.

18th APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பெரிய பொருளாதார நாடுகளில் 6ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா
- சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்ட பெரிய பொருளாதார நாடுகளின் தரவரிசையில் 5-ஆவது இடத்திலிருந்து 6-ஆவது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. பிரிட்டன் 6-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) அடிப்படை ஆண்டை 2011-12-இலிருந்து 2022-23-ஆக மாற்றியமைத்தால் இந்தியா ஓரிடம் பின்தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
- ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4-ஆவது இடத்துக்கு முன்னேற முடியும் என மத்திய அரசு எதிா்பாா்த்தது.
- ஐஎம்எஃப் தரவின், கடந்த 2024-இல் இந்தியாவின் ஜிடிபி 3.76 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. பிரிட்டனின் ஜிடிபி 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- கடந்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 3.92 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், பிரிட்டனின் ஜிடிபி 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயா்ந்தது.
- இந்தியா வேகமாக வளா்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இருந்த போதிலும், கடந்த சில மாதங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டது.
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு கடந்த 2024-இல் 84.57-இலிருந்து 2025-இல் 88.48-ஆக வீழ்ச்சியடைந்தது. நிகழாண்டில் மேலும் வீழ்ச்சியடைந்து 92.59 செல்லும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு வலுவடைந்து வருகிறது.
- ஐஎம்எஃப் தரவின் அடிப்படையில், நிகழாண்டில் பணமாற்ற விகிதத்தின் அடிப்படையில் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6-ஆவது இடத்தில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இருப்பினும், அடுத்த ஆண்டில் பிரிட்டனை மட்டுமல்லால் ஜப்பானையும் கடந்து 4-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நிலை தொடரும் நிலையில், 2031-இல் இந்தியா ஜொமனியை பின்னுக்குத் தள்ளி 3-ஆவது இடத்துக்குச் செல்லும்.

