
19th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- அரசு ஊழியர்களின் நலனிலும் அவர்தம் குடும்பத்தினரின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பினை இவ்வாண்டு முதலே வழங்க உத்தரவு வழங்கியும், அரசு ஊழியர்களின் நலன்காக்க பல்வேறு சலுகைகளையும் இச்சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார்.
- நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினையும், விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம், இரண்டு மகள்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும், விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர் கல்வி பயின்றிடும் மகளின் உயர் கல்விக்கான உதவித்தொகையாக 10 லட்சம் ரூபாய் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்கள்.
- மேற்குறிப்பிட்ட இச்சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக்கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கிட முன்வந்துள்ளன.
- மேலும், இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.
- இந்தச் சலுகைகளை வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டன.
- உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாகுபாடின்றி ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஓய்வூதியம் வழங்குவதில் வேறுபாடு என தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
- அந்த நேரம் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கையில், ''மாவட்ட நீதிபதியாக இருந்தோ அல்லது வழக்கறிஞர்களாக இருந்தோ உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்பட்டாலும், ஓய்வுபெற்ற அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ''ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்'' என்ற கொள்கை பொருந்தும்'' என்று தெரிவித்தது.
- மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள்,"உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.
- உயர்நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருக்கும்போதே இறந்தால், அவர் நிரந்தரமாகப் பணியாற்றினாலும் அல்லது கூடுதல் பொறுப்பில் இருந்தாலும், அவரது மனைவி அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மத்திய அரசு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்" என்று அறிவித்துள்ளது.