Type Here to Get Search Results !

22th September 2019 AYAKUDI CO OPERATIVE EXAM NOTES IN TAMIL PDF

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என படிப்போருக்கு உதவியாக TNPSC SHOUTERS இணையதளத்தில் வினா விடை பகுதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்
வாழ்த்துகள்



Important Cooperative Operating History 22-09-2019

கூட்டுறவு இயக்க வரலாறு
  • 1844- ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ராக்டேல் என்னும் ஊரில் 28 கம்பளி நெசவாளர்கள் ஒன்று சேர்ந்து தொடங்கிய நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையே உலகிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட முறையான கூட்டுறவு சங்கமாகும்.
  • இந்தியாவிலேயே முதன்முதலாக திருவள்ளூர் மாவட்டம் திரூர் என்ற கிராமத்தில் 22.08.1904 அன்று விவசாயிகளுக்கு என்று முதல் கூட்டுறவு கடன் சங்கத்தை சர்.டி. இராஜகோபாலாச்சாரியார் தோற்றுவித்தார்.
  • அவர் சென்னை மாகாணத்தின் முதல் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டார்.
  • இச்சங்கத்திற்கு திவான் பகதூர் திரு. எம். ஆதிநாராயணன் அய்யா அவர்கள் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 09.04.1904 அன்று பண்டகசாலைகளுக்கு முன்னோடியாக திருவல்லிக்கேணி நகரக்கூட்டுறவுச் சங்கம் (டி.யூ.சி.எஸ்) செயல்படத் தொடங்கியது. பின்னர் 20.09.1905 அன்று பதிவு செய்யப்பட்டது. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் 1925-இல் இப்பண்டகசாலைக்கு வருகை தந்துள்ளார்.
  • டி.யூ.சி.எஸ் முதல் சுயசேவைப் பிரிவு அங்காடியை காமதேனு என்ற பெயரில் சென்னையில் 1966-ல் தொடங்கியது.
  • 08.10.1904-ல் காஞ்சிபுரத்தில் முதல் நகரக்கூட்டுறவு வங்கி (பெரிய காஞ்சிபுரம் நகரக் கூட்டுறவு வங்கி) தொடங்கப்பட்டது.
  • 19.10.1905-ல் முதல் நிதியுதவி வங்கி (சென்னை மத்திய நகர வங்கி) அமைக்கப்பட்டது. தற்போது, இது தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி என அழைக்கப்படுகிறது.
  • இந்தியாவிலேயே கூட்டுறவாளர்களின் முதல் கூட்டுறவு மாநாடு 10.03.1909 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் நடைபெற்றது.
  • 1913-ல் முதல் மத்திய கூட்டுறவு வங்கி (மதுரை – இராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி) தொடங்கப்பட்டது.
  • 1919-ல் சென்னை கூட்டுறவு அச்சகம் என்ற பெயரில் முதல் கூட்டுறவு அச்சகம் தொடங்கப்பட்டது.
  • தமிழ்நாட்டில் முதல் கூட்டுறவு பயிற்சி சாலையாக தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு பயிற்சி சாலை 07.05.1927 அன்று பதிவு செய்யப்பட்டது.
  • 1927-ல் சென்னை அயனாவரத்தில் முதல் கூட்டுறவு பால் வழங்கும் கழகம் அமைக்கப்பட்டது.
  • சென்னையில் 28.12.1971 அன்று முதன் முதலாகத் “தமிழ்நாடு விவசாயிகள் கூட்டுறவு காகித ஆலை அமைக்கப்பட்டது.
  • 02.08.1971 அன்று செங்கற்பட்டு மாவட்டத்தில் முதல் மாவட்டக் கூட்டுறவு யூனியன் ஆரம்பிக்கப்பட்டது.
  • தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் 01.02.1959 அன்று அமைக்கப்பட்டு 20.02.1959 அன்று முதல் செயல்படத் தொடங்கியது.
  • முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1960-ல் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1941 முதல் கைத்தறி நெவாளர் கூட்டுறவு சங்கம் சென்டெக்ஸ் 14.04.1941 அன்று ஈரோட்டில் ஆரம்பிக்கப்பட்டது.
  • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் 04.01.1914 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
  • இதன் முதல் தலைவராக திவான் பகதூர் திரு. எம்.ஆதிநாராயண அய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1904 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூட்டுறவு இயக்கம் நூறாண்டுகளைக் கடந்து 108ஆம் ஆண்டில் தொடர்ந்து நவீன வசதிகளுடன் முன்னேற்றப் பாதையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • அனைத்து தரப்பு மக்களும் கூட்டுறவின் மூலம் பயனடைந்து வருகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel