3rd DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஐநாவின் சிஏசி நிர்வாக குழுவில் இந்தியா தேர்வு
- ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் 46வது கூட்டம் ரோமில் நடந்தது. இந்த குழுவின் நிர்வாக குழுவில் ஆசிய பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இந்தியா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- ஐநாவின் சிஏசியின் நிர்வாக குழு உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல்வேறு உணவு பொருள் வகைகளுக்கான சர்வதேச தரத்தை அமைக்கும் செயல்பாட்டில் இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்கும்.
- மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும், (டிச.3) காலை முதல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
- அதன்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நிலவரப்படி, பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதியை வீழ்த்தி, காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
- 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மைக்கு 116 தொகுதிகள் தேவை. அந்த வகையில், தற்போது பாஜக 165 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மையை அடுத்து, அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால் அம்மாநிலத்தில், மீண்டும் பாஜக ஆட்சி அமைய இருப்பது உறுதியாகி உள்ளது. அம்மாநிலத்தில் தற்போது சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
- 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மைக்கு 100 தொகுதிகள் தேவை. அந்த வகையில், தற்போது பாஜக 117 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 67 இடங்களில் உள்ளது. பெரும்பான்மையை அடுத்து, அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியமைக்க இருக்கிறது.
- 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில், ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை. அந்த வகையில், தற்போது பாஜக 54 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 36 இடங்களில் உள்ளது. பெரும்பான்மையை அடுத்து, அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியமைக்க இருக்கிறது.
- 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவிற்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மையாக 60 தொகுதிகள் தேவை. அந்த வகையில், தற்போது காங்கிரஸ் 63 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) 40 இடங்களில் உள்ளது. பெரும்பான்மையை அடுத்து, தெலங்கானாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், அக்கட்சி முதன்முறையாக அங்கு ஆட்சியமைக்க இருக்கிறது.