Type Here to Get Search Results !

13th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


13th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா
  • போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். 
  • இதனிடையே செந்தில் பாலாஜி கவனித்து வந்த இலாக்காக்கள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார். 
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். ஆனால் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தனது உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டார். 
  • இதனையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்த செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விடுவிக்க கோரி ஜாமின் மனு தாக்கல் செய்தார். கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 
  • செந்தில் பாலாஜி 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக செந்தில் பாலாஜி தாமாக முன்வந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. 
  • இந்த பரபரப்பான சூழ்நிலையில் செந்தில் பாலாஜி ராஜிநாமாவிற்கான காரணம் வெளியாகியுள்ளது. ஜாமின் மனு விசாரணையின் போது செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருப்பதால் சாட்சியை கலைக்க கூடும் என அமலாக்கத்துறை வாதாடி வருகிறது. இதன் காரணமாகவே தனது ஜாமின் மனு நிராகரிக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. 
  • இந்நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. 
  • இதுகுறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'முதலமைச்சர், நேற்று (பிப். 12), தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜிநாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்து ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி, அதிபர் அல் நஹ்யான்
  • அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார்.
  • இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது இரு தரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 
  • அத்துடன், இரு தலைவர்களின் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
  • அதனைத்தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ சேவையை பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
  • யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான கட்டணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்த முடியும். 
  • நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இந்த கட்டண முறை செயல்பாட்டில் உள்ளது. இந்தியாவின் யுபிஐ பணம் செலுத்தும் முறையில் இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளன.
  • இதில், இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் இந்தியாவின் யுபிஐ பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க இந்திய சமூகத்தினர் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு 'அஹ்லான் மோடி' என்று பெயரிடப்பட்டுள்ளது. 
  • வணக்கம், வரவேற்பு ஆகிய சொற்களுக்கு அரபு மொழியில் அஹ்லான் என்று பெயர். இந்த நிகழ்ச்சி அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் முதல் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்
  • ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினைப் பெறும் முதல் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் எனும் பெருமையை இளம் வேகப் பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப் பெற்றுள்ளார்.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. 
  • அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் ஷமர் ஜோசப். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய தனது அபார பந்துவீச்சினால் உதவினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel