
20th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆஸ்திரேலியாவின் டார்வினில் இரவுநேரப் பயிற்சி 2026-ல் இந்திய விமானப்படை பங்கேற்கிறது
- இந்திய விமானப்படை தனது 'இரவுநேரப் பயிற்சி 2026-ஐ' டார்வினில் உள்ள ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை தளத்தில் (20.07.2026) தொடங்குகிறது.
- ராயல் ஆஸ்திரேலிய விமானப்படையுடன் 2026, ஆகஸ்ட் 07 நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதன்மையான பன்னாட்டு வான்வழிப் போர் பயிற்சியாகும்.
- வடக்கு ஆஸ்திரேலியாவின் பரந்துபட்ட, மக்கள் வசிக்காத பகுதிகளில் இரவு நேரப் பறத்தலுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், இந்தப் பயிற்சிக்கு பிட்ச் பிளாக் என்ற பெயர் வந்தது. இந்தப் பயிற்சியின் 45 ஆண்டுகால வரலாற்றில், இந்த முறை பெருமளவிலான படைகள் பங்கேற்கவுள்ளன.
- இந்திய விமானப்படைப் பிரிவில் விமானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கட்டுப்பாட்டாளர்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட உயர் திறன்கொண்ட விமான வீரர்கள் உள்ளனர்.
- இந்தக் குழு, வானிலிருந்து எரிபொருள் நிரப்பும் சி-17 குளோப்மாஸ்டர்-III மற்றும் ஐஎல்-78 விமானங்களின் ஆதரவுடன் போர் சார்ந்த பணிகளில் ரஃபேல் பல்திறன் போர் விமானத்தை இயக்கும்.
- பங்கேற்கும் படைகளுக்கு ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், படை ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், உலகளாவிய சூழல்களில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளவும் மதிப்புமிக்க வாய்ப்பை இந்தப் பயிற்சி வழங்கும்.
- இந்திய விமானப்படை இதற்கு முன்னர் 2018, 2022 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பயிற்சிகளில் பங்கேற்று, பாதுகாப்பு ஒத்துழைப்பிலும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.
- 23வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, அர்ஜென்டினா ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன.
- அரையிறுதியில் ஸ்பெயின் 2-0 என பிரான்சையும், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா 2-1 என இங்கிலாந்தையும் வென்றது. இதனை தொடர்ந்து இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா- ஸ்பெயின் அணிகள் மோதின.
- ஆட்டத்தின் 106வது நிமிடத்தில், ஸ்பெயின் மாற்று ஆட்டக்காரர் பெர்ரான் டோரஸ் , நிகோ வில்லியம்ஸின் அசிஸ்ட் மூலம் அதிரடியாக கோல் அடித்தார்.
- இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்துதொடரின் இறுதி போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு ரூ.481 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.
- நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் அணியின் கேப்டன் எம்பாபேவுக்கு தங்கக் காலணி விருது வழங்கப்பட்டது. இவர் இந்த தொடரில் 10 கோல்கள் அடித்திருந்தார்.
- கடந்த 2022 ஆம் ஆண்டும், 8 கோல்கள் அடித்து தங்கக் காலணி விருதை எம்பாபே வென்றிருந்தார். பிஃபா வரலாற்றில் அதிக முறை தங்கக் காலணி விருதை வென்றவர் என்ற சாதனையையும் எம்பாபே படைத்துள்ளார்.
- உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருது ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
- மிட் ஃபீல்டராக விளையாடிய ரோட்ரி, இந்த தொடர் முழுவதும் ஒரேவொரு கோல் மட்டுமே விட்டுக் கொடுத்து, எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
- உலகக் கோப்பை தொடரில் குறைவான கோல்களை விட்டுக் கொடுக்கும் அணியின் கோல் கீப்பருக்கு கோல்டன் கிளவ் விருது வழங்கப்படும்.
- அந்த வகையில், இந்த தொடர் முழுவதும் 7 ஆட்டங்களிலும் ஸ்பெயின் அணி க்ளீன் ஷீட்டாக விளையாடியது. 5 ஆட்டங்களுக்கு மேல் க்ளீன் ஷீட்டாக விளையாடிய முதல் அணியாக ஸ்பெயின் உள்ளது.
- இந்த நிலையில், ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் உனாய் சைமனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- ஸ்பெயின் அணியின் மிடில் டிஃபென்ஸராக விளையாடிய 19 வயதான பாவ் குபார்சிக்கு, சிறந்த இளம் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

