இந்தியாஹேண்ட்மேட் டிஜிட்டல் தளம் / INDIAHANDMADE DIGITAL PORTAL
TNPSCSHOUTERSJuly 12, 2026
0
இந்தியாஹேண்ட்மேட் டிஜிட்டல் தளம் / INDIAHANDMADE DIGITAL PORTAL: இந்தியாவின் பாரம்பரிய கைத்தறி, கைவினைப் பொருட்களை இணையவழிப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கும் நோக்கில் 'இந்தியாஹேண்ட்மேட்' எனும் பிரத்யேக டிஜிட்டல் சந்தை தளம் செயல்பட்டு வருகிறது.
நுகர்வோருடன் கைவினைக்கலைஞர்களையும் நெசவாளர்களையும் நேரடியாக இணைக்கும் இந்த தளம், இடைத்தரகர்கள் இல்லாத சூழலை உருவாக்கி அவர்களுக்கு நியாயமான வருவாயை உறுதி செய்கிறது.
கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு, கலாச்சாரப் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்திச் செயல்படும் இந்த இணையதளத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் வரும் பிராந்திய கைவினைப் பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்தியப் பாரம்பரிய கைவினைத் துறையில் சுமார் 64.66 லட்சம் கைவினைக்கலைஞர்களும் நெசவாளர்களும் ஈடுபட்டு வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, இத்துறையில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. கைத்தறி நெசவாளர்களில் 71 சதவீதத்தினரும் மொத்த கைவினைக்கலைஞர்களில் 64 சதவீதத்தினரும் பெண்கள் ஆவர்.
இத்தகைய சூழலில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பாரம்பரியத் தொழில்களை இணையவழி வர்த்தகத்துடன் இணைப்பது கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மகளிர் மேம்பாட்டிற்கும் அடித்தளமாக அமைகிறது.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் அமைப்பால் 2023-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த தளம், இந்தியக் கைவினைக்கலைஞர்களின் தயாரிப்புகளுக்கு நாடு தழுவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது
இந்த இணைய தளம் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே நம்பகமான வணிகச் சூழலை உருவாக்குகிறது. நெசவாளர்கள் தங்களின் தயாரிப்புகளுக்கு எவ்வித கூடுதல் தொகையும் செலுத்தத் தேவையில்லை என்பதோடு, நுகர்வோருக்கு இலவச விநியோக வசதி, பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை முறைகள், பொருட்களை எளிதாக திருப்பி அனுப்பும் வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் போட்டி விலையில் தரமான பொருட்களைப் பெற முடிகிறது.
மேலும், சிறு கைவினைக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி பதிவு இல்லாத விற்பனையாளர்களும் தங்களின் மாநிலத்திற்குள் மட்டும் வர்த்தகம் செய்யும் வகையில் சேர்க்கை அடையாள எண் மூலம் இதில் எளிதாகப் பதிவு செய்துகொள்ளலாம்.
இத்தளத்தில் ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஓவியங்கள், மரச்சாமான்கள், இசைக்கருவிகள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் கிடைக்கின்றன.
இவற்றுடன் பஷ்மினா சால்வைகள், டோக்ரா கலைப் பொருட்கள் போன்ற புவிசார் குறியீடு பெற்ற தனித்துவமான தயாரிப்புகளும், டங்கைல் புடவைகள், பனாரஸ் பட்டு, சந்தேரி பட்டு, சுடுமண் சிற்பங்கள் போன்ற ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டப் பொருட்களும் பிராந்திய அடையாளங்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன.
சந்தம்ஸ், தஸ்த்கார் கிராஃப்ட், வில்லேஜஸ் கிராஃப்ட் போன்ற உள்நாட்டு நிறுவனங்களின் கீழ் நூற்றுக்கணக்கான கைவினைக்கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்கள் இந்த டிஜிட்டல் சந்தை மூலம் விற்கப்படுகின்றன.
தற்சார்பு இந்தியா இலக்கை எட்டும் நோக்கில் 60 லட்சத்திற்கும் அதிகமான கைவினைக்கலைஞர்களை இந்த தளத்தில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி, கைவினைத் தொழிலை வெறும் வாழ்வாதாரமாக மட்டும் பார்க்காமல் நாட்டின் கலாச்சார அடையாளமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் உன்னதப் பணியை ‘இந்தியாஹேண்ட்மேட்’ தளம் மேற்கொண்டு வருகிறது.
ENGLISH
INDIAHANDMADE DIGITAL PORTAL: India is home to one of the world’s richest handloom and handicraft traditions. The sector represents not only India’s cultural heritage but is also an important source of inclusive livelihoods.
India currently has an estimated 64.66 lakh handloom and handicraft artisans. Women form a major part of this workforce, accounting for 71% of handloom weavers and 64% of total artisans as of August 2025.
This strong participation highlights the sector’s role in supporting employment and empowerment, especially in rural communities. With a large number of artisans and weavers, the sector continues to hold an important place in India’s evolving marketplace.
As commerce becomes increasingly digital, online access is helping these craft communities participate more directly in the market. Through the Digital India initiative, traditional livelihoods are increasingly gaining access to digital commerce opportunities.
Launched in 2023, Indiahandmade turns this vision into a dedicated digital marketplace. Developed by Digital India Corporation under the Ministry of Textiles, the platform strengthens the visibility of handmade products and opens wider market opportunities for sellers.
Salient features of Indiahandmade Platform
INDIAHANDMADE DIGITAL PORTAL: Indiahandmade brings traditions into the online marketplace through a set of features designed to support sellers, buyers and craft heritage:
Specialised Online Marketplace: It enables weavers and artisans to sell their handloom and handicraft products online.
Direct Buyer Access: Artisans and weavers are directly connected with buyers, helping reduce intermediaries and support fair compensation.
Greater Visibility: The platform showcases handmade products to a broader customer base, expanding market opportunities for sellers.
Digital Empowerment: Artisans and weavers are provided with digital tools and visibility to participate more effectively in online commerce.
Financial and Social Empowerment: Wider market access strengthens livelihoods and supports income opportunities.
Cultural Preservation: A diverse range of craft-based products keeps India’s handmade heritage visible and helps preserve traditional skills for future generations.