
1st MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மதுரையில் பிரதமர் மோடி ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்
- பிரதமர் மோடி மரக்காணம் - புதுச்சேரி மற்றும் பரமக்குடி - ராமநாதபுரம் இடையேயான 4 வழிச்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட காரைக்குடி, மொரப்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பொள்ளாச்சி, சோழவந்தான் உள்ளிட்ட 8 முக்கிய ரயில் நிலையங்களைப் பிரதமர் திறந்து வைத்தார்.
- தமிழகத்தின் முக்கியச் சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்களான கும்பகோணம், வேலூர், ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய 'ஆகாஷ்வாணி' பண்பலை சேவைகளைத் தொடங்கி வைத்தார்.
- புதுச்சேரியில் ரூ.2,713 கோடியில் திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.1,142 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டங்களை தொடங்கிவைத்தார். ரூ.1,571 கோடியில் 74 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- காரைக்கால் என்.ஐ.டி.யின் அப்துல்கலாம் பிளாக், புதுச்சேரி பல்கலையின் கூடுதல் கட்டடங்கள் திறந்து வைத்தார். பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெள்ளி முருகன் சிலை, வெள்ளி வேலை வழங்கினார்
- நாட்டில் கடந்த பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 8.1 சதவீதம் அதிகரித்து ரூ.1.83 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
- இது இறக்குமதிகள் மூலம் கிடைத்த வருவாய் அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு விற்பனையில் முன்னேற்றம் காரணமாக நிகழ்ந்தது. 2025, பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் 8.1 சதவீதம் அதிகமாகும்.
- கடந்த 2025 பிப்ரவரியில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,83,609 கோடி. இதில் உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலம் கிடைக்கப் பெற்ற மொத்த வருவாய் 5.3 சதவீதம் உயா்ந்து, ரூ.1.36 லட்சம் கோடியாகவும், சரக்கு இறக்குமதி மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் 17.2 சதவீதம் உயர்ந்து ரூ.47,837 கோடியாக உள்ளது.
- இது இறக்குமதிகள் மூலம் கிடைத்த வருவாய் அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு விற்பனையில் முன்னேற்றம் காரணமாக நிகழ்ந்தது.
- திருப்பியளிக்கப்பட்ட மொத்த தொகை 10.2 சதவீத உயா்ந்து ரூ.22,595 கோடியாகவும், மொத்த நிகர ஜிஎஸ்டி வருவாய் 7.9 சதவீதம் உயா்ந்து, ரூ.1.61 லட்சம் கோடியாக உள்ளது.
- கடந்த 2025 பிப்ரவரியில் ரூ.13,481 கோடியாக இருந்த நிகர செஸ் வருவாய் ரூ.13,481 கோடி, தற்போது ரூ.5,063 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி விகிதங்கள் 5% மற்றும் 18% என இரண்டாக குறைக்கப்பட்டது. சில மிக ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களுக்கு அதிகபட்சமாக 40% ஆக அதிகரிப்பட்டது.
- இதனால் சுமாா் 375 பொருள்களுக்கான விலை ஆரம்பத்தில் குறைந்து ரூ.1.89 லட்சம் கோடி வசூலானது. அக்டோபரில் ரூ.1.96 லட்சம் கோடி, நவம்பரில் ரூ.1.70 லட்சம் கோடி, டிசம்பரில் ரூ.1.74 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது.
- நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.27 லட்சம் கோடியாகும். முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 8.3 சதவீத அதிகரித்து ரூ.18.71 லட்சம் கோடி.
- 2024-25 நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மொத்தம் ரூ.22.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இந்த ஜிஎஸ்டி வசூல் சுழற்சி ஏற்ற இறக்கங்களை விட கட்டமைப்பு ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கிறது.
- ராணுவத்துக்குத் தேவையான ஏவுகணைகள், துப்பாக்கிகள் உட்பட பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) தயாரித்து வருகிறது.
- அந்த வகையில் தற்போது குறுகிய தூர எதிரி இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- 'விஷார்ட்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த வகை ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணையை மனிதர்கள் எளிதாக சுமந்து செல்ல முடியும்.
- இதை டிஆர்டிஓ.வின் இம்ராத் ஆய்வு மையம், மற்ற டிஆர்டிஓ ஆய்வு மையங்கள், இந்திய தொழிற்துறை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி உள்ளது.

