Type Here to Get Search Results !

11th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


11th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய மகளிர் அணியினர் முதன்முறையாக சாம்பியன்
  • ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்று வரும் மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், தென் கொரிய அணியும் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரிய மகளிர் அணியை வீழ்த்தினர்.
  • இதன்மூலம் முதல்முறையாக இந்திய மகளிர் அணியினர் ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்திய அணிக்காக 22-வது நிமிடத்தில் அன்னுவும், 41-வது நிமிடத்தில் நீலமும் கோல் அடித்து அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தனர்.
  • ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது மகளிர் அணியும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளனர். 
  • இதன் மூலம், 2 ஜூனியர் அணிகளும் இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் சிலி நாட்டில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.
2023 உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடியது ஆஸ்திரேலியா
  • ஓவல் மைதானத்தில் கடந்த 7ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியுடன், கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன் குவித்தது. ஹெட் 163, ஸ்மித் 121, வார்னர் 43, கேரி 48 ரன் விளாசினர். 
  • அடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 173 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 84.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, 444 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 234 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 
  • 209 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடி 'கதாயுதம்' வடிவிலான கோப்பை மற்றும் முதல் பரிசாக ₹13.22 கோடியை தட்டிச் சென்றது. 
  • முதல் இன்னிங்சில் 163 ரன் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பைனலில் தோற்று 2வது இடம் பிடித்த இந்தியா ₹6.60 கோடியுடன் திருப்தி அடைந்தது. 
  • ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஐசிசி உலக கோப்பை டி20 என அத்தனை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா வசப்படுத்தி உள்ளது.
பிரெஞ்ச் ஓபன் - 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாறு படைத்தார் ஜோகோவிச்
  • பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நார்வே வீரர் காஸ்பர் ரூட்டை 7-6 (7-1), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 
  • 34வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடிய ஜோகோவிச் பெறும் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். முன்னதாக, ஆடவர் ஒற்றையர் டென்னிஸில் ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றதே சாதனையாக இருந்தது. 
  • அதனை ஜோகோவிச் இன்று முந்தினார். ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் குறைந்தது மூன்று முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் படைத்தார்.
  • இதில் இன்னொரு ஆச்சரியமாக, ஜோகோவிச் வென்ற 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 10க்கும் மேற்பட்டவை அவர் 30 வயதுக்குமேல் வென்றவை. 
முதலாவது தேசிய பயிற்சி மாநாட்டைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
  • புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேசக் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் முதலாவது தேசிய பயிற்சி மாநாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
  • இந்தப் பயிற்சி, அதிகாரிகளின் திறனை வளர்ப்பதுடன், அரசின் முழுமையான அணுகுமுறையையும், மக்கள் பங்கேற்பு உணர்வையும் வளர்க்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். 
  • பயிற்சி நிறுவனங்களில் பணி நியமனம் என்பது தண்டனையாகக் கருதப்பட்ட பழைய அணுகுமுறை மாறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel