
10th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜவுளித் துறை வளர்ச்சிக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் கீழ், மேலும், 96 நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
- ஜவுளித் துறை வளர்ச்சிக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், 22 புதிய விண்ணப்பதாரர்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ 2,339.14 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்ட தயாரிப்புகள் வாயிலாக ரூ.15,561.34 கோடி மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடைபெறும் என்றும், இத்துறையில், 36,217 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் மூன்றாம் சுற்றில், மொத்தம் 96 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் ரூ.12,822.67 கோடி முதலீடும், ரூ.58,294.18 கோடி மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் புதிய 125 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்காக நாடு முழுவதும் ரூ.95,692 கோடி இடைக்கால நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
- இந்த இடைக்கால ஒதுக்கீட்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் வருமாறு உத்தரப்பிரதேசம்: ரூ.9,721.48 கோடி (அதிகபட்ச ஒதுக்கீடு), மேற்கு வங்காளம்: ரூ.8,508 கோடி, ஆந்திரப் பிரதேசம்: ரூ.7,707.21 கோடி, தமிழ்நாடு: ரூ.7,585.49 கோடி, ராஜஸ்தான்: ரூ.7,581.87 கோடி, பீகார்: ரூ.6,715.83 கோடி.
- மாநிலங்களுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.92,550.17 கோடியாகவும், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1,291.52 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இது தவிர, நிர்வாகச் செலவுகள் மற்றும் சமூகத் தணிக்கைக்காக ரூ.1,850.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் கட்டாயப் பங்களிப்பையும் சேர்த்தால், இந்தத் திட்டத்தின் மொத்த ஆண்டுச் செலவு சுமார் ரூ.1.51 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் அமையவிருக்கும் புதிய தலைநகரில் மத்திய அரசு அலுவலகங்களுக்கான பொது தொகுப்புக் கட்டடம் கட்டுவதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட செலவு ரூ.1,299.08 கோடி ஆகும்.
- உலகத் தரம் வாய்ந்த புதிய நகரமான அமராவதியில், இந்தத் திட்டம் ஒரு மைல்கல் முன்முயற்சியாகும். பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களை ஒரே குடையின் கீழ் அமைப்பதே இந்த முன்மொழிவின் நோக்கமாகும்.
- இந்த ஒருங்கிணைப்பு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கும் சேவைகள் எளிதில் சென்றடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
- ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் புதிய தலைநகரில், மத்திய அரசு பொது அலுவலகக் கட்டடம் 5.53 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
- இது இரண்டு தொகுதிகளைக் கொண்டதாக அமைக்கப்படும். தரைத்தளத்துடன் 13 தளங்களைக் கொண்ட ஒரு தொகுதி, தரைத்தளத்துடன் 10 தளங்களைக் கொண்ட மற்றொரு தொகுதியும் கட்டப்படும்.
- இந்த வளாகம் சுமார் 8,000 அதிகாரிகள், பணியாளர்கள் பணியாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1,800 கார்களை நிறுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டும். இந்தத் திட்டத்தின் மொத்தக் கட்டப்பட்ட பரப்பளவு 23,25,000 சதுர அடி (2,16,032 சதுர மீட்டர்) ஆகும்.
- கட்டுமானக் கட்டத்தின் போது, ஆண்டுக்குச் சுமார் 7,00,000 மனித-நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் செயல்பாட்டுக் கட்டம் ஆண்டுக்குச் சுமார் 50,000 மனித-நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- கோட்டேஷ்வர் சாலை முதல் விமான நிலையம் வரையில், 6.032 கி.மீ நீளமுள்ள வழித்தடத்தையும், 5 ரயில் நிலையங்களையும் (இதில் 4 உயர்மட்ட பாலம், பூமிக்கடியில் 1 நிலையம்) உள்ளடக்கியுள்ளது.
- இத்திட்டப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, அகமதாபாத்-காந்திநகர் இடையே, மொத்தம் 77.63 கி.மீ நீளமுள்ள மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டிற்கு வரும். இந்த வழித்தடத்தில், ஆசிரமம் சாலை, கோட்டேஷ்வர் பிராச்சின் மந்திர், சபர்மதி நதி, சர்தார் நகர், விமான நிலையம் ஆகிய ரயில் நிலையங்கள் அமையவுள்ள.
- இத்திட்டப் பணிகளுக்கான கட்டுமானக் கடன் தொகைக்கான, வட்டி உட்பட, இத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கான மொத்தச் செலவு ரூ.2,169.04 கோடியாகும்.
- அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம்-ஏ திட்டப் பணிகள், நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக உள்ளது. இது நகரின் மெட்ரோ ரயில் வழித்தடக் கட்டமைப்பின் முக்கிய விரிவாக்கப் பணியாக அமைகிறது.
- இத்திட்டத்தின் கீழ், 6.032 கி.மீ நீளமுள்ள புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இது விமான நிலையத்திற்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்குவது, போக்குவரத்து வசதிகள் இல்லாத முக்கிய குடியிருப்பு, வணிகப் பகுதிகளை இணைப்பது, பொதுப் போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்த உதவிடும்.
- குடியிருப்பு, வணிக மையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அகமதாபாத்-காந்திநகர் வழித்தடத்துடன் தடையின்றி இணைப்பதை இக்கட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மேலும், 2029 உலக காவல்துறை விளையாட்டுப் போட்டிகள், 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக இப்பகுதியில், விளையாட்டு வீரர்களுக்கான வசதிகள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

