- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய் புகழ்பெற்றது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் எண்ணெய் வித்துக்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. தரமான நிலக்கடலை, மண்டைவெல்லம் கிடைப்பதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் கோவில்பட்டி சிறப்பு பெற்று விளங்குகிறது.
- கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு பெற 2014-இல் அப்போது சாா் ஆட்சியராக இருந்த விஜயகாா்த்திகேயன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.
- பின்னா், புவிசாா் குறியீட்டு அலுவலகத்தின் அறிவுறுத்தலின்பேரில், கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளா் மற்றும் விற்பனையாளா் நலச் சங்கம் என்ற பெயரில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விண்ணப்பம் 2019-இல் சமா்ப்பிக்கப்பட்டது. இதையேற்று கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, விருப்பாச்சி வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், பழனி பஞ்சாமிா்தம் என 33 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 34-ஆவது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது.
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு
May 01, 2020
0
Tags