
5th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம்
- தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
- முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஒரு மணி நேர அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய அரசின் வழிகாட்டியாக தொலைநோக்கு ஆவணம் விரிவாக விவாதிக்கப்பட்டது.
- இந்தத் திட்ட அறிக்கையானது, உலகப் பொதுமறையான திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்களின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, 10 முக்கியத் தூண்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- மேலும், இவை 54 துணைத் தூண்களாக வகைப்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்தமாக 436 தொலைநோக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன
- உத்தரப்பிரதேசத்தின் பல்லியாவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் நாட்டின் 100வது ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டு இறுக்கிறது.
- இந்த சதுப்பு நிலம் பறவைகளின் பல்லுயிர் பெருக்கத்திற்கு வளமானவை என்பதால் ஏராளமான புலம்பெயர் பறவைகளையும் அங்கேயே தங்கியிருக்கும் பறவைகளையும் ஈர்த்துள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.
- 2025-26-க்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளையும் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டு ஜிடிபி மதிப்பீடுகளையும் மத்திய புள்ளிவிரங்கள் மற்றும் திட்டஅமலாக்க அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ளது.
- 2022-23 என்பதை அடிப்படையாகக் கொண்டு வருடாந்தர மற்றும் காலாண்டு ஜிடிபி மதிப்பீடுகளின் புதிய தொடர்களை 2026 பிப்ரவரி 27 அன்று வெளியிட்டது.
- 2024-25-ம் ஆண்டுக்கான முதலாவது திருத்தப்பட்ட ஜிடிபி மதிப்பீடு ரூ.299.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025-26-ம் நிதியாண்டின் ஜிடிபி ரூ.323.12 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 7.1 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 7.7 சதவீதம் அதிகமாகும்.
- காலாண்டு மதிப்பீடுகளைப் பொறுத்தவரை 2024-25-ம் நிதியாண்டின் 4வது காலாண்டின் ஜிடிபி ரூ.86.75 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்ட நிலையில், 2025-26-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டின் ஜிடிபி ரூ.94.65 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வளர்ச்சி விகிதம் 9.1 சதவீதம் என்பதை இது காட்டுகிறது.
- இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நாணயக் கொள்கைக் குழுவின் (MPC) மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று நிறைவடைந்தது. இதில் வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்தவித மாற்றமும் இன்றி 5.25% ஆக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரிசர்வ் வங்கி தனது கொள்கை நிலைப்பாட்டைத் தொடர்ந்து 'நடுநிலை' (neutral) என்றே தக்கவைத்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் உண்மையான ஜிடிபி (GDP) வளர்ச்சி கணிப்பு, இதற்கு முன் கணிக்கப்பட்ட 6.9%-லிருந்து 6.6% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- நடப்பு நிதியாண்டில் நுகர்வோர் விலை குறியீடு (CPI) அடிப்படையிலான பணவீக்கம் 5.1% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இது முந்தைய கணிப்பை விட 50 அடிப்படை புள்ளிகள் (0.50%) அதிகமாகும்.

