
12th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அசாம் முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வா சர்மா
- நடந்து முடிந்த அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் (என்டிஏ) கூட்டணி, மொத்தம் உள்ள 126-ல் 101 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.
- இதன் மூலம் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியைப் பெற்ற இக்கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது.
- இதையடுத்து, நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற்ற என்டிஏ எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இந்நிலையில், ஹிமந்த பிஸ்வா சர்மா 2-வது முறையாக முதல்வராக இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
- அவருடன், பாஜகவைச் சேர்ந்த ரமேஷ்வர் தெலி, அஜந்தா நியோக் ஆகியோரும், அசாம் கன பரிஷத்தைச் சேர்ந்த அதுல் போரா, போடோலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த சரண் போரா ஆகிய 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
- பவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (மே 12) ஒரே நாளில் 35 பைசா வரை சரிந்து, அமெரிக்க டாலருக்கு நிகராக 95.63 ரூபாய் என்கிற வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது.
- நாணய மதிப்பின் இந்தத் தொடர் சரிவு, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்திப் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.
- ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எந்த அளவிற்குப் பலன் தரும் என வல்லுநர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

