//
Type Here to Get Search Results !

17th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

17th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

விவசாயிகள் ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
  • தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (17.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110-ன் கீழ், விவசாயப் பெருமக்களின் நலனிற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடி அறிவித்துள்ளார்.
  • ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
  • ரூ.75,000/-க்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000/-மும் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டு, அதன்மூலம் 14.44 இலட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 19.06.2026 அன்று ஆணையிடப்பட்டது. 
  • இதில், 31.07.2026 வரை ரூபாய் 5,267 கோடி விடுவிக்கப்பட்டு 13.34 இலட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவும் வைக்கப்பட்டுள்ளது.
வருகையில்லா ஆவணப்பதிவு எனும் புதிய இணையவழி சேவை திட்டதை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
  • தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று (17.8.2026) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களைப் பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) மூலம் மட்டுமே கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையை தொடங்கி வைத்தார்.
  • பதிவுத்துறையில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவுசெய்யும் முறையினை ஏற்கனவே பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (Anywhere Registration) பதிவுத்துறை இணையதளத்தின் மூலம் இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel