Type Here to Get Search Results !

28th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சுற்றுலா துறையில் சிறந்து விளங்கியதற்காக ஆந்திராவுக்கு விருது
  • சுற்றுலா துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு, பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 74 விருதுகள், மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும். 
  • இதன்படி, 2017 - 18ல், சுற்றுலா துறையில் ஒட்டுமொத்த பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநில மாக, ஆந்திரா தேர்வு செய்யப்பட்டது. 
நாட்டிலேயே முதல் மாவட்டம் 13 ஆண்டுகளாக ரேபிஸ் இல்லை
  • நாய் மற்றும் வௌவாலில் இருந்து மனிதர்களுக்கு பரவும் மிக மோசமான நோய்களில் ஒன்றுதான் ரேபிஸ். நாய், வௌவால்,குதிரை போன்ற விலங்குகளை மிக எளிதில் தாக்கும் இந்த வைரஸ் அவற்றையும் ஆட்டிவைக்கிறது.
  • அதே சமயம் ரேபிஸ் தொற்று உள்ள விலங்குகள் மனிதர்களை கடிக்கும்போது மனிதர்களுக்கும் இந்த வைரஸ் ரத்தத்தில் கலந்து நம்பமுடியாத மோசாமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
  • உலகில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு மனிதன் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பதாக சுகாதார ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
  • இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 20,000-க்கும் அதிகமானவர்கள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறன்றனர்.ரேபிஸ் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற தீவிரத்தில் ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த லூயி பாஸ்டியர் (Louis Pasteur) இறந்த தினமான செப்டம்பர் 28-ம் தேதி உலக ரேபிஸ் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • ரேபிஸ் நோய் தடுப்புக்கும் நீலகிரிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.லூயி பாஸ்டியர் பெயரில் 1907 ம் ஆண்டு குன்னூரில் ஆய்வகம் ஒன்று நிறுவப்பட்டு தமிழகம், கேரளா,கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் ரேபிஸை கட்டுப்படுத்த பெரும் பங்காற்றி வருகிறது. 
  • இது மத்திய அரசின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டாக ரேபிஸ் நோய் கண்டறியப்படவில்லை.



ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்க மதுரை மாணவிக்கு அழைப்பு
  • மதுரை மாவட்டம் இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மனித உரிமைக் கல்வி பயின்ற மாணவி, ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் உரையாற்ற உள்ளார்.
  • இளமனூர் அருகே கார்சேரியைச் சேர்ந்தவர் பிரேமலதா (21) . இவர், இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடக் கல்வியோடு மனித உரிமைக் கல்வியையும் படித்துள்ளார். 
  • ஐ.நா. மனித உரிமைக் கழகம் மூலம் மனித உரிமைக் கல்வி செயல்படுத்தப்படும் விதம், அதனால் ஏற்படும் தாக்கம் குறித்த "எ பாத் டூ டிக்னிட்டி' என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டது. 
  • அந்த குறும்படத்தில் வரும் ஒரு காட்சியில், கடந்த 2010-11-இல் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பிரேமலதா, மனித உரிமைக் கல்வியின் முக்கியத்துவம், சாதிய பாகுபாடு மற்றும் பாலினப் பாகுபாடு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். 
  • தற்போது, இளங்கலைப் பட்டம் முடித்து, சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ள பிரேமலதாவுக்கு, ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு வந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel