//
Type Here to Get Search Results !

25th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

25th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி - முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு
  • தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான அதிரடி அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
  • இதன்படி, கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு (முழுமையாக) கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
  • அதேபோல, சிறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன் தொகையில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
  • ரூ.50,000-க்கு மேல் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.40,000 வரையிலும், சிறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 வரையிலும் கடன் தொகைக்கு ஏற்பப் படிப்படியாகத் தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
  • மேலும், ரூ.1,00,000-க்கு மேல் கடன் பெற்றுள்ள குறு மற்றும் சிறு விவசாயிகள் இருதரப்பிற்குமே தலா ரூ.5,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 14,22,555 விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள். 
  • இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம் தமிழக அரசுக்குக் கூடுதலாக ரூ.2,044.46 கோடி செலவினம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் குரிந்தர்வீர் சிங் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை
  • ராஞ்சியில் நடைபெற்ற தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பஞ்சாபைச் சேர்ந்த குரிந்தர்வீர் சிங் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்தார்.
  • 10.09 வினாடிகளில் இலக்கை எட்டித் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், இந்தியாவின் அதிவேக மனிதராக அவர் மிளிர்ந்தார். 10.10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel