Type Here to Get Search Results !

23rd JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


23rd JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வியட்நாமுக்கு போர்க்கப்பலை வழங்கியது இந்தியா
  • தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாம் நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் வடக்குப் பகுதி சீன எல்லையை ஒட்டி இருக்கிறது. கிழக்குப் பகுதியில் தென் சீனக் கடல் இருக்கிறது. எல்லைப் பகுதி மற்றும் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடிக்கிறது.
  • இதன் காரணமாக கடந்த 1979-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அப்போது வியட்நாமுக்கு ராணுவ ரீதியாக இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியது.
  • வியட்நாம் கடற்படைக்கு இந்தியா சார்பில் ஐஎன்எஸ் கிர்பான் என்ற போர்க்கப்பல் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டில் கிர்பான் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. 
  • 1,450 டன் எடை,90 மீட்டர் நீளம், 10.45 மீட்டர் அகலம் கொண்ட இந்த போர்க்கப்பலில் 12 அதிகாரிகள், 100 மாலுமிகள் பணியாற்றினர். இதில் அதிநவீன ஏவுகணைகள், நாசகார ஆயுதங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
  • வியட்நாமின் கேம் ரான் நகர கடற்படைத் தளத்தில் நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் கிர்பான் போர்க்கப்பலை இந்திய கடற்படைத் தளபதி ஹரிகுமார் வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தார்.
கொரியா ஓபன் பேட்மின்டன் தொடர்: சாத்விக் - சிராக் சாம்பியன்
  • கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்றது.
  • பைனலில் முதல் நிலை ஜோடியான இந்தோனேசியாவின் பஜர் அல்பியான் – முகமது ரியான் அர்டியான்டோ உடன் நேற்று மோதிய இந்திய இணை முதல் செட்டை 17-21 என்ற கணக்கில் இழந்து பின்தங்கியது. 
  • எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த சாத்விக் – சிராக் இணை 17-21, 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.
  • நடப்பு சீசனில் சுவிஸ் ஓபன், ஆசிய சாம்பியன்ஷிப், இந்தோனேசியா ஓபன் தொடர்களைத் தொடர்ந்து சாத்விக் – சிராக் வென்ற 4வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel