Type Here to Get Search Results !

24th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

மாநாட்டில் பங்கேற்க  உகாண்டா செல்கிறார் பேரவைத் தலைவர் தனபால்
  • கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாட்டிலுள்ள உகாண்டாவில், நடைபெறும் பேரவைத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பேரவைத் தலைவர் பி.தனபால் பங்கேற்கிறார்.
  • கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாட்டிலுள்ள உகாண்டாவில் பேரவைத் தலைவர்களின் சர்வதேச மாநாடு வரும் 24 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மஹாராஷ்டிரா தேர்தல் நல்லெண்ண தூதராக நடிகை மாதூரி தீட்சித்
  • மஹாராஷடிரா சட்டசபைக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. முடிவுகள் அக்டோபர் 24-ம் தேதி வெளியாகின்றனர். 
  • இந்நிலையில் தேர்தலில் மக்கள் ஒட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஜனநாயக கடமையை நிறைவேற்றும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் தேர்தல் நல்லெண்ண தூதராக பிரபல பாலிவுட் நடிகை மாதூரி தீட்சித்தை,52, மஹாராஷ்டிரா தேர்தல் ஆணையம் நியமித்துள்ளாது. 
  • இது தொடர்பாக நடிகை மாதூரி தீட்சித் நடித்துள்ள விழிப்புணர்வு வீடியோவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஐ.நா.,வில் 'காந்தி சோலார் பூங்கா'
  • அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள ஐ.நா., தலைமையகத்தில், காந்தி சோலார் பூங்காவை பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் உள்ளிட்ட தலைவர்கள் திறந்து வைத்தனர்.



தூய்மை திட்டத்திற்காக PM மோடிக்கு 'குளோபல் கோல்கீப்பர்' விருது
  • பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் 'ஸ்வச் பாரத்' பிரச்சாரத்திற்கான 'உலகளாவிய கோல்கீப்பர் விருது' பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் ஓரங்களில் பில் கேட்ஸ் வழங்கினார்.
  • மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்காக 'துாய்மை இந்தியா' திட்டத்தை, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அனைத்து மக்களுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது, கிராமங்கள் மற்றும் நகரங்களை துாய்மையாக பராமரிப்பது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கம்.
வங்காளதேச பிரதமருக்கு தடுப்பூசி ஹீரோ விருது வழங்கல்
  • உலக அளவில் பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி முகாம்கள் மற்றும் நோய் எதிர்ப்பு இயக்கத்தை 'காவி' என்னும் அமைப்பு முன்னின்று நடத்தி வருகிறது.
  • இந்த இயக்கத்தின் உதவியுடன் வங்காளதேசம் நாட்டில் போலியோ, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய்களை தடுக்கும் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு 'தடுப்பூசி ஹீரோ' விருது வழங்கப்பட்டது.
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை 'காவி' அமைப்பின் தலைவரான டாக்டர் ந்கோஸி ஒக்கோன்ஜோ-இவியா,ஷேக் ஹசினாவுக்கு வழங்கி வாழ்த்து மடலை வாசித்தார்.
அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது
  • இந்தியாவில் திரைப்படத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு, பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் (76) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • தனது 50 ஆண்டு கால திரைப்பயணத்தில், 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. 
  • நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 1996-ஆம் ஆண்டிலும், இயக்குநர் கே.பாலசந்தர் 2010-ஆம் ஆண்டிலும் தாதா சாகேப் பால்கே விருது பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel