இந்திய தரநிலைகள் பணியகத்தில் Scientist B காலிப்பணியிடங்கள்
BIS RECRUITMENT 2023
இந்திய தரநிலைகள் பணியகம் BIS நிறுவனத்தில் Scientist - B பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 03.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம்: இந்திய தரநிலைகள் பணியகம் BIS
- பணியின் பெயர்: Scientist - B
- மொத்த பணியிடங்கள்: 09
காலிப்பணியிடங்கள் விவரம்
- Agriculture Science – 2
- Civil Engineering – 3
- Electrical Engineering – 3
- Textile Engineering – 1
தகுதி
- Civil, Electrical & Textile Engineering பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு சமமான மதிப்பெண்களுடன் அறுபது சதவீத மதிப்பெண்களுக்குக் குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2021/2022/2023 இன் செல்லுபடியாகும் கேட் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- Agriculture Science பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து வேளாண்மையில் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம், அறுபது சதவீத மதிப்பெண்களுக்குக் குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செல்லுபடியாகும் ICAR AICE-JRF/SRF(Ph.D) – 2023 தேர்வு மதிப்பெண் அட்டையை Agronomy Soil Sciences/ Soil Science & Agriculture Chemistry Agriculture Entomology/ Entomology Agricultural Chemicals/Chemistry துணைப் பிரிவுகளில் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
BIS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 03.11.2023 தேதியின் படி, அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை
BIS பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
BIS பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (03.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.