள்ளியியல் துறையில் முன்னாள் பேராசிரியர் PC மகலநோபிஸீ-ன் குறிப்பிடத்தக்க பங்குகளை நினைவுகூறும் பொருட்டு ஜூன் 29-ஆம் தேதியை தேசிய புள்ளியியல் தினமாக அனுசரிக்கிறது. 
  • இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் மகலநோபிஸின் கணித விளக்கங்களை நம்பியிருந்தது. 
  • இந்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமானது இந்தியாவில் கனரக தொழிற்சாலைகளை மேம்படுத்துவதை ஊக்குவித்தது. பின்னர் இது நேரு மகலநோபிஸ் மாதிரி அல்லது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைத் தொழிற்சாலை யுக்தி என்று அழைக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel