//
Type Here to Get Search Results !

தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026 / TAMILNADU ANIMATION VISUAL EFFECTS GAMING COMICS & EXTENDED VIRTUAL REALITY POLICY 2026

  • தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026 / TAMILNADU ANIMATION VISUAL EFFECTS GAMING COMICS & EXTENDED VIRTUAL REALITY POLICY 2026: தமிழ்நாட்டின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை ஆதரிக்கும் வகையில், இந்தியாவின் AVGC-XR சந்தையில் 20 சதவிகித பங்கைப் பெறவும், 2030ம் ஆண்டுக்குள் 2 லட்சம் உயர்திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கிடப்பட்டுள்ளது. 
  • சென்னை நகரில் எல்காட் வியன் சிறப்புத்திறன் மையம் நிறுவப்படுவதுடன், அதன் துணை மையங்கள் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் தொழில்துறை, கல்வி நிறுவனங்களுடன் இணைந்து எல்காட் – வியன் AVGC-XR சிறப்புத்திறன் மையங்கள் அமைக்கப்படும்.
  • இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அமைந்துள்ள TIDEL NEO பூங்காக்களில் Plug-and-Play கட்டமைப்புகள் AVGC-XR ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கி, பரவலான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
  • 300 முதல் 400 கல்லூரிகளில் AVGC-XR பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதுடன், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சி மற்றும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும். 
  • ஆன்லைன் வீடியோ / சமூக விளையாட்டுகள் மற்றும் ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகள் ஆகியவற்றை தனித்தனியாக வகைப்படுத்தும் வகையில் தேசிய தொழில் வகைப்பாடு மாற்றம் மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.
  • ஸ்டார்ட்அப் ஆதரவு – AVGC-XR ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தொடக்கநிலை நிதி, வழிகாட்டுதல் மற்றும் வளர்ப்பு ஆதரவு வழங்கப்படும்.
  • 2030ம் ஆண்டுக்குள் தேசிய அளவில் உருவாகும் மூல உள்ளடக்கம் மற்றும் ஆராய்ச்சி புதுமைகளில் 20 சதவிகித பங்கைப் பெறும் இலக்குடன், 'இந்தியாவின் அறிவுசார் சொத்து (மிறி) தலைநகரமாக' தமிழ்நாட்டை உருவாக்க இலக்கிடப்பட்டுள்ளது. 
  • AVGC-XR தொழில் நிறுவனங்கள் தொடர்பு, சந்தை அணுகல், முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில் வழிகாட்டுதல் உள்ளிட்ட அனைத்து துறைசார் செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பு மையமாக எல்காட் நிறுவனத்தில் ஒரு சிறப்பு வழிகாட்டுதல் மையம் செயல்படும்.

ENGLISH

  • TAMILNADU ANIMATION VISUAL EFFECTS GAMING COMICS & EXTENDED VIRTUAL REALITY POLICY 2026: To support Tamil Nadu's $1 trillion economy goal, the state aims to capture a 20% share of India's AVGC-XR market and create 200,000 high-skill jobs by 2030. 
  • In addition to establishing the ELCOT-Vian Centre of Excellence in Chennai, satellite centres will be set up in Coimbatore, Trichy, Madurai, Salem, and Tirunelveli in collaboration with industry and educational institutions.
  • Measures will be taken to foster widespread industrial growth by prioritizing the allocation of 'plug-and-play' infrastructure to AVGC-XR startups within TIDEL NEO parks located in Tier-II and Tier-III cities. 
  • AVGC-XR curricula will be introduced in 300 to 400 colleges, and world-class training and scholarships will be provided to students and faculty through the "Naan Mudhalvan" scheme. 
  • Advocacy will be undertaken to amend the National Industrial Classification to separately categorize online video/social games and online real-money games. Regarding startup support, early-stage funding, mentorship, and incubation assistance will be provided to AVGC-XR startups.
  • Tamil Nadu aims to become 'India's Intellectual Property (IP) Capital,' targeting a 20% share of the country's original content creation and research innovations by 2030. A dedicated facilitation centre within ELCOT will serve as a nodal hub for all sector-related activities, including industry networking, market access, investment promotion, and business guidance for AVGC-XR enterprises.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel