Monday, 30 September 2019

29th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
விக்ரமாதித்யா போர்க்கப்பலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் பயணம்
 • பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலில் மேற்கு கடற்படைப் பிரிவு வீரர்களுடன் பயணித்து வருகிறார். நேற்றிரவு முழுவதும் அந்தக் கப்பலில் தங்கி இருந்த ராஜ்நாத் சிங், வீரர்களின் பயிற்சியை பார்வையிட்டார். 
பெண் குழந்தைகளை பெருமைப்படுத்துங்கள் 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி வேண்டுகோள்
 • பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்று கிழமையில், 'மன் கி பாத்' எனப்படும், மனதோடு பேசுகிறேன் என்ற நிகழ்ச்சி மூலமாக, ரேடியோவில், நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார். 
 • தீபாவளி பண்டிகை கொண்டாடப் படவுள்ளது. இந்த பண்டிகை, நம் வீட்டுக்கு, கடவுள் லட்சுமி தேவியை வரவழைப்பதை குறிக்கிறது. நம் நாட்டு கலசாரத்தில், பெண் குழந்தைகள், லட்சுமி தேவியாக போற்றப்படுகின்றனர். 
 • நம் நாட்டின் பெண் குழந்தைகள், பல்வேறு துறைகளில் பொது நலன் சார்ந்து, பல சாதனைகளை படைத்து உள்ளனர். இந்த திறமைவாய்ந்த பெண் குழந்தைகளை பெருமைப் படுத்தும் வகையில், ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும், பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நம் மகள்கள், மருமகள்கள், இந்த சமூகத்துக்காக பல பணிகளை செய்து வருகின்றனர். சிலர், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருகின்றனர்.
 • இன்னும் சிலர், சுகாதாரம், ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். டாக்டராக, இன்ஜியராக, வழக்கறிஞராக, நாட்டுக்கு சேவை செய்து வருகின்றனர். இந்த சமூகம், அவர்களை அடையாளம் பார்த்து, பெருமைப்படுத்த வேண்டும். அதற்காக பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 • இப்படிப்பட்ட பெண்களை கவுரவிக்கும் வகையில், 'பாரத் கி லட்சுமி' என்ற பெயரில், சமூக வலைதளங்களில், 'ஹேஷ்டக்' உருவாக்கி, அவர்களது சாதனைகளை பதிவிடலாம். இதனால், அவர்களது சாதனை, மற்றவர்களுக்கு தெரிய வரும். 
கோளுக்கு ஹிந்துஸ்தானி பாடகர் பெயர்
 • செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையே வலம் வரும் சிறிய கோள் ஒன்றுக்கு, பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் பெயரை சூட்டி, சர்வதேச வானியல் யூனியன் கவுரவித்தது.
 • கடந்த 2006 நவ.,11ல் கண்டுபிடிக்கப்பட்ட இக்கோளுக்கு, 'பண்டிட் ஜஸ்ராஜ்' என கடந்த 23ம் தேதி பெயர் சூட்டப்பட்டது. கோளுக்கு இந்திய இசைக்கலைஞரின் பெயர் சூட்டப்படுவது இதுவே முதன்முறை.விமானப்படையில் இணைகிறது அதி நவீன ஏவுகணை அஸ்த்ரா
 • டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, 15 ஆண்டுகள் போராடி உருவாக்கியுள்ள, 'அஸ்த்ரா' என பெயரிடப்பட்டுள்ள, விண்ணில் இருந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய ஏவுகணை, விமானப் படையில், விரைவில் இணைக்கப்பட உள்ளது. 
 • கடந்த, 2004ல், 955 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் துவங்கப்பட்டது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இதை வடிவமைத்துள்ளது. 
 • ரஷ்ய தயாரிப்பான, 'சுகோக்' ரக போர் விமானங்களில் பயன்படுத்தக் கூடிய இந்த ஏவுகணையை, டி.ஆர்.டி.ஓ., ஐந்து முறை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.அதையடுத்து, விமானப் படையில் இந்த ஏவுகணை, விரைவில் இணைய உள்ளது.
இந்தியாவில் ரூ.7 லட்சம் கோடி முதலீடு: சவுதி முடிவு
 • பெட்ரோ கெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு மற்றும் நிலக்கரித்துறை உள்ளிட்டவைகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7.லட்சம் கோடி) முதலீடு செய்ய சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
 • இந்தியாவில் முதலீடு என்பது அரம்கோவின் சர்வதேச திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் அடிப்படையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், மேற்கு கடற்கரை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டதும், ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒத்துழைப்பும், இரு தரப்பு உறவில் மிகப்பெரிய மைல் கல். 
 • இந்தியா மற்றும் சவுதி இடையிலான வணிகத்தை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றுவது என்பதும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் 'விஷன் 2030' கொள்கையில் இடம்பெற்றுள்ளது.
 • இந்திய எரிசக்தி தேவையில் சவுதி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 17 சதவீதத்தையும், 32 சதவீத இயற்கை எரிவாயு தேவையையும் சவுதிதான் பூர்த்தி செய்கிறது.
ஊழல் வழக்கில் தண்டனை: சிக்கிம் முதல்வர் தமாங் தகுதி நீக்க காலத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக குறைத்தது
 • லோக்சபா தேர்தலுடன் சிக்கிம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா அமோக வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் பிரேம்சிங் தமாங் மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.
 • ஆனால் ஊழல் வழக்கு ஒன்றில் 2016-ம் ஆண்டு தமாங்குக்கு கீழ்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததால் அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. ஊழல் வழக்கில் சிறை தண்டனனை அனுபவித்த ஒருவர் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் தமாங் பதவியேற்கும், போதே சர்ச்சை வெடித்தது.
 • இந்நிலையில் சிக்கிமில் சட்டசபை இடைத்தேர்தலில் தமாங் போட்டியிடுகிறார். பாஜக ஆதரவுடன் தமாங் சிக்கிமில் ஆட்சி நடத்தி வருகிறார். இதனிடையே பல்வேறு சட்டப் பிரிவுகளை சுட்டிக்காட்டி தமக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 6 ஆண்டுகால தடையை நீக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை தமாங் அனுப்பியிருந்தார்.
 • இக்கடிதத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம் தமாங்குக்கான தடை காலத்தை ஓராண்டு ஒரு மாதம் என குறைப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் சட்டசபை இடைத்தேர்தலில் தமாங் போட்டியிட தடை இல்லை.உள்நாட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு: மறு உத்தரவு வரும் வரை ஏற்றுமதிக்கு தடை விதிப்பு
 • வெங்காயம் விலை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
 • நாட்டின் மொத்த வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் கிழக்கு மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆகியவைதான் மிக முக்கிய பங்காற்றுகின்றன. 
 • இந்த பகுதிகளில் பலத்த மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் மட்டுமே மார்க்கெட்களுக்கு சப்ளை ஆகிறது.
 • இந்நிலையில் உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இரஷ்யாவின் ரோபோ-நாட்ஸ்
 • ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் அடுத்த வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் அதன், மனிதனை போன்ற ஆண்ட்ராய்டின் வியத்தகு காணொளியை வெளியிட்டுள்ளது.
 • இறுதிக்கட்ட சோதனை ஒத்திகை ஆராய்ச்சியில் உள்ள "பெடோர்" என பெயரிடப்பட்டுள்ள இந்த மனித உருவிலான(anthropomorphous) இயந்திரம் கஜகஸ்தானில் உள்ள பய்கோனூர் காஸ்மோட்ரோம்-ல் பேட்டரி அழுத்த பரிசோதனையை எதிர்கொண்டுவருகிறது.
 • புடினின் ரோபோ-நாட் என செல்லமாக அழைக்கப்படும் இந்த இயந்திரம், இலக்குகளை நிர்ணயிப்பது, ஸ்டீயரிங் போன்ற குறிப்பிட்ட புள்ளிகளை மதிப்பிடுவது போன்றவற்றை சுற்றுப்பாதையில் இருக்கும்போது செய்யவுள்ளது.
 • 6-அடி உயரமும், கூடுதல் உபகரணங்களைப் பொறுத்து 233 பவுண்டுகளுக்கும் குறைவில்லா எடையையும் கொண்டிருக்கும் இந்த பெடோர், 44 பவுண்டுகள் வரையிலான பொருட்களை தூக்க முடியும்.

Sunday, 29 September 2019

22th September 2019 AYAKUDI CO OPERATIVE EXAM NOTES IN TAMIL PDF

TNPSCSHOUTERS
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என படிப்போருக்கு உதவியாக TNPSC SHOUTERS இணையதளத்தில் வினா விடை பகுதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்
வாழ்த்துகள்Important Cooperative Operating History 22-09-2019

கூட்டுறவு இயக்க வரலாறு
 • 1844- ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ராக்டேல் என்னும் ஊரில் 28 கம்பளி நெசவாளர்கள் ஒன்று சேர்ந்து தொடங்கிய நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையே உலகிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட முறையான கூட்டுறவு சங்கமாகும்.
 • இந்தியாவிலேயே முதன்முதலாக திருவள்ளூர் மாவட்டம் திரூர் என்ற கிராமத்தில் 22.08.1904 அன்று விவசாயிகளுக்கு என்று முதல் கூட்டுறவு கடன் சங்கத்தை சர்.டி. இராஜகோபாலாச்சாரியார் தோற்றுவித்தார்.
 • அவர் சென்னை மாகாணத்தின் முதல் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டார்.
 • இச்சங்கத்திற்கு திவான் பகதூர் திரு. எம். ஆதிநாராயணன் அய்யா அவர்கள் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 09.04.1904 அன்று பண்டகசாலைகளுக்கு முன்னோடியாக திருவல்லிக்கேணி நகரக்கூட்டுறவுச் சங்கம் (டி.யூ.சி.எஸ்) செயல்படத் தொடங்கியது. பின்னர் 20.09.1905 அன்று பதிவு செய்யப்பட்டது. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் 1925-இல் இப்பண்டகசாலைக்கு வருகை தந்துள்ளார்.
 • டி.யூ.சி.எஸ் முதல் சுயசேவைப் பிரிவு அங்காடியை காமதேனு என்ற பெயரில் சென்னையில் 1966-ல் தொடங்கியது.
 • 08.10.1904-ல் காஞ்சிபுரத்தில் முதல் நகரக்கூட்டுறவு வங்கி (பெரிய காஞ்சிபுரம் நகரக் கூட்டுறவு வங்கி) தொடங்கப்பட்டது.
 • 19.10.1905-ல் முதல் நிதியுதவி வங்கி (சென்னை மத்திய நகர வங்கி) அமைக்கப்பட்டது. தற்போது, இது தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி என அழைக்கப்படுகிறது.
 • இந்தியாவிலேயே கூட்டுறவாளர்களின் முதல் கூட்டுறவு மாநாடு 10.03.1909 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் நடைபெற்றது.
 • 1913-ல் முதல் மத்திய கூட்டுறவு வங்கி (மதுரை – இராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி) தொடங்கப்பட்டது.
 • 1919-ல் சென்னை கூட்டுறவு அச்சகம் என்ற பெயரில் முதல் கூட்டுறவு அச்சகம் தொடங்கப்பட்டது.
 • தமிழ்நாட்டில் முதல் கூட்டுறவு பயிற்சி சாலையாக தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு பயிற்சி சாலை 07.05.1927 அன்று பதிவு செய்யப்பட்டது.
 • 1927-ல் சென்னை அயனாவரத்தில் முதல் கூட்டுறவு பால் வழங்கும் கழகம் அமைக்கப்பட்டது.
 • சென்னையில் 28.12.1971 அன்று முதன் முதலாகத் “தமிழ்நாடு விவசாயிகள் கூட்டுறவு காகித ஆலை அமைக்கப்பட்டது.
 • 02.08.1971 அன்று செங்கற்பட்டு மாவட்டத்தில் முதல் மாவட்டக் கூட்டுறவு யூனியன் ஆரம்பிக்கப்பட்டது.
 • தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் 01.02.1959 அன்று அமைக்கப்பட்டு 20.02.1959 அன்று முதல் செயல்படத் தொடங்கியது.
 • முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1960-ல் ஆரம்பிக்கப்பட்டது.
 • 1941 முதல் கைத்தறி நெவாளர் கூட்டுறவு சங்கம் சென்டெக்ஸ் 14.04.1941 அன்று ஈரோட்டில் ஆரம்பிக்கப்பட்டது.
 • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் 04.01.1914 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
 • இதன் முதல் தலைவராக திவான் பகதூர் திரு. எம்.ஆதிநாராயண அய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1904 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூட்டுறவு இயக்கம் நூறாண்டுகளைக் கடந்து 108ஆம் ஆண்டில் தொடர்ந்து நவீன வசதிகளுடன் முன்னேற்றப் பாதையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
 • அனைத்து தரப்பு மக்களும் கூட்டுறவின் மூலம் பயனடைந்து வருகிறார்கள்.

22nd September 2019 AYAKUDI SCIENCE QUESTION PAPER TAMIL PDF

TNPSCSHOUTERS

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என படிப்போருக்கு உதவியாக TNPSC SHOUTERS இணையதளத்தில் வினா விடை பகுதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்
வாழ்த்துகள்


TNPSC Science Important Model Question 22-09-2019

அறிவியல்
 1. லென்சு சமன்பாடு
  a) 1/v+1lu = 1/f
  b) 1/v-1/u = 1/f
  c) m=v/u
  d) p = 1/f
சரியான கூற்று எது?
1. லென்சின் திறனின் SI அலகு டையாப்டர். இது D என்ற எழுத்தால் குறிக்கப்படும்.
2. குவியத்தொலைவு மீட்டரில் குறிக்கப்படும்.
3. ஒரு மீட்டர் குவியத்தொலைவு உடைய லென்சின் திறன் 1 டையாப்டர்.
4. குவிலென்சின் திறன் நேர்க்குறி உடையது, குழிலென்சின் திறன் எதிர்க்குறி உடையது.
a) 1, 2
b) 1, 2, 3
c) 2, 4
d) அனைத்தும்
 1. 15 செ.மீ. குவியத்தூரம் உள்ள குழிலென்சிலிருந்து 30 செ.மீ. தொலைவில் பொருளை வைக்கும் போது, லென்சிலிருந்து 10 செ.மீ. தொலைவில் நேரான மாயபிம்பம் கிடைக்கிறது. எனில் உருப்பெருக்கத்திறன் என்ன?
  a) +0.33
  b) -0.33
  c) -10
  d) -30
 2. ஒரு குழிலென்சின் குவியதூரம் 2 மீ எனில் லென்சின் திறன் என்ன?
  a) -1/2
  b) 1/2
  c) 2
  d) -2
தவறான இணை எது?
a. கிட்டப்பார்வை – மையோபியா
b. தூரப்பார்வை – ஹைப்பர்மெட்ரோபியா
C. விழிக்கோளம் ஏறத்தாழ 2.3 செ.மீ விட்டம் உடையது.
d. கண்பார்வையை கட்டுப்படுத்த இருந்த தசைப்படலம் கார்னியா.
 1. சரியான கூற்று எது?
  1) உடல் பருமக்குறியீடு (BMI) = எடை கி.கி/உயரம் மீ?
  2) BMI 19 – 25 சாதாரண பரும் அளவு
  3) BMI 26-க்கு மேல் உடல்பருமன்
  4) BMI 19 – க்கு கீழ் உடல் மெலிதானது
  a) 1, 2
  b) 1, 2, 3
  c) 1,4
  d) அனைத்தும்
 2. மின்காந்தத்தூண்டல் ஆய்வு
  a) ஓம்
  b) ஃப்ளம்மிங்
  c) ஃபாரடே
  d) ஒயர்ஸ்டெட்
 3. அணுக்கருப்பிளவுடன் தொடர்புடைய ஒரு விஞ்ஞானி ஆட்டோஹான் மற்றொருவர்
  a) டால்டன்
  b) ஸ்ட்ராஸ்மேன்
  C) ஃபாரடே கால்
  d) மேடம் கியூரி
 4. ஒளியின் திசைவேகம்
  a) 9×1016 ஜூல்
  b) 3×108 ஜூல் Ti
  c) 9×1020 ஜூல்
  d) எதுவுமில்லை
 5. ஐன்ஸ்டீ ன் நிறை ஆற்றல் தொடர்பு
  a) E=mc2
  b) E=m?
  c) E=c்
  d) E=mc
 6. முதல் மின்கலத்தை உருவாக்கியவர்
  a) டால்டன்
  b) வோல்டா
  c) ஃபாரடே
  d) மேடம் கியூரி
 7. மின்உருகி (fuse) இதில் உள்ள உலோகக் கலவைகள்
  a) 37 % காரியம் 63 % ஈயம்
  b) 73% காரியம் 36 % ஈயம்
  c) 100% காரியம் 100% ஈயம்
  d) 50% காரியம் 50 % ஈயம்
 8. மின்திறனின் மிகச்சிறிய SI அலகு
  a) கிலோ வாட்
  b) வாட்
  c) வோல்ட்
  d) ஆம்பியர்

 1. 5 ஓம், 10 ஓம், 30 ஓம் மின்தடைகள் ஒரு சுற்றில் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. சுற்றின் தொகுபயன் மின்தடை யாது?
  a) 5 ஓம்
  b) 10 ஓம்
  C) 15 ஓம்
  d) 3 ஓம்
 2. சந்திராயன் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்
  a) திருப்பூர்
  b) நெல்லை
  C) தூத்துக்குடி
  d) கோவை
 3. சந்திராயன் – 1 விண்ணில் செயல்பட்ட நாட்களின் எண்ணிக்கை?
  a) 312 நாட்கள்
  b) 14 நாட்கள்
  c) 75 நாட்கள்
  d) 365 நாட்கள்
 4. பெருமளவில் ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது?
  a) திரவ ஹைட்ரஜன்
  b) திரவ நைட்ரஜன்
  c) திரவ ஆக்ஸிஜன்
  d) திரவ பெட்ரோலியம்
 5. கடல்மட்டத்தில் 45 அட்சத்தில் உள்ள g-யின் மதிப்பு
  a) 49 N –
  b) 9.8 ms2
  c) 5.38x1034kg
  d) 5mg
 6. ஒரு பொருளின் 5 கி.கி. எனில் புவியின் அதன் எடை என்ன?
  a) 49 N
  b) 5 N E
  C) 50 N –
  d) 300 N
 7. உயிரி தொழில்நுட்ப ஊசி மருந்துகளை குளிரச்செய்யும் குளிரி தொழில்நுட்ப அமைப்புகள்?
  a) ஹீலியம்
  b) நைட்ரஜன்
  c) அம்மோனியா –
  d) குளோரின்
 8. வணிக முறையில் செயல்படும் குளிரி தொழிற்சாலைகளை 1966-ஆம் ஆண்டு உருவாக்கியவர்?
  a) எட்வின்
  b) எட்புஸ்
  c) ஐசக் நியூட்டன்
  d) கலிலியோ
 9. விசையின் அலகு
  a) kg m s2
  b) kg m
  c) mg k-2
  d) kg m s
 10. ஒரு பொருளின் நிறை மற்றும் அதன் திசைவேகம் ஆகியவற்றின் பெருக்கற்பலன்
  a) உந்தம்
  b) முடுக்கம்
  c) நிலைமம்
  d) நியூட்டன்
 11. ஓர் ஒளி ஆண்டு என்பது …….
  a) 365.25 x 24 x 60 x 60 x 3 x 108 m
  b) 1 x 24 x 60 x 60 x3 x 108 m
  c) 360 x 24 x 60 x 60 x 3 x 108 m
  d) 1 x 24 x 60 x3 x 108 m
 12. ஒரு வானியல் அலகு (AU) என்பது
  a) 1.496×10″m –
  b) 9.467×10 m
  c) 3×10″m
  d) 1.496×10″ m
 13. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் எத்தனை சதவீதம் விபத்துகள் ஏற்படுகிறது?
  a) 40 %
  1 . b) 50 % –
  c) 60 % –
  d) 100%
 14. பொதுவாக பல வகைப் பழங்களில் காணப்படும் அமிலம்
  a) நைட்ரிக் அமிலம்
  b) அசிட்டிக் அமிலம்
  c) பார்மிக் அமிலம்
  d) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
 15. குளுக்கோஸ் மூலக்கூறு வாய்ப்பாடு
  a) C,H,OH
  b) C,H,,,,
  c) C,H,22,
  d) C,H,20,
 16. கார்பனின் அணு எண்
  a) 6
  b) 12
  c) 4
  d) 2
 17. கிராபைட் என்பது
  a) உலோகம்
  b) அலோகம்
  C) ஃபுல்லிரீன்
  d) எதுவும் இல்லை
 18. கோகினூர் வைரம் ஆனது 105 கேரட் வைரம், இதன் எடை
  a) 21.68 கி
  b) 916 கி
  c) 20 கி
  d) 9.16 கி
 19. பித்தளையில் உள்ள உலோகக் கலவைகள்
  a) CU, ZN
  b) CU, ZN, SN
  C) CU, ZN, NI
  d) CU, ZN, SN, PB
 20. பற்குழிகளை அடைக்கப் பயன்படும் உலோகக் கலவைகள்
  a) மெர்க்குரி, சில்வர், டின்
  b) தாமிரம், சில்வர், துத்தநாகம்
  c) மெர்க்குரி, தங்கம், சில்வர்
  d) காரியம், தாமிரம், வெள்ளி

28th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
சுற்றுலா துறையில் சிறந்து விளங்கியதற்காக ஆந்திராவுக்கு விருது
 • சுற்றுலா துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு, பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 74 விருதுகள், மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும். 
 • இதன்படி, 2017 - 18ல், சுற்றுலா துறையில் ஒட்டுமொத்த பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநில மாக, ஆந்திரா தேர்வு செய்யப்பட்டது. 
நாட்டிலேயே முதல் மாவட்டம் 13 ஆண்டுகளாக ரேபிஸ் இல்லை
 • நாய் மற்றும் வௌவாலில் இருந்து மனிதர்களுக்கு பரவும் மிக மோசமான நோய்களில் ஒன்றுதான் ரேபிஸ். நாய், வௌவால்,குதிரை போன்ற விலங்குகளை மிக எளிதில் தாக்கும் இந்த வைரஸ் அவற்றையும் ஆட்டிவைக்கிறது.
 • அதே சமயம் ரேபிஸ் தொற்று உள்ள விலங்குகள் மனிதர்களை கடிக்கும்போது மனிதர்களுக்கும் இந்த வைரஸ் ரத்தத்தில் கலந்து நம்பமுடியாத மோசாமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
 • உலகில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு மனிதன் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பதாக சுகாதார ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 • இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 20,000-க்கும் அதிகமானவர்கள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறன்றனர்.ரேபிஸ் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற தீவிரத்தில் ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த லூயி பாஸ்டியர் (Louis Pasteur) இறந்த தினமான செப்டம்பர் 28-ம் தேதி உலக ரேபிஸ் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
 • ரேபிஸ் நோய் தடுப்புக்கும் நீலகிரிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.லூயி பாஸ்டியர் பெயரில் 1907 ம் ஆண்டு குன்னூரில் ஆய்வகம் ஒன்று நிறுவப்பட்டு தமிழகம், கேரளா,கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் ரேபிஸை கட்டுப்படுத்த பெரும் பங்காற்றி வருகிறது. 
 • இது மத்திய அரசின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டாக ரேபிஸ் நோய் கண்டறியப்படவில்லை.ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்க மதுரை மாணவிக்கு அழைப்பு
 • மதுரை மாவட்டம் இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மனித உரிமைக் கல்வி பயின்ற மாணவி, ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் உரையாற்ற உள்ளார்.
 • இளமனூர் அருகே கார்சேரியைச் சேர்ந்தவர் பிரேமலதா (21) . இவர், இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடக் கல்வியோடு மனித உரிமைக் கல்வியையும் படித்துள்ளார். 
 • ஐ.நா. மனித உரிமைக் கழகம் மூலம் மனித உரிமைக் கல்வி செயல்படுத்தப்படும் விதம், அதனால் ஏற்படும் தாக்கம் குறித்த "எ பாத் டூ டிக்னிட்டி' என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டது. 
 • அந்த குறும்படத்தில் வரும் ஒரு காட்சியில், கடந்த 2010-11-இல் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பிரேமலதா, மனித உரிமைக் கல்வியின் முக்கியத்துவம், சாதிய பாகுபாடு மற்றும் பாலினப் பாகுபாடு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். 
 • தற்போது, இளங்கலைப் பட்டம் முடித்து, சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ள பிரேமலதாவுக்கு, ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு வந்துள்ளது.

Saturday, 28 September 2019

உலகளவிலான டிஜிட்டல் ரேங்கிங் பட்டியல் / IMD WORLD DIGITAL COMPETITIVENESS RANKING 2019

TNPSCSHOUTERS
 • உலகளவிலான டிஜிட்டல் நாட்டிற்கான போட்டியின் ரேங்கிங் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா கடந்த ஆண்டு இருந்த இடத்திலிருந்து நாக்கும் ரேங்கிங் முன்னிலையில் வந்துள்ளது. 
 • உலகளவிலான டிஜிட்டல் ரேங்கிங் பட்டியலில், கடந்த ஆண்டு இந்தியா 48வது இடத்திலிருந்துள்ளது. இந்த ஆண்டிற்கான முடிவுகளின் படி இந்தியா நான்கு இடங்கள் முன்னிலையில் வந்து 44வது இடத்தை பிடித்துள்ளது.
 • தொலைத்தொடர்பு முதலீட்டில் அதிகளவில் இந்தியா பங்கெடுத்து முதல் இடத்தைப் பிடித்து முன்னேறியுள்ளது. அதேபோல் தொழில்நுட்ப வளர்ச்சி பிரிவின் கீழ் பல மாற்றங்களை மேற்கொண்டு கடந்த ஆண்டை காட்டிலும் நான்கு இடங்கள் முன்னிலையில் முன்னேறி வெற்றியடைந்துள்ளது.
 • குறிப்பாக நாட்டின் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால தயார்நிலை போன்ற சேவைகளின் அடிப்படையைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் துறையில் உலக நாடுகளின் பங்கேற்பை ஆராய்ந்து இந்த ரேங்கிங் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
 • உலகளவிலான டிஜிட்டல் ரேங்கிங் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் நாடுகள் இடம்பிடித்துள்ளது.

27th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தயாரித்த ஷாம்பு, பாடி வாஷ் அறிமுகம் செய்தார் முதலைமைச்சர் பழனிசாமி
 • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே‌ உள்ள கண்டனூரில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில், புதிதாக சோப்பு மற்‌றும் ஷாம்பு தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டது. 
 • இங்கு கற்றாழை, நெல்லிக்காய், தேயிலை மர எண்ணெய் போன்ற பொருட்களை கொண்டு இயற்கையான முறையில், தலைமுடி நீர்மம் (ஷாம்பு) தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சாரல் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
 • இதேபோல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட, எழில் என பெயரிடப்பட்டுள்ள குளியல் நீர்மம் (Body Wash) மற்றும் வைகை என பெயரிடப்பட்டுள்ள கைகழுவும் நீர்‌மம் (Hand Wash) ஆகியவற்றையும், முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார். இந்த பொருட்கள் கதர் அங்காடிகள், நியாய விலைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி நியமனம்
 • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் வெங்கடாசலம் ஓராண்டு இருப்பார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மிகப் பெரிய குத்துக்கல் கண்டெடுப்பு
 • குந்தாரப்பள்ளியை அடுத்த சாமந்தமலை கிராமத்தின் மேற்கு திசையில் உள்ள பாரத கோயில் அருகே ராஜாமணி என்பவருக்குச் சொந்தமான வேடங்கொல்லை என்ற விளைநிலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பெரிய பெருங்கற்கால அரியவகை குத்துக்கல்லைக் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.
 • குத்துக்கல் என்பது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக் கால மக்கள், இறந்தவர்களுக்காக எழுப்பும் நினைவுச் சின்னங்களில் ஒன்று.
 • பொதுவாக குத்துக்கல் என்பது 2 அடி அகலமும், 12 முதல் 15 அடி உயரத்துடன் அடிப்பகுதி பெருத்து, நுனிப்பகுதி சிறுத்து செங்குத்துக் கல்லாக இருக்கும். பெரிய பலகை கல் போன்ற இந்த வகை குத்துக்கல் தேவனூர், மல்லசந்திரம், மகாராஜகடை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
 • திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர், உடையார்நத்தம் ஆகிய இடங்களில் காணப்படும் குத்துக்கல் பலகைகள் பெண் அல்லது பறவை உருவ அமைப்பில் காணப்படுகின்றன. சாமந்தமலையில் கண்டறியப்பட்ட குத்துக்கல் சுமார் ஒன்பதரை அடி அகலமும், 11 அடி உயரமும், ஓர் அடி கனமும் உள்ள கல் பலகையாகும்.
ரூ.1,580 கோடியில் மின்சார, பி.எஸ்.4 தரத்திலான பேருந்துகள் கொள்முதல்: ஜெர்மன் வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
 • தமிழகத்துக்கு ரூ.1,580 கோடியில் புதிதாக 500 மின்சார மற்றும் பி.எஸ். 4 தரத்திலான பேருந்துகளை கொள்முதல் செய்ய ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் திட்ட உடன்பாடு செய்யப்பட்டது. இந்த உடன்பாடு முதல்வர் பழனிசாமி முன்னிலையில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
 • சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுபடுவதைக் குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கிடும் பேருந்துகளை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, லண்டன் மாநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சி-40 என்ற பன்னாட்டு முகமைக்கும், தமிழக அரசு போக்குவரத்துத் துறைக்கும் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த அமைப்பின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 • நிகழ் நிதியாண்டில் ஜெர்மன் நாட்டு வங்கி கடனுதவியுடன் ரூ.5,890 கோடி செலவில் 12 ஆயிரம் புதிய பி.எஸ்.-4 தரத்திலான பேருந்துகளையும், 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளையும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது."எனது மருத்துவமனை-எனது பெருமை': ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவை தொடக்கம்
 • எனது மருத்துவமனை-எனது பெருமை திட்டத்தின் கீழ், நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
குருநானக் நினைவாக நாணயங்கள்
 • நேபாளத்தின் சென்ட்ரல் பேங்க் குருநானக் தேவ்வின் நினைவாக 3 காயின்களை வெளியிட்டுள்ளது.குருநானக் தேவ் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை தொடர்ந்து 550வது ஆண்டு குருநானக் தேவ் நினைவாக நேபாளத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஒன்று 3 காயின்களை அறிமுகம் செய்துள்ளது. காத்மண்டுவில் உள்ள அலாப்ட் ஓட்டலில் இந்நிகழ்ச்சி நடந்தது. 
 • நேபாள ரூபாய் மதிப்பில் 100,100 மற்றும் 2500 போன்ற மதிப்பிலான இந்த நாணயங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் நேபாள் ராஷ்டிர பேங்கின் கவர்னர் சிரஞ்சீவி நேபாள் மற்றும் இந்திய தூதர் மஞ்சீவ் சிங் புரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அர்ப்பணிப்பு
 • ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அர்ப்பணித்தார். 
 • பிரெஞ்ச் தொழில்நுட்பத்தில் தயாரித்த டீசலில் இயங்கும் 2 வது கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல் அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இது தரை மற்றும் நீருக்கடியில் உள்ள இலக்குகளை தாக்கி அழிப்பதில் வல்லமை பெற்றதாகும்.நரேந்திர மோதி பேச்சு: 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்'- ஐ.நா. சபையில் கணியன் பூங்குன்றனாரை மேற்கோள் காட்டிய பிரதமர்
 • அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோதி, ஐக்கிய நாடுகள் பொது சபையில் நடந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு நிகழ்த்திய சாதனைகளையும், இனி செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
 • ''உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 100 கோடிக்கும் மேலான மக்கள் வாக்களித்து மீண்டும் எங்கள் அரசு ஆட்சி பொறுப்பேற்றது. மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றதால்தான் தற்போது உங்கள் முன்னர் நான் நிற்கிறேன்'' என்று மோதி குறிப்பிட்டார்.
 • நான் இங்கு வரும்போது இந்த ஐ.நா. சபை சுவர்களில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்ற வாசகத்தை கண்டேன். தற்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாங்கள் தடை செய்துள்ளோம். இதனை விரைவில் சாதிக்க உள்ளோம் என்று மகிழ்வுடன் இங்கு கூறுகிறேன்.
 • உலக வெப்பமயமாதலை கருத்தில் கொண்டு பல திட்டங்களை நாட்டில் நிறைவேற்றி வருகிறோம். பருவநிலை மாற்றம் குறித்து பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைளை எடுத்து வருகிறோம்.
 • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் நேரம் இது. இந்தியாவில் மக்களின் சுகாதாரம் மற்றும் உடல்நலனை எங்கள் அரசு மிகவும் முக்கியமாக கருதுகிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க முழு முயற்சியில் இறங்குவோம்.
 • கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை எங்களது அரசு கட்டியுள்ளது. இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
 • இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022-ஆம் ஆண்டில், மேலும் பல ஆயிரம் வீடுகள் கட்ட திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
 • பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கலாசாரம் இந்தியாவுடையது. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகவும் பழமையான இந்திய மொழியான தமிழில், கவிஞர் கணியன் பூங்குன்றனார் ''யாதும் ஊரே,யாவரும் கேளிர்' என்ற உயரிய கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவின் பண்பாடும், கலாசாரமும் அத்தகைய சிறப்பு வாய்ந்தது.
 • நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் தீட்டப்பட்டு வரும் நிலையில், எங்கள் அரசு தீவிரவாதத்தை கடும் கரம் கொண்டு அடக்குவதில் முழு முனைப்பில் உள்ளது.
 • மனிதகுலத்துக்கு மிகப்பெரிய ஆபத்து தீவிரவாதம் என்று குறிப்பிட்ட நரேந்திர மோதி, தீவிரவாதம் குறித்து இந்த உலகம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கேரள சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றி
 • கேரள மாநிலத்தில் பால சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றியடைந்துள்ளது. வேட்பாளர் மணி சி.கப்பன் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேசியவாத காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய மணி சி.கப்பன் இடதுசாரி கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக அசாரூதீன் தேர்வு
 • முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாரூதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. 
 • இதில் 56 வயதாகும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் முகமது அசாரூதீன் தலைவர் பதவிக்கு கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தலில் இவர் 147 ஓட்டுக்கள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர் 73 ஓட்டுக்களை மட்டுமே பெற்றார். 
 • இதனையடுத்து அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முகமது அசாரூதீன் 99 டெஸ்ட் மற்றும் 334 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி முறையே ,6,215 ரன் மற்றும் 9,378 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டன் மாற்றம்
 • இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு போட்டிகளிலும் கேப்டனாக கவுர் இருந்து வந்த நிலையில் தற்போது மிதலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டனாகவும், கவுர் டி20 போட்டிக்கான கேப்டனாகவும் மாற்றப்பட்டுள்ளது.
 • மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் விளையாட உள்ள நிலையில் இந்தப் போட்டிக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

Friday, 27 September 2019

காவலர் எழுத்துத் தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியீடு / TNUSRB GR.II POLICE CONSTABLES, GR.II JAIL WARDERS, FIREMEN RESULT 2019

TNPSCSHOUTERS
 • இரண்டாம் நிலைக் காவலர் எழுத்து தேர்வு முடிவுகள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக அக்குழுமம் வியாழக்கிழமை தெரிவித்தது.
 • இது தொடர்பாக அந்த குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் காவல்துறை, சிறைதுறை தீயணைப்பு துறை ஆகியவற்றில் காலியாகவுள்ள 8,888 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை, கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 32 தேர்வு மையங்களில் நடத்தியது.
 • இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 76 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், எழுத்துத் தேர்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. எனவே, தேர்வர்கள், www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண்கள் மூலம் தேர்ச்சி முடிவை தெரிந்துக் கொள்ளலாம். எழுத்துத் தேர்வில் 1:5 விகிதத்தில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 • அடுத்த கட்டமாக, உடல்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு, அசல் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை விரைவில் நடைபெற உள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம், விரைவில் இக்குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

25th & 26th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
ரூ.7,175 கோடியில் புதிய தொழில் திட்டங்கள் 3 நிறுவனங்களின் உற்பத்தியை தொடக்கி வைத்தார் முதல்வர்
 • தொழில்துறை சார்பில் ரூ.5,573 கோடியே 89 லட்சம் முதலீட்டில் சுமார் 28 ஆயிரத்து 566 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்கிட 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
 • கோவை ஆர்.கே.ஜி. தொழில் பூங்காவில் ரூ.50 கோடியில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ஸ்டார்டர் மோட்டார்ஸ் உற்பத்தித் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம். 
 • சென்னை சோழிங்கநல்லூரில் ரூ.336 கோடி முதலீட்டில் 16 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் வகையில் இன்போஸிஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு சேவைத் திட்டம். 
 • திருவள்ளூர் மாவட்டம் மகேந்திரா தொழில் பூங்காவில் ரூ.79.82 கோடியில் சுமார் 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ஜப்பானின் நிசாய் எலக்ட்ரிக் பிரைவேட் நிறுவனத்தின் மின்சார பணிக்கான உபரி பாகங்கள் உற்பத்தித் திட்டம். 
 • காஞ்சிபுரம் சிப்காட் வல்லம்-வடகால் தொழில் பூங்காவில் ரூ.69 கோடியில் சுமார் 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த யங்க்வா டெக் நிறுவனத்தின் மின்சார வாகன உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டம்.
 • காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் ஹிரநந்தனி க்ரீன் பேஸ் பூங்காவில் ரூ.626 கோடியில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வெஸ்டாஸ் நிறுவனத்தின் காற்றாலை கருவி உற்பத்தித் திட்டம்.
 • தூத்துக்குடி மாவட்டம் மேலகரந்தையில் ரூ.250 கோடியில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் காற்றாலை கருவி உற்பத்தித் திட்டம்.
 • திண்டுக்கல் மாவட்டம், கன்னியாபுரத்தில் ரூ.182.50 கோடியில் சுமார் 450 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அம்பிகா காட்டன் மில்ஸ் நிறுவனத்தின் ஆயத்த ஆடைகள், நூற்பாலை உற்பத்தித் திட்டம். சென்னை எண்ணூரில் ரூ.1,529.57 கோடியில் 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வெங்கடேஷ் கோக் நிறுவனத்தின் சிறப்பு வர்த்தக கிடங்கு மண்டலம்.
 • கோவை கள்ளிப்பாளையத்தில் எஸ்எச்வி எனர்ஜி நிறுவனத்தால் ரூ.590 கோடியில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம். தூத்துக்குடியில் எல்பிஜி முனைய விரிவாக்கத் திட்டம். 
 • திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ரூ.292 கோடியில் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என்டிஆர் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் சிறப்பு வர்த்தகக் கிடங்கு திட்டம்.
 • உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, ரூ.121.12 கோடியில் சுமார் 1,280 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று புதிய நிறுவனங்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
நூறு ஆண்டுகளுக்குப் பின் மதுரையில் உலகத் தமிழிசை மாநாடு
 • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் உலகத் தமிழிசை மாநாடு 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வரும் டிச. 14, 15 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.
 • தமிழ் மொழி பல்வேறு கால கட்டங்களில் எவ்வாறு அந்நிய மொழிகளின் தாக்கத்துக்கு உள்ளானதோ அதேபோன்று தமிழிசையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது; அந்த நிலை இன்றும் நீடித்து வருகிறது. அதிலிருந்து தமிழிசையை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கிலும் தமிழிசையின் மேன்மை, இனிமையை உலகெங்கும் பரப்பும் வகையிலும் இந்த மாநாடு அமையும்.
சிவகங்கை அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள்
 • சிவகங்கை அருகே கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 • அதில் ஒரு கல்வெட்டின் மூலம் கோவானூர் பகுதியில் திருவகத்தீஸ்வரமுடையார் என்ற சிவன் கோயில் இருந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால் அக்கோயில் தற்போது இல்லை. கால மாற்றங்களால் அது சிதைந்து போயிருக்கலாம்.
 • மேலும், அங்குள்ள மற்றொரு கல்வெட்டில் கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் "பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும்' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி 9 வரிகளில் உள்ளன. இதில், தஞ்சையும், உறந்தையும் செந்தழல் கொளுத்தியது, மாளிகையும், மண்டபமும் இடித்தது உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழக - கேரள நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு
 • தமிழகம் - கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்து முடிந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தமிழக முதலமைச்சர் எ‌டப்பாடி பழனிசாமி‌, கேரளா முதலமைச்சர் தலைமையில் இருமாநில அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 • 195‌ஆம் ஆண்டு போடப்பட்ட பரம்பிகுளம் - ஆழியாறு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதற்காக,‌ முதற்‌கட்டமாக‌ இருமாநிலங்களிலும் தலா 5 பேர் கொண்ட‌குழு ஒருவாரத்தில் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.வராஹா போர்க்கப்பல் அர்ப்பணித்த அமைச்சர்
 • ஐசிஜிஎஸ் வராஹா என்னும் போர்கப்பலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்பணித்தார்.
 • இந்த விழாவில் ராஜ்நாத் சிங், ஐசிஜிஎஸ் வராஹா போர்க்கப்பலை, இந்திய கப்பல்படையிடம் ஒப்படைத்தார்.
 • வராஹா என்னும் பெயர், புராணங்களின் அடிப்படையில் தியாகத்தையும் மீட்பையும் குறிக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்த ஐசிஜிஎஸ் வராஹா கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. 
 • இக்கப்பல், மங்களூரு துறைமுகத்தில் இருந்து தனது இயக்கத்தை தொடங்கி, கன்னியாகுமரி வரை செல்லும். கடலை சுத்தப்படுத்துவதற்காக 'சாகர்' திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தி உள்ளார். 
"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5%ஆ‌க குறையும்"- ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு
 • ஆசிய வளர்ச்சி வங்கி 'Asian Development Outlook 2019 update ' என்ற ஆய்வு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தாண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • இதற்கு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைந்ததே காரணம் என்று இந்திய அறிக்கை தெரிவித்துள்ளது.
 • முன்னதாக நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தனது 'Asian Development Outlook 2019' அறிக்கையில் கணித்திருந்தது. 
 • இந்த வளர்ச்சி சதவிகிதம் குறைப்பிற்கு உற்பத்தித்துறையில் காணப்படும் மந்தநிலையே வளர்ச்சி குறைய காரணம் என தெரிவித்துள்ளது. எனினும் 2020ஆம் ஆண்டில் அடுத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று இந்தப் புதிய அறிக்கை கணித்துள்ளது.
ம.பி.யில் பள்ளி உதவியாளருக்கு சிறந்த ஆசிரியர் விருது
 • அரசு பள்ளியில் 23 ஆண்டுகளாக சமஸ்கிருதம் வகுப்பு நடத்தி வரும் பள்ளியின் உதவியாளர் சிறந்த ஆசிரியர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 
 • ம.பி., மாநிலம் இந்தூர் பகுதிக்குட்பட்ட டேபால்பூர் அருகே உள்ள கிரோடா கிராமத்தை சேர்ந்தவர் வாசுதவே பன்சல் (53) இவர் அங்கு உள்ள அரசு பள்ளிஒன்றில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். படேல் பெயரில் புதிய விருது மத்திய அரசு அறிவிப்பு
 • சர்தார் வல்லபபாய் படேலின் நினைவாக, அவருடைய பிறந்த நாளான, அக்., 31ல் இந்த விருதுக்கு உரியவர் அறிவிக்கப்படுவர். 
 • பத்ம விருதுகள் வழங்கும்போது, 'சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது', ஜனாதிபதியால் வழங்கப்படும்.ஒரு ஆண்டில் அதிகபட்சம், மூன்று பேருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படும். பதக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கியது, இந்த விருது. இதனுடன், ரொக்கப் பரிசு கிடையாது. 
 • மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே, மறைவுக்குப் பிறகு விருது வழங்கப்படும்.நாட்டின் ஒற்றுமைக்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் பெயர்களை, உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பரிந்துரைக்கலாம். மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், அமைச்சகங்களும் பரிந்துரை செய்யலாம். 
 • விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்க, பிரதமர் தலைமையிலான குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில், கேபினட் செயலர், பிரதமரின் முதன்மை செயலர், ஜனாதிபதியின் செயலர், உள்துறை செயலர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் மூன்று அல்லது நான்கு பிரபலங்கள் இடம் பெறுவர்.
ஐ.நா.வில் காந்தி அமைதி பூங்கா
 • மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள, காந்தி சூரிய மின்சக்தி பூங்கா மற்றும் நியூயார்க் பல்கலையில், 150 மரங்கள் நடும் அமைதி பூங்காவை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
 • இந்த நிகழ்ச்சியில், ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ்; தென் கொரிய அதிபர், மூன் ஜேயின்; சிங்கப்பூர் பிரதமர், லீ ஷீன் லோங்க்; வங்கதேச பிரதமர், ஷேக் ஹசீனா; ஜமைக்கா பிரதமர், ஆன்ட்ரூ ஹோல்னஸ்; நியூசிலாந்து பிரதமர், ஜசிந்தா ஆர்டென் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 • ஐ.நா., தலைமையக கூரையின் மீது, ஐ.நா.,வில் உறுப்பினர்களாக உள்ள, 193 நாடுகளின் சார்பில், 193 சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.இதற்காக, மத்திய அரசு, 7 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. 
 • இதன் மூலம், ஐ.நா., தலைமையகத்தில், 50 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். நியூயார்க் பல்கலை வளாகத்தில் அமைக்கப்படும், காந்தி அமைதி பூங்காவில், 150 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்கள் பெயரில், இந்த மரங்களை நடும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்திய சிறுமிக்கு 'சேஞ்ச்மேக்கர்' விருது
 • மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அவருடைய மனைவி மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் 'கோல் கீப்பர்' எனப்படும் இலக்குகளை சாதித்தவர்கள் விருது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வழங்கப்பட்டது.
 • அதன் ஒரு பகுதியான மாற்றத்தை ஏற்படுத்தியோருக்கான விருதை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாயல் ஜான்கிட் 17 என்ற சிறுமிக்கு வழங்கப்பட்டது. 
 • குழந்தைத் திருமணம் குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து போராடி வருவதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.ஐ.என்.எஸ்., துணை தலைவராக 'தினமலர்' வெளியீட்டாளர் தேர்வு
 • இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின், 80வது ஆண்டு பொதுக் குழு கூட்டம், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடந்தது. 
 • இதில், 2019 - 20ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள், தேர்வு செய்யப்பட்டனர். மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, 'மிட் - டே' நாளிதழின் சைலேஷ் குப்தா, தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 • 'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளர், எல்.ஆதிமூலம், துணை தலைவராகவும், 'ஆனந்த் பசார் பத்திரிகா'வின் புர்காயஸ்தா, உப தலைவராகவும், 'சண்டே ஸ்டேட்ஸ்மேன்' பத்திரிகையின் நரேஷ் மோகன், கவுரவ பொருளாளராகவும், மேரி பால், பொது செயலராகவும் தேர்வாகி உள்ளனர்.
 • மேலும், 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர், டாக்டர். ஆர்.லட்சுமிபதி, 'தினத்தந்தி' நிர்வாக இயக்குனர், பாலசுப்ரமணியம் ஆதித்தன், 'மலையாள மனோரமா'வின் ஜெயந்த் மேமன் மாத்யூ உட்பட, 41 பேர், நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தியாவுக்கு கூடுதல் எரிவாயு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்
 • ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.
 • இந்த சம்பவத்தால் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மாதந்தோறும் 2 லட்சம் டன் சமையல் எரிவாயுவை சவுதி அரேபியாவிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
 • இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு விநியோகம் விரைவில் சீர்படுத்தப்படும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளது. 
 • ஆனால், இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் சமையல் எரிவாயுவின் தேவை பல மடங்கு அதிகரிக்கும். இதனால் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க ஐக்கிய அரபு அமீரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
 • இதையடுத்து இந்தியாவுக்கு கூடுதல் சமையல் எரிவாயு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்தியாவின் அவசர தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக இரண்டு சரக்கு கப்பலில் சமையல் எரிவாயுவை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்துள்ளது என்றார். 
போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலில் 3து இடம் பிடித்துள்ள இன்போசிஸ் நிறுவனம்
 • போர்ப்ஸ் பத்திரிகை உலகளவிலான சிறந்த நிறுவனங்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆய்வை ஸ்டாடிஸ்டா என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தியது.
 • 50 நாடுகளில் சுமார் 2000 நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்திய அக்குழுவினர், நிறுவனங்களின் நம்பகத்தன்மை, சமூக நடத்தை, தயாரிப்புகள், சேவைகள் மற்றும் செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு முதல் 250 நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
 • இப்பட்டியலில், நிதி சேவை நிறுவனமான விசா (visa) முதலிடத்தையும், இத்தாலியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பெராரி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. 
 • இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான இன்போசிஸ் இப்பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 31ஆவது இடத்தில் இருந்த இன்போசிஸ் இந்த ஆண்டு 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.மேற்கு இந்தியத் தீவுகளுக்கு 14 மில்லியன் டாலர் நிதி உதவி
 • பிரதமர் நரேந்திர மோடி நேற்று நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கூட்டத்திற்கு நடுவே, கரீபியன் சமூகம் மற்றும் பொதுச் சந்தை (CARICOM) உறுப்பு நாடுகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
 • இந்த சந்திப்பின் போது, ​​கரீபியன் சமூகம் மற்றும் பொதுச் சந்தை சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியையும், சோலார், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களுக்கான 150 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்களையும் வழங்குவதாக மோடி அறிவித்தார்.
 • கயானாவின் ஜார்ஜ்டவுனில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பிராந்திய மையம் மற்றும் பெலிஸில் உள்ள பிராந்திய தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றை அமைப்பதையும் பிரதமர் மோடி அறிவித்தார்.
ஐ.நா. அமைதிப்படையில் இணைய இலங்கைக்கு அதிரடி தடை
 • இலங்கை ராணுவத்தின் மீதான ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பான போர்க்குற்றங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைகளில் இருந்து இலங்கையை நீக்க அதிரடி முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • இலங்கை ராணுவ வீரர்கள் பலர் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் இலங்கை ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா அண்மையில் நியமிக்கப்பட்டார்.
மகாத்மா காந்தி 150 ஆம் பிறந்தநாளையொட்டி மியான்மரில் புதிய தபால் தலை வெளியீடு
 • கடந்த 1869 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் நகரில் பிறந்தார். இந்திய விடுதலைக்கு அவர் மிகவும் பாடுபட்டுள்ளார். 
 • அவருடைய எளிய உடை மற்றும் வாழ்க்கை உலகெங்கும் போற்றப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதம் அவருடைய 150 ஆம் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.
 • அதையொட்டி மியான்மர் அரசின் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்புத் துறை ஒரு புதிய தாஅல் தலையை வெளியிடுகிறது. 
 • மியான்மர் நாணயப்படி 100 கே மதிப்பிலான இந்த தபால் தலையின் விற்பனை வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கப்படுகிறது.
 • மியான்மர் நாட்டின் தலைநகர் யாங்கூன் நகரில் உள்ள மத்திய தபால் அலுவலகத்தில் இந்த தபால் தலையின் முதல் விற்பனை தொடங்கப்பட உள்ளது. அன்று முதலே மியான்மர் நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த தபால் தலை விற்பனைக்கு வர உள்ளது.
இந்திய ராணுவ பணியாளர் கமிட்டி தலைவராகிறார் பிபின் ராவத்
 • இந்திய ராணுவப் பணியாளர்கள் கமிட்டி தலைவராக ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பொறுப்பேற்க உள்ளார். முப்படை தளபதிகளில் மூத்த அதிகாரி இப்பதவியில் நியமிக்கப்பட்டு ஓய்வு பெறும் வரை தொடர்வார். 
 • முக்கிய ராணுவ நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை அளிப்பார். தற்போது விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா, இக்கமிட்டியின் தலைவராக உள்ளார். இவர் நாளை ஓய்வு பெறுவதையடுத்து பிபின் ராவத் பொறுப்பேற்க உள்ளார்.சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு
 • தெற்கு ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து 'சார்க்' அமைப்பு ஏற்படுத்தி உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு உட்பட எட்டு நாடுகள் உள்ளன. 
 • இந்த அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 
 • காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், இம்மாநாடு நடக்க உள்ளதால், அதிக எதிர்பார்ப்பு உள்ளது.இது தவிர நியூயார்க்கில் நடந்த 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
காப்பீட்டு பாலிசி விற்பனை ரெப்கோ-எஸ்பிஐ லைஃப் ஒப்பந்தம்
 • ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்வதற்காக எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
 • ரெப்கோ ஹோம் பைனான்ஸின் 148-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 27 துணை மையங்களில் எஸ்பிஐ லைஃப் பாலிசி விற்பனை செய்யப்படும்.
ரூபா குருநாத் மெய்யப்பன் - தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத் தலைவராக போட்டியின்றித் தேர்வு 
 • பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் மெய்யப்பன் தமிழ்நாடு கிரிக்க்ட் வாரியத்தின் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Wednesday, 25 September 2019

24th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
மாநாட்டில் பங்கேற்க  உகாண்டா செல்கிறார் பேரவைத் தலைவர் தனபால்
 • கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாட்டிலுள்ள உகாண்டாவில், நடைபெறும் பேரவைத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பேரவைத் தலைவர் பி.தனபால் பங்கேற்கிறார்.
 • கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாட்டிலுள்ள உகாண்டாவில் பேரவைத் தலைவர்களின் சர்வதேச மாநாடு வரும் 24 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மஹாராஷ்டிரா தேர்தல் நல்லெண்ண தூதராக நடிகை மாதூரி தீட்சித்
 • மஹாராஷடிரா சட்டசபைக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. முடிவுகள் அக்டோபர் 24-ம் தேதி வெளியாகின்றனர். 
 • இந்நிலையில் தேர்தலில் மக்கள் ஒட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஜனநாயக கடமையை நிறைவேற்றும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் தேர்தல் நல்லெண்ண தூதராக பிரபல பாலிவுட் நடிகை மாதூரி தீட்சித்தை,52, மஹாராஷ்டிரா தேர்தல் ஆணையம் நியமித்துள்ளாது. 
 • இது தொடர்பாக நடிகை மாதூரி தீட்சித் நடித்துள்ள விழிப்புணர்வு வீடியோவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஐ.நா.,வில் 'காந்தி சோலார் பூங்கா'
 • அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள ஐ.நா., தலைமையகத்தில், காந்தி சோலார் பூங்காவை பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் உள்ளிட்ட தலைவர்கள் திறந்து வைத்தனர்.தூய்மை திட்டத்திற்காக PM மோடிக்கு 'குளோபல் கோல்கீப்பர்' விருது
 • பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் 'ஸ்வச் பாரத்' பிரச்சாரத்திற்கான 'உலகளாவிய கோல்கீப்பர் விருது' பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் ஓரங்களில் பில் கேட்ஸ் வழங்கினார்.
 • மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்காக 'துாய்மை இந்தியா' திட்டத்தை, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அனைத்து மக்களுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது, கிராமங்கள் மற்றும் நகரங்களை துாய்மையாக பராமரிப்பது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கம்.
வங்காளதேச பிரதமருக்கு தடுப்பூசி ஹீரோ விருது வழங்கல்
 • உலக அளவில் பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி முகாம்கள் மற்றும் நோய் எதிர்ப்பு இயக்கத்தை 'காவி' என்னும் அமைப்பு முன்னின்று நடத்தி வருகிறது.
 • இந்த இயக்கத்தின் உதவியுடன் வங்காளதேசம் நாட்டில் போலியோ, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய்களை தடுக்கும் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு 'தடுப்பூசி ஹீரோ' விருது வழங்கப்பட்டது.
 • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை 'காவி' அமைப்பின் தலைவரான டாக்டர் ந்கோஸி ஒக்கோன்ஜோ-இவியா,ஷேக் ஹசினாவுக்கு வழங்கி வாழ்த்து மடலை வாசித்தார்.
அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது
 • இந்தியாவில் திரைப்படத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு, பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் (76) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • தனது 50 ஆண்டு கால திரைப்பயணத்தில், 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. 
 • நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 1996-ஆம் ஆண்டிலும், இயக்குநர் கே.பாலசந்தர் 2010-ஆம் ஆண்டிலும் தாதா சாகேப் பால்கே விருது பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 24 September 2019

PERSON STUDIED IN TAMIL MEDIUM (PSTM CERTIFICATE) TNPSC NEW FORMAT PDF 2019

TNPSCSHOUTERS
PSTM Certificate & PSTM Application PDF Format

தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் மற்றும் தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்

PSTM CERTIFICATE

This is certify that Thiru/Tmt ………………………………………………… has studied SSLC during the year from …………… to ……………… in Tamil Medium. This certificate is issued after verifying the course content/statement of marks/Transfer Certificate. The candidate has/has not obtained scholarship for having studied in Tamil Medium.


Date :    
                                                                                                     
Place :                                                                                                             
Signature of the Head Master

Seal of the Institution :