Type Here to Get Search Results !

18th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


18th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி - இஸ்ரோ அறிவிப்பு
  • இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ உருவாக்கிய பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
  • இந்த ராக்கெட்டில், புவி கண்காணிப்புக்காக புதிய இஒஎஸ்-09 செயற்கைக்கோள் (ரிசாட்-1பி) ஏற்றப்பட்டிருந்தது. ஆரம்ப கட்டமாக, ராக்கெட்டின் முதல் மற்றும் இரண்டாவது பகுதிகள் வெற்றிகரமாக பிரிந்தன. 
  • ஆனால், மூன்றாவது பகுதி பிரியும் நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இந்த முயற்சி முழுமையாக நிறைவேறவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.
ரோமானியா சூப்பர்பெட் செஸ் கிளாசிக் போட்டி - பிரக்ஞானந்தா சாம்பியன்
  • ரோமானியாவின் புகாரெஸ்ட் நகரில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் போட்டிகள் நடந்து வந்தன. இப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா 9 சுற்றுகள் முடிவில், 5.5 புள்ளிகள் பெற்றார். 
  • அவரைப் போல், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரும் பிளிட்ஸ் செஸ் முன்னாள் உலக சாம்பியனுமான மேக்சிமா வஸியெர் லக்ரேவ், ஈரான் கிராண்ட் மாஸ்டர் அலிரெஸா ஃபிரோஸ்ஜா ஆகியோரும் 5.5 புள்ளிகள் பெற்றதால்,
  • யாருக்கு முதலிடம் என்பதை தீர்மானிக்க டைபிரேக்கர் போட்டிகள் நடத்தப்பட்டன. பிரக்ஞானந்தா - ஃபிரோஸ்ஜா இடையே நடந்த போட்டி டிரா ஆனது. 
  • அதைத் தொடர்ந்து, ஃபிரோஸ்ஜா - மேக்சிமா இடையே நடந்த போட்டியும் டிரா ஆனது. அதையடுத்து, மேக்சிமாவுடன் நடந்த போட்டியில் பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றதால் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டிகளில் உலக செஸ் சாம்பியன் குகேஷ் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று 9ம் இடம் பிடித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel