
7th APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 16%
- 2024-25 நிதியாண்டிற்கான ரிசர்வ் வங்கி அளித்த புள்ளி விபரங்களின் படி 16% பொருளாதார வளர்ச்சியுடன் தொழில் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை , கோவை ,தூத்துக்குடி, மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தியதன் மூலம் தற்போதைய அரசு ரூபாய் 160.53 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில் உற்பத்தி 82.6 சதவீதம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- தொழிற்சாலைகளில் ரூபாய் 9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தி செய்து இந்திய அளவில் தமிழ்நாடு தொழில்துறை உற்பத்தியில் இந்திய அளவில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது.
- இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15.43% தமிழ்நாட்டில் உள்ளதாகவும் , சுமார் 16% வளர்ச்சியுடன், இந்தியாவின் மிக வேகமாக வளரும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
- ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர்கள் பிரிவில் இந்தியர்கள் 487.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்கள். இது ஜூனியர் பிரிவில் உலக சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
- தகுதிச் சுற்றில் இந்தியர்கள் 581 புள்ளிகள் (17எக்ஸ்) பெற்று பதக்கச் சுற்றுக்கு முன்னேறினார்கள். இறுதிப் போட்டியில் பலாக் 243 புள்ளிகளும் முகேஷ் நெலவள்ளி 244.7 புள்ளிகளும் பெற்று மொத்தமாக 487.7 புள்ளிகள் பெற்றார்கள்.
- இந்தியா தங்கம், சீனா வெள்ளி, ஹங்கேரி வெண்கலம் வெல்ல, அமெரிக்கா நான்காமிடம் பிடித்தது. முன்னதாக, பலாக் (18 வயது) ஆசிய போட்டிகளில் 242.1 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். முகேஷ் ஜூனியர் உலக சாம்பியனாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

