Type Here to Get Search Results !

29th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

விக்ரமாதித்யா போர்க்கப்பலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் பயணம்
  • பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலில் மேற்கு கடற்படைப் பிரிவு வீரர்களுடன் பயணித்து வருகிறார். நேற்றிரவு முழுவதும் அந்தக் கப்பலில் தங்கி இருந்த ராஜ்நாத் சிங், வீரர்களின் பயிற்சியை பார்வையிட்டார். 
பெண் குழந்தைகளை பெருமைப்படுத்துங்கள் 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி வேண்டுகோள்
  • பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்று கிழமையில், 'மன் கி பாத்' எனப்படும், மனதோடு பேசுகிறேன் என்ற நிகழ்ச்சி மூலமாக, ரேடியோவில், நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார். 
  • தீபாவளி பண்டிகை கொண்டாடப் படவுள்ளது. இந்த பண்டிகை, நம் வீட்டுக்கு, கடவுள் லட்சுமி தேவியை வரவழைப்பதை குறிக்கிறது. நம் நாட்டு கலசாரத்தில், பெண் குழந்தைகள், லட்சுமி தேவியாக போற்றப்படுகின்றனர். 
  • நம் நாட்டின் பெண் குழந்தைகள், பல்வேறு துறைகளில் பொது நலன் சார்ந்து, பல சாதனைகளை படைத்து உள்ளனர். இந்த திறமைவாய்ந்த பெண் குழந்தைகளை பெருமைப் படுத்தும் வகையில், ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும், பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நம் மகள்கள், மருமகள்கள், இந்த சமூகத்துக்காக பல பணிகளை செய்து வருகின்றனர். சிலர், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருகின்றனர்.
  • இன்னும் சிலர், சுகாதாரம், ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். டாக்டராக, இன்ஜியராக, வழக்கறிஞராக, நாட்டுக்கு சேவை செய்து வருகின்றனர். இந்த சமூகம், அவர்களை அடையாளம் பார்த்து, பெருமைப்படுத்த வேண்டும். அதற்காக பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • இப்படிப்பட்ட பெண்களை கவுரவிக்கும் வகையில், 'பாரத் கி லட்சுமி' என்ற பெயரில், சமூக வலைதளங்களில், 'ஹேஷ்டக்' உருவாக்கி, அவர்களது சாதனைகளை பதிவிடலாம். இதனால், அவர்களது சாதனை, மற்றவர்களுக்கு தெரிய வரும். 
கோளுக்கு ஹிந்துஸ்தானி பாடகர் பெயர்
  • செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையே வலம் வரும் சிறிய கோள் ஒன்றுக்கு, பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் பெயரை சூட்டி, சர்வதேச வானியல் யூனியன் கவுரவித்தது.
  • கடந்த 2006 நவ.,11ல் கண்டுபிடிக்கப்பட்ட இக்கோளுக்கு, 'பண்டிட் ஜஸ்ராஜ்' என கடந்த 23ம் தேதி பெயர் சூட்டப்பட்டது. கோளுக்கு இந்திய இசைக்கலைஞரின் பெயர் சூட்டப்படுவது இதுவே முதன்முறை.



விமானப்படையில் இணைகிறது அதி நவீன ஏவுகணை அஸ்த்ரா
  • டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, 15 ஆண்டுகள் போராடி உருவாக்கியுள்ள, 'அஸ்த்ரா' என பெயரிடப்பட்டுள்ள, விண்ணில் இருந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய ஏவுகணை, விமானப் படையில், விரைவில் இணைக்கப்பட உள்ளது. 
  • கடந்த, 2004ல், 955 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் துவங்கப்பட்டது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இதை வடிவமைத்துள்ளது. 
  • ரஷ்ய தயாரிப்பான, 'சுகோக்' ரக போர் விமானங்களில் பயன்படுத்தக் கூடிய இந்த ஏவுகணையை, டி.ஆர்.டி.ஓ., ஐந்து முறை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.அதையடுத்து, விமானப் படையில் இந்த ஏவுகணை, விரைவில் இணைய உள்ளது.
இந்தியாவில் ரூ.7 லட்சம் கோடி முதலீடு: சவுதி முடிவு
  • பெட்ரோ கெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு மற்றும் நிலக்கரித்துறை உள்ளிட்டவைகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7.லட்சம் கோடி) முதலீடு செய்ய சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
  • இந்தியாவில் முதலீடு என்பது அரம்கோவின் சர்வதேச திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் அடிப்படையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், மேற்கு கடற்கரை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டதும், ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒத்துழைப்பும், இரு தரப்பு உறவில் மிகப்பெரிய மைல் கல். 
  • இந்தியா மற்றும் சவுதி இடையிலான வணிகத்தை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றுவது என்பதும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் 'விஷன் 2030' கொள்கையில் இடம்பெற்றுள்ளது.
  • இந்திய எரிசக்தி தேவையில் சவுதி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 17 சதவீதத்தையும், 32 சதவீத இயற்கை எரிவாயு தேவையையும் சவுதிதான் பூர்த்தி செய்கிறது.
ஊழல் வழக்கில் தண்டனை: சிக்கிம் முதல்வர் தமாங் தகுதி நீக்க காலத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக குறைத்தது
  • லோக்சபா தேர்தலுடன் சிக்கிம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா அமோக வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் பிரேம்சிங் தமாங் மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.
  • ஆனால் ஊழல் வழக்கு ஒன்றில் 2016-ம் ஆண்டு தமாங்குக்கு கீழ்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததால் அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. ஊழல் வழக்கில் சிறை தண்டனனை அனுபவித்த ஒருவர் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் தமாங் பதவியேற்கும், போதே சர்ச்சை வெடித்தது.
  • இந்நிலையில் சிக்கிமில் சட்டசபை இடைத்தேர்தலில் தமாங் போட்டியிடுகிறார். பாஜக ஆதரவுடன் தமாங் சிக்கிமில் ஆட்சி நடத்தி வருகிறார். இதனிடையே பல்வேறு சட்டப் பிரிவுகளை சுட்டிக்காட்டி தமக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 6 ஆண்டுகால தடையை நீக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை தமாங் அனுப்பியிருந்தார்.
  • இக்கடிதத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம் தமாங்குக்கான தடை காலத்தை ஓராண்டு ஒரு மாதம் என குறைப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் சட்டசபை இடைத்தேர்தலில் தமாங் போட்டியிட தடை இல்லை.



உள்நாட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு: மறு உத்தரவு வரும் வரை ஏற்றுமதிக்கு தடை விதிப்பு
  • வெங்காயம் விலை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
  • நாட்டின் மொத்த வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் கிழக்கு மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆகியவைதான் மிக முக்கிய பங்காற்றுகின்றன. 
  • இந்த பகுதிகளில் பலத்த மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் மட்டுமே மார்க்கெட்களுக்கு சப்ளை ஆகிறது.
  • இந்நிலையில் உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இரஷ்யாவின் ரோபோ-நாட்ஸ்
  • ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் அடுத்த வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் அதன், மனிதனை போன்ற ஆண்ட்ராய்டின் வியத்தகு காணொளியை வெளியிட்டுள்ளது.
  • இறுதிக்கட்ட சோதனை ஒத்திகை ஆராய்ச்சியில் உள்ள "பெடோர்" என பெயரிடப்பட்டுள்ள இந்த மனித உருவிலான(anthropomorphous) இயந்திரம் கஜகஸ்தானில் உள்ள பய்கோனூர் காஸ்மோட்ரோம்-ல் பேட்டரி அழுத்த பரிசோதனையை எதிர்கொண்டுவருகிறது.
  • புடினின் ரோபோ-நாட் என செல்லமாக அழைக்கப்படும் இந்த இயந்திரம், இலக்குகளை நிர்ணயிப்பது, ஸ்டீயரிங் போன்ற குறிப்பிட்ட புள்ளிகளை மதிப்பிடுவது போன்றவற்றை சுற்றுப்பாதையில் இருக்கும்போது செய்யவுள்ளது.
  • 6-அடி உயரமும், கூடுதல் உபகரணங்களைப் பொறுத்து 233 பவுண்டுகளுக்கும் குறைவில்லா எடையையும் கொண்டிருக்கும் இந்த பெடோர், 44 பவுண்டுகள் வரையிலான பொருட்களை தூக்க முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel