
17th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
- தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
- அவற்றில், அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அனுப்பப்பட்ட 18 மசோதாக்களில் 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
- உலகளவில் அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்து வருவதால், உலகப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க ஆபத்தில் இருப்பதாக ஐநாவின் உலகப் பொருளாதாரத்தின் நிலைமை மற்றும் கண்ணோட்டத்தின் ஆய்வு கூறுகிறது. மேலும், பல நாடுகள் மெதுவாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- அதுமட்டுமின்றி, உலகளவில் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் இருந்தபோதிலும், இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஐநா தெரிவிக்கிறது.
- மேலும், நடப்பு நிதியாண்டில் 6.3 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன், இந்தாண்டில் உலகின் மிக விரைவான வளர்ச்சியின் முக்கிய பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்றும் கூறியது.
- அடுத்தாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 6.4 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இது முந்தையவற்றுடன் ஒப்பிடும்போது, ஒரு சிறிய சரிவாகவே கொள்ளப்படுகிறது.
- மற்ற முக்கிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், சீனா 4.6 சதவிகிதமும், அமெரிக்கா 1.6 சதவிகிதமும், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சதவிகிதமும், ஜப்பான் வெறும் 0.7 சதவிகிதம் மட்டுமே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும், ஜெர்மனி 0.1 சதவிகித அளவில் எதிர்மறையான வளர்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்றும் கூறுகிறது.
- கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்றுவருகிறது டைமண்ட் லீக் தடகளத்தின் 16 ஆவது சீசன். இந்த போட்டியில் கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
- இவர்களுடன் ஹரியாணாவை சேர்ந்தவரும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவருமான நீரஜ் சோப்ராவும் களம் கண்டார் .
- தோஹா டைமண்ட் லீக்கில் முதல் முயற்சியில் 88.40 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா , தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் 'நோ த்ரோ' என்றானதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மூன்றாவது முயற்சியில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார்.
- இந்தவகையில், தனது 18 ஆவது டைமண்ட் போட்டியில் , 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ள்ளார். இதன்மூலம், இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 25-வது வீரர் என்ற என்ற பெருமையையும் பெற்றார், நீரஜ் சோப்ரா.