//
Type Here to Get Search Results !

இந்தியாவில் போக்குவரத்து விபத்து குறித்த என்.சி.ஆர்.பி அறிக்கை 2024 / NCRB REPORT ON TRANSPORT ACCIDENT IN INDIA 2024

  • இந்தியாவில் போக்குவரத்து விபத்து குறித்த என்.சி.ஆர்.பி அறிக்கை 2024 / NCRB REPORT ON TRANSPORT ACCIDENT IN INDIA 2024: இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 546 பேர் போக்குவரத்து தொடர்பான விபத்துகளில் உயிரிழக்கின்றனர். 
  • தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் மட்டும் 1.99 லட்சம் பேர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
  • இது 2023-ஆம் ஆண்டுடன் (1.98 லட்சம் மரணங்கள்) ஒப்பிடுகையில் 0.79 சதவீதம் அதிகமாகும்.

பொருளாதார பாதிப்பு

  • இந்தியாவில் போக்குவரத்து விபத்து குறித்த என்.சி.ஆர்.பி அறிக்கை 2024 / NCRB REPORT ON TRANSPORT ACCIDENT IN INDIA 2024: போக்குவரத்து விபத்துகள் என்பது சாலை விபத்துகள், ரயில் விபத்துகள் மற்றும் ரயில்வே கிராசிங் விபத்துகளை உள்ளடக்கியது. 
  • இந்த விபத்துகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சிதைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் (ஜி.டி.பி) பாதிக்கிறது. சாலை விபத்துகளால் ஏற்படும் சமூக-பொருளாதார இழப்பு இந்தியாவின் ஜிடிபியில் சுமார் 3.14 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில வாரியான நிலவரம்

  • விபத்து மரணங்களில் உத்தரப் பிரதேசம் (27,071 மரணங்கள்), தமிழ்நாடு (20,390 மரணங்கள்) மற்றும் மகாராஷ்டிரா (19,475 மரணங்கள்) ஆகிய மூன்று மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்த மூன்று மாநிலங்கள் மட்டும் நாட்டின் ஒட்டுமொத்த விபத்து மரணங்களில் 33.6 சதவீத பங்கைக் கொண்டுள்ளன.

முக்கிய புள்ளிவிவரங்கள் (2024)

  • மொத்த போக்குவரத்து மரணங்கள்: 1.99 லட்சம்.
  • சாலை விபத்துகள்: இதில் 88% (1.75 லட்சம்) சாலை விபத்துகளால் நேரிட்டவை.
  • ரயில்வே விபத்துகள்: ரயிலில் இருந்து விழுந்தவர்கள் மற்றும் தண்டவாளத்தைக் கடந்தபோது ஏற்பட்ட விபத்துகளில் 17,029 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில்வே கிராசிங்குகளில் 1,888 பேர் மரணமடைந்துள்ளனர்.

வாகன வகைகள் மற்றும் காரணங்கள்

  • இருசக்கர வாகனங்கள்: சாலை விபத்து மரணங்களில் இருசக்கர வாகன விபத்துகளே அதிகம் (84,599 மரணங்கள்). இதில் தமிழ்நாடு (11,786) முதலிடத்தில் உள்ளது.
  • முக்கிய காரணம்: விபத்துகளுக்கு 'அதிவேகம்' (Speeding) தான் மிக முக்கியமான காரணம் (58%). இதற்கு அடுத்தபடியாக கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் (26.3%) உள்ளது.
  • நேரம்: அதிகப்படியான விபத்துகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை (20.8%) நிகழ்கின்றன.

நெடுஞ்சாலைகளின் நிலை

  • இந்தியாவில் போக்குவரத்து விபத்து குறித்த என்.சி.ஆர்.பி அறிக்கை 2024 / NCRB REPORT ON TRANSPORT ACCIDENT IN INDIA 2024: இந்தியாவின் மொத்த சாலை நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் வெறும் 2.1 சதவீதம் மட்டுமே. 
  • ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த சாலை விபத்துகளில் 29.8 சதவீதம் இந்தத் தேசிய நெடுஞ்சாலைகளில்தான் நடக்கின்றன. மாநில நெடுஞ்சாலைகளில் 22 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன.

ரயில்வே விபத்துகள்

  • ரயிலில் இருந்து விழுந்து அல்லது தண்டவாளத்தைக் கடக்கும்போது ஏற்படும் விபத்துகளில் மகாராஷ்டிரா (28.9%) முதலிடத்தில் உள்ளது. இது பெரும்பாலும் புறநகர் இரயில்வே நெட்வொர்க்குகளில் (Suburban trains) கூட்ட நெரிசலால் நடப்பதாகக் கூறப்படுகிறது. 
  • அதேபோல், ரயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன.

ENGLISH

  • NCRB REPORT ON TRANSPORT ACCIDENT IN INDIA 2024: On average, 546 people lose their lives in traffic-related accidents every day in India. According to the latest report released by the National Crime Records Bureau (NCRB), 199,000 people died in accidents in the year 2024 alone.
  • This represents an increase of 0.79 percent compared to 2023 (198,000 deaths).

Economic Impact

  • Traffic accidents encompass road accidents, train accidents, and railway crossing accidents. These accidents not only devastate the affected families but also impact the country's Gross Domestic Product (GDP). 
  • The socio-economic loss caused by road accidents is estimated to be approximately 3.14 percent of India's GDP.

State-wise Scenario

  • In terms of accident-related fatalities, three states—Uttar Pradesh (27,071 deaths), Tamil Nadu (20,390 deaths), and Maharashtra (19,475 deaths)—occupy the top three positions. 
  • These three states alone account for a 33.6 percent share of the country's total accident-related deaths.

Key Statistics (2024)

  • Total Traffic Deaths: 199,000.
  • Road Accidents: Of the total, 88% (175,000) were caused by road accidents.
  • Railway Accidents: 17,029 people lost their lives in incidents involving falling from trains or accidents occurring while crossing railway tracks. Additionally, 1,888 people died at railway crossings. 

Vehicle Types and Causes

  • Two-wheelers: Accidents involving two-wheelers account for the highest number of road accident fatalities (84,599 deaths). Among states, Tamil Nadu (11,786) ranks first in this category.
  • Primary Cause: 'Speeding' is the single most significant cause of accidents (58%). This is followed by negligent driving (26.3%).
  • Time: The highest number of accidents occur between 6:00 PM and 9:00 PM (20.8%).

Condition of Highways

  • NCRB REPORT ON TRANSPORT ACCIDENT IN INDIA 2024: National Highways constitute a mere 2.1 percent of India's total road network length. However, 29.8 percent of the country's overall road accidents occur on these very National Highways. State Highways account for 22 percent of accidents.

Railway Accidents

  • NCRB REPORT ON TRANSPORT ACCIDENT IN INDIA 2024: Maharashtra (28.9%) ranks first in accidents involving falls from trains or incidents occurring while crossing railway tracks. 
  • It is reported that this is primarily caused by overcrowding within suburban railway networks. Similarly, the states of Uttar Pradesh, West Bengal, and Kerala have recorded the highest number of fatalities in accidents occurring at railway crossings.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel