//
Type Here to Get Search Results !

இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு / REPORT ON NUMBER OF ELDERLY PEOPLE IN INDIA BY RBI

  • இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு / REPORT ON NUMBER OF ELDERLY PEOPLE IN INDIA BY RBI: நாட்டில் மக்கள் தொகை மற்றும் மாநிலங்கள் நிதி அடிப்படியாக கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதியோர்களின் எண்ணிக்கையை பொறுத்து 3 பிரிவுகளாக மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 
  • அந்த ஆய்வு அறிக்கையின்படி 15 சதவீதத்துக்கு அதிகமான முதியோர் உள்ள மாநிலங்களை முதுமை அடைந்த மாநிலங்கள் எனவும், 10 முதல் 15 சதவீதம் வரை முதியோர் உள்ள மாநிலங்கள் இடைநிலை மாநிலங்கள் என்றும், 10 சதவீதத்தை விட குறைந்த அளவில் முதியோர் உள்ள மாநிலங்களை இளைஞர் மாநிலங்கள் என்று வகைப்படுத்தி ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • இதில் 2026ம் ஆண்டு தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 15.8 சதவீதம் முதியோர்கள் உள்ள நிலையில், இது 2031ம் ஆண்டு 20.9 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • நாட்டில் 2016ம் ஆண்டு அனைத்து மாநிலங்களும் இளைஞர்கள் மற்றும் இடைநிலை மாநிலங்கள் பட்டியலில் இருந்த நிலையில் நடப்பாண்டு ஆய்வு அறிக்கையின் படி, நாடு முழுவதும் 60 வயதை கடந்த முதியோர் எண்ணிக்கை 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2036ம் ஆண்டுக்குள் 14.9 சதவீதமாக உயரும் என கூறப்படுகிறது.
  • அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின் படி, கேரளாவில் அதிகபட்சமாக 18.7 சதவீத முதியோருடன் முதுமை மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 
  • இதனால் 2031ம் ஆண்டு முதியோர் தொகை அம்மாநிலத்தில் 22.8 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 60 வயதை கடந்தவர்கள் 15.8 சதவீதத்துடன் 2ம் இடத்தில் உள்ளது. 
  • இது 2031ம் ஆண்டு 20.8 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதார தாக்கம் ஏற்பட்டு ஓய்வூதியம், சுகாதாரம், சமூக பாதுகாப்புக்கு மாநில அரசுகளின் செலவினங்கள் கணிசமாக அதிகரிக்கும். 
  • மேலும் உழைக்கும் மக்கள் தொகை குறைவதால், வருவாய் வளர்ச்சி குறைந்து மாநிலத்தின் வரி வருவாய் திறன் பாதிக்கப்பட்டு நிதிச்சுமை அதிகரித்து பெரும் சவால் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என கூறப்படுகிறது.

முதியோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

  • இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு / REPORT ON NUMBER OF ELDERLY PEOPLE IN INDIA BY RBI: மக்கள் தொகை உருமாற்றத்தால், அரசுகளுக்கு ஏற்படும் நிதிச்சுமையை சமாளிக்கவும், நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும், பொருளாதார தாக்கத்தை ஈடு செய்யும் வகையில் முதியோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 
  • புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொழிலாளர் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வந்து, தொழில்நுட்பங்கள் கொண்டு வந்து உற்பத்தி திறனை அதிகரிப்பது மாநில அரசுகளுக்கு தேவையாக உள்ளது.

மக்கள் தொகை கட்டுப்பாட்டால் பிறப்பு விகிதம் குறைவு

  • இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு / REPORT ON NUMBER OF ELDERLY PEOPLE IN INDIA BY RBI: நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பால் உணவு பற்றாக்குறை, வேலை வாய்ப்பு பிரச்னை, சுகாதார சீர்கேடு போன்ற பாதிப்புகளை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் தொகை கட்டுப்பாடு முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்தது. 
  • கடந்த காலங்களில் மக்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்று கூட்டு குடும்பங்களாக இருந்து வந்தனர். அரசின் பல்வேறு முடிவுகளால் குழந்தைகள் பெற்றுக் கொள்வது படிப்படியாக குறைந்து இன்று ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற நிலை உள்ளது. 
  • மக்கள் தொகை கட்டுப்பாட்டால் குழந்தைகள் பிறப்பு குறைந்து விட்டது. அதற்கு மாறாக முதியோர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் உழைப்பவர்கள் குறைந்து வருகின்றனர்.

குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஊக்கப்படுத்தப்படுமா?

  • இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு / REPORT ON NUMBER OF ELDERLY PEOPLE IN INDIA BY RBI: நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைளால் முதியோர் உயர்வு அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் ஒன்றிய, மாநில அரசுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகள், திட்டங்கள் அனைத்தும் மாற்றம் கொண்டு வரப்பட்டு, குழந்தைகளை பெற்றுக் கொள்வதை அரசுகள் ஊக்கபடுத்தினால் மட்டுமே இளைஞர் இந்தியாவை உருவாக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ENGLISH

  • REPORT ON NUMBER OF ELDERLY PEOPLE IN INDIA BY RBI: The Reserve Bank of India has released a research report based on the population and financial status of the states in the country. The states have been categorized into three groups based on the number of elderly people. 
  • According to the report, states with more than 15 percent elderly population are classified as aging states, those with 10 to 15 percent are classified as intermediate states, and those with less than 10 percent are classified as young states.
  • The report states that in Tamil Nadu, the elderly population, which stands at 15.8 percent in 2026, is likely to increase to 20.9 percent by 2031. While all states were in the young and intermediate categories in 2016, according to this year's report, the number of people aged 60 and above has increased to 11.4 percent nationwide. This is expected to rise to 14.9 percent by 2036.
  • According to the report, which was based on the population of all states, Kerala tops the list of aging states with the highest percentage of elderly people at 18.7 percent. 
  • It is projected that the elderly population in that state will increase to 22.8 percent by 2031. Following this, Tamil Nadu is in second place with 15.8 percent of its population aged 60 and above. 
  • This is expected to increase to 20.8 percent by 2031. This will lead to economic impact, significantly increasing state government expenditures on pensions, healthcare, and social security. 
  • Furthermore, the decrease in the working-age population will reduce revenue growth, affecting the state's tax revenue capacity, increasing the financial burden, and creating a significant challenge.

Skill Development Training for the Elderly

  • REPORT ON NUMBER OF ELDERLY PEOPLE IN INDIA BY RBI: To cope with the financial burden on governments due to demographic transformation, to ensure financial stability, and to mitigate the economic impact, it is essential to provide skill development training to the elderly. 
  • It is necessary for state governments to bring about changes in labor policies using new technologies and increase productivity by implementing these technologies.

Low birth rate due to population control

  • REPORT ON NUMBER OF ELDERLY PEOPLE IN INDIA BY RBI: Due to the increase in population in the country, the population control initiatives of the central and state governments have made significant progress in preventing problems such as food shortages, unemployment, and health issues. 
  • In the past, people had many children and lived in joint families. Due to various government policies, the number of children born has gradually decreased, and today the situation is one child per family. 
  • The birth rate has decreased due to population control. Conversely, the number of elderly people is growing rapidly. As a result, the number of working people is decreasing.

Will having children be encouraged?

  • REPORT ON NUMBER OF ELDERLY PEOPLE IN INDIA BY RBI: Given the increase in the elderly population due to the measures taken to control the population in the country, social activists have demanded that only by changing all the restrictions and schemes imposed by the central and state governments on having children, and by encouraging people to have children, can a youthful India be created.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel