Type Here to Get Search Results !

21st AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


21st AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024
  • சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (21.08.2024) 'தமிழ்நாடு முதலீட்டு மாநாடு- 2024' நடைபெற்று வருகிறது. 
  • முதலீட்டாளர்கள் மாநாட்டில் முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ. 51,157 கோடி மதிப்பிலான 28 தொழில் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
  • இந்த நிகழ்வில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
  • தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் முஅடிக்கல் நாட்டப்பட்ட திட்டப் பணிகள் குறித்த தகவல்களின் முழு விவரம் வருமாறு Sembcorp - ரூ. 36,238 கோடி, Ramatex - ரூ.1,160 கோடி, Ascendas Firstspace - ரூ.1,000 கோடி, ESR Phase - ரூ.800 கோடி, Maple Tree - ரூ.500 கோடி, Saint Gobain - ரூ.3,400 கோடி, CHENNSTAR - ரூ.260 கோடி, Hyundai Motor - ரூ.180 கோடி, Mitsuba Corporation - ரூ.155 கோடி, SATRAC - ரூ.114 கோடி, Pragati Warehousing - ரூ.1,500 கோடி, Capgemini - ரூ.1,000 கோடி, BIADS - ரூ.650 கோடி, Ceebros - ரூ.600 கோடி, Greenbase - ரூ.500 கோடி, Bonfiglioli - ரூ.400 கோடி, Polyhose - ரூ.400 கோடி, KRR Air - ரூ.400 கோடி, Baettr India - ரூ.325 கோடி, Maiva Pharma - ரூ.300 கோடி, Schwing Stetter - ரூ.300 கோடி, Softgel - ரூ.230 கோடி, G-Care Council - ரூ.225 கோடி, Tablets India - ரூ.200 கோடி, ARaymond Fastener - ரூ.100 கோடி, Basant Betons - ரூ.100 கோடி, Tata Communications - ரூ.70 கோடி, Hical Technologies - ரூ.50 கோடி.
நரேந்திர மோடியுடன் மலேசிய பிரதமர் அன்வர் சந்திப்பு
  • இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் உடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தியா மற்றும் மலேசியா நாடுகளிடையே டிஜிட்டல் மயமாக்கம், ராணுவ பாதுகாப்பு தளவாட உற்பத்தி, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய தொழிலாளர்களின வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புஉட்பட இருதரப்புக்கும் இடையேஎட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக இந்தியாவின் யுபிஐ, மலேசியாவின் பேமண்ட் நெட்வொர்க்குடன் (பேநெட்) இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.
  • இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, இந்திய தொழிலாளர்கள் மலேசியாவுக்கு செல்வதை எளிதாக்குவது, மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்திய கடற்படை பி.இ.எம்.எல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • இந்திய கடற்படை மற்றும் பி.இ.எம்.எல் லிமிடெட் ஆகியவை கடல் உபகரணங்கள் மற்றும் அமைப்புகளின் உள்நாட்டு மயமாக்கலை அதிகரிக்க இணைந்து செயல்படுகின்றன.
  • இது இந்திய கடற்படையின் முக்கிய கடல்சார் பொறியியல் கருவிகளை உள்நாட்டு மயமாக்குவதை நோக்கிய ஒரு பெரிய படி இதுவாகும். 
  • பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள 'அட்டவணை ஏ' நிறுவனமும், இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் கனரக பொறியியல் உற்பத்தி நிறுவனமுமான பி.இ.எம்.எல் லிமிடெட் 2024, ஆகஸ்ட் 20 அன்று இந்திய கடற்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • புதுதில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் இந்திய கடற்படையின் அதிகாரி (D&R) ரியர் அட்மிரல் கே. சீனிவாஸ் மற்றும் பெங்களூர் பிஇஎம்எல்--லின் திரு அஜித் குமார் ஸ்ரீவஸ்தவ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. 
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்திற்கும் தபால் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தபால் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் கையெழுத்தானது. 
  • பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள புதிய அலகுகளை அஞ்சல் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் நேரடியாக சரிபார்ப்பு செய்வார்கள். 
  • இந்த நேரடி சரிபார்ப்புக்கு அஞ்சல் துறை ஊழியர்களுக்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பயிற்சி அளிக்கும்.
சிஎஸ்ஐஆர், எல்யுபி ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும் (CSIR-சிஎஸ்ஐஆர்) லகு உத்யோக் பாரதியும் (LUB) சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில் 21 ஆகஸ்ட் 2024 அன்று குறு, சிறு தொழில்முனைவோருக்கு சிஎஸ்ஐஆர் தொழில்நுட்பங்களைக் கொண்டு செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • லகு உத்யோக் பாரதி என்பது 1994 முதல் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட குறு  சிறு தொழில்களுக்கான அகில இந்திய அமைப்பாக திகழ்கிறது. 
  • இந்தியாவின் 27 மாநிலங்களில் 575 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 51000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனமாகும் இது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், சிஎஸ்ஐஆரின் 100 தொழில்நுட்பம் / தயாரிப்புகளை 100 நாட்களுக்குள் அடையாளம் அடையாளம் காணப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கொண்டு செல்வது ஆகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel