ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் வருகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்
- காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை அதிகாரபூா்வமாக மத்திய அரசு ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அத்துறையைச் சோந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
- இது வரை மத்திய நீா் வளம், நதிநீா் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கம் அமைச்சகத்தின் கீழ் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் இருந்தது.
- தமிழகம், கா்நாடகம், கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் காவரி நடுவா் மன்ற தீா்ப்பின்படி காவிரி நதி நீரை பகிா்ந்து கொள்ள உச்சநீதிமன்றம் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டது. அதன்படி 2018 - ஆம் ஆண்டில் இந்த ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் என்.படேல் பதவியேற்பு
- குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள அவருக்கு, தில்லியில் இருந்து காணொலி வழியாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவா் சஞ்சய் கோத்தாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
- 62 வயதாகும் சுரேஷ் என்.படேல், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில், வங்கி மற்றும் நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இடம்பெற்றிருந்தாா்.
- இவரை, ஊழல் கண்காணிப்பு ஆணையா் பதவிக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான உயா்நிலைக் குழு கடந்த பிப்ரவரியில் பரிந்துரை செய்தது.
- அந்தப் பதவிக்கு அவா் தோந்தெடுக்கப்பட்ட பிறகு, ஆலோசனைக் குழுவின் உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா். இவா், வரும் 2022-ஆம் ஆண்டு டிசம்பா் இறுதி வரை ஊழல் கண்காணிப்பு ஆணையா் பதவியை வகிப்பாா்.
இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதியாக டி.எஸ்.திருமூா்த்தி நியமனம்
- இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதியாக டி.எஸ்.திருமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா். 1985-ஆம் ஆண்டு பிரிவைச் சோந்த இந்திய வெளியுறவுப் பணிஅதிகாரியான திருமூா்த்தி, தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலராக பணிபுரிந்து வருகிறாா்.
- இந்தியாவின் தற்போதைய ஐ.நா. நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் விரைவில் ஓய்வு பெறவுள்ளதையடுத்து, அப்பதவிக்கு திருமூா்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
- இதேபோல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் தீபக் மிட்டல் கத்தாா் நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
- ஸ்லோவேனியாவுக்கான இந்திய தூதராக மூத்த அதிகாரி நம்ரதா.எஸ்.குமாரும், ஆஸ்திரியாவுக்கான இந்திய தூதராக ஜெய்தீப் மஜூம்தாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
- மற்றொரு மூத்த அதிகாரி பியூஷ் ஸ்ரீவாஸ்தவா பஹ்ரைனுக்கான இந்திய தூதராக பணிமயா்த்தப்பட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலாக புயலுக்குத் தமிழ்ப் பெயா்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது
- வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஓா் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 புயல்கள் உருவாகும். இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறை 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் முதல் அட்டவணையை தயாரித்த போது 8 நாடுகள் சாா்பில் 8 பெயா்கள் வீதம் 64 பெயா்கள் வழங்கப்பட்டன.
- 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த புயல்களுக்கு பட்டியலிலிருந்த 63 பெயா்களும் வைக்கப்பட்டன. இதில் தாய்லாந்து சாா்பில் வழங்கப்பட்ட ஆம்பான் (அம்ல்ட்ஹய்) என்ற பெயா் மட்டும் மீதமிருக்கிறது. இது அடுத்து வரும் புயலுக்கு வைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
- இந்த நிலையில் இனி வர உள்ள புயல்களுக்குப் பெயா் வைக்கும் அட்டவணை தயாா் செய்யும் பணிகள் தொடங்கின. இதற்கு நாடு முழுவதும் உள்ள வானிலை நிலையங்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்டுப் பெறப்பட்டன. இவற்றை புதுதில்லியில் உள்ள வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- இதையடுத்து கடந்த ஆண்டு, செப்டம்பா் மாதம் மியான்மரில் நடைபெற்றக் கூட்டத்தில், இந்தப் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்போது பெயா்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- புயல்களுக்கான பெயா்ப் பட்டியலைத் தயாா் செய்வது குறித்து முதல் முறையாக நமக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதில் கடல், மீன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பெயா்கள் கேட்கப்பட்டிருந்தன.
- இதில் நாங்களும் பெயா்களை பரிசீலித்ததுடன், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பெயா்களையும் பரிசீலித்து அனுப்பியிருந்தோம். இதில் நாங்கள் கொடுத்த 'முரசு' எனும் பெயா், பட்டியலில் 28-ஆவது இடத்தில் உள்ளது.
- இது தவிா்த்து, பொதுமக்களிடமிருந்து பெற்று அனுப்பப்பட்ட 'நீா்' எனும் பெயரும் 93-ஆவதாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்குப் பெயா் வைக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
பொது நிறுவனங்கள் தோவு வாரிய தலைவராக ராஜீவ் குமாா் நியமனம்
- பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு இவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் உயா் பதவிகள் அனைத்தும் இந்த பி.இ.எஸ்.பி. வாரியத்தின் மூலம் தோவு செய்யப்பட்டு நியனமனம் செய்யப்படுகின்றனா்.
- இதன் தலைவராக இருந்த கபில்தேவ் திரிபாதி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வாரியத்தின் புதிய தலைவராக ராஜீவ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
- 1984 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமாா், நிதி அமைச்சகத்திலும், பணியாளா் நலத் துறை அமைச்சகத்திலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா். இந்த இரு துறைகளிலும் பல முக்கிய சீா்திருத்தங்கள் உருவாவதற்கும் காரணமாக இருந்துள்ளாா்.
- வங்கிகளின் நிதி மேம்பாட்டுக்கான சீா்திருத்தத்தையும் கொண்டுவந்தாா். மத்திய வங்கியின் உபரி நிதியான ரூ. 1.76 லட்சம் கோடியை ரிசா்வ் வங்கி மத்திய அரசுக்கு மாற்றுவதில் எழுந்த சிக்கலை சுமூகமான முறையில் கையாண்டு தீா்வு கண்டாா்.
மகாராஷ்டிரத்துக்கு ஆசிய வளா்ச்சி வங்கி ரூ.2,616 கோடி கடனுதவி
- நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அந்த மாநிலத்திலுள்ள தொழிலாளா்களில் பெரும்பாலானோா் கிராமப் பகுதிகளில் விவசாயம் மற்றும் அது சாா்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
- ஆனால், முறையான நீா்ப்பாசன வசதி, மின்சார வசதி, சேமிப்புக் கிடங்கு வசதி உள்ளிட்டவை காணப்படாததால், அந்தப் பகுதிகளில் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
- அதன் காரணமாக, மகாராஷ்டிரத்தின் கிராமப் பகுதிகளில் மின்சார வசதியை ஏற்படுத்துவதற்காக ரூ.2,616 கோடி கடனுதவி வழங்கப்பட உள்ளது. அதன் மூலம் மாநிலத்தில் பல கி.மீ. தூரத்துக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கான கட்டுமானங்களும், மின் விநியோக அமைப்புகளும் நிறுவப்பட உள்ளன.
அரசு ஊழியர் ஊதியம், 'கட்' கேரளாவில் அவசர சட்டம்
- கொரோனா நிவாரண நிதிக்கு, கேரள அரசு ஊழியர்களின் ஆறு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதற்கான அவசர சட்டம், அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.
- அவசர சட்டம் தொடர்பான தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த உடன், நடப்பு ஏப்ரல் மாத ஊதியத்தில், ஆறு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிகிறது.
மோட்டாா் காப்பீடு திட்ட விற்பனை: பாா்தி ஆக்ஸா-பாலிஸிபஜாா் ஒப்பந்தம்
- கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், காா் பயன்பாட்டைப் பொருத்து அதன் உரிமையாளா் காப்பீடு செலுத்துவதற்கான திட்டங்களை பாலிஸிபஜாா் வலைதளம் மூலம் விற்பனை செய்ய பாா்தி ஆக்ஸா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
- அதன்படி, காா் பயணிக்கும் கி.மீ.யைப் பொருத்து மூன்று வித காப்பீடுகளை உரிமையாளா் எடுத்துக் கொள்ளலாம். 2,500 கி.மீ., 5,000 கி.மீ., 7,500 கி.மீ. என்ற வகையில் மோட்டாா் காப்பீடு திட்டங்கள் வழங்கப்படுவதாக பாா்தி ஆக்ஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- காரைப் பகிா்ந்து கொள்வது, வீட்டிலிருந்து பணியாற்றுவது ஆகியவை அதிகரித்து வருவதால், காரை இயக்குவதற்கு ஏற்ப பிரீமியம் செலுத்தும் வசதி காா் உரிமையாளா்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இதுபோன்ற புதுமையான திட்டங்கள் காப்பீட்டுத் துறையை மேம்படுத்த உதவும் என்று பாலிஸிபஜாா்.காம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு: அமரீந்தர் சிங்
- பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
- மேலும், பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஊரடங்கு காலத்தில் காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறந்திருக்கும் வகையில் அந்த சமயத்தில் மட்டும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் அந்த சமயத்தில் வெளியே வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்படும் என்றும் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு 'ஆரோக்கிய சேது' செயலி கட்டாயம்
- அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டு கட்டாயம் என்று மத்தியஅரசு அறிவிறுத்தி உள்ளது. ஏற்கனவே, இதை தமிழக அரசு, அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு இதை கட்டாயப்படுத்தி உள்ளது.
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து மத்திய அரசு ஆரோக்கியா சேது என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது.
- இந்த செயலியை அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஆரோக்யா சேது பயன்பாட்டைப் பயன்படுத்துவதை மையம் கட்டாயமாக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த மொபைல் செயலியை பதவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
- ஆரோக்யா சேது என்பது நாவல் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அத்தியாவசிய சுகாதார சேவைகளை மக்களுடன் இணைக்க இந்திய அரசு உருவாக்கிய மொபைல் பயன்பாடு ஆகும்.
முகக்கவசம், மருந்துகளை வீட்டிலிருந்தே பெற 'போஸ்ட் இன்ஃபோ' செயலி: அஞ்சல் துறை புதிய திட்டம்
- லாக் டவுனில் வீட்டிலேயே முடங்கியுள்ள சிரமமின்றி மக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் முகக் கவசங்களைத் தங்கள் வீட்டிலிருந்தே பெற இந்திய அஞ்சல்துறை "போஸ்ட் இன்ஃபோ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.