Type Here to Get Search Results !

30th APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய் புகழ்பெற்றது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் எண்ணெய் வித்துக்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. தரமான நிலக்கடலை, மண்டைவெல்லம் கிடைப்பதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் கோவில்பட்டி சிறப்பு பெற்று விளங்குகிறது.
  • கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு பெற 2014-இல் அப்போது சாா் ஆட்சியராக இருந்த விஜயகாா்த்திகேயன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. 
  • பின்னா், புவிசாா் குறியீட்டு அலுவலகத்தின் அறிவுறுத்தலின்பேரில், கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளா் மற்றும் விற்பனையாளா் நலச் சங்கம் என்ற பெயரில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விண்ணப்பம் 2019-இல் சமா்ப்பிக்கப்பட்டது. இதையேற்று கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, விருப்பாச்சி வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், பழனி பஞ்சாமிா்தம் என 33 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 34-ஆவது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது.
முக்கிய 8 துறைகள் வளர்ச்சி மார்ச்சில் 6.5 சதவீதம் சரிவு
  • நாடு முடக்கப்பட்ட நிலையில், அதன் காரண மாக, கச்சா எண்ணெய், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளில், உற்பத்தி கடுமையாக சரிந்ததை அடுத்து, நாட்டின் முக்கிய, 8 துறைகளின் வளர்ச்சி, 6.5 சதவீதம் குறைந்துள்ளது. 
  • கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை, முக்கிய எட்டு துறைகளாக குறிப்பிடப்படுகின்றன.
  • கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இந்த முக்கிய எட்டு துறைகளும், 5.8 சதவீதம் வளர்ச்சியை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி முறையே, 5.5 சதவீதம், 15.2 சதவீதம், 0.5 சதவீதம் என, சரிவை கண்டுள்ளன.
  • மேலும் உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி வளர்ச்சி, முறையே, 11.9 சதவீதம், 13 சதவீதம், 24.7 சதவீதம், 7.2 சதவீதம் என, சரிவைக் கண்டுள்ளன. நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆண்டு மார்ச்சில், 9.1 சதவீதமாக இருந்தது.
  • இந்த ஆண்டு மார்ச்சில், 4.1 சதவீதமாக குறைந்துவிட்டது.ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டில், முக்கிய துறைகளின் வளர்ச்சி, 0.6 சதவீதமாக குறைந்துவிட்டது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், 4.4 சதவீதமாக வளர்ச்சியை கண்டிருந்தது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுவாழ் தமிழா்கள் தாயகம் திரும்ப தனி இணையதளம்
  • கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சோந்த பல மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் நமது நாட்டுக்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • வெளிநாடுகளில் இருக்கும் தமிழா்களில், உடனடியாக தமிழகத்துக்குத் திரும்ப விரும்புகிறவா்களின் நலனுக்காகவும், அவா்களின் குடும்பத்தினரின் நலனைக் காத்திடும் நோக்கிலும் யாா் யாரெல்லாம் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் விருப்பத்தில் இருக்கிறாா்கள் என்பதை அறியவும் இணையதள பதிவு வசதி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்குத் திரும்ப விரும்பும் தமிழா்கள் இணையதளத்தில் பதிவுகள் செய்யலாம்.
இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.21 கோடி நிதியுதவி
  • கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்காக இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.21 கோடி கூடுதல் நிதியுதவி வழங்கியுள்ளது.
  • இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கவும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் சா்வதேச மேம்பாட்டு முகமை சாா்பில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்காக அமெரிக்கா ஏற்கெனவே ரூ.20.3 கோடி நிதியை இந்தியாவுக்கு வழங்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.



அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கு தலைமை செயலாளர் தலைமையில் குழு: முதல்வர் எடப்பாடி உத்தரவு
  • கொரோனா நோய் தாக்கத்திற்கு பின் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். 
  • இக்குழு இடம்பெயர வாய்ப்புள்ள நிறுவனங்களை கண்டறிதல், அவர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு வழங்க வேண்டிய விரைவான ஒற்றைச்சாளர அனுமதிக்கான வழிமுறைகள், சிறப்பு சலுகைகள் மற்றும் அவர்களை ஈர்க்க வாய்ப்புள்ள தொழிற்பூங்காக்கள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை கண்டறிந்து விரைந்து செயல்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பணிகளை இந்த சிறப்புக்குழு மேற்கொள்ளும். இந்த சிறப்புக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை ஒரு மாதத்திற்குள் முதல்வரிடம் வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  • கொரோனா நோய் தாக்கத்திற்கு பின் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவில் தலைமை செயலாளர் சண்முகம் தலைவராக செயல்படுகிறார். 
  • நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், தொழில்துறை முதன்மை செயலாளர், தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு குழும செயல் இயக்குனர், வணிகவரித்துறை ஆணையர், ஜப்பான் வெளிவர்த்தக அமைப்பு, கொரியாக வர்த்தக முதலீடு மேம்பாட்டு விளம்பர நிறுவனம், ெகாரியன் தொழில் வர்த்தக மையம் மற்றும் தைவான் வெளிவர்த்தக மேம்பாட்டு கவுன்சில் உள்ளவர்களில் தலா 2 பேரும், இந்தோ அமெரிக்கன் வர்த்தக மையம், அமெரிக்கா-இந்தியா பங்களிப்பு சம்மேளனம், அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் உள்ளவர்களில் தலா 2 பேரும், சிங்கப்பூர் தொழில் முனைவோர் குழுக்களில் தலா ஒருவரும், ஜப்பான் தொழில் பூங்கா, தமிழ்நாட்டின் ஜப்பானிய நிறுவனம், கொரிய நிறுவனம், அமெரிக்கா, தைவான் நிறுவனங்களில் தலா ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்படுகின்றனர்.
தடை காலத்தில் உள்ள மீனவர்களுக்கு தலா 5,000 ரூபாய்-தமிழக அரசு அறிவிப்பு
  • கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
  • இதனால் மீன்பிடி தடை காலத்தில் உள்ள மீனவர்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
சிறுபான்மையினர் கல்லூரிக்கும் நீட் தேர்வு கட்டாயம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
  • 'எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலை படிப்பு முடித்தவர்கள், நீட் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்' என, மத்திய அரசு, 2010ல் அரசாணை வெளியிட்டது. 
  • 2013ல், இந்த தேர்வு கட்டாய மாக்கப்பட்டது.அந்த அரசாணையை எதிர்த்து, வேலுார் கிறிஸ்துவ மருத்துவ கல்லுாரி மற்றும் சில சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்தன. 
  • இதனையடுத்து மத்திய அரசு தரப்பிலும், இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பிலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும், ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
  • இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதையடுத்து, கடந்த, 2012ல், அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டு வந்தது. 
  • விசாரணையின போது, நீட் தேர்வு கட்டாயம் என்பதற்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில், 'நீட் தேர்வு, எங்களுடைய உரிமைகளை பறிக்கிறது.நிர்வாக ரீதியிலான சிக்கல்களும், ஏற்படுகின்றன. அதனால், நீட் தேர்வை, சிறுபான்மை நிறுவனங்களுக்கு கட்டாயமாக்க கூடாது' என, வாதிடப்பட்டன.
  • இருதரப்பு விசாரணைக்கு பின், இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், எம்.ஆர்.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
  • நீட் தேர்வு முறை, சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இல்லை. அதனால், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு, நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது. 
  • மேலும், நாட்டு நலனை மேம்படுத்த, மருத்துவ கல்வி, தரமாக இருக்க வேண்டும். தரமான கல்வியில், எவ்வித சமரசத்துக்கும் இடம் இல்லை. மருத்துவ படிப்புகள் வியாபாரம் ஆக்கப்படுவதை தடுக்க, நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel