27th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
குஜராத்தின் சோட்டா உதய்ப்பூரில் உள்ள போடேலியில் ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி, குஜராத்தின் சோட்டா உதய்பூர், போடேலியில் ரூ.5200 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- திறன்மேம்பாட்டுப் பள்ளித் திட்டத்தின் கீழ் ரூ.4500 கோடிக்கும் அதிகமான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அர்ப்பணிப்பு, 'வித்யா சமிக்சா கேந்திரா 2.0' மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை இதில் அடங்கும்.
- குஜராத்தில் அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) தஹோட் பண்பலை ஒலிபரப்பு நிலையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
- மாநிலத்தின் போடேலியில் நடந்த நிகழ்ச்சியில் 10 கிலோவாட் திறன் கொண்ட பண்பலை ஒலிபரப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.
- இந்த நிலையம் ரூ.11.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இது சுமார் 55 கி.மீ சுற்றளவில் உள்ள உள்ளூர் வாசிகளை சென்றடையும். இது பழங்குடி மாவட்டமான தஹோட்டின் சுமார் 75% பகுதியை உள்ளடக்கியது.
- மேலும், அலிராஜ்பூர் மற்றும் ஜாபுவா உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தின் அண்டை பழங்குடி மாவட்டங்களையும் இந்த அலைவரிசையின் ஒலிபரப்பு சென்றடையும்
- கடந்த மார்ச் 10ம் தேதி டோர்னியர் டூ-228 விமானங்களை கொள்முதல் செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உடன் ஒப்பந்தம் செய்தது.
- இந்த ஒப்பந்தம் ஆனது 667 கோடி ரூபாய் மதிப்பில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆறு டோர்னியர் டூ-228 விமானங்களை இந்திய விமானப்படைக்கு வழங்க வேண்டும். அந்த வகையில், இன்று முதலாவது டோர்னியர் டூ-228 விமானத்தை இந்திய விமானப்படைக்கு வழங்கியுள்ளது.
- இந்த டோர்னியர்-228 ரக விமானமானது 19 இருக்கைகள் கொண்ட பல்நோக்கு இலகுரக போக்குவரத்து விமானமாகும். இதில் ஒவ்வொரு புதிய விமானமும் மேம்படுத்தப்பட்ட என்ஜின்கள், ஐந்து பிளேட் கலப்பு ப்ரொப்பல்லர்கள், பல மின்னணு உபகரணங்களை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் கண்ணாடி காக்பிட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
- இந்த விமானங்கள் போக்குவரத்து, விமானப்படை பயிற்சி, கடலோர காவல் பணி, கடல்சார் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. புதிய டோர்னியர் டூ-228 விமானத்தின் அறிமுகம் இந்த பணிகளில் இந்திய விமானப்படையின் திறன்களை அதிகரிக்கும். இது இந்தியாவின் வான்வெளியைப் பாதுகாக்க இந்திய விமானப்படைக்கு உதவும்.
- சீனாவின் ஹாங்சோ நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிப் போட்டிகள் களைகட்டி வருகின்றன. நான்காவது நாளில் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீராங்கனைகள் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்தனர்.
- மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மனுபக்கர், ஈஷா சிங், சங்வான் ரித்தம் அடங்கிய இந்திய அணி 1,759 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை வென்றது.
- மகளிர் 25மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் ஈஷா சிங் 34 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
- மகளிர் 50 மீட்டர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தினர். சிஃப்ட் கவுர் சம்ரா 469.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றதுடன், புதிய உலக சாதனையையும் படைத்தார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான ஆஷி 451 .9 புள்ளிகளை கைப்பற்றி வெண்கல பதக்கம் வென்றார்.
- துப்பாக்கிச்சுடுதலின் ஆடவர் ஸ்கீட் பிரிவில், குழு மற்றும் தனிநபர் என இரண்டிலும் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது. அத்துடன் ஸ்கீட் தனி நபர் பிரிவில் முதல் முறையாக பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார் ஆனந்த் ஜீத் சிங்.
- துப்பாக்கிச்சுடுதலில் நான்காவது நாளில் மட்டும் இரண்டு தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர்.
- இதேபோன்று பாய்மர படகுப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்தார். ஆடவர் ILCA7 பாய்மர படகு பிரிவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
- ஒட்டுமொத்தத்தில் 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் 7வது இடத்தில் உள்ளது இந்தியா.