Type Here to Get Search Results !

27th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தயாரித்த ஷாம்பு, பாடி வாஷ் அறிமுகம் செய்தார் முதலைமைச்சர் பழனிசாமி
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே‌ உள்ள கண்டனூரில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில், புதிதாக சோப்பு மற்‌றும் ஷாம்பு தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டது. 
  • இங்கு கற்றாழை, நெல்லிக்காய், தேயிலை மர எண்ணெய் போன்ற பொருட்களை கொண்டு இயற்கையான முறையில், தலைமுடி நீர்மம் (ஷாம்பு) தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சாரல் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
  • இதேபோல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட, எழில் என பெயரிடப்பட்டுள்ள குளியல் நீர்மம் (Body Wash) மற்றும் வைகை என பெயரிடப்பட்டுள்ள கைகழுவும் நீர்‌மம் (Hand Wash) ஆகியவற்றையும், முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார். இந்த பொருட்கள் கதர் அங்காடிகள், நியாய விலைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி நியமனம்
  • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் வெங்கடாசலம் ஓராண்டு இருப்பார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மிகப் பெரிய குத்துக்கல் கண்டெடுப்பு
  • குந்தாரப்பள்ளியை அடுத்த சாமந்தமலை கிராமத்தின் மேற்கு திசையில் உள்ள பாரத கோயில் அருகே ராஜாமணி என்பவருக்குச் சொந்தமான வேடங்கொல்லை என்ற விளைநிலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பெரிய பெருங்கற்கால அரியவகை குத்துக்கல்லைக் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.
  • குத்துக்கல் என்பது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக் கால மக்கள், இறந்தவர்களுக்காக எழுப்பும் நினைவுச் சின்னங்களில் ஒன்று.
  • பொதுவாக குத்துக்கல் என்பது 2 அடி அகலமும், 12 முதல் 15 அடி உயரத்துடன் அடிப்பகுதி பெருத்து, நுனிப்பகுதி சிறுத்து செங்குத்துக் கல்லாக இருக்கும். பெரிய பலகை கல் போன்ற இந்த வகை குத்துக்கல் தேவனூர், மல்லசந்திரம், மகாராஜகடை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
  • திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர், உடையார்நத்தம் ஆகிய இடங்களில் காணப்படும் குத்துக்கல் பலகைகள் பெண் அல்லது பறவை உருவ அமைப்பில் காணப்படுகின்றன. சாமந்தமலையில் கண்டறியப்பட்ட குத்துக்கல் சுமார் ஒன்பதரை அடி அகலமும், 11 அடி உயரமும், ஓர் அடி கனமும் உள்ள கல் பலகையாகும்.
ரூ.1,580 கோடியில் மின்சார, பி.எஸ்.4 தரத்திலான பேருந்துகள் கொள்முதல்: ஜெர்மன் வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
  • தமிழகத்துக்கு ரூ.1,580 கோடியில் புதிதாக 500 மின்சார மற்றும் பி.எஸ். 4 தரத்திலான பேருந்துகளை கொள்முதல் செய்ய ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் திட்ட உடன்பாடு செய்யப்பட்டது. இந்த உடன்பாடு முதல்வர் பழனிசாமி முன்னிலையில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
  • சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுபடுவதைக் குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கிடும் பேருந்துகளை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, லண்டன் மாநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சி-40 என்ற பன்னாட்டு முகமைக்கும், தமிழக அரசு போக்குவரத்துத் துறைக்கும் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த அமைப்பின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  • நிகழ் நிதியாண்டில் ஜெர்மன் நாட்டு வங்கி கடனுதவியுடன் ரூ.5,890 கோடி செலவில் 12 ஆயிரம் புதிய பி.எஸ்.-4 தரத்திலான பேருந்துகளையும், 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளையும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.



"எனது மருத்துவமனை-எனது பெருமை': ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவை தொடக்கம்
  • எனது மருத்துவமனை-எனது பெருமை திட்டத்தின் கீழ், நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
குருநானக் நினைவாக நாணயங்கள்
  • நேபாளத்தின் சென்ட்ரல் பேங்க் குருநானக் தேவ்வின் நினைவாக 3 காயின்களை வெளியிட்டுள்ளது.குருநானக் தேவ் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை தொடர்ந்து 550வது ஆண்டு குருநானக் தேவ் நினைவாக நேபாளத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஒன்று 3 காயின்களை அறிமுகம் செய்துள்ளது. காத்மண்டுவில் உள்ள அலாப்ட் ஓட்டலில் இந்நிகழ்ச்சி நடந்தது. 
  • நேபாள ரூபாய் மதிப்பில் 100,100 மற்றும் 2500 போன்ற மதிப்பிலான இந்த நாணயங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் நேபாள் ராஷ்டிர பேங்கின் கவர்னர் சிரஞ்சீவி நேபாள் மற்றும் இந்திய தூதர் மஞ்சீவ் சிங் புரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அர்ப்பணிப்பு
  • ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அர்ப்பணித்தார். 
  • பிரெஞ்ச் தொழில்நுட்பத்தில் தயாரித்த டீசலில் இயங்கும் 2 வது கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல் அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இது தரை மற்றும் நீருக்கடியில் உள்ள இலக்குகளை தாக்கி அழிப்பதில் வல்லமை பெற்றதாகும்.



நரேந்திர மோதி பேச்சு: 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்'- ஐ.நா. சபையில் கணியன் பூங்குன்றனாரை மேற்கோள் காட்டிய பிரதமர்
  • அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோதி, ஐக்கிய நாடுகள் பொது சபையில் நடந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு நிகழ்த்திய சாதனைகளையும், இனி செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
  • ''உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 100 கோடிக்கும் மேலான மக்கள் வாக்களித்து மீண்டும் எங்கள் அரசு ஆட்சி பொறுப்பேற்றது. மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றதால்தான் தற்போது உங்கள் முன்னர் நான் நிற்கிறேன்'' என்று மோதி குறிப்பிட்டார்.
  • நான் இங்கு வரும்போது இந்த ஐ.நா. சபை சுவர்களில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்ற வாசகத்தை கண்டேன். தற்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாங்கள் தடை செய்துள்ளோம். இதனை விரைவில் சாதிக்க உள்ளோம் என்று மகிழ்வுடன் இங்கு கூறுகிறேன்.
  • உலக வெப்பமயமாதலை கருத்தில் கொண்டு பல திட்டங்களை நாட்டில் நிறைவேற்றி வருகிறோம். பருவநிலை மாற்றம் குறித்து பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைளை எடுத்து வருகிறோம்.
  • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் நேரம் இது. இந்தியாவில் மக்களின் சுகாதாரம் மற்றும் உடல்நலனை எங்கள் அரசு மிகவும் முக்கியமாக கருதுகிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க முழு முயற்சியில் இறங்குவோம்.
  • கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை எங்களது அரசு கட்டியுள்ளது. இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022-ஆம் ஆண்டில், மேலும் பல ஆயிரம் வீடுகள் கட்ட திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
  • பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கலாசாரம் இந்தியாவுடையது. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகவும் பழமையான இந்திய மொழியான தமிழில், கவிஞர் கணியன் பூங்குன்றனார் ''யாதும் ஊரே,யாவரும் கேளிர்' என்ற உயரிய கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவின் பண்பாடும், கலாசாரமும் அத்தகைய சிறப்பு வாய்ந்தது.
  • நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் தீட்டப்பட்டு வரும் நிலையில், எங்கள் அரசு தீவிரவாதத்தை கடும் கரம் கொண்டு அடக்குவதில் முழு முனைப்பில் உள்ளது.
  • மனிதகுலத்துக்கு மிகப்பெரிய ஆபத்து தீவிரவாதம் என்று குறிப்பிட்ட நரேந்திர மோதி, தீவிரவாதம் குறித்து இந்த உலகம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கேரள சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றி
  • கேரள மாநிலத்தில் பால சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றியடைந்துள்ளது. வேட்பாளர் மணி சி.கப்பன் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேசியவாத காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய மணி சி.கப்பன் இடதுசாரி கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக அசாரூதீன் தேர்வு
  • முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாரூதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. 
  • இதில் 56 வயதாகும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் முகமது அசாரூதீன் தலைவர் பதவிக்கு கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தலில் இவர் 147 ஓட்டுக்கள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர் 73 ஓட்டுக்களை மட்டுமே பெற்றார். 
  • இதனையடுத்து அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முகமது அசாரூதீன் 99 டெஸ்ட் மற்றும் 334 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி முறையே ,6,215 ரன் மற்றும் 9,378 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டன் மாற்றம்
  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு போட்டிகளிலும் கேப்டனாக கவுர் இருந்து வந்த நிலையில் தற்போது மிதலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டனாகவும், கவுர் டி20 போட்டிக்கான கேப்டனாகவும் மாற்றப்பட்டுள்ளது.
  • மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் விளையாட உள்ள நிலையில் இந்தப் போட்டிக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel