Type Here to Get Search Results !

25th & 26th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ரூ.7,175 கோடியில் புதிய தொழில் திட்டங்கள் 3 நிறுவனங்களின் உற்பத்தியை தொடக்கி வைத்தார் முதல்வர்
  • தொழில்துறை சார்பில் ரூ.5,573 கோடியே 89 லட்சம் முதலீட்டில் சுமார் 28 ஆயிரத்து 566 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்கிட 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • கோவை ஆர்.கே.ஜி. தொழில் பூங்காவில் ரூ.50 கோடியில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ஸ்டார்டர் மோட்டார்ஸ் உற்பத்தித் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம். 
  • சென்னை சோழிங்கநல்லூரில் ரூ.336 கோடி முதலீட்டில் 16 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் வகையில் இன்போஸிஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு சேவைத் திட்டம். 
  • திருவள்ளூர் மாவட்டம் மகேந்திரா தொழில் பூங்காவில் ரூ.79.82 கோடியில் சுமார் 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ஜப்பானின் நிசாய் எலக்ட்ரிக் பிரைவேட் நிறுவனத்தின் மின்சார பணிக்கான உபரி பாகங்கள் உற்பத்தித் திட்டம். 
  • காஞ்சிபுரம் சிப்காட் வல்லம்-வடகால் தொழில் பூங்காவில் ரூ.69 கோடியில் சுமார் 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த யங்க்வா டெக் நிறுவனத்தின் மின்சார வாகன உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டம்.
  • காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் ஹிரநந்தனி க்ரீன் பேஸ் பூங்காவில் ரூ.626 கோடியில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வெஸ்டாஸ் நிறுவனத்தின் காற்றாலை கருவி உற்பத்தித் திட்டம்.
  • தூத்துக்குடி மாவட்டம் மேலகரந்தையில் ரூ.250 கோடியில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் காற்றாலை கருவி உற்பத்தித் திட்டம்.
  • திண்டுக்கல் மாவட்டம், கன்னியாபுரத்தில் ரூ.182.50 கோடியில் சுமார் 450 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அம்பிகா காட்டன் மில்ஸ் நிறுவனத்தின் ஆயத்த ஆடைகள், நூற்பாலை உற்பத்தித் திட்டம். சென்னை எண்ணூரில் ரூ.1,529.57 கோடியில் 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வெங்கடேஷ் கோக் நிறுவனத்தின் சிறப்பு வர்த்தக கிடங்கு மண்டலம்.
  • கோவை கள்ளிப்பாளையத்தில் எஸ்எச்வி எனர்ஜி நிறுவனத்தால் ரூ.590 கோடியில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம். தூத்துக்குடியில் எல்பிஜி முனைய விரிவாக்கத் திட்டம். 
  • திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ரூ.292 கோடியில் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என்டிஆர் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் சிறப்பு வர்த்தகக் கிடங்கு திட்டம்.
  • உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, ரூ.121.12 கோடியில் சுமார் 1,280 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று புதிய நிறுவனங்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
நூறு ஆண்டுகளுக்குப் பின் மதுரையில் உலகத் தமிழிசை மாநாடு
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் உலகத் தமிழிசை மாநாடு 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வரும் டிச. 14, 15 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.
  • தமிழ் மொழி பல்வேறு கால கட்டங்களில் எவ்வாறு அந்நிய மொழிகளின் தாக்கத்துக்கு உள்ளானதோ அதேபோன்று தமிழிசையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது; அந்த நிலை இன்றும் நீடித்து வருகிறது. அதிலிருந்து தமிழிசையை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கிலும் தமிழிசையின் மேன்மை, இனிமையை உலகெங்கும் பரப்பும் வகையிலும் இந்த மாநாடு அமையும்.
சிவகங்கை அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள்
  • சிவகங்கை அருகே கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அதில் ஒரு கல்வெட்டின் மூலம் கோவானூர் பகுதியில் திருவகத்தீஸ்வரமுடையார் என்ற சிவன் கோயில் இருந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால் அக்கோயில் தற்போது இல்லை. கால மாற்றங்களால் அது சிதைந்து போயிருக்கலாம்.
  • மேலும், அங்குள்ள மற்றொரு கல்வெட்டில் கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் "பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும்' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி 9 வரிகளில் உள்ளன. இதில், தஞ்சையும், உறந்தையும் செந்தழல் கொளுத்தியது, மாளிகையும், மண்டபமும் இடித்தது உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழக - கேரள நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு
  • தமிழகம் - கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்து முடிந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தமிழக முதலமைச்சர் எ‌டப்பாடி பழனிசாமி‌, கேரளா முதலமைச்சர் தலைமையில் இருமாநில அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
  • 195‌ஆம் ஆண்டு போடப்பட்ட பரம்பிகுளம் - ஆழியாறு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதற்காக,‌ முதற்‌கட்டமாக‌ இருமாநிலங்களிலும் தலா 5 பேர் கொண்ட‌குழு ஒருவாரத்தில் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.



வராஹா போர்க்கப்பல் அர்ப்பணித்த அமைச்சர்
  • ஐசிஜிஎஸ் வராஹா என்னும் போர்கப்பலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்பணித்தார்.
  • இந்த விழாவில் ராஜ்நாத் சிங், ஐசிஜிஎஸ் வராஹா போர்க்கப்பலை, இந்திய கப்பல்படையிடம் ஒப்படைத்தார்.
  • வராஹா என்னும் பெயர், புராணங்களின் அடிப்படையில் தியாகத்தையும் மீட்பையும் குறிக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்த ஐசிஜிஎஸ் வராஹா கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இக்கப்பல், மங்களூரு துறைமுகத்தில் இருந்து தனது இயக்கத்தை தொடங்கி, கன்னியாகுமரி வரை செல்லும். கடலை சுத்தப்படுத்துவதற்காக 'சாகர்' திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தி உள்ளார். 
"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5%ஆ‌க குறையும்"- ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு
  • ஆசிய வளர்ச்சி வங்கி 'Asian Development Outlook 2019 update ' என்ற ஆய்வு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தாண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இதற்கு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைந்ததே காரணம் என்று இந்திய அறிக்கை தெரிவித்துள்ளது.
  • முன்னதாக நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தனது 'Asian Development Outlook 2019' அறிக்கையில் கணித்திருந்தது. 
  • இந்த வளர்ச்சி சதவிகிதம் குறைப்பிற்கு உற்பத்தித்துறையில் காணப்படும் மந்தநிலையே வளர்ச்சி குறைய காரணம் என தெரிவித்துள்ளது. எனினும் 2020ஆம் ஆண்டில் அடுத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று இந்தப் புதிய அறிக்கை கணித்துள்ளது.
ம.பி.யில் பள்ளி உதவியாளருக்கு சிறந்த ஆசிரியர் விருது
  • அரசு பள்ளியில் 23 ஆண்டுகளாக சமஸ்கிருதம் வகுப்பு நடத்தி வரும் பள்ளியின் உதவியாளர் சிறந்த ஆசிரியர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 
  • ம.பி., மாநிலம் இந்தூர் பகுதிக்குட்பட்ட டேபால்பூர் அருகே உள்ள கிரோடா கிராமத்தை சேர்ந்தவர் வாசுதவே பன்சல் (53) இவர் அங்கு உள்ள அரசு பள்ளிஒன்றில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். 



படேல் பெயரில் புதிய விருது மத்திய அரசு அறிவிப்பு
  • சர்தார் வல்லபபாய் படேலின் நினைவாக, அவருடைய பிறந்த நாளான, அக்., 31ல் இந்த விருதுக்கு உரியவர் அறிவிக்கப்படுவர். 
  • பத்ம விருதுகள் வழங்கும்போது, 'சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது', ஜனாதிபதியால் வழங்கப்படும்.ஒரு ஆண்டில் அதிகபட்சம், மூன்று பேருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படும். பதக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கியது, இந்த விருது. இதனுடன், ரொக்கப் பரிசு கிடையாது. 
  • மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே, மறைவுக்குப் பிறகு விருது வழங்கப்படும்.நாட்டின் ஒற்றுமைக்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் பெயர்களை, உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பரிந்துரைக்கலாம். மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், அமைச்சகங்களும் பரிந்துரை செய்யலாம். 
  • விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்க, பிரதமர் தலைமையிலான குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில், கேபினட் செயலர், பிரதமரின் முதன்மை செயலர், ஜனாதிபதியின் செயலர், உள்துறை செயலர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் மூன்று அல்லது நான்கு பிரபலங்கள் இடம் பெறுவர்.
ஐ.நா.வில் காந்தி அமைதி பூங்கா
  • மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள, காந்தி சூரிய மின்சக்தி பூங்கா மற்றும் நியூயார்க் பல்கலையில், 150 மரங்கள் நடும் அமைதி பூங்காவை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
  • இந்த நிகழ்ச்சியில், ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ்; தென் கொரிய அதிபர், மூன் ஜேயின்; சிங்கப்பூர் பிரதமர், லீ ஷீன் லோங்க்; வங்கதேச பிரதமர், ஷேக் ஹசீனா; ஜமைக்கா பிரதமர், ஆன்ட்ரூ ஹோல்னஸ்; நியூசிலாந்து பிரதமர், ஜசிந்தா ஆர்டென் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • ஐ.நா., தலைமையக கூரையின் மீது, ஐ.நா.,வில் உறுப்பினர்களாக உள்ள, 193 நாடுகளின் சார்பில், 193 சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.இதற்காக, மத்திய அரசு, 7 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. 
  • இதன் மூலம், ஐ.நா., தலைமையகத்தில், 50 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். நியூயார்க் பல்கலை வளாகத்தில் அமைக்கப்படும், காந்தி அமைதி பூங்காவில், 150 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்கள் பெயரில், இந்த மரங்களை நடும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்திய சிறுமிக்கு 'சேஞ்ச்மேக்கர்' விருது
  • மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அவருடைய மனைவி மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் 'கோல் கீப்பர்' எனப்படும் இலக்குகளை சாதித்தவர்கள் விருது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வழங்கப்பட்டது.
  • அதன் ஒரு பகுதியான மாற்றத்தை ஏற்படுத்தியோருக்கான விருதை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாயல் ஜான்கிட் 17 என்ற சிறுமிக்கு வழங்கப்பட்டது. 
  • குழந்தைத் திருமணம் குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து போராடி வருவதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.



ஐ.என்.எஸ்., துணை தலைவராக 'தினமலர்' வெளியீட்டாளர் தேர்வு
  • இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின், 80வது ஆண்டு பொதுக் குழு கூட்டம், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடந்தது. 
  • இதில், 2019 - 20ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள், தேர்வு செய்யப்பட்டனர். மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, 'மிட் - டே' நாளிதழின் சைலேஷ் குப்தா, தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
  • 'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளர், எல்.ஆதிமூலம், துணை தலைவராகவும், 'ஆனந்த் பசார் பத்திரிகா'வின் புர்காயஸ்தா, உப தலைவராகவும், 'சண்டே ஸ்டேட்ஸ்மேன்' பத்திரிகையின் நரேஷ் மோகன், கவுரவ பொருளாளராகவும், மேரி பால், பொது செயலராகவும் தேர்வாகி உள்ளனர்.
  • மேலும், 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர், டாக்டர். ஆர்.லட்சுமிபதி, 'தினத்தந்தி' நிர்வாக இயக்குனர், பாலசுப்ரமணியம் ஆதித்தன், 'மலையாள மனோரமா'வின் ஜெயந்த் மேமன் மாத்யூ உட்பட, 41 பேர், நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தியாவுக்கு கூடுதல் எரிவாயு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்
  • ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.
  • இந்த சம்பவத்தால் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மாதந்தோறும் 2 லட்சம் டன் சமையல் எரிவாயுவை சவுதி அரேபியாவிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
  • இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு விநியோகம் விரைவில் சீர்படுத்தப்படும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளது. 
  • ஆனால், இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் சமையல் எரிவாயுவின் தேவை பல மடங்கு அதிகரிக்கும். இதனால் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க ஐக்கிய அரபு அமீரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
  • இதையடுத்து இந்தியாவுக்கு கூடுதல் சமையல் எரிவாயு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்தியாவின் அவசர தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக இரண்டு சரக்கு கப்பலில் சமையல் எரிவாயுவை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்துள்ளது என்றார். 
போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலில் 3து இடம் பிடித்துள்ள இன்போசிஸ் நிறுவனம்
  • போர்ப்ஸ் பத்திரிகை உலகளவிலான சிறந்த நிறுவனங்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆய்வை ஸ்டாடிஸ்டா என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தியது.
  • 50 நாடுகளில் சுமார் 2000 நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்திய அக்குழுவினர், நிறுவனங்களின் நம்பகத்தன்மை, சமூக நடத்தை, தயாரிப்புகள், சேவைகள் மற்றும் செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு முதல் 250 நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
  • இப்பட்டியலில், நிதி சேவை நிறுவனமான விசா (visa) முதலிடத்தையும், இத்தாலியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பெராரி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. 
  • இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான இன்போசிஸ் இப்பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 31ஆவது இடத்தில் இருந்த இன்போசிஸ் இந்த ஆண்டு 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.



மேற்கு இந்தியத் தீவுகளுக்கு 14 மில்லியன் டாலர் நிதி உதவி
  • பிரதமர் நரேந்திர மோடி நேற்று நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கூட்டத்திற்கு நடுவே, கரீபியன் சமூகம் மற்றும் பொதுச் சந்தை (CARICOM) உறுப்பு நாடுகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
  • இந்த சந்திப்பின் போது, ​​கரீபியன் சமூகம் மற்றும் பொதுச் சந்தை சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியையும், சோலார், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களுக்கான 150 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்களையும் வழங்குவதாக மோடி அறிவித்தார்.
  • கயானாவின் ஜார்ஜ்டவுனில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பிராந்திய மையம் மற்றும் பெலிஸில் உள்ள பிராந்திய தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றை அமைப்பதையும் பிரதமர் மோடி அறிவித்தார்.
ஐ.நா. அமைதிப்படையில் இணைய இலங்கைக்கு அதிரடி தடை
  • இலங்கை ராணுவத்தின் மீதான ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பான போர்க்குற்றங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைகளில் இருந்து இலங்கையை நீக்க அதிரடி முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இலங்கை ராணுவ வீரர்கள் பலர் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் இலங்கை ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா அண்மையில் நியமிக்கப்பட்டார்.
மகாத்மா காந்தி 150 ஆம் பிறந்தநாளையொட்டி மியான்மரில் புதிய தபால் தலை வெளியீடு
  • கடந்த 1869 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் நகரில் பிறந்தார். இந்திய விடுதலைக்கு அவர் மிகவும் பாடுபட்டுள்ளார். 
  • அவருடைய எளிய உடை மற்றும் வாழ்க்கை உலகெங்கும் போற்றப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதம் அவருடைய 150 ஆம் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.
  • அதையொட்டி மியான்மர் அரசின் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்புத் துறை ஒரு புதிய தாஅல் தலையை வெளியிடுகிறது. 
  • மியான்மர் நாணயப்படி 100 கே மதிப்பிலான இந்த தபால் தலையின் விற்பனை வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கப்படுகிறது.
  • மியான்மர் நாட்டின் தலைநகர் யாங்கூன் நகரில் உள்ள மத்திய தபால் அலுவலகத்தில் இந்த தபால் தலையின் முதல் விற்பனை தொடங்கப்பட உள்ளது. அன்று முதலே மியான்மர் நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த தபால் தலை விற்பனைக்கு வர உள்ளது.
இந்திய ராணுவ பணியாளர் கமிட்டி தலைவராகிறார் பிபின் ராவத்
  • இந்திய ராணுவப் பணியாளர்கள் கமிட்டி தலைவராக ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பொறுப்பேற்க உள்ளார். முப்படை தளபதிகளில் மூத்த அதிகாரி இப்பதவியில் நியமிக்கப்பட்டு ஓய்வு பெறும் வரை தொடர்வார். 
  • முக்கிய ராணுவ நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை அளிப்பார். தற்போது விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா, இக்கமிட்டியின் தலைவராக உள்ளார். இவர் நாளை ஓய்வு பெறுவதையடுத்து பிபின் ராவத் பொறுப்பேற்க உள்ளார்.



சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு
  • தெற்கு ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து 'சார்க்' அமைப்பு ஏற்படுத்தி உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு உட்பட எட்டு நாடுகள் உள்ளன. 
  • இந்த அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 
  • காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், இம்மாநாடு நடக்க உள்ளதால், அதிக எதிர்பார்ப்பு உள்ளது.இது தவிர நியூயார்க்கில் நடந்த 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
காப்பீட்டு பாலிசி விற்பனை ரெப்கோ-எஸ்பிஐ லைஃப் ஒப்பந்தம்
  • ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்வதற்காக எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
  • ரெப்கோ ஹோம் பைனான்ஸின் 148-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 27 துணை மையங்களில் எஸ்பிஐ லைஃப் பாலிசி விற்பனை செய்யப்படும்.
ரூபா குருநாத் மெய்யப்பன் - தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத் தலைவராக போட்டியின்றித் தேர்வு 
  • பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் மெய்யப்பன் தமிழ்நாடு கிரிக்க்ட் வாரியத்தின் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel