
24th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மூன்று முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
- இதனிடையே சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய கூட்டதொடர் தொடங்கியவுடன் தவெக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- பொங்கல் பண்டிகை முதல் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படும். சிலிண்டர் வழங்கும் திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். இதற்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆண்டுக்கு 2.50 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் குடும்பத்தினருக்கு சிலிண்டருக்கு நிதி வழங்கப்படும்.
- பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும். புதிய விமான நிலையம் அமைப்பதற்கு புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2-ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும். முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, Deluxe அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
- இதில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் கேல்விகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பதிலுரையாற்றினார்.
- இதனைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களைகளை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார். அதன்படி,
- 'ரூ.1,000 கோடியில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம். 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் அரசு உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 'பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் (நிலை -2)' அறிமுகப்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டை அறிவுசார் பொருளாதாரமாக மாற்றுதல், வளங்களை ஒருங்கிணைத்தல், உள்ளூர் புதுமைகளை வலுப்படுத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் முதலீட்டை அதிகரித்தல், அறிவுசார் சொத்துரிமையை வலுப்படுத்தல் (IPR) மற்றும் அறிவியல்-தொழில்நுட்பத்தின் பயன்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஓர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை (Tamil Nadu Science and Technology Policy) உருவாக்கப்படும்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று, அடிப்படை அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்து, முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதி, உணவு மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் 6,000 உதவி பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றி விரைந்து நியமிக்கப்படுவர். உயர்கல்வி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மேம்படுத்தப்படும்.
- அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 30,000-லிருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படும்.
- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 25,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்படும்.
- 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தடையின்றிப் படிக்க ரூ.20 இலட்சம் வரை பிணையில்லா கல்விக் கடன் வழங்க புதிய 'கல்வி உத்தரவாதத் திட்டம்' (Education Guarantee Scheme) அறிமுகப்படுத்தப்படும்.
- 2026-2027-கல்வியாண்டில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சி (Autonomous) கல்லூரிகளாகத் தரம் உயர்த்தப்படும். தேர்வு செய்யப்படும் 10 கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள் ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்படும்.
- 2026-2027-ஆம் கல்வியாண்டில் கூடலூர், சிவகாசி, ஒரத்தநாடு மற்றும் நாமக்கல் ஆகிய 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிலை-2-லிருந்து நிலை-1-ஆக (Grade 2 to Grade 1) தரம் உயர்த்தப்படும்.
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று, அரசு கல்லூரிகளில் சேரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணாக்கர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கும் முழுமையான கட்டண விலக்கு வழங்கப்படும்' உள்ளிட்ட பல்வேறு தொட்டங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.

