
15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
- இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- இந்த கூட்டத்தில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக 34,237.39 கோடி ரூபாய்க்கான முதலீடு, 55,096 நபர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாகக்கூடிய ஒரு அற்புதமான பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
- மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் யும்நம் கேம்சந்த் சிங் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
- கூட்டணி அரசில் சமூக சமநிலையைப் பேணும் விதமாக, குகி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நெம்சா கிப்ஜென் மற்றும் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.எல். டிக்ஹோ ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.
- இதில் நெம்சா கிப்ஜென், டெல்லியில் உள்ள மணிப்பூர் பவனில் இருந்து காணொலி வாயிலாகப் பதவியேற்றுக் கொண்டார்.மேலும், பா.ஜ.க-வின் கோவிந்தாஸ் கொந்தவுஜம், என்.பி.பி கட்சியின் கே. லோகன் சிங் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்

