மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் Junior Secretariat Assistant / LDC Grade வேலைவாய்ப்பு / SSC CLERK RECRUITMENT 2023
Staff Selection Commission நிறுவனத்தில் Junior Secretariat Assistant / Lower Division Clerk Grade பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 02.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம்: Staff Selection Commission
- பணியின் பெயர்: Junior Secretariat Assistant / Lower Division Clerk Grade
- மொத்த பணியிடங்கள்: 114
ஊதியம்
SSC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் (Pay Level-2) ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு
SSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 50 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை
SSC தேர்வானது தில்லியில் உள்ள பணியாளர் தேர்வு ஆணையத்தால் மட்டுமே நடத்தப்படும். தேர்வர்களுக்கான நேர அட்டவணை மற்றும் நகரம்/தேர்வு மையம் ஆகியவற்றைக் குறிக்கும் தேர்வு பற்றிய தகவல்கள், தேர்வு நடைபெறும் தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும்.
விண்ணப்பிக்கும் முறை
SSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (02.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.