Type Here to Get Search Results !

TNPSC GROUP 4 CERTIFICATE VERIFICATION 2023: குரூப் 4 தேர்வு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வது எப்படி?

TNPSC GROUP 4 CERTIFICATE VERIFICATION 2023: குரூப் 4 தேர்வு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வது எப்படி?
  • தமிழ்நாட்டில் குரூப் 4 எழுத்துத் தேர்வு 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த எழுத்துத் தேர்வு முடிவுகளை கடந்த மார்ச் 25ம் தேதி வெளியானது. 
  • இந்நிலையில், இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் (Junior Assistant/VAO), தட்டச்சர்(Typist), சுருக்கெழுத்தர் (Steno Typist) ஆகிய பதவிகளுக்கு இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டது. 
  • இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளில் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர் மூலச் சான்றிதழ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுருக்கெழுத்தர் (Steno Typist) தேர்வில் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட 2.5 பேர் மூலச் சான்றிதழுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த, சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும், தங்களது இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள அனைத்துத் தகுதிகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய மூலச்சான்றிதழ்களை(Original Certificates) ஸ்கேன் (Scan) செய்து டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • தமிழ்நாடு அரசு கேபிள்- டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மையத்திற்கு சென்று அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இ- சேவை மையங்கள் விவரங்களை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை க்ளிக் செய்யவும். சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கட்டயாம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
  • தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் கோரியுள்ள தகுதிக்கான சான்றிதழ்கள் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுப்போனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோன்று, தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, கல்வித்தகுதி மற்றும் தொழில்நுட்பத்தகுதி சான்றிதழ்களை தேர்வாணைய அறிவிக்கை தேதியிலோ அல்லது அதற்கு முன்னரோ பெற்றிருக்க வேண்டும். 2022 ஆண்டுக்கான, குரூப் 4 தேர்வு வெளியான அறிவிக்கை தேதி 30.03.2022 ஆகும்.
  • ஆதரவற்ற விதவை, முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளி போன்ற சான்றிதழ்கள் தேர்வாணைய அறிவிக்கை தேதிக்குப் பின்னர் பெற்றிருக்கலாம். இருப்பினும், ஆதரவற்ற விதவை அல்லது முன்னாள் இராணுவத்தினர் அல்லது மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர், தேர்வாணைய அறிவிக்கைத் தேதியன்று இவ்வகை உரிமைக்கோரும் (claim) தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • எனவே, குரூப் 4 அறிவிக்கை வெளியிட்ட தேதியன்று உங்களிடம் PSTM சான்றிதழ் இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உடனடியாக, டிஎன்பிஎஸ்சி இணைய தளத்திற்குச் சென்று, FORMS & DOWNLOADS Candidate related formats என்ற பக்கத்தில் PSTM படிவங்களை பதிவிறக்கம் செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் வாங்கிக் கொள்ளலாம்.



ONEINDIA TAMIL - KNOW ABOUT TNPSC 





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel