//
Type Here to Get Search Results !

6th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

6th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாட்டில் 1,364 ஆக உயர்ந்த நீலகிரி வரையாடுகள் எண்ணிக்கை
  • தமிழ்நாடு வனத்துறை, 'புராஜெக்ட் நீலகிரி வரையாடு' (Project Nilgiri Tahr) திட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் 24 முதல் 27 வரை 14 வனக்கோட்டங்களில் இந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பை நடத்தியது.
  • இந்த ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டில் வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 1,031 ஆகவும், 2025-ஆம் ஆண்டில் 1,0303 ஆகவும் இருந்த வரையாடுகளின் எண்ணிக்கை, தற்போது 2026-இல் மேலும் உயர்ந்து நிலையானதொரு வளர்ச்சிப் பாதையை (Positive Recovery Trend) எட்டியுள்ளது.
  • இது கடந்த 2025-ஆம் ஆண்டு எண்ணிக்கையை விட 4.68 விழுக்காடு அதிகமாகும்.
  • காடுகளில் நேரடியாகக் கண்டறியப்பட்ட வரையாடுகளின் தரவுகளின்படி, முதிர்ந்த பெண் வரையாடுகள் 38.4 விழுக்காடாகவும், முதிர்ந்த ஆண் வரையாடுகள் 34.6 விழுக்காடாகவும் உள்ளன. 
  • இவற்றின் பாலின விகிதம் 100 பெண் வரையாடுகளுக்கு 55 ஆண் வரையாடுகள் (55:100) என்ற அளவில் ஆரோக்கியமாக உள்ளது. மேலும், இதில் ஒரு வயதுடைய இளம் வரையாடுகள் (Yearlings) 15.5 விழுக்காடாகவும், சிறிய குட்டிகள் 11.5 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளன.
நீரஜ் சோப்ரா சாதனையை முறியடித்தார் ருமேஷ் பதிரகே
  • இத்தாலியின் ரோம் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் பதிரகே 92.62 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
  • அவரது செயல் திறன் ஆசிய தடகள வரலாற்றில் 2-வது மிக நீண்ட தூரமாகப் பதிவாகியுள்ளது. இதன் மூலம், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவின் (90.23 மீ) சாதனையை ருமேஷ் பதிரகே முறியடித்துள்ளார். 
  • 90 மீட்டர் என்ற வரலாற்று இலக்கை எட்டிய நான்காவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்த தடகள வரலாற்றில் 28-வது வீரர் என்ற பெருமையை ருமேஷ் பதிரகே பெற்றுள்ளார்.
யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் - இந்திய அணி சாம்பியன்
  • ஜப்பானின் ககாமிஹாராவில் யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றறு வருகிறது.  இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நடப்புச் சாம்பியனான ஜப்பானை இந்தியா எதிர்கொண்டது. 
  • லீக் சுற்றில் இந்தியாவைத் தோற்கடித்திருந்த ஜப்பான் அணி, இத்தொடரில் இதுவரை தோல்வியடையாமல் இருந்தது. 
  • கவாசாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது இந்தியா வெல்லும் மூன்றாவது கோப்பையாகும். பாகிஸ்தான் இந்த பட்டத்தை இரண்டு முறை வென்றுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel